அத்தியாயம் 207: இனி எல்லாம் சுகமே
வருணின் அறையில்
பதட்டத்தில் இருந்த வருண், ரித்திகாவின் கழுத்தை வெப்பத்தை சோதிப்பதற்காக தொட்டுப் பார்த்தான். அவளுடைய உடல் முன்பு இருந்தது விட இப்போது மிகவும் குளுமையாக இருந்தது. அதனால் பயந்து போன வருண் அவனுடைய வீட்டில் இருந்து கிளம்பி போன டாக்டருக்கு கால் செய்து மீண்டும் ரித்திகாவின் நிலையைப் பற்றி சொன்னவன், “இப்போ என்ன டாக்டர் பண்றது இவளோட கண்டிஷன் ஐ பாத்தா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு.” என்று அவசரமான குரலில் சொன்னான். “நான் தான் ஆல்ரெடி சொன்னேன்ல மிஸ்டர் வருண் , அவங்களுக்கு இப்ப டிரவுசியா இருக்கிறது ரொம்ப காமன் தான். அவங்களுக்கு தேவையான மெடிசின்ஸ் எல்லாத்தையும் ஆல்ரெடி கொடுத்தாச்சு. சோ நத்திங் டு வரி.” என்று சொன்ன டாக்டர் ரித்திகாவை எப்படி கையாள வேண்டும் என சில வழிமுறைகளை அவனிடம் சொல்லிவிட்டு தன்னுடைய கால் ஐ கட் செய்தார்.
இறுதியாக டாக்டர் சொன்னதை கேட்ட வருண், அதிர்ந்து விட்டான். இப்போது தான் இதை அவளுக்கு செய்ய விரும்பவில்லை என்றால் வேறு யாராவது ஒரு பெண்ணை வைத்து தான் அவன் இதை செய்ய வேண்டும். ஆனால் தான் அப்படி செய்துவிட்டால் ரித்திகாவின் உடல் நிலையை பற்றி அனைவரும் அறிந்து விட கூடும் என்று நினைத்த பயந்த வருண், வேறு வழியின்றி நேரத்தை வீணாக்காமல் டாக்டர் சொன்னவற்றை தானே செய்ய முடிவெடுத்தான்.
முதலில் ரித்திகாவின் வெற்றுடலில் இருந்து அந்த பெட்ஷீட் அகற்றிய வருண், ஒரு டவளை எடுத்து தலை முதல் கால் வரை அவளுடைய உடம்பில் இருந்து ஈரத்தை துடைத்து விட்டான். முதலில் அருவருப்பான முகத்துடன் அதை செய்ய தொடங்கிய வருண், தன்னால் தான் இவளுக்கு இந்த நிலையை வந்து இருக்கிறது என்று நினைத்து தன்னை தேற்றிக் கொண்டவன், இப்போது ரித்திகாவை பாசத்தோடு அவள் முகத்தை பார்த்தான். அவனுடைய கண்களுக்கு அழகாக தூங்கிக் கொண்டே இருக்கும் குழந்தையை போல் தெரிந்தாள் ரித்திகா .
அதனால் அவளுடைய தலையை தூக்கி தன்னுடைய மடியில் போட்டுக் கொண்ட வருண், அவளுடைய நீண்ட கூந்தலை உலர்த்த தொடங்கினான். பின் பாத் ரோப் ஐ அவளுக்கு அணிவித்துவிட்ட வருண், கபோர்டு இருந்த வேறு ஒரு போர்வையை எடுத்து அவள் மீது போர்த்தி விட்டு, அவளுக்கு மயக்கம் தெளிவதற்காக காத்திருந்தாள். இதற்கிடையில் ரித்திகா கிளம்பி விட்டாளா என்று தெரிந்து கொள்வதற்காக மீண்டும் அவளுக்கு கால் செய்தாள் செண்பகம். அதை அட்டென்ட் செய்த வருண், ரித்திகா மிகவும் சோர்வாக இருப்பதால் அவள் ஓய்வெடுத்துக் கொண்டு இருப்பதாகவும், அவள் தூங்கி எழுந்த பின், தானே அவளை அழைத்து கொண்டு கீழே வருவதாக சொல்லிவிட்டு அந்த கால் ஐ கட் செய்தான்.
அவன் சொன்னதை வேறு விதத்தில் புரிந்து கொண்ட செண்பகம், “எனக்கு தெரியும் டா. கல்யாணத்துக்கு அப்புறம் எவ்வளவு பெரிய உத்தமனா இருந்தாலும், இப்படித்தான் பொண்டாட்டி முந்தானைய பிடிச்சுகிட்டு திரிவீங்க. நான் நினைச்சது எல்லாமே அடுத்தடுத்து ஒன்னு ஒன்னா நடக்குது. இனிமே எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்று நினைத்த செண்பகம் வருனிடம், “எனக்கு புரியுது வருண். புதுசா கல்யாணம் ஆனவங்க இப்படித்தான் இருப்பீங்க. ஒன்னும் பிரச்சனை இல்ல பா.மத்தியானமே ஆனாலும் பரவால்ல. ரித்திகா நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்.” என்று சொன்னவள் குறும்பாக சிரித்து விட்டு அந்த கால் ஐ கட் செய்தாள். 😂 😂 😂
“இந்த அம்மா வேற நம்ப ஒன்னு சொன்னா, இவங்க ஒன்னு இமேஜின் பண்ணிக்கிறாங்க.” என்று நினைத்த வருண், செண்பகத்திடம் எந்த பதிலும் சொல்லாமல் அந்த அழைப்பை துண்டித்து விட்டான். குளித்து தயாராகி கீழே தயக்கத்துடன் வந்தாள் ஷாலினி. இந்த வீட்டில் செண்பகம் தன்னை தங்க வைத்து இருந்தாலும், இங்கே ரித்திகாக்கு இருக்கும் உரிமை தனக்கு இல்லையே என்ற எண்ணம் அவளுக்குள் இருந்தது. அதனால் உரிமையாக சென்று நாராயணன் குடும்பத்தினருடன் இணைந்து உணவு உண்பதற்கு கூட அவளுக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. இருப்பினும் அவளுடைய வயிறு சாப்பாடு வேண்டும் என்று கூப்பாடு போட்டதால் வேறு வழி இன்றி டைனிங் ஹாலின் அருகே தயங்கி தயங்கி வந்தாள் ஷாலினி.
சாப்பாடு இருக்கும் இடத்தில் விஷ்ணு இல்லாமல் இருந்தால் எப்படி..?? ஷாலினி அங்கே வருவதற்கு முன்பே செண்பகத்துடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தான் விஷ்ணு. ஷாலினி அங்கே வருவதை கவனித்த விஷ்ணு, “வா ஷாலு சாப்பிடலாம். எங்க உன்ன ஆளையே காணோம்ன்னு இப்ப தான் யோசிச்சேன். கரெக்டா நீயே வந்துட்ட.” என்றவன் சாப்பிட்டுக் கொண்டே தன் அருகே இருந்த ஒரு நாற்காலியை இழுத்து அவள் அமர்வதற்காக போட்டான்.
விஷ்ணு அங்கே இருந்ததால் ஷாலினி சற்று சகஜம் ஆகினாள் . இருப்பினும் அவளுக்கு செண்பகத்தை பார்க்கவே மிகவும் பயமாக இருந்தது. அதனால் அங்கே சென்று அமர்வதற்கு முன் உத்தரவு வேண்டுவதைப் போல செண்பகத்தின் முகத்தை பார்த்தாள் ஷாலினி. அவளுடைய தயக்கத்தை புரிந்து கொண்ட செண்பகம், “அட உக்காந்து சாப்பிடு மா ஷாலினி. ஏன் என்னோட முகத்தையே பாத்துட்டு இருக்க..??” என்று சாதாரணமாக கேட்டாள். என்ன தான் செண்பகம் அவளிடம் சாதாரணமாக நடந்து கொண்டாலும், அவளுடைய ஒவ்வொரு செயலும் ஷாலினியை திகிலூட்டியது.
சாப்பிட்டு கொண்டு இருந்த ஷாலினி, அவ்வப்போது விஷ்ணுவையும், செண்பகத்தையும், மாறி மாறி பார்த்துக் கொண்டே இருந்தாள்.அப்போது அவனுடைய மனதில் ஒரே ஒரு விஷயம் தான் மீண்டும் மீண்டும் ஓடி கொண்டு இருந்தது. அது இப்போது தன்னை ரித்திகாவின் உடன்பிறவாத சகோதரியாக நினைத்து தன் மீது பாசமாக இருக்கும்் செண்பகம், தானும் விஷ்ணுவும் காதலிப்பதை அறிந்த பின்பும் இப்படியே இருப்பாளா என்ற சந்தேகம் அவள் எழுந்தது.
எது எப்படி இருந்தாலும் வருணின் மீதும் ரித்திகாவின் மீதும் பாரத்தை போட்டு விட்டு, தன் முன்னே இருந்த அறுசுவை உணவுகள் அனைத்தையும் ஒன்று விடாமல் சாப்பிடும் ஆர்வத்தில் அதன் மீது தன்னுடைய கவனத்தை செலுத்த தொடங்கினாள் ஷாலினி. சாப்பிட்டு முடித்துவிட்டு ஷாலினியை பார்த்த செண்பகம், “நீ சாப்பிட்டு முடிச்சுட்டு என்னோட ரூமுக்கு வா மா.” என்று சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள்.
செண்பகம் அங்கு இருந்து சென்றவுடன் விஷ்ணுவை குழப்பத்துடன் பார்த்த ஷாலினி, “இவங்க ஏன் டா என்ன அவங்க ரூமுக்கு வர சொல்றாங்க…???” என்று அவசரமான குரலில் கேட்டாள். தன்னுடைய வாய் முழுக்க எதையோ போட்டு மென்று கொண்டு இருந்த விஷ்ணு, “எனக்கு மட்டும் என்ன டி தெரியும்..??? அவங்க உன்ன தானே வர சொன்னாங்க சோ போய் பாரு. நீ அங்க போனா, அவங்க எதுக்கு உன்னை கூப்பிட்டாங்கன்னு உனக்கே தெரிஞ்சுரும்.” என்று கேஷுவல் ஆக சொன்னான்.
அவன் பேசியதை கேட்டு அவனுடைய கையில் நறுக்கென்று கிள்ளி வைத்த ஷாலினி, “டேய் லூசு அது எனக்கு தெரியாதா..??? ஒரு வேளை நீயும், நானும், நேத்து ஒரே ரூம்ல இருந்தது அவங்களுக்கு தெரிந்திருக்குமோ..?? ஒரு வேளை அத பத்தி கேக்குறதுக்காக தான் என்ன மட்டும் தனியா கூப்பிடுறார்களோ…??” என்று குழப்பமான குரலில் கேட்டாள். 😟
அவளைப் பார்த்து லேசாக சிரித்த விஷ்ணு, “என் அம்மாவை பத்தி நீ என்ன நினைச்சுட்டு இருக்க..?? அவர்கள் ரித்திகாஅண்ணி கிட்ட ரொம்ப பாசமா நடந்துக்கிறத வச்சு எங்க அம்மா ரொம்ப சாஃப்ட் -ன்னு நினைச்சியா..?? அவங்க சொல்றத நம்ம கேக்குற வரைக்கும் தான் எங்க அம்மா சாஃப்ட் ஆ இருப்பாங்க. நாங்க மட்டும் அவங்க சொல்றத கேக்கலைன்னு வையி அவ்ளோ தான். எங்க அம்மா ஒரே செகண்ட்ல சந்திரமுகி ஆ மாறிடுவாங்க. அப்புறம் என்ன எல்லாரையும் லக்க.. லக்க… லக்கன்னு சொல்லி பயமுறுத்துவாங்க. சோ அவங்க இவ்ளோ கூல் ஆ இருக்கிறத வச்சு பார்த்தா அவங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு தான் அர்த்தம். நீயா போய் அவங்க கிட்ட எதையும் உளறி வைக்காம இருந்தா போதும்.” என்று மீண்டும் சாப்பிட்டபடியே கேஷுவலாக சொன்னான்.
ஒரு புறம் இன்னும் செண்பகத்திற்கு தங்களுடைய விஷயத்தைப் பற்றி செண்பகத்திற்கு எதுவும் தெரியாது என்ற நிம்மதி அவளுக்கு இருந்தாலும், இன்னொரு புறம் தெரிந்து விட்டால் தங்களுடைய நிலைமை என்ன ஆகும் என்று யோசித்து பயந்தாள் ஷாலினி.
சில நிமிடங்களுக்கு பின்…
செண்பகத்தின் அறையில்…
சீக்கிரமாக சாப்பிட்டு முடித்துவிட்டு செண்பகத்தின் அறையின் அருகே வந்து விட்டாள் ஷாலினி. ஆனால் உள்ளே செல்வதற்கு அவளுக்கு மிகவும் பயமாகவும், தயக்கமாகவும், இருந்தது. இருப்பினும் அவளுடைய அறையின் கதவு திறந்து இருந்ததால், அவள் வேலை பார்க்கும் பள்ளியில் பிரின்சிபல் அறைக்கு செல்லும்போது, “மே ஐ கம் இன் மேடம்..??” என்று கேட்டுவிட்டு செல்வதைப்போல இங்கும் கேட்டுவிட்டு உள்ளே சென்றாள் ஷாலினி.
புன்னகை நிறைந்த முகத்துடன் ஷாலினியின் தன்னுடைய அறைக்குள் அழைத்த செண்பகம், பொதுவான நல விசாரணைகளுக்கு பின்; “ஒரு நிமிஷம் இரு மா வரேன்.” என்று சொல்லிவிட்டு தன்னுடைய திங்ஸ் இருக்கும் அறைக்குள் சென்றாள். பின் சிலர் நிமிடங்களில் கையில் நிறைய ஆடைகள் நிரம்பிய பைகளுடன் வெளியே வந்தாள் செண்பகம். பின் அதை ஷாலினியிடம் நீட்டியவள், “இந்த மா. இது எல்லாத்தையும் நான் உனக்காக தான் வாங்குனேன்.” என்று பாசமான குரலில் சொன்னாள்.
செண்பகம் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போன ஷாலினி, “எனக்காகவா மேடம்…??” என்று கலங்கிய கண்களுடன் கேட்டாள். ஏனென்றால் இதுவரை விஷ்ணு, ரித்திகா மற்றும் ரித்திகாவின் பெற்றோர்களை தவிர அவளைப் பற்றி யோசித்து, யாரும் அவளுக்கென எதையும் செய்ததில்லை. ஆனால் இப்போது தன்னுடைய வருங்கால மாமியார் தன்னைப் பற்றி யோசித்து தனக்காக இத்தனை ஆடைகளை வாங்கி தருவது தனக்கு கிடைத்த பெரிய பாக்கியம் மற்றும் ஆசீர்வாதம் என்று நினைத்து உள்ளுக்குள்ளே பூரித்துப் போனாள் ஷாலினி. 😍 🥰
ஷாலினியை தன் அருகே அழைத்து பாசமாக அவளுடைய தோளில் தன்னுடைய கைகளில் போட்டு தன்னுடைய கட்டிலில் அவளை அமர வைத்த செண்பகம், “இப்ப எதுக்கு மா ஷாலினி நீ கண் கலங்குற..??? உனக்கு யாரும் இல்லைன்னுறு நினைச்சு நீ வருத்தப்படாத. ரித்திகா உன்ன பத்தி என்கிட்ட நிறைய சொல்லி இருக்கா. அவ உன்ன அவளோட கூட பொறந்த தங்கச்சியா தான் பார்க்கிறாள். அதனால நீயும் எங்க வீட்டு பொண்ணு தான். உனக்கு என்ன செய்யனுமோ அது எல்லாத்தையும் நாங்களும் பார்த்து பார்த்து செய்வோம். நான் எனக்கு தெரிஞ்ச புரோக்கர் கிட்ட கூட உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்க்க சொல்லி இருக்கேன். என்னோட இரண்டாவது பையன் கல்யாணம் முடிச்சதுக்கு அப்புறமா உனக்கு நான் நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் மா” என்று அன்பாக சொன்னாள். 😍
செண்பகம் முதலில் பேசியதை கேட்டு நெகிழ்ந்து போன ஷாலினி, இறுதியாக சொன்னதைக் கேட்டு வருத்தம் அடைந்தாள். அந்நேரம் அவளுடைய மனதில் ரித்திகாவை பார்த்தவுடன் அவளை தன்னுடைய மருமகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று செண்பகத்தின் மனதில் தோன்றிய படி ஏன் தன்னைப் பார்த்தவுடன் அப்படி தோன்றவில்லை என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது. ஆனால் அதற்கான பதிலை அவளால் கண்டறிய முடியவில்லை. பின் சில நிமிடங்கள் செண்பகத்துடன் பேசிவிட்டு அவள் தனக்கு பரிசளித்த ஆடைகளை மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டு அங்கு இருந்து தன்னுடைய அறைக்கு வந்த ஷாலினி, வீடியோ காலில் அந்த ஆடைகளை விஷ்ணுவிடம் காட்டினாள்.
சில மணி நேரங்களுக்கு பின்..
வருணின் அறையில்….
திடீரென்று மயக்கத்தில் இருந்து தானாக கண் விழித்த ரித்திகா , சுற்றிக்கொண்டு இருந்த தன்னுடைய தலையை பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள். அப்போது அவளுக்கு அவள் மயக்கம் அடைவதற்கு முன் நடந்தவைகளும் அவள் எப்படி மயக்கமடைந்தாள் ல் என்ற காட்சிகளும் நியாபகத்திற்கு வந்தது. அதை நினைத்து பார்த்தவன், தன் மீது இருக்கும் ஆடைகளையும் தனக்கு எதிரே அமர்ந்து இருக்கும் வருணையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.
அவள் எந்த நிலைமையில் மயக்கம் அடைந்தால் என்று அவளுக்கே தெரியும் போது தனக்கு இந்த ஆடையை யார் அணிவித்து இருப்பார்கள் என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது. அதனால் தயக்கத்துடன் வருணை பார்த்தத ரித்திகா, “இந்த டிரஸ்ஸை எனக்கு யார் போட்டுவிட்டது..??” என்று மெல்லிய குரலில் கேட்டாள். அவளை அலட்சியமாக பார்த்த வருண், “இங்க என்ன தவிர உன் கண்ணுக்கு வேற யாராவது தெரியுறாங்களா ..??” என்று கேட்டான்.
அவன் சொன்னதைக் கேட்டு அறிந்து போன ரித்திகா அவன் தன்னை முழுதாக பார்த்து விட்டான் என்று உணர்ந்தவுடன் வெட்கத்தில் நெளிந்தாள். ☺️ 😅 அவளால் இப்போது சகஜமாக வருணின் முகத்தை பார்த்து பேசக்கூட முடியவில்லை. அதனால் தன்னுடைய தலையை கீழே தொங்க போட்டுக் கொண்டாள். ரித்திகாவை குறுகுறுவென்று பார்த்த வருண், “ஆமா நீ எப்படி மயக்கம் போட்டு கீழ விழுந்த..??” என்று சாதாரணமான குரலில் கேட்டான்.
ரித்திகா: கீழே குனிந்த தன்னுடைய தலையை மேலே உயர்த்தாமல், “நான் குளிச்சிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணலாம்னு, டிரஸ் ஐ எடுக்க போனேன். அப்போ திடீர்னு எனக்கு ரொம்ப டிரவுசியா இருந்துச்சு. அதனால நான் வெளியில போலாமேன்னு நினைச்சு வேகமா திரும்புனேன். அப்போ பாத் ரூம் டைல்ஸ் ஸ்லிப்பரியா இருந்ததுனால, அது வழுக்கி கீழ விழுந்துட்டேன். கீழே விழுந்த கொஞ்ச நேரத்திலேயே எனக்கு கான்சியஸ் போயிடுச்சு. அதான் என்னால எந்திரிச்சு வர முடியல.” என்று சோகமான குரலில் அவள் சொல்லி கொண்டு இருக்க, அவள் சொல்வதை ஏதோ ஒரு கதையை கேட்பதைப் போல சாதாரணமாக கேட்டு கொண்டு இருந்த வருண், “ஓ அப்படியா ஓகே. அம்மா நீ எப்ப வருவன்னு கேட்டு கால் பண்ணிக்கிட்டே இருக்காங்க. நீ மயக்கம் போட்டு கீழ விழுந்தது பற்றி எல்லாம் நான் அவங்க கிட்ட சொல்லல. சோ நீயும் சொல்லாத. நீ ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன்னு தான் சொன்னேன். சீக்கிரம் கிளம்பு நம்ம கீழே போலாம். எல்லாரும் நமக்காக வெயிட்டிங்.” என்றவன் தான் அணிந்து இருந்த கோட் ஐ சரி செய்து கொண்டு அங்கு இருந்து கிளம்பினான்.
தான் சொல்வதைக் கேட்டு வருண் பகிர்ந்து போய் தன் மீது இருக்கும் பாசத்தில் தன்னிடம் ஏதாவது நாலு வார்த்தை நன்றாக பேசுவான் என்று எதிர்பார்த்து இருந்த ரித்திகா ஏமாற்றத்துடன் எழுந்து கிளம்ப தொடங்கினாள்.
❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
- நேசம் தொடரும்