அத்தியாயம் 162
ரிஷி கேட்டதால் அவனுக்காக ice cream எடுக்க kitchenக்கு சென்ற சௌபர்ணிகா பாதி வழியில் மயங்கி விழ, அவளை தாங்கி பிடித்தான் ரிஷி. “அக்கா.. என்னாச்சு உங்களுக்கு..?? அக்கா என்ன பாருங்க அக்கா..!!” என்ற ரிஷி அவள் கன்னத்தை தட்ட, “ஐயோ சௌபர்ணிகா.. உனக்கு என்னமா ஆச்சு..??” என்று பாட்டி high pitchல் கதறி அழத் தொடங்கி விட்டதால், அனைவரும் அவரது சத்தம் கேட்டு அங்கே ஓடி வந்தார்கள். ரிஷி சௌபர்ணிகாவை தூக்கி sofaவில் படுக்க வைக்க, டாக்டருக்கு கால் செய்தான் விஷ்வா. மேகா தண்ணீர் கொண்டு வந்து அவள் முகத்தில் தெளித்துப் பார்த்தாள். ஆனால் அசைவின்றி அப்படியே கிடந்தாள் அவள்.
“அட கடவுளே.. தண்ணி தெளிச்சும் இவளுக்கு மயக்கம் தெளியலையே…!! என் பேத்திக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே..!!” என்று பாட்டி தன் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ, “பாட்டி.. அவங்களுக்கு எதுவும் ஆகி இருக்காது. நீங்க பதட்டப்பட்டு உங்களுக்கு ஏதாவது ஆயிட போகுது. கொஞ்ச நேரம் அழுகாமல் அமைதியா இருங்க. நான் டாக்டருக்கு call பண்ணி வர சொல்லி இருக்கேன். சீக்கிரம் அவங்க வந்துருவாங்க.” என்ற விஷ்வா மேகாவை பார்த்து “நீ பாட்டியை கூட்டிட்டு முதல்ல உள்ள போ.” என்றான்.
“சௌபர்ணிகா.. உனக்கு என்னம்மா ஆச்சு.. இவ்ளோ நேரம் நல்லா தானே இருந்த..!!” என்று அப்போதும் பாட்டி புலம்பிக்கொண்டே இருக்க, “அவங்களுக்கு ஒன்னும் இல்ல பாட்டி. நீங்க பயப்படாதீங்க.” என்ற மேகா nurseன் உதவியோடு பாட்டியை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு அவரது ரூமிற்கு சென்றாள்.
தனது அறையில் இருந்த சேரனிடம் “சார்… சார்.. என்ன ஆச்சுன்னு தெரியல. சௌபர்ணிகா மேடம் மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. விஷ்வா சார் டாக்டருக்கு call பண்ணி வர சொல்லி இருக்காரு.” என்று ஒரு servant சென்று சொல்ல, “இப்ப எப்படி இருக்கா அவ..??” என்று கேட்டு பதறிய சேரன் வேகமாக கீழே சென்றான்.
அங்கே living room sofaவில் வெளிரிப்போன முகத்துடன் வாடிய மலராய் கிடந்த சௌபர்ணிகாவை பார்த்தவுடன் அவனையும் அறியாமல் சேரனின் கண்கள் கலங்கியது. அவள் மயங்கி விழுந்ததை விட, அதுதான் அவனை ஆச்சரியப்படுத்தியது. அதனால் அவள் அருகில் சென்று அமைதியாக அமர்ந்த சேரன் தன் கண்ணீரை கையில் தொட்டு பார்த்து,
“இதுவரைக்கும் நானே உன்னை எத்தனையோ தடவை கொன்னுடுவேன்னு சொல்லி மிரட்டி இருக்கேன்டி. ஆனா இப்போ நீ என் முன்னாடி மூச்சுப்பேச்சு இல்லாம இப்படி கிடைக்கிறத பார்க்கும்போது, எனக்கே என்னமோ கஷ்டமா இருக்குடி. அதான் என்னை அறியாமை என் கண்ணு தானா கலங்குது.
என்ன இருந்தாலும் நீ என் பொண்டாட்டி தானே.. சோ அந்த feel உன் மேல இருக்கும்லன்னு நான் சும்மாதான் சொன்னேன். But என் மனசுக்குள்ள நிஜமாவே நீ இருந்திருக்க போலடி. உன்ன சந்தோஷமா வச்சுக்குறதா இருந்தாலும் சரி, அழ வைக்குறதா இருந்தாலும் சரி. அதை நான் மட்டும் தான் பண்ணனும். So நீ இப்படி எல்லாம் பண்ணி என்ன பயமுறுத்தாத சௌபர்ணிகா. என்னடி ஆச்சு உனக்கு..?? சீக்கிரம் கண்ணை திறந்து என்னை பாரு என்னை.” என்று தன் மனதிற்குள் அவளிடம் சொல்லிவிட்டு அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.
விஷ்வா அவனையே கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தான். சில நிமிடங்களுக்கு பிறகு அவளை அவர்கள் ground floorல் இருந்த ஒரு roomல் படுக்க வைக்க, அங்கே வந்தாள் ஒரு டாக்டர் பெண்மணி.
“சார்.. நீங்க எல்லாம் கொஞ்சம் வெளியே இருங்க. நான் இவங்களுக்கு என்னாச்சுன்னு check பண்ணனும்.” என்று டாக்டர் சொல்லிவிட, ஆண்கள் அனைவரும் வெளியே சென்றார்கள். பின் சௌபர்ணிகாவை நன்றாக check செய்த doctor அவளுக்கு ஒரு injectionஐ போட்டுவிட்டு அவளுக்கு கொடுக்க வேண்டிய மருந்து மாத்திரைகளை தனது prescription padல் எழுதி எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.
அவளைப் பார்த்தவுடன் விஷ்வாவை முந்திக்கொண்டு சேரன் “என் wife இப்ப எப்படி இருக்காங்க..?? அவங்களுக்கு என்ன problem doctor…??” என்று அக்கறையுடன் கேட்க, “I have one good news and one bad news Sir.” என்றாள் doctor.
“அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம நாங்க எல்லாம் tensionல இருக்கோம் doctor. so எதுவா இருந்தாலும் directஆ சொல்லிடுங்க.” என்று விஷ்வா பொறுமை இல்லாமல் சொல்ல, “Sorry Sir. Good news என்னன்னா, சௌபர்ணிகா மேடம் pregnantஆ இருக்காங்க. But she is so weak. அவங்க ரொம்ப நாளாவே ஒழுங்கா சாப்பிடுறது இல்லைன்னு நினைக்கிறேன். பாக்கவே ரொம்ப anaemicஆ தெரியுறாங்க. உடனே Scan பண்ணி பார்த்தா தான் இவங்க ovary எப்படி இருக்கு, அது babyஐ பத்திரமா carry பண்ற conditionல இருக்கான்னு தெரியும். நாளைக்கு அவங்கள hospital கூட்டிட்டு வாங்க. கொஞ்சம் Tests எல்லாம் எடுக்க வேண்டியது இருக்கு.” என்றாள் doctor.
தான் அப்பா ஆகப்போவதை நினைத்து மகிழ்ந்த சேரன் “என்ன டாக்டர் இப்படி நல்ல விஷயத்தை சொல்லிட்டு கூடவே எதை எதையோ சொல்லி பயமுறுத்துறீங்க.. என் குழந்தை safeஆ தானே இருக்கு..??” என்று கேட்க, “நான் சொன்ன மாதிரி அதெல்லாம் scan எடுத்து பாத்துட்டு தான் சார் சொல்ல முடியும். பட் எது எப்படி இருந்தாலும், நீங்க உங்க wifeஐ நல்லா பாத்துக்கிட்டாளே உங்க குழந்தை ஆரோக்கியமா இருக்கும். சௌபர்ணிகா மேடம பார்த்தா அவங்க ஏதோ கொஞ்ச நாளா depressionல இருக்கிற மாதிரி இருக்கு. So take care of her. இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்களுக்கு மயக்கம் தெளிஞ்சிடும்.” என்றாள் doctor.
“கண்டிப்பா டாக்டர்.. நீங்க இத சொல்லவே வேண்டாம்.. I will take care of my wife. அவங்களுக்கு கொஞ்ச நாளா Work pressure அதிகமா இருந்துச்சு. அதான் stressல இருந்தாங்க. இனிமே அவங்க work எல்லாத்தையும் நான் தான் பாத்துக்க போறேன்.” என்று சேரன் சொல்ல, “நான் நாளைக்கு அவங்கள கூட்டிட்டு hospital வரேன் டாக்டர்.” என்றான் விஷ்வா. “ஓகே சார்.” என்ற டாக்டர் தன் கையில் இருந்த prescriptionஐ அவன் கையில் கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.
சேரணை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்த விஷ்வா prescriptionஐ மகேஷின் கையில் கொடுத்து “இதுல இருக்குற medicinesஐ அவங்களுக்கு மயக்கம் தெளியறதுக்குள்ள வாங்கிட்டு வா.” என்று சொல்லிவிட்டு நேராக பாட்டியின் ரூமிற்கு சென்றான்.
அங்கே இன்னும் பாட்டி சௌபரணிகாவை நினைத்து மேகாவிடம் “doctor வந்தாங்களா இல்லையா மா..?? எனக்கு நெஞ்சு படபடன்னு அடிச்சிக்குது. என் பேத்திக்கு என்ன ஆச்சுன்னு போய் பாத்துட்டு வா.” என்று சொல்லி அழுது புலம்பி கொண்டிருக்க, “doctor வந்து இப்பதான் அவங்கள check பண்ணிட்டு போனாங்க பாட்டி. அவங்க pregnantஆ இருக்காங்க. அதான் மயங்கி விழுந்து இருக்காங்க. நாளைக்கு scan எடுக்க doctor அவங்கள hospital கூட்டிட்டு வர சொன்னாங்க.” என்றான் விஷ்வா.
அதனால் மகிழ்ந்த மேகா “வாவ் சூப்பர்.. நம்ம வீட்டுக்கு குட்டி பாப்பா வரப்போகுது. நான் அத்தையாக போறேன். பாட்டி… நீங்க கொள்ளு பாட்டி போறீங்க..!!” என்று உற்சாகமான குரலில் சொல்லிவிட்டு பாட்டியை அணைத்துக் கொண்டாள்.
இப்போது பாட்டியின் கண்ணீர் ஆனந்த கண்ணீராக மாறிவிட, “அட நான் இத பத்தி யோசிக்காம விட்டுட்டேனே… எனக்கு அவ கர்ப்பமா இருப்பாளோன்னு ஒரு யோசனை வந்திருந்தா, நானே அவ கைய புடிச்சு பாத்து இத எப்பவோ கண்டுபிடிச்சு சொல்லிருப்பேன். இவ்ளோ நேரம் நம்ம எல்லாம் பதட்டப்பட்டு இருக்க தேவையில்லை.” என்றார்.
“நான் தான் சொன்னேனே பாட்டி அவங்களுக்கு எதுவும் இருக்காதுன்னு.. நீங்கதான் நம்பல. சரி இப்பதான் அவங்களுக்கு எந்த health issuesம் இல்லைன்னு தெரிஞ்சிருச்சுல.. ரொம்ப late ஆயிடுச்சு. நீங்க தூங்குங்க. காலைல பாக்கலாம்.” என்ற விஷ்வா மேகாவை அழைத்துக் கொண்டு பாட்டியின் ரூமை விட்டு வெளியேறினான்.
“நல்லவேளை அக்காவுக்கு எதுவும் ஆகல. நான் கூட நம்ம வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த ice creamஐ சாப்பிட்டுத்தான் அவங்களுக்கு ஏதோ ஆயிடுச்சோன்னு நினைச்சு பயந்துட்டேன். Pregnantஆன எப்படியும் ரெண்டு மூணு மாசம் கழிச்சு தான் மயக்கம், வாந்தி எல்லாம் வரும். அப்போ இத்தனை நாளா அவங்க pregnantஆ இருந்ததை கூட அவங்க notice பண்ணாம இருந்திருக்காங்க. அதான் எப்படின்னு தெரியல.” என்று மேகா சொல்ல, “ஆமா ஏன் அவங்க இவ்வளவு பெரிய விஷயத்தை கண்டுக்காம இத்தனை நாளா இப்படி assaultஆ இருந்திருக்காங்க..?? அவங்க எதுலயும் இப்படி எல்லாம் இருக்குறவங்க இல்லையே..!!” என்று நினைத்த விஷ்வா மேகா சொன்னதைப் பற்றி யோசிக்க தொடங்கினான்.
தொடரும்..