Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 168

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 168

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 168:  உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே (பார்ட் 1)

நாராயணன் பேலஸில்….

விடியற் காலையிலேயே வருணை எழுப்பிவிட்டு கிளம்பி அவனை கீழே வர சொன்ன செண்பகம், இன்னொரு பக்கம் ரித்திகாவும் கால் செய்து அவளையும் தங்களுடைய வீட்டிற்கு வருமாறு அழைத்தாள். ராமர் இருக்கும் இடத்தில் தான் ஹனுமரும் இருப்பார் என்பது போல, வருணிக்கு முன்னே ஹாலில் தயாராகி வந்து நின்றான் சிவா. 

“என்ன அம்மா நீங்க இப்படி மிட் நைட்ல எல்லாரையும் இங்க வர சொல்லி நிப்பாட்டி வச்சு கொடுமை பண்றீங்க..??? போட்டோ ஷூட் தானே பண்ண போறோம்.. அத எப்ப பண்ணா என்ன..???” என்று அரைத்தூக்கத்தில் எழுந்து குளித்து கிளம்பி அங்கே வந்த விஷ்ணு தன்னுடைய அம்மாவிடம் கேட்டுக் கொண்டு இருந்தான். அவனைப் பார்த்து முறைத்த செண்பகம், “இப்போ உனக்கு எங்க கூட வராத விட அப்படி ஏதாவது முக்கியமான வேலை இருக்கா என்ன..??? வருண் ஏற்கனவே டென்ஷன்ல இருக்கான். நம்ப அங்க போயிட்டு ரிட்டன் வீட்டுக்கு வர வரைக்கும் உன் வாழ சுருட்டி வச்சுக்கிட்டு அடக்கமா இரு. கண்டதைப் பேசி நீ அவனை இதே மாதிரி டென்ஷன் பண்ணிட்டு இருந்தேனா, அவன் சும்மா இருக்க மாட்டான் பாத்துக்கோ.” என்றாள். 🤨 😒

இப்படி இவர்கள் பேசி கொண்டு இருக்கும்போதே, அங்கே ரித்திகாவும், ரேவதியும், வந்து சேர்ந்தனர். அவர்களை வரவேற்ற சென்பகம், “அவ்ளோ தான் அண்ணி வருண் ரெடி ஆயிட்டான் அவன் கீழே வந்துட்டான்னா நம்ம கிளம்பிடலாம்.” என்  ரேவதியிடம் சொன்ன செண்பகம், தாராவையும் சோபியாவையும் பார்த்து, “சோபியா நீ என்கூட வா. தாரா நீ நம்ப அரேஞ்ச் பண்ண எல்லாமே கரெக்டா இருக்கான்னு ஒரு தடவை செக் பண்ணிட்டு, நம்ம கூட அசிஸ்டன்ட்டா வர்றவங்க, மேக்கப், ஆர்டிஸ்ட், போட்டோகிராபர்ஸ், எல்லாரும் கரெக்டா இருக்காங்களான்னு செக் பண்ணி நீ அவங்கள முன்னாடி கூட்டிகிட்டு கிளம்பு.” என்றாள். 

சில நொடிகளுக்கு பின் அங்கு வந்து சேர்ந்த வருண், “அம்மா நானும் சிவாவும் முன்னாடி போறோம். நீங்க மத்தவங்கள கூட்டிக்கிட்டு பின்னாடி வேற கார்ல வாங்க.” என்றவன், வெளியில் செல்ல கிளம்பினான். அவனை தடுத்து நிறுத்திய செண்பகம், “நீ இத்தனை நாள் சிவா கூட  சுத்தினது எல்லாம் போது வருண். இனிமே நீ ரித்திகாவோடு தான் டைம் ஐ ஸ்பென்ட் பண்ணனும். அவளையும் உன் கூட கூட்டிட்டு போ.” என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொன்னாள். 

இப்படியாவது இவர்கள் இருவரும் பேசி பழகட்டும் என்று நினைத்த ரேவதியும், “ஆமா மா. நீ நம்ம மாப்பிள கூடையே போ.” என்று சொல்ல, வருணின் முகத்தையே கேள்வியாக பார்த்துக் கொண்டு இருந்தாள் ரித்திகா. அவளுடைய சங்கடமான முகத்தை வைத்து அவன் தயங்குவதை புரிந்து கொண்ட விஷ்ணு, “நீங்க வாங்க அண்ணி. நம்ம எல்லாரும் ஒன்னா போலாம்.” என்றவன் வருணின் கையை பிடித்துக் கொண்டு, “வாங்க அண்ணா போகலாம்.” என்று உற்சாகமான குரலில் சொன்னவன், வலுக்கட்டாயமாக வருனை இழுத்துக் கொண்டு பார்க்கிங்கிற்கு சென்றான். 

விஷ்ணுவை பார்த்து முறைத்த வருண், அவனிடம் எதுவும் பேசவில்லை. 😒 🤨 வருண் உடன் சென்று கொண்டு இருந்த விஷ்ணு திரும்பி ரித்திகாவை பார்த்தவன், “நீங்களும் வாங்க அண்ணி.” என்று சத்தமாக அவளை அழைக்க, ரித்திகா வேகவேகமாக அவர்களின் பின்னே சென்றாள். ரேவதியும், செண்பகமும், செல்பவர்களை பார்த்து திருப்தியாக புன்னகைத்தனர். அப்போது தூங்கிக் கொண்டு இருந்த சித்தத்தை தூக்கிக்கொண்டு அங்கே வந்த சுகந்தி, “அம்மா சித்தார்த் தம்பி இன்னும் தூங்கிட்டு தான் இருக்காரு. நீங்க இவரையும் கூட்டிட்டு போறீங்களா இல்ல இங்கேயே விட்டுட்டு போறீங்களா..???” என்று கேட்டாள். 

“நாங்க யாரும் இல்லாம அவன் இங்க தனியா இருக்க மாட்டான் சுகந்தி. நீ அவன தூக்கிட்டு வா. நீயும், நானும், சம்பந்தி அம்மாவும், ஒரு கார்ல போவோம்.” என்றவள், ரேவதியை தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்து பார்க்கிங் ஏரியாவில் நின்று கொண்டு இருந்த ஒரு காரில் ஏறினாள். வருண் தன்னுடைய காரை ஐ ஸ்டார்ட் செய்து வழக்கம்போல் டிரைவர் சீட்டில் அமர்ந்தான். அப்போது வேகமாக அவன் அருகே சென்ற விஷ்ணு, “அண்ணா நீங்க நம்ப கம்பெனியோட சேர்மன். ஆனா ஏன் எப்ப பார்த்தாலும் நீங்க செல் டிரைவே பண்ணுறீங்க…??? நீங்க போய் அண்ணி கூட ஜாலியா பின்னாடி உட்கார்ந்துட்டு பேசிகிட்டே வாங்க. என் அண்ணன் அண்ணிக்காக அடியேன் நான் ட்ரைவ் பண்றேன்.” என்று விரிந்த புன்னகையுடன் சொன்னான். 😁 😁 😁

இப்போது தான் முன்னே வருனுடன் அமர வேண்டுமா..?? இல்லை பின்னே சென்று அமர வேண்டுமா..??  என்று தெரியாமல் குழப்பத்துடன் விஷ்ணுவையும், வருணையும், மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தாள் ரித்திகா. 🙄 எரிச்சலுடன் விஷ்ணுவை பார்த்த வருண், “அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல நானே ட்ரைவ் பண்ணிக்கிறேன். நீ போய் அமைதியா உட்காரு.” என்றான். 😒

விஷ்ணு: “இல்ல அண்ணா. நான் கார் டிரைவ் பண்ணியே ரொம்ப நாள் ஆகுது. இப்பலாம் பைக்ல தான் சுத்திட்டு இருக்கேன். சோ இன்னைக்கு நான் தான் ட்ரைைவ் பண்ணுவேன்.” என்று விடாப்பிடியாக சொல்லிவிட்டான். 

வருண்: இதற்கு மேலும் தான் எவ்வளவு சொன்னாலும் இவன் வாய்க்கு வாய் பேசுவானே தவிர தான் சொல்வதை கேட்கப் போவதில்லை என்று நினைத்தவன், “என்னமோ பண்ணி தொலை டா.” என்று கடுப்பான குரலில் சொல்லிவிட்டு எழுந்து பின் சீட்டில் சென்று அமர்ந்து கொண்டான்.

இன்னும் ரித்திகா அந்த காரின் உள்ளே ஏறி இருக்கவில்லை. அதனால் ஜன்னலின் வழியாக அவளைப் பார்த்த விஷ்ணு, “போய் எங்க அண்ணே பக்கத்துல உட்காருங்க அண்ணி.” என்று அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னான். 😁 😁 😁 “இந்த போட்டோ சூட் ஐ நாங்க நல்லா பண்றோமோ.. இல்லையோ.. நீ எங்கள வச்சு நல்லா பண்ண போற டா.” என்று நினைத்த ரித்திகா தயக்கத்துடன், வருணின் அருகே சென்று அமர்ந்தாள். ரித்திகா உள்ளே வந்து அமர்ந்தவுடன், விஷ்ணு கார் ஐ ஸ்டார்ட் செய்து விட்டான். ரித்திகா இதற்கு முன்பு இதுபோன்ற காரில் எல்லாம் பயணம் செய்ததில்லை. அதனால் தன் பக்கம் இருந்த காரின் கதவை சரியாக க்ளோஸ் செய்வது எப்படி என்று அவள் அறிந்து இருக்கவில்லை. 

அதனால் விஷ்ணு அந்த காரை ஸ்டார்ட் செய்தவுடன் அந்த கதவு சரியாக பூட்டப்பட்டு இருக்காததால், லேசாக ஆடிக் கொண்டு இருந்தது. அதை கவனித்த வருண், “டோர் ஐ ப்ராப்பரா கிளோஸ் பண்ணு.” என்றான் ரித்திகாவிடம். அவன் சொன்னதைக் கேட்டு தான் ஆரம்பத்திலே ஏதோ ஒரு தவறு செய்து விட்டதாக நினைத்து பயந்தவள், பதட்டத்தில் அந்த காரை க்ளோஸ் செய்ய முயற்சித்தாள். ஆனால் இப்போதும் அதை அவளால் ஒழுங்காக க்ளோஸ் செய்ய முடியவில்லை. அதைப் பார்த்து கடுப்பான வருண், “உனக்கு ஒரு டோர் ஐ கூட ஒழுங்காக க்ளோஸ் பண்ண தெரியாதா..???” என்று எரிச்சலாக குரலில் கேட்டவன், அவள் அருகே சென்று அந்த டோரை க்ளோஸ் செய்ய முயன்றான். அப்போது அவனுடைய தேகம் அவள் மீது லேசாக உருசிவிட்டுச் செல்ல, பெண் அவள் மின்சாரம் தாக்கியதை போல் உணர்ந்தாள். 🥰

ரியர் வியூ மிரர் வழியாக அவர்களை டிரைவ் செய்த படியே பார்த்த விஷ்ணு, “எதுக்கு அண்ணா இப்படி அண்ணிகிட்ட கோவிச்சுக்கிறீங்க..??? நம்மள மாதிரி டெய்லியும் அவங்க என்ன கார்ல போயிட்டா வந்துட்டு இருக்காங்க..??? சோ அவங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்..??? நீங்க தான் அவங்களுக்கு எல்லாத்தையும்் சொல்லித் தரணும்.” என்றான். அவன் சொன்னதைக் கேட்டு இன்னும் கடுப்பான வருண், “கம்முனு ரோட்ட பாத்து ஓட்டு டா, தேவை இல்லாம பேசாத.” என்றவன், தன்னுடைய லேப்டாப்பை எடுத்து ஆன் செய்து அவனுடைய ஆபீஸ் சம்பந்தமான வேலையை பார்க்க தொடங்கி விட்டான். 

ஒரு பக்கம் விஷ்ணு சின்சியராக கார் ஐ டிரைவ் செய்து கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் வருண் தன்னுடைய லேப்டாப்பில் மூழ்கி இருக்க, இவர்களின் நடுவே மாட்டிக்கொண்ட ரித்திகா, தான் என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாகவே அமர்ந்து இருந்தாள். இப்போது தான் எங்கே தன்னுடைய மொபைல் போனை பயன்படுத்தி அதில் இருந்து வரும் சத்தம் வருனை தொந்தரவு செய்து அதற்கும் அவன் தன்னை திட்டி விடுவானோ என்று நினைத்துது பயந்தவள், தன் அருகே இருக்கும் காரின் விண்டோவையும் எப்படி திறப்பது என்று தெரியாததால்,  சோகமான முகத்துடன் அமைதியாக அமர்ந்து இருந்தாள். 😟

அவளை கவனித்த விஷ்ணு, “என்ன அண்ணி உங்களுக்கு ரொம்ப போர் அடிக்குதா..??” என்று கேட்டான். “ஆமா.” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள் ரித்திகா. வருணின் அருகே அமர்ந்து கொண்டு சத்தமாக பேசுவதற்கு கூட அவளுக்கு பயமாக இருந்தது. அவளுடைய என்ன ஓட்டங்களை சரியாக புரிந்து கொண்ட விஷ்ணு, “இருங்க அண்ணி நான் நல்ல நல்ல பாட்டா போட்டு விடுறேன். இந்த மாதிரி நம்ம ரொம்ப தூரம் டிராவல் பண்ணும் போது சாங்ஸ் கேட்டுட்டே போனா நல்லா இருக்கும்.” என்று சொன்ன விஷ்ணு மியூசிக் பிளேயரை ஆன் செய்தான். 

அந்தப் பிளேயரில்…

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே…

மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே..

முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே…

முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே…

இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே…

ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே… 

என்ற பாடல் லோ வால்யூமில் முதலில் ஓடியது. அதனால் வருண் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. வாகனங்களில் இரைச்சல் சத்தத்தில் அந்த பாடல் விஷ்ணுவிற்கே சரியாக கேட்கவில்லை. அதனால் அதன் வாயுமை சற்று கூட்டினான் விஷ்ணு. இப்போது…

தூரம் குறைந்ததும் பேச தோணுதே…

பேச பேச தான் இன்னும் பிடிக்குதே..

பிடிக்கும் என்றதால் நடிக்க தோணுதே..

நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே..

சிரிப்பு வந்ததும் நெருக்கம் ஆகுதே…

நெருங்கி பார்க்கையில் நேசம் புரியுதே..

நேசங்களால் கைகள் இணைந்ததே..

கை சேர்ந்ததால் கவலை மறந்ததே…

தோள் சாயவும் தொலைந்து போகவும்..

கடைசியாக ஓரிடம் கிடைத்ததே… 👩‍❤️‍👨

என்று ஓடி கொண்டு இருக்க, அவ்வப்போது வருணின் முகத்தை திரும்பி திரும்பி பார்த்த வண்ணம் இருந்தாள் ரித்திகா. 😍 அந்த பாடலின் சத்தத்தால் டிஸ்டர்ப் ஆன வருண், “டேய் ஒன்னு சவுண்ட குறை. இல்லன்னாா, மியூசிக் பிளேயரை ஆஃப் பண்ணு.” என்று விஷ்ணுவை பார்த்து கத்தினான். “அட போங்க அண்ணா. நீங்க தான் இப்ப கூட ஆபீஸ் வர்க்க பாத்துட்டு இருக்கீங்க ஆனா எங்களுக்கு சும்மா வர போரடிக்கும் இல்ல…!!! நான்காவது டிரைவ் பண்றேன். உங்களுக்கு அண்ணிய பார்த்தா பாவமா இல்லையா..?? எவ்ளோ நேரம் தான் இப்படி ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பார்த்துட்டு அவங்க அமைதியாகவே இருப்பாங்க..???” என்று பெரிய மனுஷனைப் போல் வருணை கேள்வி கேட்டான்.

  • நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured