Home FREE NOVELSசாபமாய் வந்த என் உயிரே CH 34

சாபமாய் வந்த என் உயிரே CH 34

by Thenaruvi Tamil Novels
154 views

அத்தியாயம் 34 

அமுதாவும், கலைச்செல்வியும் கோவிலுக்கு வாய்க்கால் ஓரமாக சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த ஒரு மர்ம மனிதன் தன் கையில் இருந்த ஆசிடை அப்படியே அந்த கண்ணாடி பாட்டிலுடன் சேர்த்து அமுதாவின் முகத்தில் வீச எத்நனித்தான்‌.

அப்போது அவர்களுக்கு ஆப்போசிட்டில் வாக்கிங் செல்லலாம் என்று நினைத்து வந்து கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது இளைஞன் ஒருவனின் கண்களில் அந்த காட்சி பட, 

பதட்டத்துடன் வேகமாக அவர்களை நோக்கி ஓடிய அந்த இளைஞன் “ஏய் அமுதா.. உன் பக்கத்துல பாரு!” என்று தொண்டை கிழிய அவர்களை பார்த்து கத்தினான். 

அந்த கவர்ச்சியான மற்றும் தனித்துவமான காந்த குரலை கேட்டவுடனேயே சென்னை அழைத்தவன் யார் என்று உணர்ந்து கொண்ட அமுதாவின் மூளை, அவனைப் பற்றி யோசித்ததில் அவன் என்ன சொன்னான் என்று கவனிக்க மறந்துவிட்டது. 

ஆனால் அமுதாவின் அருகில் வந்து கொண்டிருந்த கலைச்செல்வி தங்கள் அருகில் பைக்கில் கையில் ஆசைப் பாட்டிலுடன் வந்து கொண்டிருந்தவனை கவனித்து விட்டு, “ஏய் அமுதா.. இந்த பக்கம் வா!” என்று சொல்லி அவளை தன் பக்கமாக வாய்க்கால் ஓரம் இழுத்தாள்.

அதனால் சுதாரித்துக் கொண்ட அமுதா திரும்பி பார்க்க, அந்த இளைஞன் அவர்கள் தங்களை கவனித்து விட்டார்கள் என்று தெரிந்தும் கூட சிறிதும் பயமின்றி அவர்களை விட்டு செல்ல மனம் வராமல் “இன்னைக்கு நீ தொலைஞ்ச டி. இதுக்கு அப்புறம் உன் மூஞ்சிய உன்னால எப்பையும் வெளிய காட்டவே முடியாது.” என்று சொல்லி அந்த பாட்டிலை அமுதாவின் முகத்தை நோக்கி வீசினான். 

அப்போது வாக்கிங் செல்வதற்காக வந்திருந்த இளைஞன் ஏற்கனவே அவர்கள் அருகில் அவன் வந்திருந்ததால் தனது ஒற்றை காலால் ஒரு ஸ்பின் செய்து சரியாக அந்த பாட்டிலை குறி வைத்து அதை அமுதாவின் மீது வீச வந்தவன் மீதே அதை எட்டி உதைத்துதான். 

அதனால் அந்த கண்ணாடி பாட்டில் பைக்கில் வந்திருந்த ஹெல்மெட் போட்டவன் மீது பட்டு உடைந்து அதில் இருந்த ஆசிட் அவனது ஹெல்மெட் மீதும், அவனது உடலின் மீதும் ‌ பட்டுத் தெரித்தது. அதில் கடுமையான வலியை உணர்ந்த அந்த இளைஞன் அப்போதும் இவர்களிடம் மாட்டிக் கொண்டால் பிரச்சனையாகிவிடும் என்று நினைத்து பயந்து வேகமாக பைக்கை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்ப முயற்சி செய்தான். 

உடனே ஜாகிங் செல்ல வந்தவனும் “டேய் நில்லு டா..!! யாரு டா நீ? நில்லுன்னு சொல்றேன்ல.. ஒழுங்கா நில்லு.” என்று கத்திக் கொண்டு அவன் பின்னே ஓடினான். ஆனால் அவனோ உயிர் போகும் வலியில் இருந்தாலும் இவர்களிடம் மட்டும் மாட்டிக் கொள்ள கூடாது என்று நினைத்து பைக்கில் வேகமாக அந்த இடத்தை விட்டு பறந்து சென்று விட்டான். 

ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் பைக் ஓட்ட முடியவில்லை அதனால் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு சென்று பைக் உடன் மறைந்து தனது நண்பன் ஒருவனுக்கு கால் செய்து தன்னை வந்து அங்கிருந்து அழைத்துச் செல்ல சொன்னான் அவன்.  பதட்டத்துடன் ஒருவரின் கையை மற்றொருவர் இறுக்கமாக பிடித்தபடி ஒரு மரத்தின் அடியில் அமுதாவும் கலைச்செல்வியும் நின்று கொண்டிருந்தார்கள். 

“ஐயோக் கடவுளே நல்ல வேலையா போச்சு டி.. நம்ம ஊரிலேயே ஒருத்தன் உன் மேல ஆசீர் அடிக்க பாத்திருக்கான் பாரு.. எதுக்கு இப்படி எல்லாம் பண்றாங்களோ தெரியல. 

அந்த அண்ணா மட்டும் இந்த பக்கமா வந்து அவனை நோட் பண்ணி உன் பேரை சொல்லி காட்டாம இருந்திருந்தா, நான் கூட இவன் பைக்ல வந்ததை பார்த்திருக்கவே மாட்டேன். ஹீரோ மாதிரி எவ்வளவு ஸ்டைலா அவர் அந்த பாட்டிலை தட்டிவிட்டார் பாத்தியா? எனக்கு அந்த சீன் அப்படியே கண்ணுக்குள்ளே நிக்குது. 

அது மட்டும் உன்மேல பட்டு இருந்தா என்ன ஆகிறது? அவன் பிளான் பண்ணி உனக்காக தான் வந்திருக்கான். ஆனா உன் மேல இவ்ளோ வெறுப்பு வஞ்சத்தோட இருக்கிற ஆள் யாருன்னு தான் தெரியல.” என்று கலை சொல்ல, 

“அது யாருன்னு தெரியல. ஆனா என்ன ஹீரோ மாதிரி வந்து காப்பாத்தினது யாருன்னு மட்டும் எனக்கு தெரியும்.” என்ற அமுதா பைக்கில் சென்றவனை பிடிக்க முடியாமல் அவர்களை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்த இளைஞனை நோக்கி வேகமாக ஓடி சென்று அவனை கட்டிப்பிடித்துக் கொண்டு “Thank you so much sir. நீங்க இப்ப எனக்கு பண்ணியிருக்கிற இந்த ஹெல்ப்பை நான் செத்தாலும் மறக்க மாட்டேன். 

நீங்க எவ்ளோ பெரிய ஸ்டார்.. என்னை விட உங்களோட பாதுகாப்பு தான் ரொம்ப முக்கியம்.. அப்படி இருந்தும் உங்கள பத்தி யோசிக்காம நீங்க ரிஸ்க் எடுத்து என்னை காப்பாத்திருக்கீங்க. இந்த மனசு எத்தனை பேருக்கு இருக்கும்? நீங்க நெஜமாவே எனக்கு கடவுள் மாதிரி தான் சார்.” என்று குரல் தழுதழுக்க நடுங்கிய உடலுடன் சொன்னாள். பயத்தில் அவளது இதயம் வேகமாக துடித்துக் கொண்டு இருந்தது.. 

அதை அவனாலும் உணர முடிந்தது. அதனால் நானும் அவளை அணைத்துக் கொண்டு பேசாத அவள் முதுகில் தட்டிய விஜய் “ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல பயப்படாத. அவன் எங்கேயோ தப்பிச்சு ஓடி போயிட்டான். எப்படியும் இப்போதைக்கு திரும்பி வரமாட்டான். So நீ safe‌ஆ தான் இருக்க.” என்று சொல்ல, அப்போது அவன் மனம் “தலையில இருந்து கால் வரைக்கும் நம்மளை யாரும் கண்டுபிடிக்க கூடாதுன்னு நம்ம ஃபுல்லா கவர் பண்ணிட்டு வந்திருக்கோம். அப்படி இருந்தும் இவ எப்படி நம்மள கரெக்டா கண்டு பிடிச்சா?” என்று யோசித்து குழம்பியது.‌

‌ அவனை விட்டு விலகிய அமுதா “thank you so much sir” என்று மீண்டும் சொல்ல, “பரவால்ல விடு.‌ நீங்க ரெண்டு பேரும் எங்க தனியா போயிட்டு இருக்கீங்க?” என்று அவளிடம் கேட்டான் விஜய். “இங்க பக்கத்துல ஒரு மாரியம்மன் கோவில் இருக்கு சார். அங்கே திருவிழா நடந்துட்டு இருக்கு. நான் சினிமாவில நடிக்க போறேன்னு சொன்னதுல இருந்து எங்க வீட்ல ஒரே பிரச்சனை. அதான் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு வரலாம்னு என் ஃபிரண்டு கூட போயிட்டு இருந்தேன். அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு.” என்று சோகமான முகத்துடன் அமுதா அவனிடம் சொல்லிக் கொண்டு இருக்க, 

“ஏய் யாரு டி இவரு? மாஸ்க் எல்லாம் போட்டு மூஞ்சிய மறைச்சுகிட்டு இவரே ஒரு மாதிரி விசித்திரமா தான் இருக்காரு. இவர் கிட்ட போய் நீ சினிமாவில் நடிக்க போற கதை எல்லாம் சொல்லிட்டு இருக்க! இவரை உனக்கு முன்னாடியே தெரியுமா?” என்று அவளது காதுகளில் கிசுகிசுத்தாள் கலைச்செல்வி. 

  “ஏய் லூசு இன்னுமா உனக்கு அவர் யாருன்னு தெரியல? அவர் கண்ணை நல்லா பாரு.. நம்ம விஜய் சார் டி. அவருக்கு என்னை தெரிஞ்சதுனால தானே என் பெயரை சொல்லி கூப்பிட்டாரு! அத வச்சு கூட கண்டுபிடிக்க மாட்டியா?” என்று அவளிடம் அமுதா மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டு இருக்க, “அது சரி, உன் மேல ஆசிட் அட்டாக் பண்ற அளவுக்கு இந்த ஊர்ல அவ்ளோ பெரிய ஆளா நீ? இந்த வயசுலையே உனக்கு நிறைய எனிமிஸ் உனக்கு இருப்பாங்க போல! வந்தவன பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா?” என்று அவளிடம் விசாரித்தான் விஜய்.‌ 

“தெரியல சார்.. அவன் ஹெல்மெட் போட்டிருந்தான். சோ ஃபேஸை பார்க்க முடியல. ஆனா அவன் ஆசிட் ஊத்துறதுக்கு முன்னாடி இனிமே நான் என் முகத்தை வெளியே காட்ட முடியாத மாதிரி பண்றேன்னு சொன்னான்.‌ ஆனா யாருக்கு என் மேல இந்த அளவுக்கு கோபம்னு தெரியல. எனக்கு தெரிஞ்சு எனிமிஸ்ன்னு எனக்கு யாரும் இல்ல.” என்று அமுதா சொல்ல, கண்களை மேலும் கீழும் உருட்டி அவளை ஸ்கேன் செய்தான் விஜய். 

இரண்டு நாட்களாகவே அவள் சோகமாக இருந்ததாலும், சரியாக சாப்பிடாததாலும் அவளது முகம் வெளிறிப்போய் இருந்தது. சரியாக தூங்காததால் அவளது கண்களில் கருவளையம் வெறி வந்திருந்தது. ஒப்பனைகள் மற்றும் அலங்காரங்களை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அப்படி ஒன்று இருப்பதை கூட அறியாதவளாக மிகவும் சாதாரணமாக இருந்தாள் அமுதா. 

அதனால் அவளது இயற்கையான மற்றும் தனித்துவமான அழகை கண்டு வியந்த விஜய், “இவ மூஞ்சிய பாத்தாலே இவளை பத்தி இவ கொஞ்சம் கூட கேர் பண்ணிக்க மாட்டானு நல்லா தெரியுது. ஆனா எந்த ஆங்கில்ல பார்த்தாலும் இவ செம ஃபிகர் தான். எப்படியும் இந்த ஊருக்குள்ளேயே அழகான பொண்ணு இவளா தான் இருப்பா. சோ எவனாவது இவ பின்னாடி சுத்தாமையா இருந்திருப்பான்? அவன் கண்டிப்பா இவளோட ஒன் சைடு லவ்வரா தான் இருக்கணும். அதான் அவனுக்கு கிடைக்காத இவ வேற யாருக்கும் கிடைக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்.” என்று ஏதேதோ யோசித்தவன், 

அவளை தனியாக போக விட மனம் வராததால் “நீ கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு போற வரைக்கும் நானும் உன் கூட வரேன். நீ தனியா போறது உனக்கு safe இல்ல. இப்ப நடந்ததை உன் மேனேஜர் வெற்றி கிட்ட சொல்லு. அவன் உனக்கு ஹெல்ப்பா கூட இல்லாம என்ன பண்ணிட்டு இருக்கான்? இதுக்கு தானே அவனை உன்கூட இருக்க சொன்னோம்.. உனக்கு என்ன ஆனாலும் அதுக்கு அவன் தான் ரெஸ்பான்சிபில். ஒழுங்கா உன் கூட இருந்து அவன பாத்துக்க சொல்லு. அவனால உன்னை பார்த்துக்க முடியாதுன்னா, நான் தனியா உனக்கு பாடிகார்ட்ஸ் அரேஞ்ச் பண்ணி கொடுக்கிறேன். பட், நீ தனியா மட்டும் எப்பயும் எங்கயும் போகக்கூடாது புரிஞ்சுதா?” ‌ என்று அவளிடம் அக்கறையுடன் கேட்க, 

“ஓகே சார். ஆனா பாடிகார்ட்ஸ் எல்லாம் வேண்டாம்.‌ ஏற்கனவே எங்க வீட்டுல எல்லாரும் நான் சினிமால நடிக்க போறது நினைச்சு பயந்துட்டு இருக்காங்க. இன்னைக்கு நடந்ததை பத்தி மட்டும் நான் வீட்டில போய் சொன்னா, பயத்துல என்னை வீட்டை விட்டு வெளியே போகவே விட மாட்டாங்க. நான் வெற்றி கிட்ட சொல்றேன். அவன் கண்டிப்பா என்ன நல்லா பாத்துக்குவான்.” என்று அமுதா சொல்ல, அதற்கு சரி என்று தலையாட்டிய விஜய் அவர்களுடன் சேர்ந்து கோவிலை நோக்கி நடக்க தொடங்கினான். 

இதுவரை வெற்றியை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்லி புலம்பிக் கொண்டிருந்த அமுதா திடீரென்று அவன் தன்னை பார்த்துக்கொள்வான் என்று நம்பிக்கையுடன் சொல்வதை பார்க்கவே கலைச்செல்விக்கு ஏதோ போல் இருந்தது. அவன் கண்டிப்பாக இவளை காப்பான் என்று அவளுக்கும் தெரியும் தான். ஆனால் அமுதாவிடம் நடந்து கொள்வதைப் போல தன்னிடம் அவன் பாசமாக இல்லையே! என்று யோசிக்கும்போது அவள் மனம் வலித்தது. 

– காதல் மலரும் 🌹 

***

You may also like

Leave a Comment

About Me

Featured