Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 5

மூர்கனின் காதலி CH 5

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 5

வசந்த் முந்திக்கிட்டு தனக்கு ஒரு ஐடியா இருக்குன்னு சொல்றான் சதீஷ். “நீ சொல்றதெல்லாம் ஓகேதான்.. ஆனா இதத் தாண்டி ட்ரெண்ட் ஆக்குற அளவுக்கு நம்மகிட்ட என்ன நியூஸ் இருக்கு..!! இப்ப ஐ.பி.எல் மேட்ச் நடந்துட்டு இருக்கு.‌ இந்த மாதிரி டைம்ல கூட அந்த ரூமர எவனும் மறக்காம வெச்சு ட்ரோல் பண்ணிட்டு இருக்கானுங்களே..!!”ன்னு சந்தேகமா மகேஷ் கேட்க, விஷ்வாவும் அதே கேள்வியோட சதீஷைப் பார்த்தான்.

“நம்ப கம்பெனி லான்ச் பண்ண சோசியல் மீடியா ஆப்ஸைத்தானே இந்தியாவுல பாதி பேர் யூஸ் பண்ணிட்டு இருக்காங்க.. மார்க் ஜுக்கர்பெர்க், எலன் மஸ்க் மாதிரி நம்ம பாஸ்ஸும் நல்லா ஃபேமஸா‌ இருக்காரு. இப்போ அதுதானே சார் ப்ராப்ளம்.. சோ, நம்ம பாஸ்ஸைப் பத்தி நெகட்டிவா வந்த நியூஸை ஓவர்டேக் பண்ற மாதிரி ஏதாவது அவரைப் பத்தி ஒரு பெரிய பாசிட்டிவ் நியூஸ் ஆர் சென்சேஷனல் நியூஸ் வரணும். அது வந்தா, எல்லாரும் அதப் பத்தி பேச ஆரம்பிச்சுட்டு இதை விட்டுருவாங்க.”ன்னு சதீஷ் சொல்ல, “அப்படியா…‌ அப்போ நான் வேணும்னா உடனே ஒரு ட்ரஸ்ட் ஸ்டார்ட் பண்ணி 1000 சில்ட்ரனை அடாப்ட் பண்ணி அவங்களுக்கு வேணுங்கிறதெல்லாம் செஞ்சு கொடுக்கவா..??”ன்னு சீரியஸா கேட்டான் விஷ்வா.

அதைக்கேட்டு குபீர்னு சிரிச்ச சதீஷ் “என்ன பாஸ் நீங்க இப்படி வெள்ளந்தியா இருக்கீங்க.. இந்த மாதிரி நல்ல காரியத்தையெல்லாம் நீங்க ‌யூஷுவல் டேஸ்ல பண்ணாலே எவனும் நீங்க நல்ல மனசோட பண்றீங்கன்னு நம்ப மாட்டான். இப்ப போயி பண்ணா வேணும்னே இப்போ அட்டென்ஷன் சீக்கிங்க்காக பண்றோம்னு தப்பா நினைக்க மாட்டாங்களா..??”ன்னு கேட்க, தன் கோபத்தை சிரமப்பட்டு கண்ட்ரோல் பண்ணிக்கிட்ட விஷ்வா “இப்ப என்னைய என்னதான்டா பண்ண சொல்ற..!!”ன்னு பற்களை கடிச்சிக்கிட்டு கேட்டான்.

“மக்களுக்கு நீங்க ஏன் சிங்கிளா இருக்கீங்க, நம்ம ஆஃபீஸ்ல ஏன் பொண்ணுங்களே இல்லைன்னு நிறைய டவுட்ஸ் இருக்கு பாஸ். அத முதல்ல நம்ம கிளியர் பண்ணணும்.”ன்னு சதீஷ் சொல்ல, “ஓஹோ.. அப்ப உங்கள்ள பாதிப் பேரை வேலையவிட்டு துரத்திட்டு நாங்க ஃபீமேல் ஸ்டாஃபை வேலைக்கு எடுக்கணும்னு சொல்றீங்களா சதீஷ்..??”ன்னு கேட்டான் மகேஷ். 

அதனால எல்லாரையும் எரிச்சுடுற மாதிரி பார்த்த விஷ்வா “எவனாவது ஏதாவது உருப்படியா சொல்லித் தொலைங்கடா. இருக்கிற டென்ஷன்ல நீங்க வேற என்னைய கூப்பிட்டு மீட்டிங்ல உட்கார வெச்சு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க… அடுத்து எனக்கு ஷேர் ஹோல்டர்ஸ் கூட ஒரு மீட்டிங் இருக்கு. அங்க போனா ஃபர்ஸ்ட் கொஸ்டினே இந்த ப்ராப்ளமை எப்படி சால்வ் பண்ணப் போறீங்கன்னு தான் என்னைய கேப்பானுங்க.”ன்னு சலிப்போட சொல்லிட்டு வலிச்சுக்கிட்டிருந்த தன் தலையைப் பிடிச்சிக் கிட்டான்.

“பாஸ் இதுக்கு ஒரே ஒரு சொல்யூஷன் மட்டும் தான் இருக்கு. அவனுங்க எப்படி நீங்க பசங்க கூட இருக்கிற போட்டோவா ரிலீஸ் பண்ணிட்டே இருக்காங்க.. அதே மாதிரி நீங்க ஏதாவது ஒரு பொண்ணு கூட க்ளோஸா இருக்குற மாதிரி விதவிதமா போட்டோ, வீடியோ எல்லாம் எடுத்து நம்மளே ரிலீஸ் பண்ணி அவங்களை உங்க கேர்ள் ஃபிரண்ட்ன்னு சொல்லுவோம். உங்களுக்கும் அவங்களுக்கும் பிரேக் அப் ஆயிடுச்சு. அதான் நீங்க பொண்ணுங்க சாவகாசமே வேணாம்னு இருக்கீங்கன்னு நம்மளே ஒரு கதையை கட்டி விடுவோம். நல்ல பேமென்ட் கொடுத்து ஏதாவது ஒரு பொண்ணை ரெடி பண்ணா மட்டும் போதும். ப்ராப்ளம் சால்வ். எப்படி பாஸ் என் ஐடியா..?? இதைத்தான் நான் நேத்துல இருந்து வசந்த் சார்கிட்ட சொல்லிட்டே இருக்கேன். அவர் கேட்கவே மாட்டேங்குறாரு.”ன்னு சொல்லிட்டு விஷ்வாவோட பாராட்ட எதிர்பார்த்து அவனை ஆர்வத்தோட பார்த்தான் சதீஷ்.

வந்த கோபத்துல வேகமா எழுந்து பலார்னு அவன் கன்னம் பழுக்க ஒண்ணு வெச்ச விஷ்வா, “எனக்கு பொண்ணுங்கன்ற வார்த்தையே பிடிக்காதுன்னு நல்லா தெரிஞ்சிருந்தும், நீ இந்த அளவுக்கு யோசிச்சது இல்லாம அத வேற எவ்வளவு திமிர், தெனாவெட்டு இருந்தா என்கிட்டயே தைரியமா சொல்லுவ..!! என் கையால அடி வாங்கியே செத்துறாத. மரியாதையா ஓடிப்போயிரு.”ன்னு அடித் தொண்டையில இருந்து கத்த, “ஐயோ ப்ரொமோஷனை விட உசுரு முக்கியம்டா சாமி.”ன்னு நெனச்ச சதீஷ் ‌ மீட்டிங் ஹாலைவிட்டு ஓடி‌ சென்றுட்டான்‌‌.

ஈவினிங் டைம்..

ஆஃபீஸ்ல தன்னோட ரூம்ல உள்ள மினி பெட்ரூம்ல இருந்த பால்கனியில கையில ஒரு கப் டீயோட நின்னுக்கிட்டிருந்த விஷ்வா வெளியில தெரிஞ்ச சன்செட் ஆகுற காட்சியைப் பார்த்தான். “இந்த சன்செட் எம்.வி டெக் அவ்ளோதான்னு என்கிட்ட சொல்லாம சொல்லுதா..??”ன்னு நெனச்சவனுக்கு மத்தியானம் நடந்த மீட்டிங்ல மாறி மாறி அவன் கிட்ட “இப்படியே போயிட்டு இருந்துச்சுன்னா இந்த கம்பெனி ஒண்ணுமே இல்லாம போயிடும் விஷ்வா. ஷேர் மார்க்கெட் அப்டேட்ஸ் எல்லாம் பாக்குறீங்களா இல்லையா..?? உங்களை நம்பி நிறைய ப்ராஜெக்ட்ஸ்ல நாங்க எல்லாம் கோடிக்கணக்குல இன்வெஸ்ட் பண்ணிருக்கோம்.‌ இப்ப உங்களோட ரெபுடேஷன் அஃபெக்ட் ஆனதுனால, இந்த கம்பெனி இப்படி ஒரு லாஸை ஃபேஸ் பண்ணும்போது, அதுக்காக எந்த ஸ்டெப்பும் எடுக்காம உங்களால எப்படி இப்படியே எனக்கென்னானு இருக்க முடியுது..?? நீங்க வேணா பாருங்க.. இன்னும் ஜஸ்ட் கரெக்ட்டா ஒன் வீக். ஏன் அதுக்கு முன்னாடியே கூட எம்.வி டெக் திவால் ஆனதுன்னு நியூஸ்ல வரப்போகுது..!!”ன்னு அவங்க இஷ்டத்துக்கு அவன்கிட்ட பேசினதெல்லாம் அவனுக்கு ஞாபகம் வந்தது.

அவங்க பேச்சு அவனுக்கு குத்தலா தெரிஞ்சாலும் அதுல உள்ள நியாயம் ஒரு பிசினஸ்மேனா அவனுக்குப் புரிஞ்சதுனால அவனாலயும் அந்த மீட்டிங்ல எதுவும் பேசியிருக்க முடியல. மீட்டிங் முடிவுல “மிஸ்டர் விஷ்வா.. நாங்க உங்களுக்கு 24 ஹவர்ஸ் டைம் தர்றோம். அதுக்குள்ள இது எல்லாத்தையும் ‌நீங்க சால்வ் பண்ணி எம்.வி டெக்கை பழையபடி மாத்துறீங்க… இல்லன்னா நம்ம கம்பெனிக்குள்ள இருக்கிற அக்ரிமெண்ட்ஸை கேன்சல் பண்ணிக்கலாம். நவ் தி சாய்ஸ் இஸ் யுவர்ஸ்.”ன்னு சொல்லிட்டு இன்வெஸ்டர்கள் போயிட்டாங்க.‌

அதனால விஷ்வா என்ன செய்றதுன்னு யோசிச்சிக்கிட்டு இருக்க, அவனைத் தேடிக்கிட்டு அங்கே போன மகேஷ் “இப்போ என்ன பாஸ் செய்யப் போறீங்க..??”ன்னு கேட்க, “தெரியலடா.”ன்னான் அவன். “நான் சொல்றேன்னு கோச்சுக்காதீங்க.. மீட்டிங்ல உங்களைப் பத்தி தெரியாம சதீஷ் கண்டத உளறி இருந்தாலும்.. அவன் சொன்ன பாயிண்ட் வேலிட் தான். அந்த மாதிரி பண்ணா கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும்.‌ அத கொஞ்சம் கன்சிடர் பண்ணிப் பாருங்க.”ன்னு மகேஷ் சொல்ல, அவனை முறைச்சுப் பார்த்தான் விஷ்வா.

“சும்மா இப்படி முறைச்சு முறைச்சு பார்த்தே எல்லாரையும் பயமுறுத்தாதீங்க பாஸ். நீங்க நெனச்சா எப்படி வேணாலும் சந்தோஷமா வாழலாம். ஏன் இப்படி இருக்கீங்க..?? சரியா சாப்பிடறது கூட இல்ல.. உங்க பாடிய ஸ்கேன் பண்ணிப் பார்த்தா பாதிக்கு மேல டீ தான் இருக்கும் போல.‌ நான் பார்க்கும்போதெல்லாம் டீ மட்டும்தான் குடிச்சிட்டு இருக்கீங்க. அட்லீஸ்ட் ‌போய் சாப்பிடவாவது செய்யுங்க ப்ளீஸ்..!!”ன்ன மகேஷ், அங்கே இதுக்கு மேல அவன் ஒரு நொடி இருந்தாலும், கோபத்துல விஷ்வா அவனை அடிக்கக் கூட வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்சதுனால அவனோட பதிலுக்குக் காத்திருக்காம வேகமா அங்கிருந்து போய்ட்டான்.

“ச்ச்ச்.. என்ன.. எல்லாரும் இதையே சொல்றானுங்க.‌!! என்னால எப்படி எவ கூடயாவது நின்னு போட்டோக்கெல்லாம் போஸ் கொடுக்க முடியும்..??”ன்னு விஷ்வா தீவிரமா யோசிச்சிக்கிட்டு இருக்க, மீனாள் பாட்டி அட்மிட் ஆகி இருக்குற ‌ஹாஸ்பிட்டல்ல இருந்து ‌அவனுக்கு கால் பண்ண டாக்டர் “சார் உடனே கிளம்பி ஹாஸ்பிடலுக்கு வாங்க. உங்க பாட்டி ட்ரீட்மென்ட் பண்ணிக்க மாட்டேன்… டேப்லெட் சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்க…!!”ன்னாரு.

‌“என்னாச்சு டாக்டர்.. எல்லாம் கரெக்ட்டாதானே போயிட்டு இருந்துச்சு..‌ திடீர்னு அவங்க ஏன் இப்படி பண்றாங்க..??”ன்னு விஷ்வா பதட்டமா கேட்க, “ஏன்னு எங்களுக்கும் தெரியல மிஸ்டர் விஷ்வா. அவங்க அகைன் அண்ட் அகைன் உங்களை பாக்கணும்னுதான் சொல்லிட்டே இருக்காங்க.‌ நீங்க வந்தா தான் ட்ரீட்மென்ட்க்கு கோ-ஆபரேட் பண்ணுவாங்களாம். எங்களால அவங்களை சமாளிக்க முடியல. ப்ளீஸ் நீங்க உடனே கிளம்பி வாங்க சார்.”ன்னு புலம்பினாரு டாக்டர்.

“ஓகே டாக்டர் நான் உடனே அங்க வரேன்.”ன்ன விஷ்வா மகேஷை கூப்பிட்டுக்கிட்டு ஹாஸ்பிடலுக்குப் போனான். வி.ஐ.பி வார்ட்ல பாட்டி இருக்குற ரூம் கதவை வேகமா திறந்த விஷ்வா உள்ளே போகப் போக, அங்கே இருந்த நர்சுகளைப் பார்த்து “அட ச்சீ.. எங்க பார்த்தாலும் பொண்ணுங்களாவே இருக்காளுங்க. இவங்களையெல்லாம் பார்த்தாலே இரிடேட் ஆகுது.”ன்னு முணுமுணுத்தபடி ‌வெளியில வந்துட்டான். “என்னாச்சு சார் பாட்டியைப் பாக்கலையா..??”ன்னு குழப்பமா விஷ்வாகிட்ட கேட்ட மகேஷ் டோரைத் திறந்து உள்ள எட்டிப் பார்த்தான்.

அதனால உள்ளே இருந்த நர்சுகள் அவனை குறுகுறுனு பார்க்க, “ஏன்மா‌ விஷ்வா சார் வரும்போது இங்க எந்த நர்சும் இருக்கக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லிருக்கோம்..‌ கேக்கவே மாட்டீங்களா..?? கொஞ்ச நேரம் எல்லாரும் வெளியில போய் இருங்க. நாங்க கிளம்புற வரைக்கும் நீங்க யாரும் உள்ளயே வரக்கூடாது.”ன்னு மகேஷ் சொல்ல, “சாரி சார்.”ன்னு நர்சுகள் அந்த ரூமைவிட்டு வெளியேறி செல்லும்போது ஓரக் கண்ணால விஷ்வாவைப் பார்த்து தங்களுக்குள்ள பேசி சிரிச்சபடி சென்றாங்க.

ரூட் க்ளியர் ஆனதும் ‌உள்ளே சென்று பாட்டியோட கையைப் பாசமா பிடிச்சிக்கிட்ட விஷ்வா, “ஏன் பாட்டி இப்படியெல்லாம் பண்றீங்க..?? ஆல்ரெடி உங்க ஹெல்த் கண்டிஷன் சரியில்ல.‌ இதுல நீங்க ட்ரீட்மென்ட் எடுத்துக்காம இருக்கலாமா..?? உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா..‌‌ நான் என்ன ஆவேன் சொல்லுங்க..!! எனக்கு இருக்கிறது நீங்க மட்டும்தானே..!!”ன்னு கேட்க, அவன் கண்கள் கலங்கி ஒரு சொட்டு கண்ணீர் ‌பாட்டியோட‌ கையின் மீது விழுந்தது.‌

தனது நடுங்குன கைகளால அவன் கண்ணீரைத் துடைச்ச பாட்டி “அதே பயம்தான் விஷ்வா எனக்கும். என் காலம் முடிஞ்சிடுச்சு.‌ நான் எப்ப வேணாலும் போயி சேர்ந்துடுவேன். எனக்கு அப்புறம் நீ தனியா நிக்கக்கூடாது. உனக்குன்னு ஒரு குடும்பம் வேணும். காலம் போன கடைசியில இதுக்கு மேல நான் நல்லா இருந்து என்ன பண்ணப் போறேன்..?? நீ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு எனக்கு சத்தியம் பண்ணிக் கொடு. நான் டாக்டர்கிட்ட எதுவும் சொல்லாம ட்ரீட்மென்ட் பண்ணிக்கிறேன். உனக்குன்னு ஒரு குடும்பம் இருந்து அவங்க கூட நீ சந்தோஷமா வாழணும். அத நான் பாக்கணும் அது மட்டும்தான் என்னோட ஒரே ஆசை. என் கடைசி ஆசைன்னு கூட வெச்சுக்கோ.”ன்னு தழுதழுத்த குரல்ல சொன்னாங்க.

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured