அத்தியாயம் 240: ரித்திகாவை ஆறுதல் படுத்திய வருண் (பார்ட் 1)
அந்த பெரிய மால் முழுக்க வருண், ரித்திகாவையும் , சித்தார்த்தை அழைத்து கொண்டு மகிழ்ச்சியுடன் சுற்றி திரிந்தனர். 😍 🥰 ரித்திகா முகம் சுளிக்காமல் சிறிய பெண்ணை போல சித்தார்த்துடன் அவளும் அனைத்து இடங்களையும் கண்டு மகிழ்ந்தாள். ஆனால் அவளுடன் வீம்பிற்காக வந்த வருணால், குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அவர்களுடைய வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கால் வலியில் தவித்தான்.
ஆனால் அவனுக்குள் இருக்கும் ஈகோ அதை அவனை வெளியில் காட்ட விடவில்லை என்பதால், வெளியில் தன்னுடைய முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டு அவர்களுடன் சுற்றி திரிந்தான். இருப்பினும் அவனுடைய முகத்தில் தெரியும் அசோகர்யங்களை உணர்ந்த ரித்திகா அவ்வப்போது, “ஆர் யூ ஓகே..??? நீங்க வேணா போய் ரெஸ்ட் எடுக்கறதுனா எடுங்க.” என்று சொல்லி கொண்டே இருந்தாள். ஆனால் அப்போதும் வருண், “எனக்கெல்லாம் ஒன்னும் இல்ல. நீயும் சித்தார்த்தும் காலையில இருந்து எதுவும் சாப்பிடல. ஃபர்ஸ்ட் வாங்க போய் எல்லாரும் சாப்பிட்டு வந்துடலாம்.” என்று சொல்லி அவர்களையும் ஜான்வியின் பெற்றோர்களையும் சாப்பிடுவதற்காக அங்கேயே இருந்த ஒரு உணவகத்திற்கு அழைத்து சென்றான்.
பின் சித்தார்த் டயர்ட் ஆகும் வரை அவனை கூட்டி கொண்டு நிறைய இடங்களை சுற்றி பார்த்துவிட்டு சாயங்காலத்திற்கு மேலாக அவர்கள் தங்களுடைய வீட்டிற்கு வந்தனர். தங்களுடைய மகள் ஜான்வி இல்லாத வீட்டில் அவளுடைய பெற்றோர்கள் மீண்டும் வந்த தங்க விருப்பமில்லை. என்பதால் அவர்கள் அப்படியே கிளம்பி தங்களுடைய வீட்டிற்கு சென்று விட்டனர். வருண் இங்கு இருந்து அவர்கள் சென்னை செல்வதற்கு ஒரு காரையும், அங்கு இருந்து அவர்கள் பிளைட்டில் மும்பைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தான்.
பிரவீனின் வீட்டில்…
வெகு நேரத்திற்கு பின்பு மயக்கத்தில் இருந்து கண் விழித்தத லக்ஷனாவிற்கு முதலில் அவள் பிரவினால் தனக்கு நடந்த கொடுமைகளைப் பற்றி நினைத்துப் பார்த்தவள், கோபமாக எழுந்து அமர்ந்தாள். தேவியும், அபர்ணாவும், அவள் கண் விழிப்பதற்காக அவள் அருகையே தான் காத்துக் கொண்டு இருந்தனர். லக்ஷனா தனக்கு சோர்வாக இருந்தாலும் அந்த கட்டிலில் இருந்து வேகமாக எழுந்து அமர்ந்தவள், ஒரு நொடியும் தாமதிக்காமல் தன்னுடைய கபோர்டு ஐ திறந்து அதில் இருக்கும் தன்னுடைய ஆடைகள் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்களை எடுத்து பேக் செய்து கொண்டு இருந்தாள்.
அவசர அவசரமாக அவள் அருகே சென்ற தேவி, “ஏன் மா லக்ஷனா என்ன பண்ற இப்போ..?? இந்த நேரத்துல இது எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு எங்கே போக போற…??? டாக்டர் உன்ன நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காரு மா. இப்ப உனக்கு இருக்கிற கோபம் நியாயம் தான். ஆனா இதுல அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காத அம்மா.
அவன் முரடன் தான். பைத்தியக்காரத்தனமா இந்த மாதிரி ஏதாவது பண்ணக்கூடியவன் தான். நான் அத எல்லாம் இல்லன்னு சொல்லல. ஆனா உன்னோட பாசத்தால நீ நினைச்சா, அவனை உன்னால மாத்த முடியும். அவனும் மனுஷன் தானே மா.. போகப் போக எல்லாத்தையும் புரிஞ்சுப்பான். உங்களுக்குன்னு ஒரு குழந்தை வந்தா எல்லாம் சரியாயிடும்.” என்று தாய் அன்பில் தன்னுடைய மகனின் நலத்தைப் பற்றி மட்டும் யோசித்து சுய நலமாக பேசி கொண்டு இருந்தாள்.
தேவியை எரித்து விடும் பார்வை பார்த்து முறைத்த லக்ஷனா, “நான் இப்ப இருக்கிற நிலைமையை பார்த்தும் உங்களால இப்படி எல்லாம் பேச முடியுதுன்னா, உங்களுக்கு எல்லாம் மனுஷ தன்மையே இல்லைன்னு அர்த்தம். உங்களுக்கும் ரெண்டு பொண்ணு இருக்குல்ல…
ஏற்கனவே ஒருத்தி இதெல்லாம் ஒரு குடும்பமான்னு.. இங்க இருக்க மாட்டேன்னு ஓடிப் போயிட்டா. இப்ப இவ இருக்காளே.. இவளுக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்கல்ல.. அப்ப உங்க பையன் மாதிரி ஒரு வரன் வந்தா, நீங்க அவனுக்கு இவளை கட்டி குடுப்பீங்களா..?? நீங்க பெத்து வச்சிருக்கீங்கல்ல.. அவன்லாம் மனுஷ ஜென்மமே கிடையாது. எனக்கு நடந்த மாதிரி உங்க பொண்ணுக்கு நடந்தா கூட இப்ப நீங்க என்கிட்ட சொல்ற மாதிரி இது எல்லாத்தையும் பொறுத்துக்கோ. உன் புருஷனை திருத்து. உங்களுக்கு குழந்தை பிறந்தா எல்லாம் சரியாயிடும்னு இப்படி தான் அட்வைஸ் பண்ணிட்டு இருப்பீங்களா..??
நீங்க புள்ளைய பெத்து தருதலையா வர்ளத்தி விட்டுருவீங்க. அத வந்து திருத்துறது தான் என் வேலையா…?? அவன் என்ன டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா கூட என்னமோ பண்ணி தொலையட்டும்னு நான் கண்டுக்காம நான் பாட்டு ஒரு ஓரமா இருந்து இருப்பேன். ஆனா இங்க பாருங்க.” என்றவள் தன்னுடைய உடம்பில் இருந்த காயங்கள் அனைத்தையும் தேவியிடம் சுட்டி காட்டி, “இப்படியே அவன் அடிச்சு… அடிச்சு.? ஒரு நாள் என்ன கொன்னே போட்றுவான். அவன் என்ன சாகடிக்கிற வரைக்கும் கூட நான் பொறுமையா இருக்கணும்னு சொல்ல போறீங்களா…???” என்று ஆத்திரத்தில் சத்தமாக கத்தினாள். 😡 🔥 😤
இப்போது லக்ஷனா பேசுவதை கேட்டுவிட்டு தாங்கள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தேவியும், அபர்ணாவும், அமைதியாக நின்று கொண்டு இருந்தனர். அவர்களை கண்டு கொள்ளாமல் ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு தன்னுடைய உடல் முழுவதையும் மறைக்கும் படியான ஒரு ஆடையை எடுத்து மாட்டி கொண்டு வெளியில் செல்வதற்காக கிளம்பி கொண்டு இருந்தாள் லக்ஷனா.
வேகமாக பிரவீன் தங்கி இருந்த அறைக்கு சென்ற அபர்ணா, லக்ஷனா தங்களுடைய வீட்டில் இருந்து வெளியே கிளம்பும் செய்தியை அவனிடம் தெரிவித்தாள். இன்னும் அறை போதையில் உளறி கொண்டு இருந்த பிரவீன், “அவ பெரிய இவளா…!! அவ போனா போகட்டும். இப்ப என்ன..?? அவ திமிரெடுத்து இங்க இருந்து போனா, அவளை அப்படியே விட்டுவிடுவேன்னு நினைக்கிறாயா..?? போனா போய் தொலையட்டும். போனவளை தானா இங்க நான் வரவச்சு காட்டுறேன் பாரு. நீ ஃப்ரீயா விடு. போய் உன் வேலையை பாரு. அவளுக்கெல்லாம் இவ்ளோ சீன் இல்ல.” என்று சொல்லிவிட்டு மீண்டும் புரண்டு படுத்தி தூங்க தொடங்கி விட்டான்.
பிரவீனின் வீட்டில் இருந்து கிளம்பிய லக்ஷனா, தன் மீது பாசம் இல்லாத அம்மாவை போய் தான் இப்போது பார்க்க வேண்டுமா என்று நினைத்து கோபத்தில் வெளியில் தான் ஹோட்டலில் தங்கினாலும் தன்னை ஈசியாக இவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்று நினைத்தவள், தன்னுடைய மொபைல் போன் ஐ சிவிச் ஆப் செய்து பிரவீனின் வீட்டிலேயே போட்டுவிட்டு; ஒரு ஆட்டோவில் ஏறி தெருத்தெருவாக அலைந்தவள், ஒரு நடுத்தர வீடு காலியாக இருக்கும் போர்டை பார்த்துவிட்டு அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி தனக்கு அந்த வீட்டை வாடகைக்கு கொடுக்குமாறு கேட்டு அங்கே தங்கி கொண்டாள்.
இப்போதைக்கு சிறிது நாட்கள் பிரவீனின் கண்களில் படாமல் இங்கே இருந்துவிட்டு பின் சரியான நேரம் பார்த்த இங்கிருந்து கிளம்பி வெளிநாட்டிலோ, அல்லது வெளி மாநிலத்திலோ, தனக்கென ஒரு வேலையை தயார் செய்துவிட்டு இங்கு இருந்து அங்கே சென்று செட்டில் ஆகிவிடலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தாள். அவளுக்கு தன்னுடைய அம்மா மற்றும் பிரவீன் போன்ற மனிதநேயமற்ற பணக்காரர்களின் கண்களில் இருந்து மறைந்து எங்கேயாவது போய் ஒளிந்து கொண்டு ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்தால் கூட நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
நாராயணன் பேலஸில்…
இரவு நேர ஆடையை அணிந்து இருந்த ரித்திகா வழக்கம் போல் தன்னுடைய மொபைல் போனில் தூக்கம் வரும் வரை விளையாடலாம் என்று நினைத்து ஆன்லைனில் லுடோ விளையாடிக் கொண்டு இருந்தாள். அவள் அது ஏதோ ஒரு இன்டர்நேஷனல் மேட்ச் போல நினைத்து சீரியஸான முக பாவனைகளுடன், மும்மரமாக விளையாடிக் கொண்டு இருந்தாள். அதை கவனித்த வருண், “இவ எல்லாம் திருந்தவே மாட்டா. எப்ப பாத்தாலும் யூஸ்லசா எதையாவது தான் பண்றா.” என்று நினைத்துக் கொண்டு ரிப்ரஸ் ஆகிவிட்டு ஒரு டி-ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு கையில் ஒரு பெயின் கில்லர் ஸ்ப்ரே உடன் வந்து கட்டிலில் அமர்ந்தான்.
அவன் அதை தன்னுடைய கால்களில் அடித்துக் கொண்டு இருக்க அதை கவனித்த ரித்திகா, “லெக் பேயின்னா..???” என்று அவனிடம் விளையாடி கொண்டே கேட்டாள். “இல்ல இது பெர்ஃப்யூம் -ல.. இத நைட்ல போட்டுட்டு தூங்குனா, நல்லா தூக்கம் வரும்னு ஒருத்தர் சொன்னாரு. அதான் அடிச்சு பாத்துட்டு இருக்கேன்.” என்று நக்கலாக சொன்னான்.
”நான் உங்க மேல இருக்கிற கேர்ல தானே கேட்டேன்.. அதுக்கு ஏன் பெயின் கில்லரை பெர்ஃப்யூம் -ன்னு சொல்றீங்க..?? இது என்னான்னு கூடவா எனக்கு தெரியாது..??” என்று அப்பாவியாக தன்னுடைய முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள். “அதான் இது பெயின் கில்லர்னு தெரியுது இல்ல அப்புறம் என்ன நக்கலா லெக் பெயினான்னு கேக்குற..??? நீ அப்படியே ரொம்ப சின்ன பொண்ணு எனக்கு உன்ன விட வயசு அதிகம்னு ஏதாவது ஒரு விதத்துல உனக்கு சொல்லி காமிச்சிக்கிட்டே இருக்கணும் அதானே..!!!” என்று எரிச்சலான குரலில் கேட்டான் வருண். 😒
“அய்யா… சாமி ஆள விடுங்க. நான் தெரியாம உங்க கிட்ட பேசிட்டேன். அது தப்பு தான். இனிமே உங்க கிட்ட பேச மாட்டேன்.” வருணின் மீது லேசான கோபத்துடன் சொல்லிவிட்டு கையெடுத்து கும்பிட்ட்வள், அவனை பார்க்காமல் வேறு புறமாக திரும்பி அமர்ந்து கொண்டு மீண்டும் கேம் விளையாட தொடங்கினாள். 😒 🙏
“ச்சீ போடி லூசு.” என்று லேசாக முனகிய வருண், அவனும் வேறு புறமாக திரும்பிப் படித்துக் கொண்டான். வருண் என்ன தான் அவன் பெயின் கில்லர் ஐ அடித்து இருந்தாலும், அவனுடைய கால் வலியை அது சில நிமிடங்கள் மட்டுமே தடுத்து வைத்து இருந்தது. அதன் பவர் குறைந்த பின்பு மீண்டும் அவனுக்கு கால் பலமாக வலிக்க தொடங்கியது. அதனால் லேசாக வலியில் முனகியவன், தூக்கம் வராமல் அந்த புறமும், இந்த புறமும், திரும்பி படுத்து கொண்டு தவித்து கொண்டு இருந்தான்.
தான் விளையாடி கொண்டு இருந்த கேம் முடிந்ததும் தன் போனை ஓரமாக வைத்துவிட்டு படுத்து கொண்ட ரித்திகா, வருணை கவனிக்க தொடங்கினாள். அவளால் அவன் தூக்கம் இன்றி கால் வலியில் தவித்துக் கொண்டு இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இருப்பினும் தான் இதைப் பற்றி அவனிடம் கேட்டால் அவன் இதற்கும் தன்னிடம் ஏதாவது பதில் சொல்லி தன்னை கடுப்பேற்றுவான் என்று நினைத்தவள், அமைதியாக படுத்துக் கொண்டாள். ஆனால் வருண் இப்படி தூக்கம் வராமல் தவித்துக் கொண்டு இருக்கும் போது அவளால் மட்டும் நிம்மதியாக தூங்கி விட முடியவில்லை. அதனால், “அவர் ஏதாச்சு சொன்னா கூட பரவால்ல. இன்னும் பெயின் இருக்கானு கேட்றுவோம்.” என்று நினைத்த ரித்திகா வருண் புறமாக திரும்பிப் படுத்தவள், “இன்னும் உங்களுக்கு லெக் பெயின் குறையலையா..??” என்று அக்கறையுடன் வினாவினாள்.
நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)