அத்தியாயம் 163
விஷ்வாவும், மேகமும் இத்தனை நாட்களாகியும் சௌபர்ணிகாவிற்கு அவள் கர்ப்பமாக இருந்தது ஏன் தெரியவில்லை..?? என்று தங்களுக்குள் பேசியபடி அவர்களது ரூமிற்கு சென்றார்கள். “அவங்க தான் அடிக்கடி work pressure.. workல busyஆ இருக்கேன்னு சொல்லிட்டு இருக்காங்களே.. அதான் இதெல்லாம் கவனிக்காம விட்டுருப்பாங்க. சரி நான் போய் குளிச்சிட்டு வரேன்.” என்ற மேகா குளிப்பதற்காக பாத்ரூமிற்க்கு சென்று விட்டாள்.
Bedல் சென்று பொத்தென அமர்ந்த விஷ்வா தனது mobile phoneஐ எடுத்து “நான் சொன்ன வேலையை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் செஞ்சு முடி. நமக்கு ரொம்ப டைம் இல்ல.” என்று யாருக்கோ message அனுப்பினான். “நான் already நீங்க சொன்ன workஐ start பண்ணிட்டேன். நான் எல்லாத்தையும் சீக்கிரம் கண்டுபிடிச்சு உங்க ணகிட்ட சொல்றேன்.” என்று மறுமுனையில் இருந்து அவனுக்கு reply வந்தது. அதை பார்த்துவிட்டு அப்படியே மெத்தையில் சரிந்த விஷ்வா “பாக்குறதுக்கு எல்லாமே நார்மலா இருக்கிற மாதிரி தெரிஞ்சாலும், எனக்கு எதுவுமே சரி இல்லைன்னு தோணுது. அக்கா முன்னாடி மாதிரி இல்லன்னு தான் எல்லாருக்குமே சொல்றாங்க. வந்த doctorம் அவங்க depressionல இருக்காங்கன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. So ஒன்னு மட்டும் clearஆ தெரியுது. She is mentally and physically not well. அந்த சேரன் எப்படியோ அது secondary. இனிமே நம்ம தான் அவங்கள நல்லா பாத்துக்கணும்.” என்று நினைத்தான்.
“என்ன அதுக்குள்ள படுத்திட்ட.. போய் குளி போ. அப்புறம் குளிக்காம படுத்துட்டேன். தூக்கம் வரலைன்னு நடு ராத்திரியில புலம்பக் கூடாது.” என்று குளித்துவிட்டு வெளியே வந்த மேகா சொல்ல, “போறேண்டி போறேன்.” என்ற விஷ்வா எழுந்து குளிக்க சென்றான். அவன் வருவதற்குள் night dressஐ மாட்டிக் கொண்டு சென்று கட்டிலில் விழுந்தாள் மேகா.
“வரப்போற குட்டி பாப்பா.. சௌபர்ணிகா அக்கா மாதிரியே ரொம்ப அழகா இருக்கும்ல்ல.. இப்பதான் பாட்டி என்னையும் அவங்களையும் சஷ்டிக்கு விரதம் இருக்க சொன்னாங்க. அதுக்குள்ள அவங்களுக்கு முருகன் அருள் குடுத்துட்டாரு. இன்னும் ஏழு எட்டு மாசத்துல அவங்களுக்கு பாப்பா பிறந்திடும். அதோட கை, கால் எல்லாம் குட்டி குட்டியா cuteஆ இருக்கும். அது அழுதுட்டே இருக்கும்ல்ல..!! அவங்க tiredஆ இருந்தா நான் office கூட போகாம பாப்பாவ பாத்துக்கறேன்னு சொல்லி இங்க தூக்கிட்டு வந்து என் குட்டி baby கூட விளையாடிட்டே இருப்பேன்.” என்று நினைத்து அவள் அந்த குழந்தை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்தாள்.
குளித்துவிட்டு வந்த விஷ்வா வழக்கம்போல ஒரு shortsஐ மட்டும் அணிந்து கொண்டு சென்று மேகாவின் அருகே படுத்தான். திரும்பி அவனை அணைத்துக் கொண்ட மேகா, “பொறுக்க போற பாப்பா உன்னை மாமானு கூப்பிடும்ல்ல.. நீ அந்த babyக்கு தாய் மாமா. So நான் அந்த குழந்தைக்கு சின்ன வயசுல இருந்தே உன்ன Robot uncleன்னு கூப்பிடுன்னு சொல்லிக் கொடுப்பேன். அதுவும் உன்னை அழகா Robot uncle.. robot uncleன்னு கூப்பிடும். அதெல்லாம் கேட்க நல்லா இருக்கும்ல..!!” என்று கேட்டுவிட்டு சிரித்தாள். “robot uncleஆ.. அடியேய்.. உன்ன சாவடிச்சிடுவேன் டி. என்ன பாத்தா உனக்கு uncle மாதிரி தெரியுதா..??” என்று கோபமாக கேட்டுவிட்டு அவன் லேசாக அவள் மண்டையில் கொட்ட, “ஆமா, அப்படித்தான் தெரியுது. நீ அந்த குழந்தைக்கு மாமா தானே.. அப்ப Englishல uncle தான்.” என்றாள் அவள்.
“அதெல்லாம் ஒத்துக்க முடியாது. ஏன் அவன்ல அழகா மாமானு கூப்பிட்ட மாட்டானா..?? இங்க பாருடி.. இப்பவே தெளிவா சொல்றேன். நல்லா கேட்டுக்கோ.. பொறக்க போற குழந்தைக்கு நீ முடிஞ்சா ஏதாச்சும் நல்லதா சொல்லிக் கொடு. இல்லனா சும்மா இரு. தேவையில்லாம கண்டத சொல்லிக் கொடுத்து அதைக் கெடுத்து வச்சு உன்ன மாதிரியே nut கலண்ட caseஆ மாத்திடாத. அப்புறம் அந்த குழந்தையே கடுப்பாகி உன்ன boomer auntyன்னு கூப்பிட ஆரம்பிச்சுடும்.” என்று சொல்லிவிட்டு அவன் சிரிக்க, “நான் உனக்கு boomer auntyயா டா.??? நீதாண்டா பெரிய வயசான boomer uncle.” என்ற மேகா அவனை அடிக்க தொடங்கினாள்
அவள் கையைப் பிடித்து தடுத்த விஷ்வா “ஏய் சும்மா இருடி. பார்க்க இத்துனூண்டு இருந்துக்கிட்டு இப்படி பட்டு பட்டுன்னு அடிக்கிற.. சுல்லு சுல்லுன்னு வலிக்குது. இங்க பாரு.. நான் shirt போடாததனால red colourல mark ஆயிடுச்சு..!!” என்று அவன் தன் கையை காட்ட, “ஆனா ஆயிட்டு போகுது போ. உனக்கு இதெல்லாம் தேவைதான். இதுக்குதான் பொண்டாட்டிகிட்ட வாய் பேச கூடாதுன்னு சொல்றது. கேக்குறியா நீ..??” என்று கேட்டாள் அவள். “ச்சீ.. போடி ராட்சசி.” என்ற விஷ்வா வேறு புறமாக திரும்பி படுத்து கொண்டான்.
பின்னே இருந்து அவனை அனைத்தவாறு அவனோடு ஒட்டிக்கொண்டு படுத்த மேகா, “நான் மட்டும் ஏன் இன்னும் pregnant ஆகல விஷ்வா..?? நமக்கு எப்ப பாப்பா பொறக்கும்..?? எல்லாரும், நமக்கு அப்புறம் தான் அவங்களுக்கு கல்யாணமாச்சு. இப்போ சௌபர்ணிகா அக்கா pregnantஆ இருக்கும்போது, நான் மட்டும் ஏன் இன்னும் pregnant ஆகலைன்னு என்ன question பண்ண மாட்டாங்களா..?? அப்படி யாராவது கேட்டா,
நான் என்ன சொல்லி சமாளிக்கிறது..??” என்று கேட்க, அவள் பக்கம் திரும்பி படுத்த விஷ்வா “லூசாடி நீ..?? Unwantedஆ எதையும் யோசிக்காம உன்னால கொஞ்ச நேரம் கூட சும்மாவே இருக்க முடியாதா..?? நம்ம என்ன cookingஆ பண்ணிட்டு இருக்கோம்..?? அவங்களுக்கு 2 whistlesல சாப்பாடு வெந்துருச்சு. நமக்கு ஏன் டி இன்னும் வேகலைன்னு கேட்க..?? இதெல்லாம் natural process. தானா அதுவா எப்ப நடக்கணுமோ அப்ப நடக்கும்.” என்றான்.
“நமக்கு marriage ஆகும்போது நமக்குள்ள எதுவும் நடக்கல. ஆனா இப்ப எல்லாமே கரெக்டா தானே நடக்குது.. அப்ப அதுக்கு இந்நேரம் proper result கிடைச்சிருக்கணும்ல்ல..!! ஏன் கிடைக்கல..?? அதுவா நடக்கும்னா, எப்ப நடக்கும்..??” என்று அவள் கொஞ்சம் சோகமாக கேட்க, “இப்படி கேட்டா நான் என்னடி சொல்றது..?? இப்பதான் நம்ம வீட்டுக்கு ஒரு பாப்பா வரப்போகுதுள்ள.. முதல்ல அத பாத்து பக்குவோமா ஒழுங்கா வளர்த்துவோம். அப்புறம் பொறுமையா நம்ம பெத்துக்கலாம்.” என்று சாதாரணமாக சொன்னான் அவன்.
“என்ன பேசுற விஷ்வா..?? அந்த குழந்தை பிறந்து அது வளர்ந்ததுக்கு அப்புறம் தான் நம்ம குழந்தை பெத்துக்கணும்னா, அதுக்கு இன்னும் எத்தனை வருஷம் ஆகும்..?? உனக்கு என்ன எல்லாத்தையும் நீ ஈஸியா சொல்லுவ. ஏன் இன்னும் உங்களுக்கு குழந்தை பிறக்கலன்னு எல்லாரும் என்னதானே வந்து question பண்ணுவாங்க.. அதுக்கு நான் தான் என்ன answer சொல்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கணும்.” என்று அவள் கோபமாக சொல்ல,
“உன்னை யாருடி அவங்களுக்கு எல்லாம் answer பண்ணிட்டு இருக்க சொன்னாங்க…?? உன்கிட்ட இத பத்தி யாராவது பேசினா, அவங்கள என்கிட்ட வந்து அத பத்தி கேட்க சொல்லு. நான் அவங்களுக்கு எப்படி சொன்னா புரியுமோ அந்த மாதிரி தெளிவா answer பண்றேன். ஓகேவா..??” என்று கேட்டான் அவன்.
“போடா.. உனக்கு நம்ம குழந்தைய பாக்கணும், அத கொஞ்சனும், அது கூட விளையாடனும்னு எல்லாம் ஆசையே இல்லையா..?? என்னமோ குழந்தை மேல interestஏ இல்லாத மாதிரி வரும்போது வரட்டும்னு எல்லாத்தையும் casualஆ சொல்லிட்டு இருக்க..??” என்று அவள் கொஞ்சம் கோபமாக கேட்க,
“என்னடி.. நான் என்ன சொன்னாலும் அத தப்பாதான் புரிஞ்சிப்பியா நீ..?? எனக்கும் தான் குழந்தை வேணும்னு ஆசையா இருக்கு. அதுக்காக நான் உன்ன எனக்கு எல்லாம் எதுவும் தெரியாது.. next month confirmஆ நீ pregnantஆகியே தீரனும்னு நான் சொன்னா உன்னால உடனே pregnantஆக முடியுமா..?? அதுவா நடக்கும் போதுதானே நடக்கும்.. அதான் அது எப்பவோ நடக்கட்டும். இப்ப இதை பத்தி யோசிச்சு tension ஆகாத. Freeஆ விடுன்னு சொல்றேன்.” என்றான் விஷ்வா.
இதற்கு மேல் என்ன சொல்லி அவனிடம் வாதிடுவது என்று தெரியாமல் அவனை அணைத்துக் கொண்ட மேகா தன் கண்களை மூடி சில நிமிடங்களுக்கு பின் உறக்கத்தை தழுவினாள்.
இன்னும் சௌபர்ணிகா ground floorல் உள்ள room-மிலேயே இருக்க,
“நான் கூட வேணும்னு நீ நமக்கு குழந்தை பிறக்க கூடாதுன்னு ஏதோ சதி பண்றியோனு நினைச்சேன்டி. ஆனா நீ அப்படியெல்லாம் இல்ல. நான் என்ன பண்ணாலும் உனக்கு என் மேல இருக்கிற லவ் குறையல்ல.. இப்போ நமக்குன்னு ஒரு குழந்தை வரப்போகுது. அதை நினைக்கும் போது எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா..?? இதுக்காகவே உன் மேல இருக்கிற கோபத்தை எல்லாம் மறந்துட்டு உன்னை மன்னிச்சிடலாம்னு கூட எனக்கு தோணுதுடி. நம்ம குழந்தை வர்றத்துக்கு முன்னாடியே என்ன இவ்ளோ மாத்திடுச்சே.. இதுல குழந்தை வந்ததுக்கப்புறம் நான் எப்படி எல்லாம் மாறப் போறனோ… நீ என் குழந்தையோட அம்மா என்பதற்காகவே எனக்கு உன் மேல பாசம் வந்துரும் போல.” என்று நினைத்து மயக்கத்தில் இருந்த சௌபர்ணிகாவின் முகத்தை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்த சேரன் லேசாக புன்னகைத்தான்.
அப்போது மயக்கம் தெளிந்து சுற்றி முற்றி பார்த்த சௌபர்ணிகா “எனக்கு என்னாச்சு..??” என்று உணர்ச்சியற்ற குரலில் கேட்க, “உனக்கு ஒன்னும் இல்ல. You are absolutely fine. And I have one happy news for you.” என்ற சேரன் அவள் அருகில் சென்று அவள் கைகளை அன்புடன் பிடித்துக் கொண்டு தரையில் மண்டியிட்டு அமர்ந்தான். அவனிடமிருந்து தன் கையை உருவி கொண்ட சௌபர்ணிகா “நீ சொல்ற மாதிரி இருந்தா, அது எப்படி எனக்கு happy newsஆ இருக்கும் சேரன்…?? உனக்கு தான் நான் சந்தோஷமா இருந்தாலே பிடிக்காதே..!!” என்றாள்.
“ச்ச்ச்.. முதல்ல நான் சொல்ல வர்றத என்னன்னு கேளுடி. இது எப்ப நடக்கும்னு தான் இத்தனை நாளா நான் wait பண்ணிட்டு இருந்தேன். இத கேட்டு நீ சந்தோஷப்படுவியா இல்லையான்னு எனக்கு தெரியாது. ஆனா உன்னால நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். I swear சௌபர்ணிகா, இனிமே நீயும் நானும் எப்பவும் சந்தோஷமா இருப்போம்.” என்று அவன் உணர்ச்சி பொங்க சொல்ல,
“என்ன இவன் திடீர்னு அப்படியே நல்லவன் மாதிரி பேசுறான்..?? என்ன இருந்தாலும், மறுபடியும் மறுபடியும் நம்ம இவன நம்பி ஏமாறக்கூடாது.” என்று நினைத்த சௌபர்ணிகா “நீ முதல்ல என்னன்னு சொல்லு.” என்றாள்.
“நீ மயங்கி விழுந்ததினால உன்ன check பண்றதுக்கு doctor வந்தாங்க. நீ pregnantஆ இருக்கன்னு சொன்னாங்க. நமக்கு இன்னும் 7 or 8 monthsல ஒரு baby வரப்போகுதுன்னு சொன்னாங்க. நம்ம குழந்தை எப்படி இருக்கும்னு பாக்குறதுக்கு எனக்கு ரொம்ப excitedஆ இருக்கு தெரியுமா..??” என்று சேரன் கேட்க, ஷாக்காகி அவனைப் பார்த்த சௌபர்ணிகா “நான் pregnantஆ இருக்கனா..??” என்று நினைத்து தன் வயிற்றை தொட்டு பார்த்தாள்.
தொடரும்..