Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 127

மூர்கனின் காதலி CH 127

by Thenaruvi Tamil Novels
59 views

அத்தியாயம் 127

பொழுது விடிந்து வெகு நேரமானதால் மேகாவின் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் எழுந்து அவரவர் வேலையை பார்க்கத் தொடங்கி கருந்தார்கள்.

விஷ்வா மேகா இருவருமே வீட்டில் இல்லாததால் மற்றவர்களுக்கு சந்தேகம் வந்துவிடும் என்று நினைத்து பயந்த மகேஷ் “இதுக்கு மேலயும் லேட் பண்றது எனக்கு என்னமோ சரின்னு படல. நம்மளால என்ன முடியுமோ எல்லாத்தையும் பண்ணி பார்த்தாச்சு. இதுக்கு மேல local police கிட்ட help கேட்கிறத தவிர வேற வழியில்லை. நீங்க போய் local authorityஐ contact பண்ணுங்க. நான் வீட்டுக்கு போய் அங்க என்ன situationன்னு பாக்குறேன்‌.” என்று அரவிந்த் மற்றும் தயாளனிடம் சொல்லிவிட்டு மேகாவின் வீட்டிற்கு சென்றான்.

அங்கே சமையல் வேலைகளை முடித்துவிட்டு மேகாவையும் விஷ்வாவையும் சாப்பிட அழைப்பதற்காக தேடிக் கொண்டிருந்த வசந்தி தன் கண்களில் மகேஷ் பட்டவுடன் அவனைப் பிடித்து வைத்துக் கொண்டு “எங்கப்பா.. விஷ்வா தம்பியையும் மேகாவையும் காணோம்..!! நான் காலையில இருந்து அவங்க ரெண்டு பேரையும் பார்க்கவே இல்லையே…!!” என்று கேட்க,

“அது வந்துக்கா..” என்று இழுத்த மகேஷ் “இப்ப என்ன சொல்லி இவங்கள சமாளிக்கிறது..??” என்று யோசித்தவன் சட்டென “அவங்க ரெண்டு பேரும் திடீர்னு யார்கிட்டயும் சொல்லாம எங்கேயோ கிளம்பி trip போய்ட்டாங்க அக்கா. இப்பதான் எனக்கு விஷ்வா சார் call பண்ணாரு. அவங்க சீக்கிரம் கிளம்பி வந்துருவாங்களாம். யாரையும் அவங்கள தேட வேண்டாம்னு சொல்ல சொன்னாரு.” என்று சொல்லி சமாளித்தான்.

“இந்த காலத்து பிள்ளைங்க எப்ப என்ன பண்ணுவாங்கன்னே நமக்கு தெரிய மாட்டேங்குது. எப்படியோ ரெண்டு பேரும் பத்திரமா இருந்தா சரி.” என்ற வசந்தி‌ வலுக்கட்டாயமாக அவனை சாப்பிட சொல்லி இழுத்துக்கொண்டு சென்று விட்டாள். “ஐயோ கடவுளே.. அங்க bossம், என் தங்கச்சி மேகாவும் எப்படி இருக்காங்கன்னு தெரியலையே.. இந்த மாதிரி நேரத்துல நான் எப்படி இங்க நிம்மதியா சாப்பிட முடியும்..??” என்று மனதிற்குள் புலம்பிய மகேஷ், வேறு வழியில்லாமல் சாப்பிட சென்றான்.

மேகாவை தன் தோள்களில் சுமந்து கொண்டு கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டருக்கு மேல் அந்த கிராமத்திற்குள் சுற்றித்திரிந்த விஷ்வா, “என்னடி இன்னும் அந்த factoryஏ வரல..??” என்று சோர்ந்த குரலில் கேட்க, அவன் உடல் வியர்வையில் நனைந்து இருப்பதை கவனித்த மேகா, “இன்னைக்கு இது போதும். இதுக்கு மேல இவரை கொடுமை படுத்த வேண்டாம். மனுஷன் ரொம்ப தூரம் நம்மளை கஷ்டப்பட்டு தூக்கிட்டு வந்துட்டாரு.” என்று நினைத்து அவனைவிட்டு கீழே இறங்கியவள், “எனக்கும் அந்த factory எங்க இருக்குன்னு தெரியாது விஷ்வா.” என்று சோகமாக சொன்னாள்.‌ அவளது வாடிய முகத்தை பார்த்து “நம்ம downஆனா இவளும் down ஆகிடுவா.” என்று நினைத்த விஷ்வா, “விடு.. விடு.. எப்படியும் இங்கதானே இருக்கும்.. அதெல்லாம் சீக்கிரம் கண்டுபிடித்துவிடலாம். இது கிராமம் தானே கொஞ்ச தூரம் தேடினா கிடைச்சிடும்.” என்று சொல்லி அவளை motivate செய்து அவள் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு தொடர்ந்து முன்னேறி சென்றான்.

சில நிமிட பயணத்திற்கு பிறகு அவர்கள் முன்னே ஒரு பெரிய factory தெரிந்தது. அதைக் கண்டு மகிழ்ந்த மேகா “வாவ் விஷ்வா..!! Finally அந்த chemical factoryஐ‌ நம்ம கண்டுபிடிச்சிட்டோம்.” என்றவள் அவனை இருக அணைத்துக் கொண்டு அவனுடன் சேர்ந்து சுற்றுகிறனாள். அவளது சந்தோஷத்தை கண்டு தானும் மகிழ்ந்த விஷ்வா “என்னமோ கால் வலிக்குதுன்னு சொன்ன.. அத்தானே நான் உன்ன இவ்ளோ தூரம் தூக்கிட்டு வந்தேன்.‌ இப்ப என்ன அப்படியே சந்தோஷத்துல துள்ளி குதிக்கிற..??” என்று கிண்டலாக கேட்க, “அட ஆமா.‌.. இப்பதான் ஞாபகம் வந்தது. நிஜமாவே எனக்கு கால் ரொம்ப வலிக்குது விஷ்வா. ஆஆஆ‌… அம்மா.. வலிக்குதே..!!” என்ற மேகா தன் கால்களை பிடித்துக் கொண்டு மெல்ல மெல்ல ‌ அந்த factoryஐ நோக்கி நடந்தாள்.

அவள் செல்லும் அழகை சில நொடிகள் பார்த்து ரசித்த விஷ்வா “சரியான drama Queen..!!” என்று நினைத்து சிரித்தவாறு அவளைப் பின் தொடர்ந்து அந்த chemical factoryக்கு சென்றான்.

அது மூடப்பட்டிருந்ததால் தங்களது கடைசி நம்பிக்கையும் கானல் நீராய் போய்விட்டது என்று நினைத்து பயந்த மேகா, “போச்சு.. இந்த factoryஐ மூடிட்டாங்க போல..!! இங்கே யாரும் வரலைன்னா, நம்ம யார்கிட்ட help கேட்க முடியும்? நம்ம எப்படி இங்க இருந்து தப்பிக்க போறோம் விஷ்வா..??” என்று வேகமாக கேட்க, “அட லூசு.. நான் சும்மா சும்மா சொல்லிட்டே இருக்கறதுனால நெஜமாவே நீ உன் brainஐ use பண்ண மாட்டியா..?? நம்ம கிளம்பும்போது மணி 6 தான். இப்போ என்ன ஒரு எட்டு இல்லனா 8:30 இருக்கும். என் phone off ஆயிடுச்சி. So எனக்கு correctஆ இப்ப timeன்னு தெரியல. But I’m damn sure, இன்னும் மணி பத்தாகி இருக்காது. அப்புறம் எப்படி factory open பண்ணி work start பண்ணுவாங்க..?? கொஞ்ச நேரம் இங்கயே wait பண்ணலாம். யாராவது வருவாங்க.” உறுதியாக சொன்னான் விஷ்வா.
நேரம் உருண்டோடியது.

குறுக்கும் நெடுக்குமாக அந்த factoryயின் main gate முன்னே நடந்து கொண்டு இருந்த மேகா, “ச்ச்ச்.. போன கால் வலியே எனக்கு மறுபடியும் வந்துருச்சு. ஆனா இங்க வேலை பாக்குறவங்க ஏன் இன்னும் வரல..?? எனக்கு அப்படியே உன் மேல கோபம் கோபமா எரிச்சலா வருது. இது எல்லாமே உன்னாலதானே.. இன்னைக்கு என் birthday. நீ மட்டும் நடந்ததை என்ன காலைல எழுப்பி ஒழுங்கா சொல்லி இருந்தா, நான் உன்னை ஈசியா மன்னிச்சிருப்பேன்.‌ இன்னைக்கு fullஆ என் birthdayஐ Jollyஆ celebrate பன்னிருக்கலாம். உன்னால எல்லாம் spoil ஆயிடுச்சு. இந்த birthdayஐ என்னால மறக்கவே முடியாது விஷ்வா அந்த அளவுக்கு நீ தரமா பண்ணிட்ட.” என்றுவிட்டு வந்த கோபத்தில் தன் கைகளை இறுக்கமாக மூடி சரமாரியாக அவனை அடித்தாள்.
தனது அலட்சியப் போக்கினால் தான் இது நடந்திருக்கிறது என்பதால் அவளது அடிகள் அத்தனையையும் பாராட்டுகளாக நினைத்து சந்தோஷமாக பெற்றுக்கொண்ட விஷ்வா, “இன்னும் கொஞ்ச நேரம் மட்டும் எனக்காக adjust பண்ணிக்கோ. டைம் ஆயிடுச்சு. கண்டிப்பா யாராவது வருவாங்க. Wait பண்ணு.” என்று மென் குரலில் சொன்னான்.

அதனால் “பாவம்.. சரி போய் தொலையட்டும். இவன் நமக்காகதானே நேத்து எல்லாத்தையும் surprise plan பண்ணான்.. இது இப்படி ஆகும்னு அவனுக்கு மட்டும் தெரியுமா..??” என்று நினைத்த மேகா, அவனை அணைத்துக் கொண்டு “சரி விடு, feel பண்ணாத யாராவது வருவாங்க.” என்றாள்.
அப்போது விஷ்வாவின் கண்களில் எதிரில் வந்த ‌ watchmenம், அங்கே வேலை பார்க்கும் ஒரு சில staffகளும் தென்பட்டார்கள்.

அதனால் மகிழ்ந்தவன், “அங்க பாரு..!!” என்று அவளை திருப்பி அவர்களை காட்டினான். அதனால் மகிழ்ந்த மேகா வேகமாக “அண்ணா.. அண்ணா வந்துட்டீங்களா..??” என்று கத்திக்கொண்டு அவர்களை நோக்கி ஓட,

“எல்லாத்துக்கும் இவளுக்கு அவசரம். வர்றவங்களால ஏதாவது problem வந்தா என்ன பண்ணுவா இவ.‌.??” என்று நினைத்த விஷ்வா ஓட்டமும் நடயுமாக அவளை பின் தொடர்ந்து சென்றான். மேகா விஷ்வாவின் திருமணம் இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட ஒரு விஷயமாக இருந்ததால் அவளை பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொண்ட அந்த நபர்கள், “இது அதே புள்ள தானா..??” என்று நினைத்து முதலில் குழப்பத்துடன் பார்த்துவிட்டு பின், அவளை தொடர்ந்து அங்கே வந்த விஷ்வாவை பார்த்துவிட்டு “ஆமா.. இவங்க ரெண்டு பேரும் அந்த பணக்கார புருஷன் பொண்டாட்டி தான். இவங்க இங்க என்ன பண்றாங்க..??” என்று நினைத்து மேகாவிடம் “நியும் உன் வீட்டுக்காரரும் இங்க என்னம்மா பண்றீங்க..??” என்று கேட்டார்கள்.

“அதுவா.. நேத்து நைட்டு.. தெரியாத்தனமா நாங்க இங்க பிறந்து வந்து மாட்டிக்கிட்டோம் அண்ணா. நாங்க இங்க இருந்து மதுரை போக எங்களுக்கு help பண்றீங்களா..??” என்று மூச்சு வாங்க அவள் கேட்க,

“என்னது பறந்து வந்தீங்களா..??” என்று கேட்ட watchmen “என்ன ஆச்சு இந்த பொண்ணுக்கு..?? பறந்து வந்தேன் அது இதுன்னு சொல்லிட்டு இருக்கா.. ஒருவேளை தலையில அடிப்பட்டு ஏதாவது ஆகியிருக்குமோ..!!” என்று யோசித்தான். அவன் பார்வை போன போக்கை வைத்தே அவனது மனதில் இருப்பதை சரியாக கனித்த விஷ்வா “நாங்க நேத்து parachuteல வந்தோம்.” என்றவன் நடந்த அனைத்தையும் விலாவாரியாக அவர்களிடம் சொல்லி “நீங்க நாங்க எங்க ஊருக்கு போகறதுக்கு help பண்ணீங்கன்னா.. உங்களுக்கு என்ன செய்யணுமோ அதை நான் பார்த்து பண்ணிடறேன்.” என்றான்.

“நீங்க எவ்ளோ பெரிய ஆளு.. நீங்க எங்ககிட்ட உதவி கேட்கும் போது, அத நாங்க எப்படிங்க சார் செய்யாம இருப்போம்..?? நீங்க ஒரு பத்து நிமிஷம் மட்டும் Wait பண்ணுங்க. நாங்க எங்க ஓனருக்கு கால் பண்ணி உங்களுக்கு car arrange பண்ண சொல்றோம்.” என்ற Watchmen அந்த chemical factoryன் ownerக்கு call செய்தான்.

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured