Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 9

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 9

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 9:

பிராத்தானா தான் ஓனர்

தன்னுடைய ஆபீஸ்க்கு வந்த வருண், அவனுடைய ஆபீஸ் ரூமில் சில ஃபைல்களை புரட்டிக் கொண்டிருந்தான். அப்போது அங்கே வந்த அவனுடைய மேனேஜர் சிவா, மீட்டிங் தொடங்குவதற்கு சிறிது நேரமே இருப்பதால், ” சார் மீட்டிங்க்கு லேட் ஆயிடுச்சு. நீங்க இப்ப வந்தீங்கன்னா கரெக்ட்டா இருக்கும்.” என்று  அழைத்ததால் சிவாவுடன் கிளம்பினான் வருண்.

கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு வெயிட்டிங்கில் இருந்த ஆட்டோவில் ஏறி ஸ்கூலுக்கு வந்தாள் ரித்திகா. அவள் பள்ளியை அடைவதற்கு மணி 9 ஆகிவிட்டது. ஆபீஸ் ரூமிற்கு வந்த ரித்திகா சைன் போட்டு விட்டு கிளம்ப நினைக்க அவளை தடுத்து நிறுத்திய மானசா, ரித்திகாவை பிரின்சிபல் அழைத்ததாக சொல்லி பிரின்சிபலை பார்த்து விட்டு வருமாறு சொன்னாள்.

அட்மின் ஆபீஸில் இருந்து வெளியே வந்த ரித்திகா, நேராக பிரின்சிபல் ரூமிற்கு சென்றாள். அங்கு இருந்த கதவை திறந்த ரித்திகா, “May I come in..?” என்று கேட்டாள்.

பிரின்சிபால் “Come in.”‌ என்று சொன்னவுடன், பிரின்ஸிபலின் அறைக்குள் சென்ற ரித்திகா அங்கே டேபிளில் இருந்த அவருடைய நேம் போர்டை பார்த்தாள். அந்த நேம் போர்ட்டில் டாக்டர் சாரதா பி.எச்.டி. என்று எழுதி இருந்தது.

ரித்திகா: “குட் மார்னிங் மேம்.”

பிரின்சிபால்: “ம்ம்.. குட் மார்னிங்.”

பிரின்சிபால்: “What’s your name?” 

ரித்திகா: “I’m ரித்திகா mam.”

பிரின்சிபால்: “ஓ..!! நீங்க தான் அந்த ரித்திகாவா..? இன்னைக்கு தான் உங்களுக்கு ஃபர்ஸ்ட் டே ரைட்?”

ரித்திகா: “Yes, ma’am. You are right.”

பிரின்சிபால் சாரதா “உங்களோட டைம் டேபிளை ஆபிஸ் ரூம்ல இருந்து வாங்கிட்டீங்களா?” என்று ரித்திகாவிடம் கேட்டப்படியே தன் முன் இருந்த கம்ப்யூட்டரில் எதையோ பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ரித்திகா: “வாங்கிட்டேன் மேடம்.”

பிரின்சிபால்: “ஒகே..!! தென் ஃபர்ஸ்ட் டேவே லேட்டா வந்து இருக்கீங்க. நீங்க ஜாயின் பண்ணும் போதே உங்களுக்கு ஆஃபீஸ்ல சொல்லி இயிருப்பாங்களே.. பஞ்சுவாலிட்டி ரொம்ப இம்பார்டன்ட்ன்னு.. நீங்க பண்றதை பாத்தா அதெல்லாம் கவனிச்ச மாதிரியே தெரியலையே..”

ரித்திகா: “சாரி மேடம். கோயிலுக்கு போயிட்டு வந்ததால கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.”

பிரின்சிபால்: “ஃபர்ஸ்ட் டேவே இப்படி எக்ஸ்கியூசஸ் சொல்லிட்டு இருக்காதீங்க ரித்திகா. நீங்க எங்க ஸ்டூடண்டா இல்ல. டீச்சர் ஆ ஜாயின் பண்ணி இருக்கீங்க. அதுக்கு தகுந்த மாதிரி பிஹேவ் பண்ணுங்க.”

ரித்திகா: “I am so sorry மேம். இனிமே இப்படி நடக்காம பாத்துக்குறேன்.”

பொதுவாக இப்படி 5, 10 நிமிடங்கள் தாமதமாக வருபவர்களை எல்லாம் இப்படி சாரதா நிற்க்க வைத்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்க மாட்டாள். சாரதா மற்றவர்களிடம் மரியாதையாகவும், நேர்மையாகவும், நடந்து கொள்ளும் ஒரு நடுத்தர வயது பெண்மணி. இன்றும் மானசா, வருண்னின் மேனேஜர் சிவா அவளிடம் சொன்னதை மிகை படுத்தி சாரதாவிடம் சொல்லி வைத்திருந்தாள்.

அவை அனைத்தையும் கேட்ட சாரதா, வருண், ரித்திகாவை தவறாக நினைத்தது போலவே அவளும் தவறாகவே‌ நினைத்துக் கொண்டாள். ஆனாலும் சித்தார்த்தை பற்றிய விஷயங்களை நேரடியாக பேசி விட முடியாது என்பதால், இப்படி எல்லாம் ரித்திகாவிடம் கோபமாக பேசி கொண்டு இருந்தாள் சாரதா.

இங்கே பிரின்சிபல் சாரதா, ரித்திகாவை திட்டிக் கொண்டு இருக்க.. அந்த நேரத்தில் சரியாக அந்த கதவை தட்டிய படி உள்ளே வந்தாள் பிரார்த்தனா. பிரார்த்தனாவை பார்த்த பிரின்சிபல் சாரதா மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றாள்.

ரித்திகா: “இந்த பொண்ணுக்கு எப்படியும் ஒரு பதினாறு, பதினேழு.. வயசு தான் இருக்கும். இந்த பொண்ணை பாத்துட்டு இவங்க எதுக்கு எந்திரிச்சு நிக்கிறாங்க..?” என்று தன் மனதிற்குள் நினைத்தவள், குழப்பத்துடன் அவர்களை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

பிரின்சிபால்: “வாங்க பிரார்த்தனா மேடம். குட் மார்னிங்.” என்று சொன்னவள், தான் அமர்ந்திருந்த சீட்டை கை காட்டிய படி “வந்து உட்காருங்க மேம்” என்றாள்.

இதை பார்த்த ரித்திகா இன்னும் குழம்பினாள். 

ஏன் ஒரு சிறு வயது பெண்ணிற்கு ஏன் இவ்வளவு மரியாதை கிடைக்கிறது என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஜீன்ஸ் பேண்டும், கிராப் டாப்பும், அணிந்திருந்த பிரார்த்தனா, அவளுடைய முடியை விரித்து விட்டிருந்தாள். அவளுடைய தோளில் ஒரு ஸ்லிங் பேக் தொங்கி கொண்டு இருந்தது. அவளுடைய தலை முதல், கால் வரை, அவள் அணிந்திருந்த ஆடையும் ஆபரணங்களுமே.. “நான் ரொம்ப காஸ்ட்லி  இருக்கும்” என்று சொல்லாமல் சொல்லி கொண்டு இருந்தது.

சாரதா அவ்வளவு மரியாதையாக பிரார்த்தனா விடம் பேசியும், அவள் பதிலுக்கு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்று பிரின்சிபல் இன் சீட்டில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டாள்.

ரித்திகா: “ச்சே.. என்ன இந்த பொண்ணு.. இப்படி இருக்கா..? இவளுக்கு மரியாதைன்னா என்னனே தெரியாது போல..” என்று தன் மனதிற்குள் நினைத்தாள்.

பிரார்த்தனா: சாரதாவை பார்த்தவள், தனக்கு முன்னிருந்த இருக்கையை கை காட்டி “உட்காருங்க மேடம்” என்றாள்.

“தேங்க்ஸ் மேடம்” என்ற சாரதா, அங்கே அமர்ந்தாள்.

பிரார்த்தனா ரித்திகாவை பார்த்தவள், பின் சாரதாவை பார்த்து “யாரு இவங்க?” என்று கேட்க,

சாரதா  “இவங்க இன்னிக்கி தான் டீச்சரா இங்க ஜாயின் பண்ணி..” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே

“ஓ…” என்று இழுத்த பிரார்த்தனா ‌தன்னுடைய காஸ்ட்லியான வாட்சில் டைமை பார்த்தவள், “கிளாஸ் ஸ்டார்ட் ஆக போகுதே… நான் வரும் போதே ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் வர ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. இவங்க கிளாசுக்கு போகாம இங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க..?” என்று திமிராக கேட்டாள். 

சாரதா: “இவங்க ஃபர்ஸ்ட் டேவே லேட்டா வந்து இருக்காங்க. அதான் கூப்பிட்டு இனிமே இப்படி லேட்டா வராதீங்கனு சொல்லிட்டு இருந்தேன் மேம்.” என்று சொல்ல,

தனது கூர்மையான கண்களால் ரித்திகாவை பார்த்த பிரார்த்தனா  “வாட்ஸ் யுவர் நேம்” என்று கேட்க,

“I’m ரித்திகா mam.” என்றாள் ரித்திகா. 

பிரின்சிபலே பிரார்த்தனாவுக்கு இவ்வளவு மரியாதை கொடுத்தால், அவளும் பிரார்த்தனாவிடம் மரியாதையாகவே பேசினாள்.

பிரார்த்தனா “மிஸ். ரித்திகா.. Tell me.. what do you think about this school..?” என்று அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தபடி கேட்டாள். 

பொதுவாக இன்டர்வியூ நடக்கும்போது இந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படுவது சகஜமே. ஆனால் இப்போது இந்த கேள்வியை பிராத்தனா கேட்கும் போது, அதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று ரித்திகாக்கு தெரியவில்லை என்பதால் அவள் அமைதியாகவே இருந்தாள்.

அதனால் பிரார்த்தனா “என்ன ஆன்சர் பண்றதுன்னு தெரியலையா ரித்திகா? நீங்களே சொல்லுங்க.. ஸ்கூலுக்கு ஸ்டூடண்ட்ஸ் லேட்டா வந்தாலே.. அவங்களுக்கு நம்ம பனிஷ்மென்ட் குடுப்போம்ல? அப்ப ஸ்டூடண்ட்ஸை ஹான்டில் பண்ற டீச்சரே இந்த மாதிரி எல்லாம் பொறுப்பில்லாம சில்லி மிஸ்டேக்ஸ் பண்ணா அவங்களுக்கு என்ன பனிஷ்மென்ட் தரலாம் நீங்களே சொல்லுங்க..” என்ற குத்தலாக அவளிடம் கேட்க, 

யார் என்றே தெரியாத இந்த பெண்ணிடம் தாழ்ந்து போவதில் அவளுக்கு விருப்பமில்லை என்றாலும்  

“சாரி மேடம். இனிமே இந்த மாதிரி நடக்காம பாத்துக்குறேன்.” என்று

பொறுமையாகவே பதில் சொன்னாள் ரித்திகா.

ரித்திகா எந்த எக்ஸ்பிளநேஷனும் கொடுக்காமல் உடனே மன்னிப்பு கேட்டு விட்டது பிரார்த்தனாவின் ஈகோவை பெருமளவில் satisfy செய்து விட்டது. ரித்திகா அவளிடம் அடக்கமாக பேசுவது அவளுக்கு பிடித்து இருந்தது. அதனால்

பிரார்த்தனா “ஓகே..!! இனிமே நீங்க லேட்டா வந்தா என்ன பண்றது..?” என்று அப்போதும் விடாமல் கேட்க, 

ரித்திகா: “அதையும் நீங்களே சொல்லிருங்க மேடம்.” என்றாள்.

பிரார்த்தனா: “இன்னைக்கு ஒரு நாள் உங்களை மன்னிச்சு விடுறேன். இனிமேல் நீங்க லேட்டா வந்தீங்கனா உங்களோட சேலரில இருந்து அன்னைக்காண சேலரிய கட் பண்ணிடுவோம். ஒன் டே சேலரி தானே போன பரவால்லன்னு நினைக்காதீங்க. இப்படியே ரிப்பீட் ஆயிட்டு இருந்துச்சுன்னா உங்கள பயிர் பண்ணிடுவோம். மின்ட் இட்.” என்று தன்னுடைய ஆள் காட்டி விரலை ரித்திகாவின் முன் நீட்டிய படி அதிகாரமான தோரனையில் சொன்னாள்.

ஒரு புறாவிற்கு இவ்வளவு பெரிய போரா? என்பது போல் ஒரு நாள் லேட்டாக வந்ததற்கு இத்தனையும் கேட்க வேண்டுமா என்று தன் மனதிற்குள் நினைத்து சலித்து கொண்ட ரித்திகா, முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல்.. “ஓகே மேடம்” என்றாள்.

பிரார்த்தனா: “ஓகே..!! நீங்க கிளாசுக்கு போங்க.” என்று சொல்லிவிட, நல்ல வேலையாக இவளிடம் இருந்து தப்பித்தோம் என்று நினைத்த ரித்திகா “ஓகே..!! மேடம்” என்று சொல்லி விட்டு அந்த அறையில் இருந்து வெளியே வந்தவள், அவளுக்கு எதிரே வந்த ஒரு ஆசிரியரிடம் ஸ்டாஃப் ரூம் எங்கே இருக்கிறது என்று கேட்டு விட்டு அங்கே சென்றாள்‌.

பாவம்.. எந்த அரண்மனையில் இந்த பிரார்த்தனா இப்போது அதிகாரத்துடன் இளவரசியாக இருக்கிறாளோ, அதே அரண்மனையில் ரித்திகா அவளுக்கு மேல் அரசியாக வந்து வாழ போகிறாள் என்று அறியாதவள் அவளை அதிகாரம் செய்து விட்ட மகிழ்ச்சியில் இருந்தாள். 

ரித்திகாவை அதட்டி பேசி தன் ஈகோவை தீர்த்துக் கொண்டது எல்லாம் பிரார்த்தனாவுக்கு போதுமானதாக இல்லை. இன்னும்

பிரின்ஸிபலின் அறையில் இருந்த

பிரார்த்தனா “ஓகே..!! மேம். நான் இங்க சித்தார்தை டிராப் பண்றதுக்கு தான் வந்தேன். நானும் காலேஜ்க்கு போகணும். எங்க அண்ணாவுக்கு ‌ இங்க வந்து எல்லாம் கரெக்டா இருக்கான்னு பாக்குறதுக்கு எல்லாம் டைம் இருக்காது. நான் தான் பொறுப்பா இத எல்லாம் பாக்கணும். சோ ஸ்கூல் ஃபுல்லா அப்படியே ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு கிளம்புறேன்.” என்றாள்.

சாரதா “நல்லது சீக்கிரம் கிளம்பிரு.” என்று தன் மனதிற்குள் நினைத்தவள், “ஓகே..!! மேடம். நீங்களே போய்ட்டு வந்துடுறிங்களா..? இல்ல நானும் உங்க கூட வரட்டுமா..?” என்று ‌ மரியாதை நிமித்தமாக அவளிடம் கேட்டாள்.

பிரார்த்தனா: “இட்ஸ் ஓகே மேம். நானே போய்ட்டு வந்தர்றேன். உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்.. இல்ல.. அத பாருங்க” என்றாள்.

சாரதா: “ரொம்ப நல்லது, உன் கூட வந்து நீ இன்னும் அங்க பேசற எல்லாத்தையும் வேற நான் கேட்கணுமா..? என்னால முடியாது சாமி..” என்று தன் மனதிற்குள் நினைத்தவள், “ஓகே..!! மேடம். நீங்க போயிட்டு வாங்க. Have a good day.” என்றவள், பார்மாலிட்டிகாக சிரித்தாள். 😅 😅

சாரதா சொன்னதுக்கு எல்லாம் எந்த பதிலும் சொல்லாத பிராத்தனா பிரின்சிபல் அறையில் இருந்து வெளியே வந்தவள், இன்ஸ்பெக்சனுக்காக வந்து இருக்கும் ஆபீஸர் போல பள்ளியின் ஒவ்வொரு அறைக்கும் சென்று பார்த்தாள்.

இந்த பள்ளி திறக்கப்பட்டு ஆறு மாதம் ஆகியிருந்த நிலையில், இந்த ஆறு மாதத்தில் இந்த நிகழ்வு அடிக்கடி நடப்பதினால் அங்கிருந்த அனைவரும் இதற்கு பழகி இருந்தார்கள்.

நாராயணன் குடும்பத்தின் இளவரசிக்கு அந்த குடும்பத்திலும், இந்த சமூகத்திலும்.. எந்த அளவிற்கு மதிப்பு இருக்கிறது என்று அனைவரும் அறிந்து இருந்ததால் அவளை கேள்வி கேட்கும் துணிவு யாருக்கும் இருந்ததில்லை. இன்றும் அதே போல் தான் நடந்தது.

இந்த பள்ளியின் நிர்வாகம் அனைத்தும் விஷ்ணு நாராயணனின் அதிகாரத்திற்கு கீழ் தான் இருந்தது. ஆனால் அதை பற்றி எல்லாம் பிராத்தனா ஒருபோதும் கவலைப்பட்டது இல்லை.

அவள் நாராயணன் குடும்பத்தை சேர்ந்தவள், நாராயணன் குடும்பத்திற்கு சம்மந்தப்பட்ட அனைத்திலும் அவளுக்கு அதிகாரம் உண்டு என்று தான் அவள் நினைத்துக் கொண்டு இருக்கிறாள்.

நாராயணன் குடும்பத்தின் தலைவன் வருண்னிற்கு பாசத்திற்குரிய செல்ல தங்கச்சியாக அவள் இருக்கும் வரை அவள் எதை பற்றியும், யாரை பற்றியும் கவலைப் பட வேண்டியது இல்லை. அவள் தவறே செய்தாலும் அவளை காப்பாற்ற அவளுடைய அண்ணன் இருக்கிறான் என்ற தைரியம் அவளுக்கு எப்போதும் உண்டு.

-நேசம் தொடரும்…

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured