அத்தியாயம் 18
நித்திலா என்று புதிதாக வந்திருக்கும் அந்த பெண்ணை அழைத்ததாலோ என்னவோ நிரஞ்சனாவிற்கு தன் தங்கையின் மீது இருக்கும் அதே பாசம் இப்போது வந்த அந்த புதிய பெண்ணின் மீதும் உடனே வந்தது.
வாஞ்சையுடன் அவளை பார்த்தபடி நிரஞ்சனா அவள் அருகில் செல்ல, தன் முகத்தை மூடிக் கொண்டு “என் பக்கத்துல வராதீங்க.. வேண்டாம் என்னை விட்ருங்க!
என்ன அடிக்காதீங்க.. நான் எங்க அம்மா கிட்ட போகணும். என்ன எங்க அம்மா கிட்ட கொண்டு போய் விடுங்க.” என்று சொல்லி தேம்பி தேம்பி அழுதாள் நித்திலா.
நிரஞ்சனா அந்த பெண்ணின் அருகில் சென்று அவள் கையைப் பிடிக்க, அருகில் கிடந்த தலகாணியை எடுத்து அவளை அடித்தபடி “வெளிய போ.. உன்ன என் கிட்ட வராதுன்னு சொன்னேன்ல..
வெளிய போடி குண்டு ஆன்ட்டி. எனக்கு உன்ன பாக்கவே புடிக்கல. நீ பேட் ஆன்ட்டி.” என்று ஆவேசத்துடன் சொன்னாள் அவள்.
இன்னும் இவள் ஏன் இப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறாள் என்று நிரஞ்சனா உட்பட அங்கிருந்த யாருக்கும் புரியவில்லை. ஆனால் தொடர்ந்து நித்திலா நிரஞ்சனாவை அடித்துக் கொண்டிருந்ததால், அவளுக்கு அருகில் சென்று “ஓய்.. என்ன பண்ணிட்டு இருக்க நீ?
உன்ன விட நிரஞ்சனாவுக்கு ஒரு ரெண்டு வயசு தான் அதிகமா இருக்கும். அதுக்குன்னு அவங்கள எதுக்கு ஆன்ட்டின்னு சொல்ற?
நாங்க யாரும் உன்னை எதுவும் பண்ண மாட்டோம். முதல்ல அவங்கள அடிக்கிறது நிறுத்து.” என்ற ரிஷி அவள் கையைப் பிடித்து தடுத்தான்.
அவன் கை தன்மீது பட்டவுடன் இதுவரை அங்கே கேட்டுக் கொண்டிருந்த இனிமையான அந்த குரலுக்கு சொந்தக்காரன் இவன் தானா? என்பதைப் போல நிரஞ்சனாவை அடிப்பதை விட்டுவிட்டு அவனை திரும்பிப் பார்த்த நித்திலா,
“யாரு நீ? அந்த குண்டு ஆன்ட்டி கிட்ட இருந்து நீ என்ன வாங்கிட்டு போக போறியா?
அவ என்னை யார் கிட்டையோ கொண்டு போய் விடுறேன்னு சொன்னத நான் கேட்டேன்.
எதுக்கு இப்படி எல்லாம் பண்றீங்க? என்னை எங்க கூட்டிட்டு போறீங்கன்னு கேட்டதுக்கு அந்த குண்டு ஆன்ட்டி என்னை எப்படி எல்லாம் அடிச்சா தெரியுமா?
இப்ப நீயும் என்னை அடிக்க போறியா? ஏன் இப்படி பண்றீங்க? உங்களுக்கு என்ன புடிக்கலையா?
அதான் எல்லாரும் என்னை அடிக்கிறீங்களா?” என்று கலங்கிய கண்களுடன் கேட்டாள்.
அவள் தனது சிவந்த முக்கை லேசாக உள்ளே இழுக்க, ஒரே நொடியில் அவளுடைய முகம் முழுக்க பிங்க் நிறத்தில் மாறியது.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)