அத்தியாயம் 160
Courtல் இருந்து மதிய வேளையில் lunch சாப்பிடுவதற்காக தன் வீட்டிற்கு சென்றான் முத்து. அவன் எப்போது வருவான் என்று காத்திருந்ததை போலவே அவன் சாப்பிட அமர்ந்தவுடன் அவன் அருகில் தானும் சென்று சாப்பிட அமர்ந்த காளீஸ்வரன் “நம்ம வெண்ணிலாவுக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை தம்பி அஸ்வின் இருக்காருல்ல.. அவர் வீடு பக்கம் அவங்க சொந்தத்துல ஒரு பொண்ணு இருக்காம். Government schoolல teacherஆ வேலை செய்யுதாம். உன் ஜாதகத்தையும் அந்த பொண்ணு ஜாதகத்தையும் நம்ம ஜோசியர்கிட்ட கொடுத்து பார்த்தாச்சு. அவர் எல்லா பொருத்தமும் இருக்குது. தாராளமா கல்யாணம் பண்ணலாம்னு சொல்லிட்டாரு. அந்த பெண்ணும் பார்க்க நல்லா மூக்கும் முழியுமா பார்க்க லட்சணமா தான் இருக்கா. நிலாவுக்கு முதல்ல கல்யாணம் ஆகட்டும். அப்புறம் ரெண்டு மூணு மாசம் கழிச்சு உனக்கும் அந்த பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வச்சுடலாம்னு இருக்கேன்.” என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த முத்து சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவரை பார்க்க, “என்ன பாக்குற..?? நீயும் கல்யாணம் இப்ப வேணாம் அப்ப வேணாம்னு சொல்லிட்டே இருக்க.. சரி விருப்பம் இல்லாதவன புடிச்சு நம்ம வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வைக்க கூடாதேன்னு நானும் இத்தனை வருஷம் பொறுமையா இருந்துட்டேன். இதுக்கு மேலயும் நான் அப்படி இருந்தா உன் வாழ்க்கை உருப்படாது. நீயா மனசு மாறுற மாதிரி எனக்கு தெரியல. அதனால இனிமே உன் போக்குக்கு உன்னை விடக்கூடாதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன். உனக்கும் அந்த teacher புள்ளைக்கும் தான் கல்யாணம். உங்க அண்ணிகிட்ட அந்த புள்ள photo இருக்கு. வாங்கி பாத்துக்கோ.” என்றார் காளீஸ்வரன்.
அதனால் சாப்பிடுவதை பாதியில் விட்டுவிட்டு கோபத்தில் எழுந்து நின்ற முத்து “என்னால எவளையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது அண்ணா. இந்த கல்யாணம் நடக்காது. நாலு பேருக்கு இந்த கல்யாண விஷயம் தெரிஞ்சு.. அப்புறமா இதை நான் எல்லார் முன்னாடியும் சொன்னா, நம்ம குடும்பத்துக்கு தேவையில்லாத அசிங்கம். அந்த மாதிரி எல்லாம் நடக்குறதுக்கு முன்னாடி நீங்களா ஏதாவது காரணம் சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க. அதான் எல்லாருக்கும் நல்லது. முக்கியமா அந்த பொண்ணு வாழ்க்கைக்கு நல்லது. எனக்கு அவளை கட்டி வச்சு அவ வாழ்க்கைய கெடுத்துறாதீங்க. என்கூட இருந்தா அவ நிச்சயமா சந்தோஷமா இருக்க மாட்டா.” என்று சொல்லிவிட்டு கலங்கிய கண்களுடன் தன் வீட்டை விட்டு வெளியே சென்று அவனது bikeஐ start செய்து அங்கிருந்து கிளம்பினான்.
அவனது மன கண்களில் முதன் முதலில் அவன் சௌபரணிகாவை பார்க்கும்போது அவள் அவனை கோபமாக திரும்பி பார்த்த காட்சி படமாக ஓடியது. அதனால் அதே ரோட்டிற்கு சென்று தன் bikeஐ ரோட்டோரமாக நிறுத்திவிட்டு, அந்த ஆளில்லா சாலையை வெறித்து பார்த்தான். அவளது ஞாபகம் அவன் இதயத்தை கசக்க, “திடீர்னு புயல் மாதிரி என் lifeல வந்துட்டு அப்படியே நீ காணாம போயிட்ட.. திரும்பி நீ வரமாட்ட. வேற யாரோ ஒருத்தருக்கு சொந்தம் ஆயிட்டேன்னு தெரிஞ்சும், என்னால உன்ன நினைக்காம இருக்க முடியலையே..!! நானே நீ வேண்டாம்னு நினைத்தலும், என் மனசு உன்ன தேடுதுடி. உனக்காக எனக்குள்ள இருக்கிற feelingsஐ என்னால control பண்ண முடியல. I’m deeply and madly in love with you சௌபர்ணிகா.” அவளிடம் சொல்ல முடியாத தன் காதலை தன் மனதிற்குள் அவர் கடந்து சென்ற பாதையை பார்த்து சொல்லி புலம்பினான்.
அப்போது அவன் கண்கள் கலங்க, அது மழைக்காலம் என்பதால் திடீரென பலத்த இடி சத்தத்துடன் மழை கோட்டத் தொடங்கியது. அந்த மழை நீரில் அவன் காதலைப் போல அவன் சிந்திய கண்ணீரும் கூட யாருக்கும் தெரியாமல் காணாமல் போய்விட்டது. தோட்டத்திற்கு சென்றிருந்த மணிகண்டன் Jeepல் சாப்பிடுவதற்காக தங்களது வீட்டை நோக்கி செல்லும் வழியில் மழையில் நனைந்து கொண்டிருந்த முத்துவை பார்த்துவிட்டு, “ஏலேய்.. இங்க bikeஐ நடு ரோட்டில நிறுத்திட்டு மழையில நனைஞ்சுட்டு என்னடா பண்ற..?? அதான் மழை பெய்யுதுன்னு தெரியுதுல.. வீட்டுக்கு போக வேண்டியது தானே…!!” என்று கேட்க, “சும்மா தாண்டா. மழையில நெனச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதான் அப்படியே நின்னுட்டேன். சரி, நான் கிளம்புறேன்.. courtக்கு போகணும். நீ வீட்டுக்கு போ.” என்ற முத்து தன் bikeஐ start செய்து கிளம்பினான்.
Canteen செல்லலாம் என்று நினைத்து corridorல் சென்று கொண்டிருந்த மகேஷ் cafeteria தனியாக சோகமாக அமர்ந்திருந்த அனுப்பமாவை பார்த்தான். “இவ ஏன் இங்க இந்த நேரத்துல தனியா உக்காந்து இருக்கா..?? பாக்குறதுக்கு ஒரு மாதிரி disturbedஆ வேற இருக்கா..?? நம்ம போய் அவகிட்ட பேசி என்னை ஏதுன்னு கேட்கலாமா..??” என்று யோசித்தவன் அவளை நோக்கி இரண்டடி சென்றான்.
பின் “இல்ல.. வேண்டாம். நான் எதுக்கு இவளை பத்தி யோசிச்சு இவளுக்காக feel பண்ணனும்..?? Already ஹர்ஷினியால நான் பட்டதெல்லாம் பத்தாதா..?? மறுபடியும் மறுபடியும் இந்த பாலா போன மனசு எதுக்கு பொண்ணுங்களை பத்தி யோசிக்குதோ தெரியல.
இந்த அனுவ பாத்தா ஒன்னும் தப்பான பொண்ணு மாதிரி தெரியல. ஆனா அப்படி பார்த்தா, ஹர்ஷினி மட்டும் என்ன ஏமாற்றுக்காரி மாதிரியா தெரிஞ்சா..?? எல்லா பொண்ணுங்களும் மேகா மாதிரி நல்லவங்களா இருக்க மாட்டாங்க. தேவையில்லாம எதுக்கு பேசி பழகி feelingsஐ develop பண்ணிட்டு அப்புறம் break up ஆயிடுச்சுன்னு தேவதாஸாகி நடுரோட்டில சுத்தணும்..?? எனக்கு இவளை பிடிச்சிருந்தாலும் சரி. இவ ஊர்ல இல்லாத நல்லவளா இருந்தாலும் சரி. எனக்கு இவளை லவ் பண்ணனும்னு ஆசையா இருந்தாலும் சரி. எனக்கு இவ வேண்டாம்.” என்று நினைத்து தன் முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் canteenஐ நோக்கி நடக்க தொடங்கினான்.
Lunch break முடிந்தவுடன் மீண்டும் meeting hallக்கு அனைவரையும் அழைத்து meetingஐ தொடர்ந்தான் கௌத்தம். மேகா தன்னை வர சொல்லி அழைத்ததற்காக தனது வேலைகளை சீக்கிரமாக முடித்துவிட்டு அங்கே சென்ற விஷ்வா, கௌத்தம் பேசுவதை ஆர்வமான முகத்துடன் கேட்டு கொண்டிருந்த மேகாவை பார்த்துவிட்டு,
“நார்மலா இந்த மாதிரி meetingல project head இப்படி மணிக்கணக்கா பேசினா எவனும் ஒழுங்கா கேக்க மாட்டான். இவ மட்டும் என்ன.. வச்ச கண்ணு வாங்காம அவனையே பார்த்து அப்படியே அவன் சொல்றத மெய் மறந்து கேட்டுட்டு இருக்கா.. இவ அடிக்கடி என்னவிட handsomeஆனா ஆள் கிடைச்சா அவன கரெக்ட் பண்ணிட்டு போயிடுவேனு சொல்லிட்டே இருப்பாளே.. ஒருவேளை இவன் நம்மள விட அழகா இருக்கானோ..?? அதான் இவ அவனை இப்படி பாக்குறாளா..??” என்று யோசித்தவன், “சேச்சே… அப்படியெல்லாம் இருக்காது. எத்தனை பேர் வந்தாலும், அவன் இந்த விஷ்வா ஆயிட முடியுமா..?? இல்ல... என் பொண்டாட்டிய என்னவிட அதிகமா லவ் பண்ணி impress பண்ணிட முடியுமா..?? She is strictly mine.” என்று நினைத்தான். அவனுக்கு உள்ளே சென்று அந்த meetingல் அமர்ந்து கௌத்தம் பேசுவதை கேட்கும் அளவிற்கு எல்லாம் பொறுமை இல்லை. அதனால் மீண்டும் தனது கேபினுக்கே சென்று விட்டான் விஷ்வா.
சில மணி நேரங்களுக்கு பிறகு..
இரவு நேரத்தில் மேகா விஷ்வாவுடன் காரில் தங்களது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள். “என்ன மேடம் இன்னிக்கு fullஆ ரொம்ப busy போல.. நான் கூட இங்க ஆபீஸ்ல உன்னை தவிர மத்த எல்லாரும் பசங்களா இருக்காங்களே… உனக்கு எப்படி அவங்க கூட set ஆகும்னு நெனச்சேன். ஆனா நீ எல்லார் கூடயும் ஈஸியா gel ஆகிட்ட போல…!!” என்று சிறு பொறாமை எட்டிப் பார்க்க விஷ்வா சொல்ல,
“ஆமா, நானே முதல்ல இங்க வரும்போது, எல்லாரும் பசங்களா இருக்காங்களேன்னு கொஞ்சம் பயத்தோட தான் வந்தேன். Maybe அவங்க எல்லாம் நான் normal staffஆ வந்திருந்தா என்ன differentஆ treat பண்ணி இருப்பாங்களோ என்னமோ..!!
But இப்ப நான் MV Tech chairman Mister Vishwaவோட wife. சோ அந்த respect and கொஞ்சம் பயம் எல்லாருக்கும் இருக்கும்ல.. அதான் என்கிட்ட எல்லாரும் respectfulஆ, at the same time friendlyஆ behave பண்றாங்க. சோ ஓகே தான். இருந்தாலும், sometimes கூட பொண்ணுங்களும் இருந்தா நல்லா இருக்குமேன்னு தோணும். என்னதான் இருந்தாலும் workplaceல female friends இருந்தா தானே ஆபீஸ்க்கு போகும்போது ஜாலியா இருக்கும்.. பொண்ணுங்க இருந்தா ஆபீஸ்ல நிறைய லவ் stories ஓடும். So Gossip பேசிட்டு ஜாலியா இருக்கலாம்.” என்றாள் மேகா.
தொடரும்…