Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 166

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 166

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 166: Pre wedding photoshoot (part 1)

இளநீரை குடித்து முடித்தவுடன், ஷாலினியை தன்னுடைய பைக்கில் ஏற்றி கொண்டு மீண்டும் நாராயணன் பேலஸ் ஐ நோக்கி வந்து கொண்டு இருந்தான் விஷ்ணு. அப்போது அவனுடைய முதுகை தன்னுடைய ஒரு விரலால் சுரண்டிய ஷாலினி, “நான் உன்ன ஒன்னு சொன்னேன். அத நீ கவனிக்கல. அண்ட் உன்கிட்ட ஒன்னு கேட்டேன்.. அதுக்கும் நீ ஆன்சர் பண்ணல.” என்றாள். 

விஷ்ணு: நீ எதை பத்தி பேசுறேன்னு எனக்கு புரியல ஷாலு. நீயே என்னானு கிளியரா சொல்லு.

ஷாலினி: கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் உன்னை மாமான்னு கூப்பிட்டேன் அத  கவனிக்கவே இல்ல. அண்ட் எனக்கு உண்மை தெரிஞ்சதுக்கு அப்புறமும் ஏன் நீ இந்த பைக்லயே வரேன்னு கேட்டேன். அதுக்கு நீ ஆன்சர் பண்ணவே இல்ல. 

விஷ்ணு: “அட ஆமா நீ என்ன மாமான்னு கூப்பிடல..!!! ஏன் திடீர்னு அப்படி கூப்பிட்ட..???” என்று ஆச்சரியமான குரலில் கேட்டான். 😍

ஷாலினி: “அந்த வைஷாலி எப்ப பார்த்தாலும் உன்னை மாமா… மாமான்னு.. கூப்பிடுறத கேட்டாலே.. எனக்கு இரிட்டேட் ஆகுது. அதென்ன அவ மட்டும் உன்னை மாமானு கூப்பிடுறதும்னு தோணும். எனக்கு மட்டும் உன்னை அப்படி எல்லாம் கூப்பிடனும்னு ஆசையா இருக்காதா..??? அதான் அப்படி கூப்பிட்டேன். 

நான் அப்படி கூப்பிட்டா நீ சந்தோஷப்படுவேன் நினைச்சேன். ஆனா நீ அதை கண்டிக்கவே இல்ல போ.” என்று சற்று கடுப்பான குரலில் சொன்னாள். 🙁

விஷ்ணு: “அட கள்ளி… இந்த மாமன் மேல உனக்கு இம்புட்டு பாசமா டி..??” என்று கேட்டுவிட்டு சிரித்தான். 😂 😂 😂

ஷாலினி: “எனக்கு எல்லாம் உன் மேல பாசம் நிறைய தான் இருக்கு. உனக்கு தான் என் மேல அவ்ளோ பாசம் இருக்கான்னு எனக்கு தெரியல.” என்று விளையாட்டாக சிரித்து கொண்டே சொன்னாள். 😂 😂 😂

விஷ்ணு: “அவள் சொன்னதை சீரியஸாக எடுத்துக் கொண்டவன் சைடு மிரரில் தெரிந்த அவளுடைய முகத்தை பார்த்து, “நோ நோ உன்ன விட அதிகமா நான் தான் உன்ன லவ் பண்றேன். இன்னும் நான் ஏன் தெரியுமா என்னோட ஐடென்டிடையே நம்ம ஸ்கூல்ல யார்கிட்டயும் சொல்லாம இருக்கேன்..??? 

நான் மட்டும் சேர்மன் -ன்னு தெரிந்திருச்சுன்னா, இங்க இருக்குற ஸ்டாப் எல்லாரும் என்ன பார்க்கிற பார்வையை மாறிடும். இதுல பாதி பேருக்கு நம்ம ரெண்டு பேரும் லவ் பண்றமான்னு ஆல்ரெடி டவுட் இருக்கு. இதுல நான் யாருன்னு வேற தெரிஞ்சிருச்சுன்னா நீயும் நானும் இப்ப மாதிரி கேசுவலா அந்த ஸ்கூல்ல சுத்திட்டு இருக்க முடியுமா..??? உன்னையும், என்னையும், எல்லாரும் குறு… குறுன்னு பார்க்க மாட்டாங்களா..?? இதுல உன் கிட்ட யாராவது வந்து எதையாவது தேவை இல்லாம சொல்லி வச்சிட்டாங்கன்னா, வேதாளம் முருங்க மரம் ஏறுற மாதிரி… திருப்பி நீ வந்து என்கிட்ட கோச்சுக்கிட்டு சண்டை போடுவ. நமக்கு தேவையா இதெல்லாம்..???

நம்ப ரெண்டு பேருக்கும் முதல்ல கல்யாணம் ஆகட்டும். அதுக்கப்புறம் நீ அந்த ஸ்கூலோட சேர்மன் வைஃப்பா இருக்கும் போது தான் சேர்மன் ஆ என் டூட்டியை பாக்கிறேன். ஆனா எனக்கு அத விட இப்படி டீச்சர் ஆ இருக்கிறது தான் ரொம்பப பிடிச்சிருக்கு. நான் இன்னைக்கு பைக்ல வந்ததுனால தானே நீயும் நானும் இப்படி ஜாலியா பக்கத்துல உக்காந்து பேசிக்கிட்டே பைக்ல போயிட்டு இருக்கோம். என்ன தான் கார்ல போனாலும் இந்த பீல் கிடைக்காது. அதான் நான் டெய்லியும் பைக்லயே வரேன்.” என்று பெரிதாக பீல் செய்து சொன்னான். 😍 ❤️

அவன் சொன்னதைக் கேட்டு உள்ளம் மகிழ்ந்த ஷாலினி, காதலுடன் அவனை கட்டிப்பிடித்துக் கொண்டாள். 🤗 தான் இவ்வளவு நேரம் உருக்கமாக பேசியும் தன்னுடைய அவளிடம் இருந்து ஒரு பதிலும் வராததால் குழம்பிய விஷ்ணு, “என்ன டி ஒரு மனுஷன் இவ்ளோ நேரம் பீல் பண்ணி பேசி இருக்கேன். வாய தொறந்து ஒரு வார்த்தை கூட அதுக்கு பதில் சொல்ல மாட்டியா..???” என்று கேட்டான். 

ஷாலினி: “நான் சொல்ல வேண்டியதை எல்லாத்தையும் சொல்லிட்டேன். உனக்கு தான் ஒன்னும் புரியல. நீ மக்கா இருந்தா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது.” என்று சிரித்து கொண்டே சொன்னாள். 😂 😂 😂

விஷ்ணு: “நீ என்ன சொன்ன..??? எனக்கு கேட்கவே இல்லையே…!!!”  என்று குழப்பத்துடன் கேட்டான். 🙄

தன்னுடைய  அனைப்பின் இறுக்கத்தை இன்னும் கூட்டிய ஷாலினி, “இப்படி தான் சொன்னேன். இப்பவாவது புரியுதா மாமா..???” என்று குறும்பாக கேட்டாள். 

விஷ்ணு: “இப்ப நல்லா புரியுது டி.” என்று சிறு  வெட்கத்துடன் புன்னகைத்துக் கொண்டே சொன்னவன், ஷாலினியை அவளுடைய வீட்டில் விட்டுவிட்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றான். 

நாராயணன் குரூப்ஸ் அலுவலகத்தில்…

வெகு நேரமாக க்ரிஷா, பிராங்கிளின், சிவா, சந்தோஷ் மற்றும் அவர்களுடைய கம்பெனியின் முக்கிய பங்குதாரர்களுடன் முக்கியமான மீட்டிங்கில் இருந்தான் வருண். அதனால் மீட்டிங் ஹாலிற்கு வெளியே வருணை சந்திப்பதற்காக காத்திருந்தான் ஆதித்யா.  மீட்டிங் முடிந்தவுடன் மீட்டிங் ஹாலில் இருந்து தன்னுடைய காபினுக்கு சென்று கொண்டு இருந்த வருணின் பின்னே ஆதித்யாவும் வந்தான். 

தன்னுடைய கேபினுக்கு வந்து அவனுடைய  சீட்டில் அமர்ந்த வருண் ஆதித்யாவை பார்த்து, “ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்க..?? இந்த மேரேஜ் சம்பந்தமா என்கிட்ட ஏதாவது  சொல்லனுமா..??” என்று சலிப்பான குரலில் கேட்டான். 

ஆதித்யா: “செண்பகம் மேம் என் கிட்ட ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் அரேஞ்ச் பண்ண சொல்லி இருக்காங்க சார். அதுக்கான காஸ்ட்யூம்ல இருந்து போட்டோ கிராபிக் டீம் வரைக்கும் எல்லாரையும் ஆல்ரெடி சோபியாவை வச்சு பிக்ஸ் பண்ணிட்டாங்க. சோபியா இப்போ எனக்கு கால் பண்ணி.. லோகேஷன் மட்டும் உங்ககிட்ட கேட்டு பைனல் பண்ணிட்டு சொல்ல சொன்னா. நான் இப்போ என்ன சார் பண்றது… லொகேஷன் பாக்கட்டுமா..??? பிளேஸ் எதுவா இருந்தாலும் வியூ நல்லா இருக்கணும்னு மேடம் ஸ்ட்ரிக்டா சொல்லி இருக்காங்களாம்.” என்று தயக்கமான குரலில் சொன்னான்.

வருண்: “சப்பா முடியல…” என்பது போல தன்னுடைய தலையில் கையை வைத்துக் கொண்டவன், “இருக்கிற பிரச்சினைல இது வேற தேவையா டா…??” என்று எரிச்சலான குரலில் கேட்டான். 

ஆதித்யா: “சார்.. செண்பகம் மேடம் உங்களோட மேரேஜ்ல எந்த சின்ன விஷயத்தையும் விட்டுட கூடாதுன்னு கேர்புல்லா எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்றாங்க. நாளைக்கு போட்டோ ஷூட்டில அவங்களும் உங்க கூட இருப்பாங்கன்னு நினைக்கிறேன். அவங்க பையன் கல்யாணத்தை அவங்க நல்லபடியா நடத்தணும்னு ஆசைபடுறத நம்ம தப்புன்னு சொல்ல முடியாதுல்ல சார்..???” என்று தயங்கி தயங்கி கேட்டான். 

வருண்: “அம்மாவுக்காக.. அம்மாவுக்காகன்னு.. இன்னும் நான் என்ன எல்லாம் பண்ண வேண்டியது இருக்கோ…!!!” என்று சொல்லி சலித்துக் கொண்டவன், “இப்ப இருக்கிற சிச்சுவேஷன்ல ரொம்ப லாங் டிஸ்டன்ஸ்ல இருக்கிற பிளேஸ்க்கு எல்லாம் எங்கேயும் போக முடியாது. சோ ஏற்காட்டில இருக்கிற நம்ப ரெசார்ட்ல போட்டோ சூட்டுக்கு பிளான் பண்ணிடு. சேஃப்டி மெசர்ஸ் எல்லாத்தையும் நீ தான் பாத்துக்கணும் ஆதித்யா. எல்லாரையும் ஃபுல்லா செக் பண்ணதுக்கு அப்புறமா தான் உள்ள விடணும்.” என்று ஆதித்யாவிடம் சொன்னவன் பின் சிவாவை பார்த்து, “எப்படியும் நாளைக்கு ஹோல் டே அம்மா என்ன புடிச்சு வச்சுக்குவாங்க. சோ, நாளைக்கு இருக்கிற எல்லா ப்ளான்சையும் போஸ்ட்பாண் பண்ணிடு. நான் மட்டும் தனியா போனா அம்மாவ சமாளிக்கிறது கஷ்டம். சோ, விஷ்ணுவையும் நாளைக்கு நம்ம கூட வர சொல்லிரு.” என்றான். 

அவன் சொன்னதை கேட்ட ஆதித்யாவும், சிவாவும், அப்படியே செய்வதாக சொல்லிவிட்டு அங்கு இருந்து கிளம்பினர். 

ஒன்பதாவது மாடியில்…..

இங்கே தான் வருண் க்ரிஷாவிற்கும், பிராங்க்ளினிற்கும், தனி தனி ஆக கேபினும் அவர்கள் வேலை செய்வதற்காக அவர்களுடைய டீம் -க்கான வொர்க் ஸ்பேசும் ஒதுக்கி கொடுத்து இருக்கிறான். இதில் சந்தோஷிற்கான கேபினும்   இருந்தது. அங்கே சந்தோஷ் மற்றும் பிராங்க்ளினுடன் வந்தாள் க்ரிஷா. அந்த இடம் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பொருட்களும் ஏற்கனவே வைக்கப்பட்டு தயாராக இருந்தது. 

அவற்றைப் பார்த்து திருப்தியாக புன்னகைத்த க்ரிஷா, தன்னுடைய கேபினுக்கு சென்றாள். அவர்களை பின் தொடர்ந்து 9 த் ப்ளோரிற்குக்கு வந்த சி. இ. ஓ. ஆபீஸின் அட்மின் பிரியங்கா பிராங்கிளினுடன் கடலை வறுக்க தொடங்கி விட்டாள். அதை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டு இருந்தான் சந்தோஷ். 😒 தன்னுடைய கேபினை சுற்றிப் பார்த்த க்ரிஷாவிற்கு அது மிகவும் பிடித்து இருந்தது. இருப்பினும் அங்கே அவளுக்கு ஏதோ ஒரு குறை இருப்பது போலவே தோன்றியது.

அது என்னவாக இருக்கும் என்று சில நொடிகள் யோசித்துப் பார்த்த க்ரிஷாவிற்கு, அங்கே தன்னுடைய இறந்து போன அப்பாவின் புகைப்படம் இல்லை என்ற ஞாபகம் வந்தது. அதனால் தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்த க்ரிஷா , அங்கு இருந்த சந்தோஷை அழைத்து; “நாங்க காலையில வந்த கார் டிக்கில ஒரு பிங்க் கலர் கவர் இருக்கும். அதுல ஒரு போட்டோ இருக்கு. போய் அத பத்திரமா எடுத்துட்டு வா.” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னாள். 

வெளியில் அவளிடம் “ஓகே மேடம்.” என்று சாதாரணமான குரலில் சொன்னவன், உள்ளுக்குள்ளே சிறு எரிச்சலுடன், “என்ன பத்தி இவங்க என்ன நினைச்சுட்டு இருக்காங்க..??? நான் யுனிவர்சிட்டி கோல்டு மெடலிஸ்ட். இவங்களுக்கு என்ன பார்த்தா என்ன ஆபீஸ் பாய் மாதிரியா தெரியுது…??? இந்த மாதிரி வேலை எல்லாம் என்கிட்ட சொல்லிட்டு இருக்காங்க..!!!” என்று தனக்குள்ளே சொல்லி புலம்பியவன், அவளிடம் கார் சாவியை வாங்கிக்கொண்டு பார்க்கிங் ஏரியாவிற்கு சென்று அந்த போட்டோவை மேலே எடுத்து வந்தான். 

க்ரிஷாவின் கேபினில்… 

அங்கு இருந்த சோபாவில் தன்னுடைய காலை கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தாள் க்ரிஷா. “மே ஐ கம் இன் மேம்..??” என்று கேட்ட சந்தோஷ், அங்கே வந்தான். தன்னுடைய மொபைல் போனை பாத்து கொண்டு இருந்தது க்ரிஷா, அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல், “எஸ் கம் இன்.” என்றாள். “இவங்க சரியான ஆட்டிட்யூட் குயினா இருப்பாங்க போல.” என்று தனக்குள் நினைத்த சந்தோஷ், “மேம் நீங்க கேட்ட போட்டோ.” என்று சொல்லி அந்த கவரை அவளிடம் நீட்டினான்.  

இப்போது தான் அவனை நிமிர்ந்து பார்த்த க்ரிஷா, “இந்த போட்டோவ அங்க வால்ல மாட்டணும். போய் ஆபீஸ் பாய் கிட்ட ஆணியையும், சுத்தியலையும், கேட்டு வாங்கிட்டு வா.” என்றவள், அவன் கொண்டு வந்த கவர் ஐ வாங்கி அதில் இருந்த தன்னுடைய கோட் சூட் போட்டு அழகான விரிந்த புன்னகையுடன் தன்னை பார்த்து சிரித்து கொண்டு இருக்கும் தன்னுடைய இறந்து போன அப்பாவின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள். 😍 அந்த போட்டோ யாருடையது என்று அவனுக்கு தெரியவில்லை என்றாலும், அந்த புகைப்படத்தை பார்க்கும்போது, க்ரிஷாவின் கண்களில் ஏற்பட்ட புதிய உணர்ச்சிகளை கண்டு கொண்டான் சந்தோஷ். 

இருப்பினும் தான் இங்கு வந்த முதல் நாளே இது போன்ற வேலை எல்லாம் தான் செய்ய வேண்டுமா..??? என்று நினைத்து கடுப்புடன் அங்கே இருந்து கிளம்பிய சந்தோஷ், “என்னோட குவாலிபிகேஷன் -க்கு தகுந்த வேலை கிடைக்கலைன்னு தான் நான் இத்தன நாளா வி. ஐ. பி. -யா இருந்தேன். ஃபைனலா நான் எக்ஸ்பெக்ட் பண்ண மாதிரி ஒரு ஜாப் கிடைச்சிருச்சுன்னு நெனச்சு சந்தோஷப்பட்டா, அது உனக்கு பொறுக்கலையா கடவுளே…??? எனக்குன்னே 50 கேஜில ஒரு ஆப்பை அந்த பொண்ணு ரூபத்துல ரெடி பண்ணி அனுப்பி  வச்சிருக்கியா..??? ஹிட்லருக்கு தங்கச்சி மாதிரி எப்ப பாத்தாலும் உர்ருண்னே இருக்கா. இன்னும் இவ என்ன எல்லாம் பண்ண காத்திருக்காளோ…!!!” என்று தனக்குள் புலம்பிய படியே அவள் கேட்டபடி ஆணிகளையும் சுத்தியலையும் எடுத்துக்கொண்டு மீண்டும் அவர்களுடைய அறைக்குள் வந்தான். 

நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured