அத்தியாயம் 204
அர்ஜுன் லேபர் வார்ட்டிக்குள் நுழைந்தவுடன் அவனை கண்ட தேன்மொழி எமோஷனல் ஆகி மீண்டும் மயக்கம் அடைந்தாள். அதனால் பதட்டம் அடைந்த அர்ஜுன் “ஹேய் தேனு! என்ன டி ஆச்சு உனக்கு? கண்ணை திறந்து என்னை பாரு.” என்று உடைந்த குரலில் அவசரமாக அவள் முகத்தை தட்டியவாறு சொன்னான்.
தேன்மொழியின் பல்ஸ் நொடிக்கு நொடி இறங்கிக் கொண்டே இருந்தது. அவள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனது குழந்தையை பிரசவிக்க போராடிக் கொண்டு இருந்தாள். அதனால் அங்கே இருந்த மெடிக்கல் டீமை சேர்ந்தவர்கள் அலர்ட் ஆகி “ப்ளீஸ் சார் நீங்க கொஞ்சம் வெளிய இருங்க. It’s an emergency operation. உடனே ஆபரேட் பண்ணி குழந்தைய வெளிய எடுக்கலைன்னா, அம்மா குழந்தை ரெண்டு பேருக்குமே டேஞ்சர் ஆயிடும்.” என்று ஆங்கிலத்தில் சொல்லி அர்ஜுனை வெளியில் அனுப்ப முயற்சி செய்தார்கள்.
“நோ!” என்று அதற்கு அர்ஜுன் உச்சசுருதியில் கத்த, அவனது தோற்றமும், குரலும் அச்சுறுத்தும் விதமாக இருந்ததால் அங்கே இருந்த டாக்டர்கள் அனைவரும் தேன்மொழிக்கு ட்ரீட்மென்ட் செய்ய முடியாமல் பயத்துடன் நின்று கொண்டு இருந்தார்கள்.
நடப்பதை வெளியில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த ஆகாஷ் வேகமாக உள்ளே சென்று “டேய் அர்ஜுன் இங்கே ஹாஸ்பிடல்ல வந்து என்னடா பண்ணிட்டு இருக்க? அவங்களை அவங்க வேலையை பார்க்க விடு. நீ சும்மா இருந்தாலே அண்ணிக்கு எதுவும் ஆகாது. நீ வா நம்ம வெளிய போய் வெயிட் பண்ணலாம்.” என்று சொல்லி அவன் கையை பிடித்து இழுத்தான்.
எங்கே இம்முறை தான் தேன்மொழியை தனியாக விட்டு சென்றாள் அவள் தன்னை விட்டு மொத்தமாக தன் குழந்தையுடன் சென்று விடுவாளோ என்று நினைத்து பயந்த அர்ஜுன் ஆகாஷின் கையை உதறிவிட்டு “நான் எங்கேயும் போக மாட்டேன். நான் எதுக்காக வெளிய போகணும்? அங்க என் பொண்டாட்டி உயிருக்கு போராடிட்டு இருக்கா. நான் அவளை இங்க தனியா விட்டுட்டு போக முடியுமா? என்னால முடியாது.” என்று கத்தியவன், அங்கே இருந்த டாக்டர்களை பார்த்து என்னை வேடிக்கை பார்ப்பதற்கு தான் இந்த ஹாஸ்பிடல்ல சேலரி வாங்கறீங்களா நீங்க? சீக்கிரம் ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணுங்க. என் பொண்டாட்டி குழந்தை ரெண்டு பேருக்கும் எதுவாக கூடாது. அவங்களுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா உங்கள்ல ஒருத்தரையும் உயிரோட விட மாட்டேன்.” என்று ஆங்கிலத்தில் கத்தினான்.
அவன் யார் என்று அங்கே இருந்தவர்கள் அனைவருக்கும் ஹாஸ்பிடல் நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டு இருந்ததால் அவன் அப்படி சொன்னவுடன் அங்கே இருந்த டாக்டர்கள் அனைவரும் தங்கள் வேலையை பார்க்க தொடங்கினார்கள். அவர்கள் அனைவருக்கும் அதிகமான எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறது என்பதால் இது மாதிரியான ஸ்ட்ரெஸ் நிறைந்த சூழலிலும் திறம்பட வேலை செய்ய அவர்களுக்கு தெரியும் தான்.
ஆனால் அர்ஜுன் போன்ற ஒருவன் தங்கள் முன்னே நின்று கொண்டு தங்களை மிரட்டுவதால் அவர்கள் பதட்டத்துடன் இருந்தார்கள். அதைக் கண்டு கோபப்பட்ட ஆகாஷ் “உனக்கு என்ன பைத்தியம் புடிச்சிருக்கா அர்ஜுன்? நீதான் அவங்களோட உயிரோட விளையாடிட்டு இருக்க. உன்ன மாதிரி ஒரு short tempered ஆளை பக்கத்துல வச்சுக்கிட்டு அவங்க எப்படி ப்ராப்பரா ட்ரீட்மென்ட் குடுப்பாங்க? இதுல அண்ணிக்கு ஏதாவது ஆச்சுனா அவங்கள கொன்னுடுவேன்னு மிரட்டுற… என்ன ரவுடியா நீ?
நீ அவங்கள மிரட்டிட்டா எல்லாமே சரியாயிடும்னு உனக்கு யாருடா சொன்னது? நீ இப்படி எல்லாம் பண்ணா தான் பதட்டத்துல அவங்க ஏதாவது தப்பா பண்ணி வைப்பாங்க. ஒழுங்கு மரியாதையா நான் சொல்றத கேட்டு என் கூட வா. இந்த பிளான் இப்ப வேண்டாம்னு நான் அவ்வளவு தூரம் சொல்லியும் நீ கேட்கவே இல்ல. அதனால தான் இப்ப இந்த பிரச்சனை எல்லாம் வந்திருக்கு. இப்பயாச்சு மூடிட்டு நான் சொல்றத கேளு.” என்று கோபமாக சொன்னான்.
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. நான் என் தேன்மொழியை தனியா விட்டுட்டு போக மாட்டேன். இப்ப நான் கண்டிப்பா அவ கூட இருக்கணும்.” என்ற அர்ஜுன் மீண்டும் தேன்மொழியின் அருகில் செல்ல, ஏற்கனவே அர்ஜுன் யார் பேச்சையும் கேட்காமல் இப்படி எல்லாம் செய்து விட்டான் என நினைத்து அவன் மீது கோபத்தில் இருந்த ஆகாஷ் இப்போது மீண்டும் மீண்டும் அர்ஜுன் எல்லை மீறி செல்வதால் எரிச்சல் அடைந்து “சொல்லிக்கிட்டே இருக்கேன் கேக்க மாட்டியா டா? உனக்கு அவ்வளவு தான் மரியாதை!” என்று ஆத்திரம் பொங்க சொன்னவாறு அர்ஜுனின் கையை பிடித்து இழுத்து அவன் கன்னத்தில் ஒன்று வைத்தான்.
அவனும் அர்ஜுனும் சிறு வயதில் நிறைய முறை ஒருவரை ஒருவர் அடித்து சண்டை போட்டு விளையாடி இருக்கிறார்கள். வளர்ந்த பிறகு தங்கள் சாம்ராஜ்யத்தை காப்பாற்றுவதற்காக முதலில் நாம் வலிமையாக இருக்க வேண்டும் என நினைத்து அவர்கள் சண்டை கற்றுக் கொள்ளும்போது அவ்வப்போது இருவரும் சண்டை போடுவார்கள். ஆனால் இப்படி கோபப்பட்டு எல்லாம் ஆகாஷ் எப்போதும் அர்ஜுனை அடித்தது இல்லை. தன் அப்பாவிற்கு இணையான மரியாதை அவனுக்கு அர்ஜுனனின் மீது எப்போதும் உண்டு.
அப்படி இருந்த ஆகாஷ் இப்போது தன்னை திடீரென அடித்ததால் “இப்ப எதுக்குடா என்னை அடிச்ச?” என்பதைப் போல அர்ஜுன் தன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு பாவமாக ஆகாஷை பார்த்தான். அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்று ரீதியில் கோபமாக அவனை பார்த்த ஆகாஷ் “இதுக்கு மேல நீ இங்க நின்னு சீன் க்ரியேட் பண்ணிட்டு இருந்தா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். ஒழுங்கா வெளிய போ. அண்ணியோட அம்மா வெளிய வெயிட் பண்றாங்க. ஏதாச்சும் தேவைனா அவங்களும் ஆதவனும் பாத்துக்குவாங்க. ஒழுங்கா நீ என் கூட வந்துரு. வெயிட்டிங் ஏரியால இரு. கொஞ்ச நேரம் கழிச்சு வந்து நானே அண்ணி எப்படி இருக்காங்கன்னு சொல்றேன்.” என்றான்.
பின் அதற்கு அர்ஜுன் பதில் சொல்வதற்கு முன்பாக அவசரமாக அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அந்த ரூமை விட்டு வெளியேறி விட்டான். அர்ஜுன் ஒரு பக்கம் பார்ப்பதற்கு அச்சுறுதலாக இருக்கிறான் என்றால் அவனை சமாதானப்படுத்துகிறேன் என்ற பெயரில் ஆகாஷ் கோபப்பட்டு பேசியதால் இந்த டெரரான அண்ணன் தம்பி இருவருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு டாக்டர்கள் விழி பிதுங்கி நின்றார்கள். அவர்கள் சென்ற பிறகு தான் இவர்களுக்கு அப்பாடா என்று இருந்தது. அதனால் அங்கே இருந்த அனைவரும் பம்பரமாக சுற்றி தேன்மொழிக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்து அவள் வயிற்றில் உள்ள குழந்தையை ஆபரேஷன் செய்து வெளியில் எடுக்க முயற்சி செய்தார்கள்.
வெளியில் ஜானகி, பிரதாப், விஜயா, ஆதவன், ஆகாஷ் என அனைவரும் பதட்டுத்துடன் கடவுளை வேண்டிக் கொண்டு அமர்ந்து இருந்தார்கள். அடுத்த 30 ஆவது நிமிடத்தில் தேன்மொழியின் வயிற்றில் இருந்து குழந்தையை ஆபரேஷன் செய்து ஒரு லேடி டாக்டர் வெளியே எடுத்தாள்.
முதலில் சத்தமாக அழுத குழந்தை பின் அப்படியே சைலன்ட் ஆகிவிட்டது. அதனால் அங்கே இருந்தவர்கள் ஒரு பக்கம் தேன்மொழியையும் இன்னொரு பக்கம் குழந்தையையும் மாறி மாறி செக் செய்து அவர்களது ஹார்ட் பீட் எப்படி இருக்கிறது என மானிட்டர் செய்து கொண்டே இருந்தார்கள்.
குறை மாதத்தில் பிறந்த குழந்தை என்பதால் அந்த குழந்தை வீக்காக இருந்தது. அதனால் உடனே லேபர் வார்டில் இருந்து குழந்தையை ஐ சி யு வார்டிற்கு மாற்றினார்கள். தேன்மொழி இன்னும் மயக்கத்தில் இருந்தாள்.
மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️ எங்களது ஆடியோ நாவல்களை இலவசமாக யூடியூபில் கேட்டு மகிழுங்கள்)