அத்தியாயம் 137
“வா நிலா.. நிலா.. நிலா.. நீ.. எந்தன் வெண்ணிலா..!! வாடி புள்ள வாடி..!!” என்று குடித்துவிட்டு போதையில் வானில் தெரிந்த நிலவைப் பார்த்து சோகமாக பாடிக் கொண்டிருந்தான் அரவிந்த்.
“டேய்.. love failureன்னா… ஒரு மனுஷன் புலம்பறது எல்லாம் தப்பில்லடா. நீ எவ்ளோ வேணாலும் புலம்பி தொல. உனக்கு friendஆ இருக்கிற பாவத்துக்கு நாங்க அதை எல்லாம் கேட்டு தொலையுறோம். But தயவுசெஞ்சு பாட்டு மட்டும் போடாத மச்சான். உன்னோட கண்டறாவியான voiceஐ கேட்டு என் காது suicide பண்ணி செத்துரும் போல.” என்று போதை ஏறிய குரலில் தயாளன் சொல்ல,
“நீ முதல்ல வாய மூடுடா. Love failureஓட painஐ பத்தி உனக்கு என்னடா தெரியும்…?? உன் ஆளு வீட்ல உங்க loveக்கு green signal குடுத்துட்டாங்க. அப்புறம் உங்களுக்கு என்ன பிரச்சனை..?? இன்னும் கொஞ்ச நாள்ல நீங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணி settleஆகி ஜாலியா கிளம்பி honeymoon எல்லாம் போவீங்க.
அதான் உனக்கு எங்கள மாதிரி love failure boysஓட pain கிண்டலா இருக்கு. மச்சான் அரவிந்த்… நீ பாடுடா. நல்லா சத்தமா பாடு. நீ இங்க பாடுறது.. அங்க அந்த நிலா புள்ளைக்கே கேக்கணும். அவ அப்பனுக்கும் கேட்கணும். அந்த ஆளு உன் true loveஐ பார்த்து impressஆகி அவனே உனக்கு அவன் பொண்ண கட்டி குடுக்கணும். நானும் உனக்கு company குடுக்கிறேன்டா.” என்ற மகேஷ் அவனுடன் சேர்ந்து முதலில் “வா நிலா.. வா நிலா..!!” என்று பாடினான்.
பின் “ஏண்டி ஹர்ஷினி என்ன விட்டுட்டு போன.. நான்தான் உனக்காக என்ன வேணாலும் செய்வேன்னு சொன்னேன்ல.. அப்புறம் என்ன விட அவன் எந்த விதத்துல betterஆ இருக்கான்னு நீ அவன் பின்னாடி போன..?? என்ன பாத்தா உனக்கு பாவமாவே இல்லைலடி.. நல்லா இரு. நீ இப்ப pregnantஆ வேற இருக்கீல்ல.. நீ உன் புருஷன் பிள்ளைங்கன்னு நல்லா சந்தோசமா இருடி. நான் இப்படியே குடிச்சு குடிச்சு உன்ன நெனச்சு அழுது அழுது சாவுறேன்.” என்று தனது mobile phoneல் இருந்த அவளது photoவை எடுத்து பார்த்து வாய்விட்டு புலம்பி கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தான் மகேஷ்.
தூக்கம் வராததால் கொஞ்ச நேரம் காத்து வாங்கிவிட்டு வரலாம் என்று நினைத்து மொட்டை மாடிக்கு சென்ற அனுப்புமா அவன் புலம்புவதை கேட்டுவிட்டு “இவரோட லவ்வர் இவரை விட்டுட்டு போய் எவ்ளோ மாசம் ஆச்சு.. இன்னும் அவங்கள நினைச்சு feel பண்ணி அழுதுட்டு இருக்காரே இவரு..!! நான்க்கூட இவங்க எல்லாம் எங்ககிட்ட எப்பயும் ஜாலியா வம்பு இழுத்து பேசுறதுனால flirty typeன்னு நினைச்சிட்டேன். ஆனா இவரும் சரி, அரவிந்தும் சரி.. லவ்ல எவ்ளோ seriousஆ இருக்காங்க..!! வெண்ணிலாவையும், அரவிந்த்தையும் எப்படியாவது விஷ்வா சார் சேர்த்து வச்சிருவாரு. ஆனா இந்த ஹர்ஷினி மகேஷ் மாதிரி ஒருத்தர மிஸ் பண்ணிட்டா.” என்று நினைத்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
கட்டிலில் படித்துக்கொண்டு phoneஐ நோண்டி கொணடிருந்த மேகாவின் அருகே சென்று அமர்ந்த விஷ்வா “நான்தான் கொஞ்ச நாள் போகட்டும் ஏதாவது பண்ணி நிலாவையும் அரவிந்தையும் சேர்த்து வைக்கிறன்னு சொன்னேன்ல.. அப்புறம் ஏன் இன்னும் ஒரு மாதிரி இருக்க..?? நீ ஒழுங்கா சாப்பிடக்கூட இல்லை. பால் கொண்டு வர சொல்லவா குடிக்கிறியா..??” என்று அக்கறையுடன் கேட்க, “பார்றா.. சாப்பிடும்போது இவனே seriousஆ phoneஐ தான் நோண்டிட்டு இருந்தான். அப்பயும் நான் ஒழுங்கா சாப்பிடலைன்னு கவனிச்சிருக்கான். என்ன இருந்தாலும் என் புருஷன் மாதிரி யாராலயும் இருக்க முடியாது.” என்று நினைத்து அவன் அன்பில் நெகிழ்ந்து போன மேகா சற்று நகர்ந்து அவன் மடியில் தலை வைத்து படுத்தாள்.
மெதுவாக அவள் கூந்தலை வருடிய விஷ்வா, “உனக்கு என்ன வேணும்னு சொல்லு. கொண்டு வர சொல்றேன். உன்னால தான் நான் இப்பலாம் கரெக்ட்டா சாப்பிடுறன். என்ன திட்டிட்டு இருந்துட்டு இப்போ நீ இப்படி அரைகுறையா சாப்பிட்டு தூங்கலாமா..?? எந்திரிடி ஏதாவது சாப்பிட்டு படு.” என்று சொல்ல, “ம்ம்ஹீம்.. எனக்கு சாப்பிடலாம் எதுவும் வேண்டாம் விஷ்வா. என்னன்னு தெரியல. Eveningல இருந்து செமையா கால் வலிக்குது. உட்கார்ந்து சாப்பிடும்போது அது ரொம்ப disturbingஆ இருந்துச்சா.. அதான் எந்திரிச்சு வந்துட்டேன்.” என்றாள் மேகா.
“அத அப்பவே சொல்லி இருக்கலாம்ல்லடி.. எங்க வலிக்குது..?? கால காட்டு நான் பாக்குறேன்..!!” என்ற விஷ்வா அவளை நேராக படுக்க வைத்துவிட்டு அவள் கால்கள் இரண்டையும் தூக்கி தன் மடியில் போட்டான்.
“இங்க தான் வலிக்குது..!!” என்று அவள் சொல்ல, ஏதோ massage parlourல் வேலை செய்பவனை போல கால் வலிக்கு இதமாக இருக்கும்படி அவளது கால்களை நன்றாக பிடித்து விட்டான் அவன். அவனது தொடுகை தந்த சுகத்தில் அப்படியே தன் கண்களம் மூடி உறங்கி விட்டாள் அவள். அதை கவனித்த விஷ்வா அவள் நெற்றியில் ஒரு முத்தம் வைத்துவிட்டு, தங்கள் இருவரின் மீதும் போர்வையை எடுத்து போர்த்திக் கொண்டவன், அவளை அணைத்துக் கொண்டு தானும் தன் கண்களை மூடினான்.
மறுநாள் காலையில்…
ஓரளவிற்கு இப்போது குணமடைந்திருந்த பாட்டி நர்சின் உதவியுடன் ஹாலில் உள்ள sofa ல் வந்து அமர்ந்திருக்க, தயாராகி கீழே வந்தவர்கள் அனைவரும் “வாவ் பாட்டி.. நீங்க நடக்க ஆரம்பிச்சிட்டீங்களா..??” என்று நினைத்து சந்தோஷப்பட்டார்கள். “நீங்க எல்லாரும் சந்தோஷமா இருந்தா.. எனக்கு எதுவும் ஆகாதுன்னு நான்தான் சொன்னனே.. இன்னைக்கு எனக்காக நீங்க எல்லாரும் என்க்கூட சேர்ந்து சாப்பிட்டுட்டு தான் வெளியே கிளம்பனும். லேட் ஆகுது. முக்கியமான வேலை இருக்கு. அப்படி இப்படின்னு எல்லாம் யாரும் காரணம் சொல்லிட்டு இருக்கக்கூடாது.” என்று பாட்டி strictஆக சொல்லிவிட, “ஓகே பாட்டி.” என்று கோரசாக சொன்ன அனைவரும் பாட்டியை கை தாங்கலாக அழைத்துக்கொண்டு dining tableல் சென்று அமர்ந்தார்கள்.
அனைவரும் சந்தோஷமாக இருக்க, சௌபர்ணிகாவின் முகம் மட்டும் சற்று வாட்டமாக இருப்பதை கவனித்த பாட்டி; “ஏம்மா ஒரு மாதிரி இருக்க..?? வயசு பிள்ளைங்க வள்ளுவதக்குன்னு நல்லா சாப்பிடணும். உனக்கு பூரி பிடிக்கும் தானே.. அப்புறம் ஏன் அதை எடுத்து போட்டு சாப்பிடாம தட்டுல இட்லியை வச்சுட்டு அதை போட்டு பிசஞ்சுட்டு இருக்க..?? நல்லா வயிறு நிறைய சாப்பிடு சௌபர்ணிகா.” என்று அக்கறையுடன் சொன்னார். “சாப்பிடுறேன் பாட்டி. பூரி இருந்ததை நான் கவனிக்கல. எனக்கு இட்லி பிடிக்காதுல.. அதான் பொறுமையா சாப்பிட்டு இருந்தேன். நீங்களும் நல்லா சாப்பிடுங்க. அப்பதான் முன்ன மாதிரி நீங்க எங்கக்கூட எல்லாம் சேர்ந்து ஓடிப் பிடிச்சு ஜாலியா விளையாட முடியும்.” என்றாள் சௌபர்ணிகா.
“அட போம்மா.. இன்னும் எத்தனை வருஷத்துக்குத்தான் நான் உங்க கூட விளையாடிட்டு இருக்கிறது…?? நானும் உங்களுக்கு ஏதாவது ஒரு நல்லது நடந்து, இந்த வீட்டுக்கு சீக்கிரம் வாரிசு வராதான்னு பார்க்கிறேன். எங்க… நான் நினைக்கிறது ஒன்னும் நடக்கிற மாதிரியே தெரியல. பேசாம நீங்க நாலு பேரும் சேர்ந்து ஏதாவது கோவிலுக்கு போய் பரிகாரம் பண்ணிட்டு வரீங்களா..?? இல்லன்னா.. சஷ்டி விரதம் இருங்க. சீக்கிரம் குழந்தை உண்டாகும்.” என்று பாட்டி சொல்ல, “வேலை நிறைய இருக்கு பாட்டி. So இப்போதைக்கு எங்கயும் வெளிய போக முடியாது. விரதம் வேனா இருக்கேன். அது ஒன்னும் பிரச்சனை இல்ல.” என்ற சௌபர்ணிகா தன் அருகில் அமர்ந்து பாட்டி சொல்வதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல முழுமூச்சாக சாப்பிட்டுக் கொண்டிருந்த சேரணை ஏளனமாக பார்த்தாள்.
“இப்பதானே நாங்க ஒன்னு சேர்ந்து வாழவே ஆரம்பிச்சுருக்கோம்… So சீக்கிரமா எங்களுக்கும் பாப்பா வந்துரும். எங்க baby விஷ்வா மாதிரி நல்ல cuteஆ fairஆ இருக்கும்.” என்று நினைத்து மகிழ்ந்த மேகா, “நானும் சௌபர்ணிகா அக்காக்கூட சேர்ந்து சஷ்டி விரதம் இருந்து முருகன் கோவிலுக்கு போய் விளக்கு போட்டு சாமி கும்பிட்டு வரேன் பாட்டி. சீக்கிரமா இந்த வீட்ல நீங்க உங்க கொள்ளு பேரனோட ஓடியாடி விளையாட தான் போறீங்க. பாருங்க..!!” என்று சொல்ல, “கேக்கவே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு மா. நீங்க ரெண்டு பேரும் அடுத்தடுத்து 2, 3ன்னு குழந்தையா பெத்து குடுத்துட்டே இருங்க. நான் உங்க புள்ளைங்கள வளக்கறதுக்காகவே சீக்கிரம் சரியாயிடுவேன்.” என்று சிரித்த முகமாக சொன்னார் பாட்டி.
சில நிமிடங்களுக்கு பின் விஷ்வாவும் மேகாவும் அவர்களது காரில் ஆபீசுக்கு சென்று கொண்டிருந்தார்கள். “ஆமா பாட்டிகிட்ட என்னமோ சஷ்டி விரதம் இருக்க போறேன்னு சொன்னியே அப்படினா என்னது..??” என்று குழப்பமாக அவன் கேட்க, “அடப்பாவி.. சஷ்டி விரதம்னா கூட என்னன்னு தெரியாதா உனக்கு..??” என்று கேட்டாள் அவள்.
“ச்ச்.. தெரியாதுன்னு தானே கேட்கறேன்.. அதென்ன இதுக்கூட தெரியாதான்னு நக்கலா கேட்கிற..?? எனக்கு இதையெல்லாம் பக்கத்துல இருந்து யார் சொல்லி கொடுத்து என்னை வளர்த்தாங்க எனக்கு தெரியறதுக்கு…!!” என்று விஷ்வா கோபமாக கேட்க, “சரி விடு. ஒவ்வொரு மாசமும் சஷ்டி வரும். அது முருகனுக்கு உகந்த நாள். அன்னைக்கு காலைல இருந்து evening வரைக்கும் சாப்பிடாம விரதம் இருந்து பொண்ணுங்க முருகன் கிட்ட வேண்டிக்கிட்டா, அவரை மாதிரியே அழகா குட்டி முருகன் சீக்கிரமா பிறப்பான். அதான் நானும் விரதம் இருக்கேனு பாட்டிகிட்ட சொன்னேன்.” என்றாள் மேகா.
“ஓ.. fastingஆ.. அதெல்லாம் நீ ஒன்னும் சாப்பிடாம இருக்க தேவையில்லை. ஏற்கனவே நீ ரொம்ப weekஆ இருக்க. இதுல one day fullஆ சாப்பிடாம இருந்தா எப்படி..?? இங்க பாரு.. நான் இப்பவே சொல்லிட்டேன்.. நீ எனக்கு தெரியாம கூட இப்படி விரதம் எல்லாம் இருக்கக் கூடாது. புரிஞ்சுதா..??” என்று அவன் கண்டிப்பான குரலில் கேட்க,
“அட லூசு.. விரதம்னா அப்படியே எதுவுமே சாப்பிடாம இருப்பாங்கன்னு நினைச்சியா..?? milk, juice, Fruits எல்லாம் சாப்பிடலாம். நமக்கு குழந்தை வேணும்னா நம்ப தான் விரதம் இருக்கணும். சாமி விஷயத்துல யாராவது ஒருத்தர் ஒன்னு செய்றேன்னு சொல்லும்போது இப்படி வேண்டான்னு சொல்லி தடுக்க கூடாது. அதுவும் இது நம்ம குழந்தை விஷயம். நீ சும்மா இரு. யார் என்ன சொன்னாலும் நான் விரதம் இருப்பேன்.” என்று உறுதியாக சொன்னாள் மேகா.
தொடரும்..