Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 128

மூர்கனின் காதலி CH 128

by Thenaruvi Tamil Novels
64 views

அத்தியாயம் 128

அரண்மனையில் சௌபரணிகாவுடன் ஒரு தனி அறையில் தங்கி இருந்த சேரன் குளித்துவிட்டு ஈர தலையில் துண்டுடன் வந்து கண்ணாடியின் முன்னே நின்று புடவை கட்டிக் கொண்டிருந்தவளை பின்னே இருந்து அணைத்தான். அவனது அந்த செயல் பெண் அவளுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கு பதிலாக பயத்தையே கொடுத்தது.

அதனால் நடுங்கிய உடலுடன் கண்ணாடியில் தெரிந்த அவன் உருவத்தை அவள் வெறிக்க, அவள் வெற்றிடையை தனது இரும்பு கரங்களால் பலம் கொண்டு அழுத்திய சேரன், அவள் தோள்களில் தனது முகத்தை park செய்து கண்ணாடியில் தெரிந்த வலியில் சுருங்கி போய் இருந்த அவளது முகத்தை பார்த்து “என்னடி மூஞ்சி அப்படி போகுது…?? நான் தொட்டாலே உனக்கு அப்படியே எரியுதோ..?? அதான் என் குழந்தை உனக்கு வேண்டாம்னு ஏதோ சதி பண்றியா..??” என்று கேட்டவன், தனது பிடியின் அழுத்தத்தை கூட்டிக்கொண்டே சென்றான்.
அவன் கொடுக்கும் அந்த கடுமையான வலியையும் தாண்டி அவன் கேள்வி அவள் இதயத்தை ஊசி போல குத்தியதால் சட்டென அவன் புறம் திரும்பிய சௌபர்ணிகா, “இப்போ நீ என்ன சொல்ல வர்ற..??” என்று கேட்டுவிட்டு முகம் சுளித்தாள்.

அதைப் பார்த்து கடுப்பான சேரன் அவள் குரல்வலையைப் பிடித்து நெறித்து “என்னடி.. அப்படியே ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்கிறியா..?? இல்ல.. நான் என்ன சொல்ல வர்றேன்னு நிஜமாவே உனக்கு புரியலையா..?? நமக்கு கல்யாணமாகி எத்தனை மாசம் ஆகுது.. நமக்குள்ள நடக்க வேண்டியது எல்லாம் timeக்கு time கரெக்டா தானே நடக்குது.. அப்புறம் ஏன் நீ இன்னும் pregnant ஆகல..??” என்று தன் பற்களை கடித்துக்கொண்டு கொடூரமான facial expressionகளுடன் கேட்க, மூச்சு விடுவதற்கே அரும்பாடு பட்டுக் கொண்டிருந்த சௌபர்ணிகா, “எனக்கு தெரியல. நான் ஏன் இன்னும் pregnant ஆகலைன்னு எனக்கு தெரியல சேரன்.” என்று திக்கி திணறி சொல்ல, இன்னும் சேரன் கொஞ்சம் தன் பலத்தைக் கூட்டி அவள் கழுத்தில் அழுத்தினாலும் செத்து மேலே சென்று விடுவாள் என்ற நிலையில் இருந்தாள் அவள்.

“என்னடி தெரியல உனக்கு…?? உண்மைய சொல்லு.. pregnant ஆக கூடாதுன்னு எனக்கு தெரியாம ஏதாவது வேலை பார்க்கிறியா நீ..?? சொல்லுடி.. நீ ஏதாவது medicines எடுத்துக்கிட்டியா..?? இல்ல எனக்கே தெரியாம நான் சாப்பிடுறதுல ஏதாவது கலந்து கொடுத்து எனக்கு fuse போகிற மாதிரி பண்ணி என்னை பழி வாங்கிட்டியா..?? சொல்லுடி சொல்லு..!!” என்று தனது அடி தொண்டையில் இருந்து கத்தி கேட்ட சேரன் தொடர்ந்து அவள் குரல்வலையைப் பிடித்து நெறிக்க, அவன் கேள்விகளுக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை அவள்.

அவளது கண்கள் மேலே சென்று, மயக்கம் போடும் நிலைக்கு அவள் சென்று விட, “இன்னைக்கு இது போதும். விட்டா இவ செத்துருவா.” என்று நினைத்து அவளை விட்டுவிட்டான் சேரன்.
தன் கழுத்தை பிடித்துக் கொண்டு லொக் லொக் என்று சத்தமாக இரும்பிய சௌபர்ணிகா, “ச்சீ.. மனுஷனா நீ எல்லாம்..?? உன்ன மாதிரி ஒரு கேவலமான ஆள நான் எப்படி லவ் பண்ணினேன்னே தெரியல.. சத்தியமா சொல்றேன் உன்னோட வாரிசு என் மூலமா இந்த பூமிக்கு வர்றதுல எனக்கு கொஞ்சம்க்கூட விருப்பமே இல்லை. ஆனா அதுக்காக என் குழந்தை உருவாகுவதற்கு முன்னாடியே அது நடக்க கூடாதுன்னு அழிக்கிற அளவுக்கு உன்ன மாதிரி நான் ஒன்னும் மோசமானவ இல்லை.

இன்னொரு தடவை நீ இத பத்தி என்கிட்ட பேசினா, நான் மகிழ்ச்சியாவே இருக்க மாட்டேன் பாத்துக்கோ..!!!” என்று கோபமாக சொல்லிவிட்டு தன் மீது அவள் அரைகுறையாக சுற்றி வைத்திருந்த புடவையை கழட்டி எறிந்துவிட்டு கைக்கு கிடைத்த சுடிதாரை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியில் சென்றாள். அவளுக்கு யாரிடமாவது கொஞ்ச நேரம் மனம்விட்டு பேசினால் ஆறுதலாக இருக்கும் என்று தோன்ற, மேகாவின் முகம் தான் அவளுக்கு ஞாபகம் வந்தது. அதனால் அவளை தேடி அவளது வீட்டிற்கு சென்றாள் சௌபர்ணிகா.

அங்கே மேகா இல்லாமல் போகவே அனைவரிடமும் அவளைப் பற்றி விசாரித்தாள். அனைவரும் ஒன்றை போல “தெரியலையேமா… நானும் பொழுது விடிஞ்சதுல இருந்து அவளையும் விஷ்வா தம்பியையும் பார்க்கவே இல்லை.” என்று சொல்ல, “எங்க போயிருப்பாங்க இவங்க ரெண்டு பேரும்..??” என்று யோசித்த சௌபர்ணிகா மகேஷிடம் “இங்க என்னடா நடக்குது..?? விஷ்வாவும் மேகாவும் எங்க..??” என்று கேட்டாள்.

அதற்கு அவன் பதில் சொல்வதற்குள் அவர்களை தேடிக்கொண்டு அங்கே வந்த காளீஸ்வரன் “நேத்து ராத்திரியில இருந்து அவங்க ரெண்டு பேரையும் காணோமாம்.. இவன் உண்மையை சொல்லாம அவங்க எங்கயோ வெளிய போயிருக்காங்கன்னு சொல்லி நாடகம் ஆடிட்டு இருந்திருக்கான். சொல்லு மகேஷ்.. எங்க வீட்டு பொண்ணும் மாப்பிள்ளையும் எங்க..??” என்று கோபமாக கேட்டார்.

அவரது கம்பீரமான குரலை கேட்டுவிட்டு திரும்பி அவரது இறுக்கமான முகத்தை பார்த்தவுடன் பயத்தில் நெடுங்கிய மகேஷ், “அது.. அது வந்து சார்..!!” என்று இழுக்க, “என்ன வந்து போயின்னு இருக்கிற…?? மறுபடியும் என்ன பொய் சொல்லி எங்களை ஏமாத்தலாம்னு யோசிக்கிறியா..?? இது என் ஊருடா. இங்க ஏதாவது நடந்தா எனக்கு தெரியாம போயிடும்னு நினைக்கிறியா..??” என்று கோபமாக கேட்டார் காளீஸ்வரன். அதனால் சோகத்தில் தலை குனிந்த மகேஷ், “sorry sir.” என்றவன், தனக்குத் தெரிந்த அனைத்தையும் அவரிடம் சொன்னான்.

“இதை மட்டும் நீ முன்னாடியே சொல்லிருந்தா.. இந்நேரம் அவங்க ரெண்டு பேரையும் கண்டுபிடிச்சு நான் வீடு கொண்டு வந்து சேர்த்திருப்பேன். பாவம் புள்ளைங்க நேத்து பேஞ்ச மழையில எவ்ளோ கஷ்டப்பட்டுச்சுங்களோ தெரியல.” என்ற காளீஸ்வரன் “டேய் முத்து.. மணிகண்டா.. எங்கடா போய் தொலைஞ்சீங்க எல்லாரும்..?? சீக்கிரம் இங்க வாங்கடா..!!” என்று அழைத்தார்.

காளீஸ்வரன் குரல் கேட்டு அவர்கள் இருவரும் விரைந்து அங்கே வந்து “என்ன அண்ணே.. எதுக்கு கூப்பிட்டீங்க..??” என்று கேட்க, அவர்களிடம் விஷயத்தை சொல்லி “நம்ம ஆளுங்களையெல்லாம் கூட்டிகிட்டு போய் சுற்று வட்டாரத்துல இருக்கிற எல்லா ஊர்லயும் அவங்க ரெண்டு பேரையும் தேடுங்க. நான் போய் commissioner officeல அவங்கள பத்தி ஏதாவது தகவல் கிடைச்சுதான்னு விசாரிச்சுட்டு வரேன்.” என்ற காளீஸ்வரன் தன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு வாசலை நோக்கி சென்றார்.
அப்போது விஷ்வாவும் மேகாவும் ஒரு காரில் வந்து வாசலில் இறங்கினார்கள்.

அவர்களைப் பார்த்தவுடன் மகிழ்ந்த மகேஷ் சந்தோஷத்தில் ஓடி சென்று விஷ்வாவை கட்டிப்பிடித்து “நான் உங்களுக்கு ஏதோ ஆயிடுச்சோன்னு நெனச்சு ரொம்ப பயந்துட்டேன் பாஸ்.” என்று கண்கள் கலங்க சொல்ல, “என்னடா எல்லாரும் விசித்திரமா சந்தோஷமா இருக்கும்போது சிரிக்காம அழுகுறீங்க..?? கேட்டா happy tearsன்னு சொல்லி சமாளிக்கிறது. என் பொண்டாட்டிக்கூட சேர்ந்து என்ன உங்க எல்லாருக்கும் nut கழண்டுருச்சா..??” என்று கேட்டுவிட்டு சிரித்தான் விஷ்வா.

“என்ன ஏதாவது சொல்லலைன்னா உங்களுக்கு பொழுதே போகாதா..?? வாய மூடிட்டு இருங்க.” என்ற மேகா விஷ்வாவின் காலை மிதிக்க, பதட்டமாக அவர்கள் அருகில் சென்ற சௌபர்ணிகா “என்னாச்சு உங்களுக்கு..?? நேத்து நைட் நீங்க ரெண்டு பேரும் எங்க இருந்தீங்க…?? இப்பதான் நீங்க காணாம போனதே எனக்கு தெரியும். இவன் என்கிட்ட கூட எதுவும் சொல்லல.” என்றாள்.

அவள் கண்கள் கலங்கி இருந்ததால் “ஒன்னும் இல்ல அக்கா. நாங்க ரெண்டு பேரும் நேத்து safeஆ தான் இருந்தோம். ஒரு Villageல தெரியாம போய் மாட்டிக்கிட்டோம். அப்புறம் இவங்க தான் எங்களுக்கு help பண்ணாங்க. We are perfectly alright.” என்று மேகா சொல்ல, அவளை சட்டென அணைத்துக் கொண்ட சௌபர்ணிகா “உங்களுக்கு மட்டும் ஏதாவது ஆகி இருந்துச்சுன்னா, சத்தியமா அதையெல்லாம் பார்க்க நான் உயிரோட இருந்திருக்கவே மாட்டேன்.” என்றுவிட்டு கதறி அழுதாள்.

“ப்ளீஸ்.. என் முன்னாடி யாரும் சாகுரத பத்தி பேசாதீங்க.” என்று இறுகிய முகத்துடன் சொன்ன விஷ்வா வீட்டிற்குள் சொல்ல போக, அவன் கையைப் பிடித்து தடுத்த காளீஸ்வரன் “என் தங்கச்சியை நான் உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டேன். அவ இப்ப உங்க பொண்டாட்டி. அவள எங்க வேணாலும் கூட்டிட்டு போக வர உங்களுக்கு உரிமை இருக்கு. ஆனா அவளை இப்படி கொண்டு போய் ஆபத்துல சிக்க வைக்கிற அளவுக்கு நீங்க அஜாக்கிரதையா இருந்திருக்கக் கூடாது. அவளுக்கு மட்டும் ஏதாவது ஆயிருந்தா, இப்படி வாயில உங்ககிட்ட சாந்தமா பேசிட்டு இருந்திருக்க மாட்டேன். என் அருவாதான் உங்க கிட்ட பேசி இருக்கும்.” என்றார்.

அவர் சொல்வதைப்போல நிஜமாகவே தன் மீது தவறு இருக்கிறது என்று நினைத்த விஷ்வா அமைதியாக இருக்க, “அண்ணா அவர் என்ன இப்படி ஆகும்னு தெரிஞ்சு வேணும்னுன்னா செஞ்சாரு..?? ஏதோ எங்க கெட்ட காலம். தெரியாம இப்படி எல்லாம் நடந்துருச்சு. ஆனா நாங்க இப்ப உயிரோட இருக்குறதுக்கும் இவர்தான் காரணம். அந்த நேரத்துல சரியா யோசிச்சு இவர்தான் parachuteஐ கீழ போக வெச்சாரு. அவர மாதிரி என் மேல அன்பு வச்சிருக்கற, என்ன பாதுகாக்கணும்னு நினைக்கிற ஒரு ஆள வேற யாரையும் நம்மளால பாக்க முடியாது அண்ணா.” என்று உடனே மேகா தன் கணவனுக்காக பேசினாள்.

“நேத்துல இருந்து எல்லாமே என்னால தான்னு திட்டிட்டு இருந்தவ.. இப்போ இவ அண்ணன் முன்னாடி என்ன விட்டுக் கொடுக்காம எனக்கு support பண்ணி பேசுறாளே.. பரவால்ல.. நம்ம பொண்டாட்டிக்கு நம்ம மேல நிறைய பாசம் இருக்கு.” என்று நினைத்து சந்தோஷப்பட்ட விஷ்வா, “இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கிறேன்.” என்று காளீஸ்வரனை பார்த்து சொல்லிவிட்டு மேகாவின் கையைப் பிடித்துக் கொண்டு அவளுடன் வீட்டிற்குள் சென்றான்.

தொடரும்.‌..

You may also like

Leave a Comment

About Me

Featured