Home FREE NOVELSஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 205

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 205

by Thenaruvi Tamil Novels
38 views

அத்தியாயம் 205

குழந்தை பிறந்த பிறகும் தேன்மொழிக்கு மயக்கம் தெரியாததால் அவளை லேபர் வார்டில் இருந்து ஐ சி யு வார்டுக்கு மாற்றி தீவிரமாக சிகிச்சை கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அதேசமயம் வெளியில் கண்ணீரும் கம்பளையுமாக நின்று கொண்டு இருந்த விஜயா மற்றும் ஆதவனிடம் டாக்டர்கள் “கங்கிராஜுலேஷன்ஸ்… மிஸ்ஸஸ் அர்ஜுனுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு.” என்று ஆங்கிலத்தில் சொன்னார்கள்.

அவர்கள் சொல்வது புரியாமல் “ஐயோ இவங்க என்ன சொல்றாங்கன்னு எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குதே… என் புள்ளைக்கு என்ன ஆச்சோ தெரியலையே!” என்று விஜயா புலம்ப, தன் கண்ணீரை துடைத்தபடி ஆதவன் “அக்காவுக்கு பையன் பொறந்து இருக்குன்னு அவங்க சொல்றாங்க மா.” என்றான்.

அர்ஜுனை வெயிட்டிங் ஏரியாவில் உட்கார வைத்துவிட்டு அங்கே வந்திருந்த ஆகாஷ் டாக்டர்களிடம் “என் சிஸ்டர் இன்லா இப்ப எப்படி இருக்காங்க?” என்று கேட்க, பிரதாப் ஜானகி இருவரும் டாக்டரின் அருகில் இருந்து சென்று கோரசாக “நாங்க போய் எங்க பேர குழந்தையை பார்க்கலாமா?” என்று ஆங்கிலத்தில் கேட்டார்கள்.

“மிஸ்ஸஸ் அர்ஜுனோட கண்டிஷன் இப்ப கொஞ்சம் அன்ஸ்டேபிளா தான் இருக்கு.   பட் டோன்ட் வரி. எங்க டாக்டர்ஸ் டீம் அவங்கள க்ளோசா வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க. அவங்களுக்கு தப்பா எதுவும் நடக்காது. உங்க கிட்ட இந்த இன்பர்மேஷனை சொல்றதுக்கு தான் நான் வந்தேன். குழந்தையை இங்குபேட்டர்ல வச்சிருக்கோம். நான் பேபியோட கண்டிஷன் எப்படி இருக்குன்னு செக் பண்ணிட்டு, போய் மிஸ்ஸஸ் அர்ஜுனை பாத்துட்டு வரேன்.” என்று சொன்ன டாக்டர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

தன் மகனின் கையை பிடித்துக் கொண்ட விஜயா “டாக்டர் என்னடா சொல்றாரு? எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது.” என்று சொல்ல, கண்ணீருடன் ஆதவன் எதையோ சொல்ல வருவதற்குள் முந்தி கொண்ட ஆகாஷ் விஜயாவின் முன்னே சென்று நின்று “அண்ணியை லேபர் வார்டுல இருந்து டைரக்ட்டா ஐசியுவுக்கு ஷிப்ட் பண்ணிட்டாங்களாம். குழந்தை நல்லா தான் இருக்கு. குறை மாசத்துல பிறந்ததினால இன்குபேட்டர்ல வச்சிருப்பாங்க நினைக்கிறேன். அவங்க ரெண்டு பேரையும் கொஞ்ச நேரம் கழிச்சு நம்ம போய் பார்க்கலாம். நீங்க பதட்டப்படாதீங்க ஆன்ட்டி.” என்று சொல்லி சமாதானப்படுத்தினான்.

“நீங்க வாங்க! நாம போய் நம்ம மருமகளையும் பேரப் புள்ளையையும் பாத்துட்டு வந்துருவோம். எனக்கு அவங்கள பாத்தா தான் கொஞ்சமாவது நிம்மதியாக இருக்கும்.” என்று ஜானகி சொல்ல, ‍ பிரசாத் அவளை அழைத்துக் கொண்டு அங்கே இருந்து நகர்ந்தார். அவர்கள் பேசியதை கேட்டுவிட்டு மற்றவர்களும் அவர்களை பின் தொடர்ந்து சென்றார்கள்.

யாரும் இல்லாமல் தான் மட்டும் தனியாக தனித்து விடப்பட்டதை போல உணர்ந்த அர்ஜூன் இடிந்து போய் சேரில் சாய்ந்து அமர்ந்து தன் கண்களை மூடி நடந்தவற்றை யோசித்து சோகத்தில் மூழ்கினான். அப்போது அவன் அருகில் அவசரமாக வந்த பாடிகார்டு ஒருவன் “congratulations Chief! இன்னொரு ஜூனியர் மாஸ்டர் பொறந்துட்டாரு. தேன்மொழி மேடம்க்கு டெலிவரி ஆயிடுச்சு. பையன் பிறந்து இருக்கான்னு டாக்டர் இப்ப தான் சொல்லிட்டு போனாங்க.” என்றான்.

அவன் அதை சொன்னதும் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்த அர்ஜூன் அவனது தோள்களை இறுக்கமாக பற்றி “என்னடா சொல்ற? அதுக்குள்ள தேன்மொழிக்கு டெலிவரி ஆயிடுச்சா! என் பொண்டாட்டியும் குழந்தையும் இப்ப எப்படி இருக்காங்க?” என்று கேட்க, நடந்த அனைத்தையும் அவனிடம் அப்டேட் செய்தான் பாடிகார்ட்.

அதனால் அவசரமாக முதலில் ஐ சி யு வார்டை நோக்கி தான் ஓடி சென்றான் அர்ஜூன். தன் குழந்தை அவனுக்கு முக்கியமாக இருந்தாலும் அதைப் பெற்று எடுத்தவளும் அதைவிட முக்கியம்  என்பதால் அவனுக்கு முதலில் தேன்மொழியைத் தான் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அங்கே விஜயா உடன் இருந்த ஆகாஷ் “இன்னும் அண்ணி நார்மலாகல. சும்மா இங்க வந்து நின்னு சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்காத அர்ஜூன். அவங்க க்யூர் ஆகி ‌ நார்மல் வார்டுக்கு வந்ததுக்கு அப்புறமா நீ வந்து பாரு. இப்ப ப்ளீஸ் யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம இருந்து போ. நான் தான் உன் கிட்ட வந்து எல்லாத்தையும் அப்புறமா அப்டேட் பண்றேன்னு சொன்னேன்ல! அதுக்குள்ள உன்னை யார் இங்க வர சொன்னா?” என்று கேட்டு அவனை அங்கே இருந்து துரத்தி விட்டான்.

ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டு இருந்த அர்ஜூன் ஆகாஷ் அப்படி பேசியதால் மீண்டும் அந்த இடத்தை விட்டு உடைந்த இதயத்துடன் கிளம்பினான். சோகமாக அவன் நடந்து சென்று கொண்டு இருக்கும்போது குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டு இருப்பதாக பாடிகார்டு சொன்னது அவனுக்கு ஞாபகம் வர, உடனே அவசரமாக தன் குழந்தையையாவது சென்று பார்க்கலாம் என்ற எண்ணத்தில் ஓட்டமும் நடையுமாக அங்கே இருந்து சென்றான்.

இன்குபேட்டரில் இருந்த குழந்தையை கொஞ்சம் தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு அப்போது தான் அந்த இடத்தை விட்டு வெளியே ஜானகியும் பிரசாத்தும் வந்து கொண்டு இருந்தார்கள்.  அவர்களைப் பார்த்தவுடன் வேகமாக அவர்கள் அருகில் சென்ற அர்ஜுன் ஜானகியின் கையைப் பிடித்துக் கொண்டு “மம்மி… மம்மி என் பையன் எப்படி இருக்கான்? நீங்க ரெண்டு பேரும் அவன பாத்தீங்களா? எதுக்காக அவனை இன்குபேட்டர்ல வச்சிருக்காங்க? நீங்க டாக்டர் கிட்ட ஏதாவது கேட்டீங்களா?” என்று பதட்டத்துடன் கேட்டான்.

அவன் கையை வேகமாக எடுத்துவிட்ட பிரதாப் “உனக்கு உன் குழந்தை மேல அவ்ளோ அக்கறை இருந்திருந்தா யார் கிட்டயும் டிஸ்கஸ் பண்ணாம நம்ப டோடல் ஃபேமிலியையும் ‌ வச்சு நீ இவ்ளோ பெரிய ரிஸ்கை எடுத்து இருக்க மாட்ட அர்ஜுன். இன்னைக்கு உன் குழந்தையும், உன் வைஃப் தேன்மொழியும் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு இருக்காங்கன்னா அதுக்கு முழு காரணமே நீ மட்டும் தான்.

பண்றது எல்லாத்தையும் பண்ணிட்டு இப்ப இங்க வந்து டிராமா போட்டுட்டு இருக்கியா? அந்த பச்ச குழந்தை என்னடா பாவம் பண்ணுச்சு? தேன்மொழி கன்சீவ் ஆனதில‌ இருந்து அவளும் அந்த குழந்தையும் எவ்வளவு கஷ்டத்தை தான் அனுபவிப்பாங்க! ஏன்டா நீ இப்படி இருக்க?

ரெண்டு மாசத்துக்கு அப்புறம் பொறுக்க வேண்டிய குழந்தை உன்னால இப்ப கொற மாசத்துல கொடி சுத்தி பொறந்திருக்கு. இன்னும் ப்ராப்பரான வளர்ச்சி இல்ல. குழந்தைக்கு பிரித்திங்ல ப்ராப்ளம்னு சொல்லி இன்குபேட்டர்ல வச்சிருக்காங்க. அட்லீஸ்ட் 10 15 நாளாவது குழந்தை இங்க தான் இருக்குமாம். ஏற்கனவே மனசு உடைஞ்சு போயிருக்க தேன்மொழி இதை கேள்விப்பட்டா இன்னும் எவ்வளவு கஷ்டப்படுவா? இப்ப சந்தோஷமா இருக்கா உனக்கு? என் மூஞ்சிலயே முழிக்காத. என் மருமகளையும், எங்க பேர குழந்தையையும் பாத்துக்க எங்களுக்கு தெரியும்.

நீ எதுக்கு இங்க வந்து ஹாஸ்பிடல்ல இருந்து தேவையில்லாம டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க? ஒழுங்கா இங்க இருந்து கிளம்பி போய்டு. இன்னும் வேற யாராவது மிச்சம் இருக்காங்களா.. யாரை எப்ப எங்க வச்சு கொல்லலாம்னு போய் பிளான் போடு. உனக்கு அது மட்டும் தானே தெரியும்!” என்று கோபமாக சொன்னார்.

பிரதாபின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அர்ஜூனை செருப்பால் அடித்ததை போல இருந்தது. தன் அப்பாவிற்கு முன்னால் முதல்முறையாக அவன் பேச்சாற்று நின்றான். சிறு வயதில் இருந்து தன்னை ஒரு முறை கூட கோபமாக பேசி திட்டி வளர்க்காத தன் அப்பா இந்த அளவிற்கு தன்னை சாடுவதை அதனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அதனால் கண்கள் கலங்க பாவமாக பிரதாப்பை பார்த்த அர்ஜுன் “நீங்க கூட என்னை புரிஞ்சுக்கலையா டாடி?” என்று உடைந்த குரலில் கேட்க, “நீ மத்தவங்க யாரையாவது எப்பயாவது புரிஞ்சுக்க ட்ரை பண்ணி இருக்கியா அர்ஜூன்? உன்ன மட்டும் எல்லாரும் புரிஞ்சுக்கணுமா? நான் ஆல்ரெடி உன் மேல செம கோவத்துல இருக்கேன். ப்ளீஸ் தயவு செஞ்சு என் முன்னாடி வந்து நிக்காத. அப்புறம் இருக்கிற கோவத்துல நான் ஏதாவது சொல்லிடுவேன்!” என்ற பிரதாப் அதற்கு மேல் அர்ஜுனின் முகத்தை கூட பார்க்காமல் ஜானகியின் கையைப் பிடித்துக் கொண்டு வெயிட்டிங் ஏரியாவில் கிடந்த சேரில் சென்று அமர்ந்தார்.

மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️ youtube-ல் எங்களது ஆடியோ நாவல்களை இலவசமாக கேட்ட மகிழுங்கள்!)

You may also like

Leave a Comment

About Me

Featured