Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 7

மூர்கனின் காதலி CH 7

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 7

விஷ்வா, அவனைப் பத்தி தன்னோட எல்லா விஷயங்களையும் மறைக்காம சொன்னாதான் ட்ரீட்மென்ட் குடுக்க முடியும்னு டாக்டர் சொன்னதால ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாத்த விஷ்வா, “அப்படி சொல்றதுக் கெல்லாம் ஒண்ணும் இல்ல டாக்டர். எனக்கு இப்ப இருக்கிற ப்ராப்ளம்க்கு என்ன சொல்யூஷன்னு மட்டும் சொல்லுங்க” என்றான்.

“இவரு கண்டிப்பா பொய் சொல்றாரு. இவர் இப்படி இருக்கறதுக்குப் பின்னால ஏதோ ஒரு ஸ்ட்ராங்கான காரணம் கண்டிப்பா இருக்கணும். இல்லைனா சாதாரணமாக இருக்கிற ஒரு மனுஷன் எப்படி மனதளவுல இப்படி பாதிப்படைவான்…?”ன்னு நினைச்ச பிரவீன், “சரி மிஸ்டர் விஷ்வா. நீங்களே இப்படிச் சொல்லும்போது நான் என்ன சொல்ல முடியும்..? இப்போதைக்கு ட்ரக்ஸ், ஆல்கஹால், சிகரெட்ஸ் இந்த மாதிரி பழக்கங்களை விட்டுட்டு, டெய்லியும் மெடிடேஷன் பண்ணி உங்க மனசைக் கண்ட்ரோல் பண்ண ட்ரை பண்ணுங்க. இன்னும் பொண்ணுங்க உங்க பக்கத்துல வந்தா அது உங்களை அஃபெக்ட் பண்ணுதுன்னா, முடிஞ்ச அளவுக்கு அப்படி நடக்கிறதை அவாய்ட் பண்ணுங்க. ஒருவேளை உங்களை மீறி அப்படி நடந்தாலும் உங்க மனசுக்குள்ள இருக்கிற பயத்தை விட்டுட்டு, அவங்க ஜஸ்ட் ஒரு ஆப்போசிட் பாலினத்தவர்தான்ன்னு நினைச்சு அவங்களை ஏத்துக்க ட்ரை பண்ணுங்க. நீங்க ஃப்ரீயா இருக்கும்போது ஹாஸ்பிடல் வாங்க. ஒரு கவுன்சலிங் செஷன் அட்டென்ட் பண்ணா உங்களுக்கு பெட்டரா ஃபீல் ஆகும்” என்றார். 

“ஓகே டாக்டர்” என்ற விஷ்வா அந்த அழைப்பைத் துண்டித்தான்.

“இனிமே என்னோட எமோஷன்ஸை என்ன கண்ட்ரோல் பண்ண விடக்கூடாது. பாட்டி சொன்னதுகூட ஒரு வகையில இந்த ரூமர்ஸைக் கண்ட்ரோல் பண்றதுக்கு ஒரு நல்ல ஐடியாதான்”னு நினைச்ச விஷ்வா, மகேஷுக்கு கால் பண்ணி “நான் புளூ ஸ்டார் ஹோட்டல்ல இருக்கேன். இன்னும் ஒரு மணி நேரத்துல இங்கே ஒரு பிரஸ் மீட் ஏற்பாடு பண்ணு. நான் ஒரு முக்கியமான அறிவிப்பு கொடுக்கணும்” என்றான்.

“உங்க மேரேஜ் பத்தின அனௌன்ஸ்மென்ட்டா பாஸ்..?”ன்னு மகேஷ் உற்சாகமாகக் கேட்க, “ம்ம்ம்.. வர்றவனுங்க நான் சொல்றதை மட்டும் தான் ரெக்கார்ட் பண்ணிட்டு போகணும். அவனுங்க இஷ்டத்துக்கு என் கிட்ட கொஸ்டின் கேட்டுட்டு இருக்கக் கூடாது, பாத்துக்கோ..!!” என்ற விஷ்வா காலை கட் பண்ணான். அப்புறம் ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு வந்த விஷ்வா, சதீஷ் சொன்னதை மனசுல வச்சு மீடியாக்காரங்க கிட்ட “நான் பண்ணப் போறது லவ் மேரேஜ்ன்னு சொல்லிடணும். அப்ப தான் எவனும் எதுவும் கேட்க மாட்டான்”னு நினைச்சவன் “ஆனா உடனே லவ் ஸ்டோரி கேட்பாங்களே.. நான் சினிமாவுல ஒரு லவ் சீன்கூடப் பார்த்தது இல்ல. அப்புறம் எப்படி இல்லாத லவ் ஸ்டோரியை நான் கிரியேட் பண்ணி சொல்றது..?”ன்னு யோசிச்சுக் குழம்பினான்.

அப்புறம் “இந்த மகேஷ் லவ் பண்றான்ல.. அவனோட லவ் ஸ்டோரியைக் கேட்டு, நல்லா மண்டையில ஏத்திக்கிட்டு எவனாவது கேட்டா அதை நம்ம லவ் ஸ்டோரின்னு அப்படியே அடிச்சு விட்டுடலாமா..?”ன்னு யோசிச்ச விஷ்வா, “வேணாம் வேணாம் அவன் இப்ப பிஸியா இருப்பான். அண்ட் எதையும் உருப்படியாவே பண்ண மாட்டான். லவ் மட்டும் என்ன ஒழுங்காவா பண்ணி இருக்கப் போறான்..? வேற யாரு லவ் பண்ணிட்டு சுத்துறது..?”ன்னு நினைச்சுப் பார்த்தவனுக்கு தயாளனோட சிரிச்ச முகம் மனசுக்குள்ள வந்து மறைந்தது.

“எஸ், அவன் தான் இதுக்குச் சரியான ஆள்”னு நினைச்ச விஷ்வா உடனே அவனுக்கு கால் பண்ணி “டேய் உன் லவ் ஸ்டோரியை மறைக்காம நடந்ததை ஒண்ணுவிடாம அப்படியே சீக்கிரமா அஞ்சு நிமிஷத்துல சொல்லு பார்க்கலாம்”னு அவனை ‘ஹலோ’ கூட சொல்ல விடாம வேகமாகக் கேட்டான்.

“நம்ம கண்ணு பொய் சொல்லுதா.. இல்ல காது ஒழுங்கா கேட்க மாட்டேங்குதா..!! இது நம்ம பாஸ் நம்பர்தானே.. பேசுறவன் வாய்ஸ் வேற நம்ம பாஸோட ரோபோட் வாய்ஸ் மாதிரியே இருக்கு..!!”னு நினைச்சுக் குழம்பிய தயாளன், “பாஸ்ஸ்ஸ்.. இது நிஜமாவே நீங்கதானா..!!”ன்னு நம்ப முடியாம கேட்டான்.

“ஆமா, நான்தான்டா எருமை. ஏன் என்னோட நம்பர்கூட உனக்குத் தெரியாதா..!!”னு விஷ்வா கோபமாகக் கேட்க, “நம்ம பாஸோட வாய்ஸ் அர்ஜுன் தாஸ் வாய்ஸ் மாதிரி சும்மா கணீர் கணீர்னு இருக்கும். அதையெல்லாம் எவனாலயும் மிமிக்கிரி கூடப் பண்ண முடியாது. அப்ப கண்டிப்பா பேசுறது நம்ம பாஸுதான்”னு நினைச்ச தயாளன் “என்ன பாஸ் லவ்னாலே எழவுன்ற மாதிரி ரியாக்ட் பண்ணுவீங்க.. இப்ப நீங்களே என் லவ் ஸ்டோரியை ஃபுல்லா சொல்லச் சொல்லிக் கேட்குறீங்க.. என்னாச்சு உங்களுக்கு..? போதை தலைக்கேறிடுச்சா..? நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க. நான் டாக்டரை கூட்டிட்டு வரேன்” என்றான்.

அதனால எரிச்சல் அடைந்த விஷ்வா, “ச்ச்.. டேய் சும்மா எரிச்சல் மயிரைக் கிளப்பாம கேட்டதுக்கு மட்டும் ஆன்சர் பண்ணு. உனக்கு அஞ்சு நிமிஷம்தான் டைம். இப்ப டைம் கரெக்டா 7:25. 7:30க்குள்ள நீ உன் லவ் ஸ்டோரியை முழுசா என்கிட்ட சொல்ற. ஏதாவது நடுவுல மிஸ் ஆச்சு மவனே உன்னை வெளுத்துப்புடுவேன். Your time starts now…!!” என்றான்.

“ஐயோ பாஸ் பாஸ்.. ஏன் இவ்வளவு ஸ்பீடாப் போறீங்க..!! நான் அவளைப் பல வருஷமா லவ் பண்றேன். அத்தனை வருஷக் கதையை எப்படி அஞ்சு நிமிஷத்துல சொல்லி முடிக்க முடியும்..? எனக்கு எக்ஸ்ட்ரா டைம் வேணும்”னு தயாளன் அவசரமாகக் கேட்க, “உன்னோட டைம் ஆல்ரெடி ஸ்டார்ட் ஆயிடுச்சு தயா. நீ மணி ஏழரை ஆகுறதுக்குள்ள உன் ஸ்டோரியைச் சொல்ல முடிக்கலைனா, அப்புறம் இதுக்கு மேல உன் லைஃப்ல ஏழரைதான்னு நினைச்சுக்கோ..!!” என்றான் விஷ்வா.

அதனால பயந்த தயாளன், தன்னோட காதல் கதையை ஏதோ பேய்க் கதை சொல்றதைப் போல ஒருவித பீதியுடன் விஷ்வாகிட்ட 2X ஸ்பீட்ல அஞ்சு நிமிடத்துக்குள்ள சொல்லி முடித்தான். கடைசியில மூச்சு வாங்க “அவ்வளவுதான் பாஸ்.. அப்புறம் நான் அவங்க வீட்ல போய்ப் பேசினேன். என்ன பார்த்த உடனே அவங்க அப்பாவுக்கு பிடிச்சுருச்சு. அதனால இன்னும் ஒரு வருஷம் கழிச்சு எங்க ரெண்டு பேருக்கும் அவரே மேரேஜ் பண்ணி வைக்கிறேன்னு சொன்னாரு” என்றான் தயாளன்.

“ஓஹோ.. ஓகே ஓகே. இருந்தாலும் நான் எதிர்பார்த்த அளவுக்கு இன்ட்ரஸ்ட்டிங்கா இல்ல. சரி ஓகே. மீதியை நான் பார்த்துக்குறேன்” என்ற விஷ்வா அவனோட அழைப்பைத் துண்டித்து விட்டான்.

“என்னது.. மீதியை இவர் பார்த்துக்கப் போறாரா..? எதை மீன் பண்ணி சொல்றாரு இவரு..?”ன்னு நினைச்சுக் குழம்பிய தயாளன், விஷ்வாவைப் பத்தி கேட்குறதுக்காக மகேஷுக்கு கால் பண்ணான். பிரஸ் மீட் ஏற்பாடு செய்வதில் பிஸியா இருந்த மகேஷ் அவன் காலை எடுக்கலை. அதனால “என்னமோ.. ஒண்ணும் புரியல”னு நினைச்சு தன் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டான் தயாளன்.

சில நிமிடங்களுக்குப் பின்..

விஷ்வா தங்கியிருந்த ரூமுக்கு வெளியே முக்கியமான நாலு அஞ்சு நியூஸ் சேனல்களை மட்டும் கூப்பிட்டு சிம்பிளாக ஒரு பிரஸ் மீட் ஏற்பாடு பண்ணி இருந்தான் மகேஷ். டிப் டாப்பா ரெடியாகி கேமரா முன்னாடி தோன்றிய விஷ்வா மீடியா ஆட்கள் கிட்டப் பேசத் தொடங்கினான். கையில மைக்கோட இருந்த ஒருத்தன் “இந்த பிரஸ் மீட் அந்த ரூமர்ஸ்க்காக நீங்க கொடுக்கப் போற ஆன்சரா சார்..?”னு கேட்க, “அது ஜஸ்ட் ரூமர்ன்னு நீங்களே சொல்றீங்க.. எவனாவது வேலை வெட்டி இல்லாதவன் இப்படித்தான் அப்பப்ப எதையாவது கிளப்பி விட்டுட்டு இருப்பான். அதுக்கெல்லாம் நான் எதுக்கு ஆன்சர் பண்ணனும்..? எனக்கு வேற வேலையில்லையா..?”ன்னு திமிராகக் கேட்டான் விஷ்வா.

அதனால அவனே மறுபடியும் “ஓகே சார்.. ஓகே சார்.. நீங்க ஏதோ அனௌன்ஸ்மென்ட் கொடுக்கப் போறதா உங்க அசிஸ்டென்ட் கிட்ட இருந்து தகவல் வந்துச்சு. அது என்ன அனௌன்ஸ்மென்ட் சார்..?”னு கேட்க, “சொல்றேன்.. அதுக்குத்தானே உங்களை எல்லாம் வரச் சொல்லி இருக்கேன்” என்ற விஷ்வா தன்னோட கல்யாணத்தைப் பத்திச் சொல்ல வாய் எடுப்பதற்குள்ள அவனோட போனுக்கு ஒரு கால் வந்தது.

மீனாள் பாட்டி அட்மிட் ஆகி இருக்கும் ஹாஸ்பிடல்ல சீஃப் டாக்டர்தான் கால் பண்ணி இருந்தார். அதனால பாட்டிக்கு ஏதோ ஆகிவிட்டது போலன்னு நினைச்சுப் பயந்த விஷ்வா, “எக்ஸ்கியூஸ் மீ.. திஸ் இஸ் அன் இம்பார்டன்ட் கால். சோ ப்ளீஸ் ஹோல்ட் ஆன்”னு மீடியா ஆட்கள் கிட்டச் சொல்லிட்டு அவசரமாக டாக்டரோட காலை அட்டென்ட் பண்ணபடியே ஒரு ஓரமாகச் சென்றான். போன்ல டாக்டர் “சார் ஒரு முக்கியமான தகவலைப் பத்தி உங்ககிட்ட பேசணும். நீங்க ஃப்ரீயா..?”னு டாக்டர் கேட்க, “பாட்டியைப் பத்திதானே சொல்லுங்க.. ஏதாச்சும் சீரியஸா..?”ன்னு அவசரமான குரலில் கேட்டுக்கிட்டு இருந்தான் விஷ்வா.

“பாட்டியோட ஹார்ட் டிசீஸை குணப்படுத்துறதுக்காக ஆஸ்திரேலியாவுல இருந்து ஒரு இன்ஜெக்ஷன் வர வேண்டியது இருக்குன்னு சொல்லிட்டு இருந்தோம்ல.. அது இப்ப மறுபடியும் ஸ்டாக் ஃபில் பண்ணிட்டாங்கன்னு எங்களுக்கு நோட்டிபிகேஷன் வந்திருக்கு. அந்த இன்ஜெக்ஷனோட காஸ்ட் + ட்ரான்ஸ்போர்ட்டேஷன் எல்லாமே சேர்த்து 10 கோடிகிட்ட வரும். உங்களுக்கு ஓகேன்னா நான் இப்பவே ஆர்டர் பண்ணிடுவேன். இந்த இன்ஜெக்ஷன் சில சமயம் அஞ்சு நிமிஷத்துல கூட ஸ்டாக் அவுட் ஆகிடும். அதான் உங்ககிட்ட கேட்டு கன்ஃபார்ம் பண்ண கால் பண்ணேன்”னு டாக்டர் சொல்ல, “ஐயோ டாக்டர் இதெல்லாம் நீங்க என்கிட்ட கேட்கவே தேவையில்லை. எங்க பாட்டிக்காக எத்தனை கோடி வேணாலும் நான் செலவு பண்ண ரெடியா இருக்கேன். நீங்க அந்த இன்ஜெக்ஷனை ஆர்டர் பண்ணுங்க. நான் என் அசிஸ்டென்ட்டை பேமென்ட் ப்ராசஸ் பண்ண சொல்றேன்”னு போனில் சொல்லிக்கிட்டு இருந்தான் விஷ்வா.

அப்ப அந்த ஹோட்டலோட ஒரு ரூம்ல இருந்து வேகமா ஓடிவந்த இளம் பெண் ஒருத்தி, ஓரமாகத் தன் முதுகைக் காட்டிக்கொண்டு போன் பேசிக் கொண்டு இருந்த விஷ்வாவையும், தன்னைத் துரத்திக் கொண்டு வந்தவனையும் மாத்தி மாத்திப் பார்த்தாள். அவள் முகத்துல பயம், கவலை, பதட்டம் என எல்லாமே அப்பியிருக்க; என்ன செய்யறோம்னு தெரியாம ஒரு வேகத்துல விஷ்வாவோட தோள்களில் கை வச்சு அவனைத் தன் பக்கம் இழுத்து அவனோட முரட்டு இதழில் தன்னோட சிவந்த இதழ்களைப் பொருத்தி, ‘பச்சாக்’னு ஒரு ஆழமான முத்தத்தைக் கொடுத்து விட்டாள்.

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured