Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 10

மூர்கனின் காதலி CH 10

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 10

மேகா தன்னை பேர் சொல்லிக் கூப்பிட்டதுக்கே கோபப்பட்ட விஷ்வா, அவள் தன்னை ‘போயா வாயா’ன்னு மரியாதை இல்லாம பேசிட்டதால கொதிச்சுப் போனவன், சட்டென அவளோட இடுப்பிலருந்து கைய எடுத்துட்டு ‌வெடிக்கக் காத்திட்டு இருக்குற எரிமலை மாதிரி இருந்தான். 

அவனையே உத்துக் கவனிச்சிட்டு இருந்த மகேஷ், வேகமா அவன்கிட்ட போய் “பாஸ் பாஸ் பாஸ்… கொஞ்சம் உங்க எமோஷன்ஸ கண்ட்ரோல் பண்ணுங்க. எல்லாம் நல்லா போய்ட்டு இருக்கு.‌ சும்மா ஒரு அஞ்சு நிமிஷம் மட்டும் ஏதாவது பேசி சமாளிங்க. பிரஸ் மீட்ட இதோட முடிச்சிடலாம்.” என்று கெஞ்சினான்.

“என் பாட்டிக்காக இந்த குட்டக்கத்திரிக்காவை எல்லாம் சமாளிக்க வேண்டியது இருக்கு.” என்று நினைச்ச விஷ்வா மறுபடியும் மேகாவோட இடுப்புல கை வச்சு அவளைத் தன் பக்கம் இழுத்தான்.‌

“என்ன மறுபடியும் வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சு…!!” என்ற மாதிரி அவனைப் பார்த்தா மேகா.‌ இவங்க நடத்துற இந்தக் கூத்தையெல்லாம் கையில் ‌மைக் மற்றும் கேமராவுடன் பார்த்துக் கொண்டிருந்தவங்களுக்கு ஒண்ணும் புரியல.‌ அதனால ஒரு ரிப்போர்ட்டர், “என்ன சார் நடக்குது இங்க…!! எங்க எல்லாரையும் கூப்பிட்டு நிக்க வச்சுட்டு நீங்க எல்லாரும் மாறி மாறி உங்களுக்குள்ளயே பேசிக்கிறீங்க..!! இந்த நியூஸ் லைவ்ல போய்ட்டு இருக்கு. சோ, சீக்கிரம் உங்க லவ் ஸ்டோரிய யாராவது சொல்லுங்க. அத கேக்குறதுக்கு நாங்க எல்லாம் ரொம்ப ஆர்வமா இருக்கோம்..!!” என்றான்.

“எப்படியும் இவன் நம்மளத் தான் சொல்லச் சொல்லுவான்..!!” என்று நினைச்ச மேகா, “நானே சொல்றேன். அதெல்லாம் இவருக்கு Expressive-ஆ சொல்லத் தெரியாது.” என்றவள், கள்ளத்தனமா விஷ்வாவைப் பார்த்து சிரிச்சிட்டுப் பேச ஆரம்பிச்சாள்.‌

“என்னென்ன சொல்லப் போறாளோ..!!” என்கிற மாதிரி ‌ விஷ்வா அவளைப் பார்க்க, “ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி…‌ நான் அப்பதான் ஃபர்ஸ்ட் டைம் வேலை தேடி சென்னைக்கு வந்தேன். அன்னைக்கு ஈவினிங் டைம்ல ஆதி குரூப்ஸ்ல ஆல்ரெடி ஒர்க் பண்ற என் ஃபிரெண்டு கூட இன்டர்வியூ சம்மந்தமா பேசிட்டு இருந்தேன். அவ எனக்கு டிப்ஸ் கொடுத்துட்டு இருந்தா. நாங்க ஒரு ரெஸ்டாரன்ட்ல இருந்தோம். அப்போ டமால் டுமீல்ன்னு இடியெல்லாம் இடிச்சு ‌‌ செம மழை பெய்ஞ்சுட்டு இருந்துச்சு. அப்போ ரோட் சைட்ல ஒரு குட்டி பப்பி கால்ல அடிபட்டு மழையில நனைஞ்சுட்டு கத்திட்டு இருந்துச்சு.

நான் அதுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நெனச்சு என் ஃபிரெண்டுகிட்ட சொல்லிட்டு அந்த ரெஸ்டாரன்டை விட்டு வெளிய போறதுக்குள்ள அந்த பக்கமா வந்த பிளாக் கலர் பென்ஸ் கார்ல இருந்து இவர் இறங்கி மழையில நனைஞ்சுகிட்டே போய் அந்த பப்பியைத் தூக்கிட்டு ‌ அவர் கார்ல ஏறிப் போனாரு. அப்போ இவர் யாருன்னு எனக்குத் தெரியாது. ஆனா இவர் செஞ்ச அந்த ஒரு சின்ன விஷயம் எனக்கு ரொம்பப் பிடிச்சது.” என்று மேகா உண்மையிலேயே விஷ்வாவை அவள் காதலிக்குற மாதிரி ரசிச்சு எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து ஃபீல் பண்ணி சொன்னா.

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured