Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 209

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 209

by Thenaruvi Tamil Novels
45 views

அத்தியாயம் 209: அழகிய குடும்பம் (பார்ட் 2)

சுகந்தி அந்த பூக்கள் நிறைந்த கவரை ரித்திகாவிடம்  நீட்ட, “அதை எதுக்கு நீ அவகிட்ட குடுக்குற..?? கல்யாணம் ஆனதுக்கப்புறம் பொண்ணுங்களுக்கு அவங்க புருஷன் பூ வச்சு விட்டால் தான் பிடிக்கும். நீ அத வருண் கிட்ட குடு.” என்று செண்பகம் சொல்ல; சுகந்தி தயக்கத்துடன் அந்த கவரை வருணின் முன்னே நீட்ட, வேறு வழியின்றி தன்னுடைய அம்மாவிற்காக அதை பெற்று கொண்ட வருண், ரித்திகாவுக்கு  நீளமான கூந்தலுக்கு ஏற்ப அந்த முல்லைப் பூச்சரத்தை நீட்டமாக கட் செய்து அதை ரித்திகாவின் கூந்தலில் சூட்டினான் வருண். 

அவனுடைய மனதில் அப்போது இப்படி எல்லாம் தான் ஜான்விக்கு கூட எதுவும் செய்ததில்லையே என்ற குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. பின் ரித்திகாவையும் வருணையும்  பூஜை அறைக்கு அழைத்து சென்ற செண்பகம், மனதார அவர்கள் இருவரும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து ரித்திகாவை தன்னுடைய வீட்டில் முதன் முறையாக விளக்கேற்ற சொன்னாள். அவள் பற்ற வைத்த முதல் தீக்குச்சி இடையே அந்த காமாட்சி விளக்கே பிரகாசமாக ஏற்றி வைத்தாள் ராகவி. 

சித்தார்த்தும் ரித்திகாவின் அருகே நின்று கொண்டு அவள் தன்னுடைய கைகளை கூப்பி இறைவனை பிரார்த்திப்பதை பார்த்துவிட்டு, தானும் அதேபோல் செய்தான். அதை கவனித்த செண்பகம் மர்மமாக தனக்குள் சிரித்துக் கொண்டவள் சித்தார்த்தை தன் பக்கம் அழைத்து, “சித்து குட்டி உன்னோட ப்ரெண்ட்ஸ்க்கு எல்லாம் தம்பி தங்கச்சி எல்லாம் இருக்காங்களா..?? இப்ப தான் உனக்கு நிறைய பிரெண்ட்ஸ் கிடைச்சிட்டாங்க இல்ல அவங்க கிட்ட நீ இத பத்தி எல்லாம் பேசி இருக்கியா..??” என்று போட்டு வாங்கினாள். 

சித்தார்த்: “ஆமா பாட்டி அவங்களுக்கு தம்பி தங்கச்சி எல்லாம் இருக்காங்க. பூஜா கூட சொல்லவா டெய்லி அவ ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு போன உடனே அவ தம்பி கூட சேந்து விளையாடுவாலம். அவன் ரொம்ப குட்டி பையனாம் பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருப்பானாம்.” என்று தன்னுடைய மழலை குரலில் அப்பாவியாக சொன்னான். 

செண்பகம்: “அப்ப உனக்கும் தம்பி தங்கச்சி எல்லாம் இருந்தா நல்லா இருக்கும்ல்ல சித்தார்த்..!!! நீயும் டெய்லி அவங்க கூட விளையாடலாம். அவங்க உன்னை விட குட்டியா க்யூட்டா அழகா இருப்பாங்க.” என்று சிரித்து கொண்டே சொன்னாள். 😁 😁 😁

முதலில் அவள் சொன்னதைக் கேட்டு “ஆமா பாட்டி.” என்று உற்சாகமான குரலில் சொன்ன சித்தார்த், பின் சோகமான குரலில், “ஆனா எனக்கு மட்டும் ஏன் தம்பி தங்கச்சி எல்லாம் இல்ல..??? அவங்க என் கூட இருக்க மாட்டேன்னு கோச்சிட்டு போயிட்டாங்களா..???” என்று அப்பாவியாக கேட்டான். 😓 😟

பாசமாக சித்தார்த்தின் தலையை வருடிய செண்பகம், “எங்க சித்து குட்டியை யாருக்கு பிடிக்காது சொல்லு..?? உனக்கு இதுவரைக்கும் தம்பி தங்கச்சியே பொறக்கல. நீ கடவுள் கிட்ட சீக்கிரமா உனக்கு ஒரு தம்பி பாப்பாவோ, இல்ல தங்கச்சி பாப்பாவோ, வேணும்னு வேண்டிக்கோ. குழந்தைங்க வேண்டிக்கிட்டா கடவுள் உடனே கேட்பாரு. நீ வேணா சாமி கிட்ட கேட்டு பாரு.” என்று சொன்னாள்.

அதனால் சித்தார்த் தன்னுடைய இரு கண்களையும் இறுக்கமாக மூடி தன்னுடைய கைகளை கூப்பியவன், “ப்ளீஸ் சாமி எனக்கு சீக்கிரமா ஒரு க்யூட்டான தம்பி பாப்பா இல்லைன்னா, தங்கச்சி பாப்பாவ கொடுங்க. நான் அவங்க கூட சண்டையே போட மாட்டேன். அடிக்கவும் மாட்டேன். திட்டவும் மாட்டேன். நான் அவங்கள நல்லா பாத்துப்பேன் நீங்க அவங்கள என்கிட்ட சீக்கிரம் அனுப்பி வையுங்க ஓகேவா…??” என்று கடவுளிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருந்தான்.

வருனும் ரித்திகாவும் செண்பகத்தையும், சித்தார்த்தையும், மாறி மாறி தங்களுடைய வாயை பிளந்து கொண்டு பார்த்தனர். ஆனால் பாவம் அவர்களால் தங்களுடைய வாயைத் திறந்து எதுவும் பேச முடியவில்லை. விஷ்ணுவும், ஷாலினியும், தங்களை ஒருவரை ஒருவர் பார்த்து குறும்பாக தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். 😂 😂 😂 தான் வந்த வேலை சிறப்பாக முடிந்து விட்டது என்று நினைத்த செண்பகம், மீண்டும் வருணையும் ரித்திகாவையும் ஹாலிற்கு அழைத்து வந்து அங்கு இருந்த சோபாவில் அவர்களை அமர வைத்தவள், தர்ஷினியை அழைத்து அவர்கள் இருவருக்கும் பாலும், பழத்தையும், கொடுக்க சொன்னாள். 

செண்பகத்தையும் ரித்திகாவை பார்த்து முறைத்த வருண், விருப்பமே இன்றி அதை சாப்பிட்டான். ரித்திகாவின் அருகே அமர்ந்து இருந்த சித்தார்த் “எனக்கு…???” என்று தர்ஷினிடம் கேட்க, அவனுக்கும் அவள் ஊட்டி விட்டாள். இப்படி இவர்கள் மூவரையும் குடும்பமாக பார்க்க மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனாள் செண்பகம். 😍 🥰  வருணை பார்த்துக் கொள்ள இப்போது ரித்திகா வந்துவிட்டாள். இனி அவர்கள் இருவரும் இணைந்து தன்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்த செண்பகம் நிம்மதி அடைந்தாள். 😌

ரித்திகாவை பார்த்த செண்பகம், “உன் கூட சேந்து தான் சாப்பிடுவேன்னு இந்த குட்டி வாண்டும் அடம் புடிச்சிட்டு இன்னும் சாப்பிடவே இல்ல மா. நீ அவனையும் வருணை கூட்டிட்டு போய் முதல்ல சாப்பிடு மா.” என்று சொல்லி அவர்கள் மூவரையும் டைனிங் ஹாலிற்கு அனுப்பி வைத்தாள் செண்பகம்.  வழக்கம் போல் சித்தார்த்துக்கு உணவை ஊட்டி விட்டபடியே சாப்பிட்டுக் கொண்டு  இருந்தாள். பொதுவாக செண்பகம் மற்றும் சுகந்தி இடம் எல்லாம் சாப்பிடுவதற்காக அடம் பிடிக்கும் சித்தார்த் ரித்திகாவின் அருகே சமத்துப் பிள்ளையாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தான். வருணும் அதே கவனிக்க தான் செய்தான். 

ரித்திகா தன்னுடைய மகனை நன்றாக பார்த்துக் கொள்கிறாளே என்று நினைத்து சந்தோஷப்படுவதா, இல்லை தன் மகன் தன்னிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து அவள் வசம் சென்று கொண்டு இருக்கிறானே என்று நினைத்து வருத்தப்படுவதா என்று தெரியாமல் குழப்பத்துடன் அவர்களைப் பார்த்துக் கொண்டு  இருந்தான். 🙄 வருண் சாப்பிடாமல் தன்னுடைய தட்டில் இருந்த உணவுகளை கிளறி கொண்டே இருப்பதை கவனித்த செண்பகம், “சீக்கிரம் சாப்பிடு வருண். சித்தார்த்தே சாப்பிட்டு முடிச்சா கூட நீ சாப்பிட்டு முடிக்க மாட்ட போல..!!! நல்ல நேரம் முடியறதுக்குள்ள நம்ம கோயிலுக்கு போயிட்டு வந்துடலாம்.” என்று சொல்ல வேண்டா வெறுப்பாக அந்த உணவுகளை வேகவேகமாக தன்னுடைய வாயில் திணிக்க தொடங்கினான் வருண்.

சாப்பிட்டுக் கொண்டு இருந்த சித்தார்த் ரித்திகாவிடம், “நம்ம வெளியில போறோமா ரித்திஅம்மா..??” என்று ஆர்வமான குரலில் கேட்டான். “ஆமா சித்து நம்ப கோயிலுக்கு போறோம்.  அதான் பாட்டி சொன்னாங்கல்ல… நீ இது எல்லாத்தையும் சீக்கிரம் சாப்பிட்டு முடிச்சிட்டா ரொம்ப சீக்கிரம் கிளம்பலாம்.” என்று சொன்ன ரித்திகா அவனுக்கு மீண்டும் ஊட்டத்  தொடங்கினாள். “அப்படியா சூப்பர். அப்போ நீயும், நானும், ஒரே கலர்ல டிரஸ் போட்டுட்டு போலாம். பூஜா அவங்க அம்மா அப்பா கூட எங்கேயாவது சேர்ந்து வெளில போனா அப்படி தான் ஒரே மாதிரி டிரஸ் போட்டுட்டு போகலாம். நீ என்னோட ரூமுக்கு வந்து இதே மாதிரி எனக்கு கிரீன் கலர்ல ஒரு டிரஸ் எடுத்து தரியா..??” என்று ரித்திகாவின் புடவை முந்தானையை பிடித்துக் கொண்டு கேட்டான் சித்தார்த். 

“ம்ம்.. அம்மா எடுத்து தரேன்.” என்று பாசமாக அவனைப் பார்த்து சொன்ன ரித்திகா அவனுடன் இணைந்து சிரித்து பேசி விளையாடி சாப்பிட்டு கொண்டு இருந்தாள். அவர்களுடைய இந்த பாசப்பிணைப்பை பார்த்த வருண், பொறாமையில் பொங்கினான். 😒 பின் சில நிமிடங்களில் அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்து விட ரித்திகா சொன்னது போல, அவனுக்கு தான் அணிந்து இருக்கும் புடவைக்கு மேட்ச் ஆக ஒரு ஆடையை தேர்வு செய்து அனுபவித்து கீழே கூட்டி வந்தாள். 

சித்தார்த் ரித்திகாவின் கையை பிடித்து கொண்டு அவர்களுடைய கார் பார்க்கிங்குக்கு வந்தான். விஷ்ணு செண்பகம் மற்றும் ஷாலினியை தன்னுடைய காரில் ஏற்றி கொண்டான். வருண் தன்னுடைய அழகான சிறிய குடும்பத்துடன் அவனுடைய காரில் பயணிக்க தொடங்கினான். செண்பகம் செண்டிமெண்ட் ஆக முதன்முதலில் தான் ரித்திகாவை சந்தித்த துர்க்கை கோயிலுக்கு அவளை முதன் முதலாக தன்னுடைய மருமகளாக அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்து அங்கே தன்னுடைய குடும்பத்துடன் சென்றாள். 

சில நிமிடத்திற்கு பின் அவர்கள் அனைவரும் துர்கா தேவியின் கோயிலை வந்தடைந்தனர். பின் அவர்கள் அனைவரும் குடும்பமாக கோவிலுக்குள் நுழைந்தனர். இது பொது இடம் என்பதால் மக்கள் அனைவருக்கும் சந்தேகம் ஏற்படாத வண்ணமும், தொந்தரவு ஏற்படாத வண்ணமும், தன்னுடைய குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக மஃப்டியில் சில பாடி கார்டுகளை ஏற்பாடு செய்து வைத்து இருந்தான் வருண். அவர்கள் அனைவரும் ஆங்காங்கே நின்று கொண்டு நாராயணன் குடும்பத்தினரை கண்காணித்துக் கொண்டு இருந்தனர். 

அவர்கள் வந்தது வெயில் உச்சியில் இருக்கும் நேரம் என்பதால், அவர்கள் தங்களுடைய பாதத்தை தரையில் வைத்த உடனேயே சூரிய பகவான் அவர்களை சுட்டரித்தார். அதனால் உடனே சித்தார்த்தை தூக்கி தன்னுடைய இடுப்பில் அமர வைத்து கொண்ட ரித்திகா, தன்னுடைய காலில் சூடு பொறுக்க முடியாமல் வேகமாக நடந்தாள். இது ஏன் தனக்கு தோன்றவில்லை என்று நினைத்த வருண் மானசிகமாக தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டான். பின் அவனும் வேகமாக ரித்திகாவின் பின்னே தொடர்ந்தவன் அவள் அருகே சென்று, “உனக்கே உடம்பு சரி இல்ல. நீ ஏன் அவனை தூக்கி கஷ்டப்படுற..?? என்கிட்ட குடு அவன நான் தூக்கிட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு சித்தார்த்தின் முன்னே அவனைத் தூக்குவதற்காக தன்னுடைய கைகளை நீட்டினான் வருண். 

சித்தார்த் தான் வருனிடம் செல்ல விரும்பவில்லை என்பது போல தன்னுடைய தலையை  வேகமாக ஆட்டினான். அவனுடைய செய்கைகளை பார்த்து அவனை செல்லமாக முறைத்த ரித்திகா, “அப்பா தானே கூப்பிடுறாரு.. நீ இப்படி எல்லாம் பண்ண கூடாது சித்து. அப்பா பாவம் தானே… நீ இப்படி எல்லாம் பண்ணா அவர் பீல் பண்ணுவாரு. சித்து குட் பாய் தானே.. அம்மா சொன்னா கேட்ப தானே அப்பா கிட்ட போ.” என்று பாசமாக ரித்திகா சித்தார்த்திடம் சொல்ல, தன்னுடைய இரு கைகளையும் இப்போது வருணின்  முன்னே நீட்டிய சித்தார்த், இதுவரை இல்லாத அளவிற்கு வருணை பார்த்து அழகாக புன்னகைத்தான். 😁 😁 😁 தன்னுடைய மகனின் தனக்கான புன்னகையை பார்த்து நெகிழ்ந்து போன வருண் கலங்கிய கண்களுடன் தன்னுடைய மகனை ரித்திகாவிடம் இருந்து வாங்கி தன்னுடைய நெஞ்சோடு சேர்த்து அனைத்து தூக்கி பிடித்துக் கொண்டு நடக்க தொடங்கினான். 

வெகு நாட்களுக்குப் பின் இப்போது தான் அவன் தன்னுடைய மகனை தன்னுடைய கைகளால் தூக்குகிறான். அதனால் அந்த மகிழ்ச்சி அவனுக்குள் இருந்தாலும், தன்னுடைய மகனை தான் தூக்கி கொஞ்சுவதற்கு கூட, ரித்திகாவோட ரெக்கமண்டேஷன் தனக்கு தேவைப்படுகிறது என்று நினைத்த வருண்; ரித்திகாவின் மீது கோபப்பட்டான். 😒 😡

  • நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured