அத்தியாயம் 217: விலக நினைக்கையில் நெருங்க துடிக்குதே (பார்ட் 2)
அப்போது மூடி இருந்த அவனுடைய கண்களில் இருந்து வழிந்த சில துளி கண்ணீர் அந்த தண்ணீரோடு கலந்தது. 😭 😭 😭 அந்நேரம் ஜான்வி தன்னை “வருண்” என்று அழைப்பது போல உணர்ந்தவன், வேகமாக தன்னுடைய கண்களை திறந்தான். அப்போது அந்த ரெஸ்ட் ரூமின் கதவை தட்டிய ரித்திகா, “உங்களுக்கு அப்புறம் குளிக்கப் போன நானே குளிச்சிட்டு வந்துட்டேன். நீங்க இன்னும் உள்ள என்ன பண்றீங்க..?? ரொம்ப நேரம் தண்ணில இருந்தா சேராது. சீக்கிரம் வாங்க.” என்று வெளியில் இருந்து கத்தினாள். “வரேன்.” என்று ஒரே வார்த்தையில் அவளுக்கு பதில் சொன்ன வருண், குளித்துவிட்டு ஈரத்தலை மற்றும் டவலுடன் அப்படியே வெளியே வந்தான்.
மாடல் போலே தன் அருகே வந்து கொண்டு இருப்பவனை வாயை பிளந்து கொண்டு பார்த்தாள் ரித்திகா. 😍 🥰 ❤️ அவளைப் பார்த்த முறைத்த வருண், “என்ன பாக்குற.. போய் ஒரு டவல் எடுத்துட்டு வா.” என்றவன், டிரெஸ்ஸிங் டேபிளின் முன்னே நின்று கொண்டு தன்னுடைய நைட் கிரீம்கள் மற்றும் பாடி ரோஷங்களை எடுத்து அப்ளை செய்ய தொடங்கினான். கையில் ஒரு துண்டுடன் அங்கே வந்த ரித்திகா, “பசங்க கூடவா இதெல்லாம் போடுவாங்க..??” என்று ஆச்சரியமாக கேட்டாள். “ஏன் நீ எல்லாம் போட மாட்டியோ..!!! ஏன் பொண்ணுங்க மட்டும் தான் பியூட்டிய மெயின்டெயின் பண்ணனுமா..??” என்று எரிச்சலான குரலில் கேட்டான். 😒
ரித்திகா : “அப்படி எல்லாம் இல்ல.. யார் வேணா போடலாம். எனக்கு இந்த மாதிரி எல்லாம் போட்டு பழக்கம் இல்லை. இதெல்லாம் என்னானும் தெரியாது.” என்று அப்பாவியாக சொன்னாள்.
வருண்: “ஓ அப்ப இதெல்லாம் போடாம தான் நீ பளபளன்னு இருக்கியா…??” என்று நக்கலாக கேட்டான். 😂 😂 😂
ரித்திகா : “நான் பளபளன்னு இருக்கனா இல்லையான்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நான் இதெல்லாம் போட்டதில்லை. இந்தாங்க டவல்.” என்று சொல்லிவிட்டு தன் கையில் இருந்த துண்டை டிரஸ்ஸிங் டேபிள் மீது போட்டுவிட்டு அங்கு இருந்து செல்ல திரும்பினாள்.
அவளுடைய கையைப் பிடித்து அவளை தடுத்து நிறுத்திய வருண், “ஓய் உன்கிட்ட டவலை கொண்டு வந்து என் கிட்ட குடுக்க சொல்லித்தான் சொன்னேன். அத எடுத்து இப்படி போட்டுட்டு போக சொல்லல. ஒழுங்காக அத எடுத்து என் கையில குடுத்துட்டு போ.” என்று அதிகார தோரணையில் சொன்னான். அதனால் கடுப்பான ரித்திகா, மீண்டும் அந்த துண்டை எடுத்து அவனுடைய கையைப் பிடித்து அதில் வைத்துவிட்டு “இப்ப ஓகேவா…??” என்றவள், அங்கு இருந்து சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
ரித்திகா கொண்டு வந்து கொடுத்த டவளை வைத்து தன்னுடைய தலையை துடைத்த படியே தன்னுடைய வார்ட்ரோபின் அருகே சென்ற வருண், இரவு நேரங்களில் அவன் உடுத்தும் ஆடையை எடுத்து கொண்டு சேஞ்சிங் ரூமிற்குள்ளே சென்றான். சரி நிமிடங்களில் லான்ச் வியரை அணிந்து கொண்டு வெளியே வந்த வருண் தன்னுடைய தலையில் இருந்த ஈரத்தை ஒரு கையால் தட்டியபடியே வந்தான்.
வருண்: “என்ன இங்க உட்க்காந்து இருக்க… அப்போ என்னோட பெட் -ல தான் தூங்க போறியா..???” என்று கடுப்பான குரலில் கேட்டான். 😒
ரித்திகா: “இது நம்ப ரூம்ன்னா அப்ப அதுவும் நம்ம பெட்டு தானே…!!!” என்று லாஜிக்காக கேள்வி கேட்டாள்.
வருண்: “ஓ… அப்ப நீ அங்க என் கூட தான் ஒன்னா தூங்குவேன்ற… அப்படி தானே..!!!’ என்று குதர்க்கமாக கேள்வி கேட்டான்.
ரித்திகா: “நோ.. நோ. இது பெரிய சைஸ் பெட் தானே… இதுல தாராளமா மூணு நாலு பேர் தூங்கலாம். அதான் அப்படியே ஒரு ஓரமா படுத்துக்கலாம்ன்னு நினைச்சேன். வேற ஒன்னும் இல்ல. உங்களுக்கு அது பிடிக்கலைன்னா, பரவால்ல. நான் வேணா சோபால படுத்துகிறேன். இல்லன்னா, தரையில கூட படுத்துக்குறேன் நோ ப்ராப்ளம்.” என்று அவசரமான குரலில் சொன்னாள்.
வருண்: “உன்னை எல்லாம் என்னால நம்ப முடியாது. இப்ப என்கிட்ட நீயா விட்டுக் கொடுக்கிற மாதிரி விட்டுக் கொடுப்ப. அப்புறம் அம்மாகிட்ட போய் நான் உன்னை கொடுமை படுத்துற மாதிரி போட்டு குடுப்ப. நானே சோபால படுத்துகிறேன்.” என்று சொல்லி சின்ன குழந்தை போல் அடம்பிடித்தான்.
வருண்: அவனுடைய செய்கைகளை கண்டு மானசீகமாக தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டவள், “உங்க ஹைட்டுக்கு அந்த சோபா எப்படி பத்தும்..?? அண்ட் நீங்க பொறந்ததுல இருந்து இந்த மாதிரி பெட்ல தூங்கி பழகிருப்பிங்க. இப்போ திடீர்னு போய் சோபால படுத்தா உங்களுக்கு தூக்கம் வருமா…???” என்று அக்கறையுடன் கேட்டாள்.
ஏற்கனவே அவன் பல நாட்கள் ஆக தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டு தவித்துக் கொண்டு இருக்கிறான். இந்நிலையில் அவன் இடம் மாற்றி படுத்தால் அதைப்பற்றி நாம் சொல்லவே தேவையில்லை. இனிவரும் ராத்திரிகள் அனைத்தும் அவனுக்கு கண்டிப்பாக சிவன் ராத்திரி ஆக தான் இருக் கூடும். அதைப்பற்றி யோசித்துப் பார்த்த வருண், “நீ ஒழுங்கா ஓரமா, அமைதியா தூங்குவியா..” என்று கண்டிப்பான குரலில் கேட்டான். 😒
ரித்திகா: “பெட்ல தூக்கத்துல உருளை பழக்கம் எல்லாம் எனக்கு இல்ல. நைட்டு எந்த பொசிஷன்ல படுக்கிறனோ, மார்னிங் வரைக்கும் அதை பொசிஷன்ல தான் இருப்பேன். யூ டோன்ட் வரி. வேணா சினிமா சீரியல்ல எல்லாம் வர மாதிரி நம்ம ரெண்டு பேருக்கும் நடுவவுல பெட்ல நிறைய பில்லோஸ் வச்சு வால் கட்டிக்கலாம்.” என்று சிரித்துக் கொண்டே நக்கலாக சொன்னாள். 😂 😂 😂
வருண்: “அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை.” என்றவன் தான் எப்போதும் தூங்கும் பக்கம் சென்று பெட்டில் படுத்துக் கொண்டு தனக்கு இருந்த பக்கத்தை சுட்டிக் காட்டியவன், “அதான் உன்னோட சைட். நைட்டு தெரியாம உன்னோட சைடுல இருந்து என்னோட சைடுக்கு வந்தின்னா, நீ தூங்கிட்டு இருக்க உனக்கு உடம்பு சரியில்லைன்னு எல்லாம் பாக்க மாட்டேன். பிடிச்சு கீழ தள்ளி விட்டுருவேன். பாத்துக்கோ….!!!” என்று சொல்லி அவளை எச்சரித்தவன், தன்னுடைய போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு ஏசியை குறைவாக வைத்துவிட்டு வேறு புறமாக திரும்பி படுத்து கொண்டான்.
ரித்திகா: “ரொம்ப தான் ஓவரா பண்றாரு.” என்று நினைத்து அவனுடைய முதுகு புறத்தை பார்த்து கடுப்பு காட்டியவள் தானும் வேறொரு புறமாக திரும்பிப் படுத்து தூங்க தொடங்கினாள். அவளுக்கு இருந்த கலைப்பில் இது புது இடமாக இருந்தாலும் கூட படுத்த உடனே அவள் தூங்கி விட்டாள்.
சில நிமிடங்களுக்கு பின்…
வருண் எவ்வளவு முயன்றும் அவனால் தூங்க முடியவில்லை. அந்த தூக்க மாத்திரையை அதிகமாக சாப்பிட கூடாது என்று டாக்டர் சிவாவிடம் ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லி இருந்ததால் அந்த மாத்திரைகளை வருணிற்கு வாங்கி கொடுப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டான்் சிவா. அதனால் இப்போது தூக்க மாத்திரையும் இல்லாததால் தூக்கம் இன்றி தவித்துக் கொண்டு இருந்தான். அப்போது அவன் தொடர்ச்சியாக ரித்திகாவின் பக்கம் திரும்பி படுக்க, அசந்து தூங்கிக் கொண்டு இருக்கும் ரித்திகாவின் முகத்தை அவனால் காண முடிந்தது.
அவள் மட்டும் இந்த புதிய இடத்திலும் கூட படுத்த உடனே தூங்கிவிட்டதை பார்த்து பொறாமைப்பட்ட வருணிற்கு அப்போதுதான் தான் அவளுக்கென வாங்கி வைத்திருந்த டாக்டர் கொடுத்த மாத்திரைகளை இன்னும் அவளுக்கு கொடுக்கவில்லை என்ற ஞாபகம் அவனுக்கு வர, ரித்திகாவின் தோள்களை பிடித்து உளுக்கி அவளை எழுப்பினான் வருண். அரை தூக்கத்தில் இருந்த ரித்திகா தான் இன்னும் தன்னுடைய வீட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு, “என்ன மா உனக்கு வேணும்…??? ப்ளீஸ் என்ன தூங்க விடு.” என்று தன்னுடைய கண்களை மூடி கொண்டே சொன்னாள்.
அதனால் தன்னுடைய குரலில் சற்று கடுமையைக் கூட்டிய வருண், ரித்திகாவின் பெயரைச் சொல்லி அவளை அழைத்தான். அதனால் பயந்து போய் பதட்டத்தில் எழுந்து அமர்ந்த ரித்திகா , “என்ன ஆச்சு. நான் தெரியாம உங்க சைடு எதுவும் வந்துட்டேனா…???” என்று அவசரமான குரலில் கேட்டாள்.
வருண்: “டாக்டர் உனக்கு பிரிஸ்கிரைப் பண்ண டேப்லெட் ஐ சிவாவ வாங்கிட்டு வர சொன்னேன். ஆனா அத உன்கிட்ட கொடுக்க மறந்துட்டேன். அந்த டேபிள் டிராயர்ல தான் இருக்கு. போய் எடுத்து சாப்பிடு.” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்.
ரித்திகா: “அத கொஞ்சம் பாசமா தான் சொன்னாதான் என்னவாம் தூங்குறவளை எழுப்பி இப்படி மிரட்டுற மாதிரி சொல்றாரு…!!!” என்று நினைத்த ரித்திகா அமைதியாக எழுந்து சென்று அந்த மாத்திரைகளை போட்டு கொண்டு வந்து மீண்டும் படுத்து சில நிமிடங்களிலேயே நன்கு உறங்கி விட்டாள்.
சிறு குழந்தைகள் போல நிம்மதியாக தூங்கும் அவளுடைய முகத்தையே தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்த வருண் சில நொடிகள் உற்றுப் பார்த்தான். அப்படி அந்த முகத்தில் என்ன மாயாஜாலமும் வசியமோ இருந்ததோ தெரியவில்லை. தன்னை அறியாமல் சில நிமிடங்களிலேயே வருண் தூங்கி விட்டான். தூக்கத்தில் புரண்டு படுத்த வருண், உருண்டு போய் ரித்திகாவின் அருகே படுத்துக் கொண்டான்.
பின் சில நிமிடங்களில் தன்னுடைய கைகளை தூக்கி அவள் மீது போட்டான். நல்ல தூக்கத்தில் இருந்த ரித்திகா, முதலில் அதை கண்டுகொள்ளவில்லை. பின் சில நிமிடங்களில் வருண் தன்னுடைய ஒரு கால் ஐ தூக்கி ரித்திகாவின் மீது போட்டான். அவளுடைய சிறிய உடலால் அத்தனை கணத்தை தாங்க முடியவில்லை. அதனால் தூக்கம் கலைந்து தன் கண்களை திறந்த ரித்திகா, அவனுடைய பாதி உடலை தன் மீது போட்டு கொண்டு நிம்மதியாக தூங்கிக் கொண்டு இருக்கும் வருணை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.
அவளால் அவனுடைய பாரத்தால் சரியாக மூச்சு கூட விட முடியவில்லை. அதனால் சிரமப்பட்டு தன் மீது இருந்த அவனுடைய கால்களை தூக்கி கீழே போட்ட ரித்திகா, அவனுடைய கைகளையும் எடுத்து கீழே போட்டு விடலாமா என்று யோசித்தாள். இருப்பினும் தான் அப்படி செய்தால் அவனுடைய தூக்கம் கலைந்து விடுமோ என்று நினைத்து பயந்தவள், “இவர் தான் நான் என்னமோ அவர் பக்கத்துல போய் படுத்தா, என்ன கீழே தள்ளி விற்றுவேனு சொன்னாரு. இப்ப இவர் என் மேல வந்து விழுந்துட்டு எந்திரிக்க மாட்டேங்கிறாரு. அதுக்காக இவர் சொன்ன மாதிரியா நம்மளால பண்ண முடியும்…?? எது எப்படியோ இன்னைக்கு மாதிரி நாளைக்கும் காலையில எந்திரிக்கும்போதே ஏன் இப்படி பண்ணன்னு என் மேல கோபப்பட்டு என்ன அடிக்காம இருந்தா சரி.” என்று தனக்குள் நினைத்துக் கொண்டவள், வேறு வழி இன்றி தானும் அவனை கட்டிப்பிடித்துக் கொண்டு நிம்மதியாக படுத்து உறங்க தொடங்கினாள். 😍 🥰 ❤️ 👩❤️👨
காலைப் பொழுது அழகாக விடிந்தது…..
விடியற்காலையில் எழுந்து கொள்ளும் பழக்கத்தை கொண்ட வருண், ரித்திகா கண்விழிக்கும் முன்பே கண் விழித்தான். அவன் கண் திறந்து பார்க்கையில் அவன் கண்முன்னே ரித்திகாவின் முகம் தான் தெரிந்தது. அவன் ரித்திகாவை கட்டிப்பிடித்து கொண்டு அவள் மீதுகிடந்தான். 😍 🤗 அதனால் அதிர்ச்சியில் கோவமாக எழுந்து அமர்ந்த வருண் நன்கு தூங்கிக் கொண்டு இருக்கும் ரித்திகாவின் முகத்தை பார்த்தான். அவளுடைய அந்த சாந்தமான முகத்தை பார்த்த உடனேயே நேற்றைப்போல் அவனால் அவளிடம் கோபப்பட முடியவில்லை. அதுமட்டும் இன்றி நேற்று ஒன்றும் அவன் குடிபோதையில் இருக்கவில்லை என்பதால், ரித்திகா தன்னை கட்டாயப்படுத்தி எதுவும் செய்திருக்க முடியாது என்று அவனால் உறுதியாக சொல்லி விடக் முடியாது.
அதனால் இது எப்படியும் தன்னுடைய வேலையாக தான் இருக்கும் என்ற முடிவிற்கு வந்தவன், ரித்திகாவின் உறக்கம் கலையாமல் மெதுவாக எழுந்து கிளம்பி ஜாகிங்கிற்க்கு சென்று விட்டான்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)