Home FREE NOVELSஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 189

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 189

by Thenaruvi Tamil Novels
95 views

அத்தியாயம் 189

அர்ஜுன் தேன்மொழியை சமாதானப்படுத்த முயற்சி செய்து கொண்டு இருக்க, “இல்ல அர்ஜுன், நீ என்ன சொன்னாலும் எனக்கு பயமா; தான் இருக்கு. நான் இப்பவே மாமாவுக்கு கால் பண்ணி சித்தார்த்தையும், ஆருத்ராவையும் நம்ம கிட்ட கூட்டிட்டு வர சொல்றேன். நீ ஆகாஷுக்கு கால் பண்ணு.” என்ற தேன்மொழி அவளது மொபைல் ஃபோனில் இருந்து அவசரமாக பிரதாப்பின் நம்பரை தேடி கண்டுபிடித்து அவருக்கு கால் செய்ய முயற்சி செய்தாள். ஆனால் லைன் போகவில்லை.

“ஐயோ அர்ஜுன் என்ன ஆச்சு! மாமாவுக்கு ஏன் காலை  போக மாட்டேங்குது?” என்று கேட்டுவிட்டு தனது மொபைல் ஃபோனின் சிக்னல் ரேஞ்சை பார்த்து ஷாக் ஆன தேன்மொழி “ஓ மை காட் அர்ஜுன்.. இங்க சிக்னலே இல்ல. நம்ம மார்னிங்ல இருந்து இதே மால்ல தானே இருக்கோம்.. நான் அப்பப்ப எல்லாருக்கும் கால் பண்ணி பேசிட்டு தான் இருந்தேன்.. அப்போ நெட்வொர்க் நல்லா கிடைச்சது. இப்ப மட்டும் எப்படி சிக்னல் மொத்தமா கட் ஆகும்? எனக்கு என்னவோ சரியா படல அர்ஜூன். ரொம்ப பயமா இருக்கு.‌

நீ இங்க வொர்க் பண்றவங்கள சீக்கிரமா எமர்ஜென்சி எக்ஸ்டை ஓப்பன் பண்ண சொல்லு. நம்ம எல்லாரும் ரெசார்ட்டுக்கே போயிடலாம். பாவம் அங்க பாட்டி வேற தனியா இருப்பாங்க அவங்க என்ன பண்றாங்கன்னு தெரியல.” என்று சொல்லிவிட்டு இருந்த பதட்டத்தில் அழவே தொடங்கி விட்டாள்.

இதற்கிடையில் ஆகாஷிற்கு கால் செய்ய முயற்சி செய்து தோற்றுப்போன அர்ஜூன், “நீ சொல்றது கரெக்டு தான். இங்க எல்லாமே தப்பா தான் இருக்கு. யாரோ சிக்னல் ஜாமர் யூஸ் பண்றாங்கன்னு நினைக்கிறேன். அதான் திடீர்னு நெட்வொர்க் கிடைக்க மாட்டேங்குது. நீ எங்கயும் போய்டாத தேன்மொழி. என் பக்கத்திலயே இரு. டாடி கூட பிரிட்டோ போயிருக்கான். சித்தார்த்தையும், ஆருத்ராவையும் அவன் பத்திரமா நம்ம கிட்ட கூட்டிட்டு வந்துருவான்.” என்று சொல்லி தேன்மொழியை கொஞ்சம் ஆறுதல் படுத்தினான்.

ஆனால் அவன் என்ன சொன்னாலும் அதைக் கேட்கும் மனநிலையில் இருக்காத தேன்மொழி “எனக்கு பயமா இருக்கு அர்ஜுன். எதுவும் தப்பா நடந்துடாதுல்ல!” என்று விட்டு குழந்தை போல தொடர்ந்து கதறி அழுதாள். ஆருத்ராவின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்ட சித்தார்த் அவனது மொபைல் ஃபோனில் இருந்த பிளாஷ் லைட்டை ஆன் செய்து தங்கள் அருகில் பிரிட்டோ மற்றும் பிரதாப், ஜானகி அனைவரும் இருப்பதை உறுதி செய்து கொண்டான்.

“இங்க என்ன நடக்குது பிரிட்டோ? இந்த மாதிரி ஒரு ஹைப்பர் லாக்சூரியஸ்  மால்ல பவர் சப்ளை எப்படி கட் ஆகும்? எமர்ஜென்சி லைட் கூட வச்சிருக்க மாட்டாங்களா இவங்க? நீ குழந்தைகளை பாத்துக்கோ. எப்படி மேனேஜ்மென்ட் இவ்ளோ மட்டமா இருக்கு! நான் போய் என்னன்னு கேட்டுட்டு வரேன்.” என்று பிரதாப் பிரிட்டோவிடம் சொல்ல, “இல்லைங்க அவசரப்படாதீங்க. நீங்க தனியா எங்கயும் போக வேண்டாம். நம்ம பசங்க தான் இன்டர்காம் வச்சிருப்பாங்க இல்ல.. மொபைல் நெட்வொர்க் இல்லைனாலும் இன்டர்காம்ல அவங்க மத்தவங்க கிட்ட பேசி என்ன ஏதுன்னு விசாரிப்பாங்க.” என்றாள் ஜானகி.

“எஸ் சார் எனக்கு இப்ப தான் இன்ஃபர்மேஷன் வந்துச்சு. Chief எமர்ஜென்சி எக்ஸிட்டை ஓப்பன் பண்ண சொல்லி இருக்காராம். மைக்கேல், இங்க‌ தான் வந்துட்டு இருக்கான்.‌ அவன் வந்த உடனே நம்ம விர்ச்சுவல் கேமிங் செக்ஷன் வழியா அப்படியே வெளிய போயிடலாம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, நான் என்னன்னு சொல்றேன்.” என்றான் பிரிட்டோ.

அவன் சொன்னதைப் போல அடுத்த சில நொடிகளில் மீராவுடன் அவர்களுக்கு அருகில் சென்ற மைக்கேல் அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு அர்ஜுன் இருக்கும் இடத்தை நோக்கி செல்ல தொடங்கினான். இதற்கு இடையில் ஜனனி மற்றும் குழந்தைகளுடன் இருந்த கிளாரா சந்தோஷுடம் “நீங்க அலர்ட்டாவே இருங்க ப்ரோ. Chief எமர்ஜென்சி எக்ஸிட் வழியா வெளிய எல்லாரும் போகணும்னு ஆர்டர் போட்டு இருக்காரு. ஜனனியையும் குழந்தைகளையும் பத்திரமா பாத்துக்கோங்க. நான் ஆகாஷ் சார் என்ன பண்றாருன்னு ஒன்ஸ் போய் செக் பண்ணிட்டு அவரையும் மத்தவங்களையும் கூட்டிட்டு வந்திடுறேன்.” என்றாள்.

“ஒன்னும் பிராப்ளம் இல்ல சிஸ்டர் நீங்க போங்க. என் பொண்டாட்டியையும் குழந்தைகளையும் பாத்துக்க எனக்கு தெரியும். நீங்க எங்கள பத்தி யோசிச்சு கவலைப்பட வேண்டாம்.” என்ற சந்தோஷ் பேபி வாக்கரில் தூங்கிக் கொண்டு இருந்த தனது குழந்தைகளில் ஒன்றை எடுத்து தனது தோள்களில் போட்டுக் கொண்டு ஜனனியிடம் “அந்த பாப்பாவ தூக்கிக்கிட்டு சீக்கிரம் வா ஜனனி. நம்மளும்   எமர்ஜென்சி எக்ஸிட் வழியா வெளிய போயிடலாம். கரண்ட் இல்லாம இந்த இடத்தில ரொம்ப நேரம் இருக்க முடியாது.” என்றான்.‌

“ஆமா சந்தோஷ். இப்பவே எனக்கு ஒரு மாதிரி இருக்கு. குழந்தைங்க எதோ தூங்கிட்டு இருக்கிறதுனால சைலன்டா இருக்காங்க. இன்னும் அஞ்சு நிமிஷம் நம்ம இங்க இருந்தா கூட காத்தோட்டம் இல்லாததுனால அழ ஆரம்பிச்சிடுவாங்க. சீக்கிரம் வா நம்ப போகலாம்.” என்ற ஜனனி தனது மற்றொரு குழந்தையை தூக்கிக் கொண்டு சந்தோஷுடன் சென்றாள்.

அவர்கள் தன் கண்களில் இருந்து மறையும் வரை அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்த கிளாரா சீக்ரெட் ஆக யாரிடமோ இன்டர்காமில் “இங்க எல்லாம் கிளியர்.” என்று சொல்லிவிட்டு ஆகாஷ் லிண்டாவை தேடி சென்றாள். எங்கே செல்வது என்று கூட தெரியாமல் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டு இருந்த மகேஷ் ஆகாஷ், லிண்டா இருவரும் மகிழனுடன் எங்கேயோ செல்வதை பார்த்துவிட்டு மகாவின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு “எல்லாரும் கரண்ட் போனதுனால வெளிய போறாங்கன்னு நினைக்கிறேன். சீக்கிரம் வாடி நம்மளும் போகலாம். இன்னைக்குன்னு பார்த்து நான் இன்டர்காம் கூட கொண்டு வரல. சுத்தி என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரிய மாட்டேங்குது.” என்று புலம்பியபடி சென்றான்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அனைவரும் அர்ஜுன் தேன்மொழி இருந்த விர்ச்சுவல் கேமிங் ஏரியாவிற்கு வந்து சேர்ந்தார்கள். மீராவை தேன்மொழிக்கு அருகில் சித்தார்த் மற்றும் ஆருத்ராவிற்கு பின்னே நிறுத்திய மைக்கேல் “நீ இங்கயே இவங்க கூடயே இரு. உன்னோட இம்பார்டன்ட் ஒர்க் குழந்தைங்க என்ன பண்றாங்க, அவங்களை சுத்தி என்ன நடக்குதுன்னு நோட் பண்றது மட்டும் தான். நான் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கு இல்ல?” என்று கேட்டாள். அனைத்தும் தனக்கு ஞாபகம் இருக்கிறது என்பதை போல தலையை ஆட்டி வைத்தாள் மீரா.

பதட்டத்தில் இருந்த தேன்மொழி சித்தார்த் ஆருத்ரா இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டு “என்ன ஆச்சு அர்ஜூன்? இன்னுமா அந்த எமர்ஜென்சி எக்ஸிட்டை ஓப்பன் பண்ணாம இருக்காங்க? போன கரண்ட் இன்னும் வந்த பாடில்ல. இதோ போய் கீ கார்டை கொண்டு வரேன். எமர்ஜென்சி எக்ஸிட்டை ஓப்பன் பண்றேன்னு சொல்லிட்டு இங்கிருந்து போன  ஒர்க் பண்ற ஆளுங்களையும் காணோம். அவங்க என்ன பண்றாங்கன்னு பாக்குறேன்னு போன இந்த ப்ளோர் மேனேஜர்யும் காணோம். டைம் ஆக எனக்கு ரொம்ப பயமா இருக்கு அர்ஜுன்.” என்று புலம்பினாள்.

தன் மீது இருந்த அவளது கையை சித்தார்த் எடுத்து‌ விட்டதை கூட அவள் கவனிக்கவில்லை.‌ “அட கொஞ்ச நேரம் சும்மா இரு டி. நானே என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன். நீ சும்மா புலம்புனா கரண்ட் வந்துருமா?” என்ற அர்ஜுன் மைக்கேலிடம் “நீயும், யாதவும் போய் கீ கார்டை கொண்டு வரேன்னு போனவங்க என்ன ஆனாங்கன்னு பாருங்க.” என்றான்.

அதற்கு சரி என்று தலை ஆட்டிய மைக்கேல் யாதவுடன் அங்கே இருந்து கிளம்ப, “நானும் வரேன்.” என்ற பிரிட்டோ அவர்களுடன் செல்ல முயற்சி செய்தான். அப்போது கையில் ஒரு டார்ச் லைட் உடன் அந்த ஃப்ளோரின் மேனேஜர், கேம்ஸ் இன்சார்ஜ் மற்றும் ஆப்பரேட்டர்கள் என அனைவரும் கும்பலாக அவர்களை நோக்கி வந்தார்கள்.‌

மேனேஜர் அர்ஜுனிடம் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டு “நான் இப்பவே போய் எக்சட்டை ஓப்பன் பண்றேன் சார்.‌ திடீர்னு எதுனால இப்படி ஆச்சுன்னு எங்களாலயே கண்டுபிடிக்க முடியல. கரண்ட் இல்லாததுனால லிஃப்ட் யூஸ் பண்ணி கீழ போக முடியல.  இப்படி நடக்கும்னு நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. We are extremely sorry.” என்று சொல்லிவிட்டு தன்னிடம் இருந்த கார்டை பயன்படுத்தி ஒரு பெரிய கதவில் இருந்த சில பட்டன்களை அழுத்தினார்.

அதைத்‌ தொடர்ந்து சைடில் இருந்த ஒரு சிறிய கதவு திறந்துக்கொள்ள அதற்குள் காரின் ஸ்டேரிங் போல பெரியதாக ஒரு வில் இருந்தது. அதில் ஒரு சில நம்பர்களை போடப்பட்டு இருக்க, பாஸ்வேர்டு போல குறிப்பிட்ட சில நம்பர்களை அழுத்தி அதை அப்படியும் இப்படியுமாக இயக்கிய மேனேஜர் மேலும் சில லிவர்களை மேலும் கீழுமாக இயக்கி பல செக்யூரிட்டி சிஸ்டம்கள் கொண்ட அந்தக் கதவை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதற்கு இடையில் சந்தோஷுடம் இருந்த அவனது மகள் அழ தொடங்கி விட, “சரி மா சரி மா அழதே!” என்று சொல்லி தன் மகளை சமாதானப்படுத்த முயற்சி செய்தவன், “ஜனனி நான் நம்ம பாப்பாவ தூக்கிட்டு கொஞ்சம் அந்த பக்கமா போய் நிக்கிறேன். இவ அழுகிற சவுண்டு  கேட்ட உடனே தூங்கிட்டு இருக்கிற அவளும் அழுவா. அப்புறம் நம்மளால ரெண்டு பேரையும் சமாளிக்க முடியாது.” என்றான்.

அவன் சொல்வதும் சரி தான் என்று நினைத்த ஜனனி ‌“ஓகே கூட்டிட்டு போ. பட் ரொம்ப தூரமா போயிடாத. அவ்ளோ தான் டோரை ஓப்பன் பண்ணிட்டா நம்ம எல்லாரும் வெளியே போயிடலாம். அண்ணா இதுக்கு மேல இங்க இருக்க வேண்டாம் ரெசார்ட்கே போகலாம்னு சொல்லிட்டாரு. நடுவுல நீ வேற எங்கயாவது போயிட்டினா அப்புறம் உன்ன வேற தேடிட்டு இருக்க முடியாது.” என்று சொல்ல,

“எனக்கு மட்டும் அறிவு இல்லையா? பிள்ளைய தூக்கிக்கிட்டு நான் எதுக்கு டி தூரமா போக போறேன்? இவ வேற அழுதுகிட்டே இருக்கா. நீ பாரு நான் வந்துடறேன்.” என்று சொல்லிவிட்டு அங்கே இருந்து சென்றான் சந்தோஷ்.  நடக்கும் அனைத்தையும் மீரா ஒரு பக்கம் கவனித்துக் கொண்டு இருக்க, அர்ஜுன் தன் குழந்தைகளையும் தேன் மொழியையும் பத்திரமாக இங்கே இருந்து அழைத்து சென்றுவிட வேண்டுமே என நினைத்து பதட்டத்துடன் “சீக்கிரம் ஓப்பன் பண்ணுங்க. குழந்தைங்க எல்லாம் இருக்காங்க! இப்படி லேட் பண்ணிட்டு இருக்கீங்க!” என்று மேனேஜரிடம் கத்திக் கொண்டு இருந்தான்.

மீண்டும் வருவாள் 💕

You may also like

Leave a Comment

About Me

Featured