அத்தியாயம் 165
அர்ஜுனின் முகம் கோபத்தில் இறுகி சிவந்து இருந்தது. அதே கோபத்துடன் அவன் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்த தேன்மொழியை திரும்பி பார்த்தான். அவளது முகம் தூங்கும் போது கூட ஏதோ ஒரு சிந்தனையில் ஆழ்ந்து இருப்பதைப் போல இருக்க, அவள் அருகில் சென்று பெட்டில் அமர்ந்த அர்ஜூன் “I am sorry Honey! வைஃப் ப்ரெக்னென்ட்டா இருக்கும்போது ஹஸ்பண்ட் அவங்கள முன்னாடி இருக்கிறத விட ரொம்ப ஹேப்பியா வச்சுக்கணும்னு நினைப்பாங்க. நானும் அப்படித் தான் நினைக்கிறேன்.
பட் நடக்கிறது எல்லாம் அதுக்கு ஆப்போசிட்டாவே நடக்குது. அவ எதுக்கு இப்படி பண்ணான்னு தெரியல. அதை நான் கண்டுபிடிச்சிடுவேன். அவளுக்கு அதுக்கான பனிஷ்மென்ட்டும் கண்டிப்பா கிடைக்கும். பட் அந்த மொமென்ட்ல நீ எவ்ளோ ஹர்ட் ஆகிருப்ப.. அதை நினைச்சு பார்த்தா தான் டி எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.” என்று தூங்கிக் கொண்டு இருந்த தேன்மொழியிடம் தன் மனதிற்குள்ளாகவே பேசியவன் அவளது கூந்தலை மெல்ல வருட தொடங்கினான்.
அவனது கண்கள் ஓரமாக லேசாக கண்ணீர் துளிர்க்க, அதை தன் ஆள்காட்டி விரலால் அவசரமாக துடைத்த அர்ஜுன் “உன்னையும் என்னையும் மறுபடியும் மறுபடியும் கஷ்டப்படுத்தி பாக்கணும்னு நினைக்கிறவன் யாராயிருந்தாலும் பரவால்ல.. அவனை கொன்னு போட்டுட்டு தான் நான் அடுத்த வேலையே பார்ப்பேன்.
நான் உனக்கு இப்ப ப்ராமிஸ் பண்றேன் டி. நமக்கு குழந்தை பிறக்கும்போது, நம்மள சுத்தி எந்த பிரச்சினையும் இருக்காது. இன்னும் எனக்கு அஞ்சு மாசம் டைம் இருக்கு. இந்த அஞ்சு மாசத்துக்குள்ள எனக்கு எதிரா எவனாவது மூச்சு விடனும்னு நினைச்சா கூட, அவன் மூச்சை நான் நிறுத்திடுவேன்.” என்று மானசீகமாக தேன்மொழிக்கு சத்தியம் செய்து கொடுத்துவிட்டு எழுந்து சென்று ரெப்ரெஷ் ஆனான்.
பின் அவன் பிரிட்டோவுக்கு கால் செய்தபடி வெளியில் செல்ல, அதை அட்டென்ட் செய்த பிரிட்டோ “ஹலோ சீஃப் குட் மார்னிங்! இப்ப தான் தூங்கி எந்திரிசீங்களா? டாக்டர் நீங்களா கண்ணு முழிக்கிற வரைக்கும் உங்கள டிஸ்டர்ப் பண்ணவே கூடாதுன்னு ஸ்ட்ரிப்ட்டா சொல்லிட்டு போயிட்டாரு. அதான் நாங்க யாருமே உங்கள டிஸ்டர்ப் பண்ணல.” என்றான்.
அவன் சொல்ல சொல்ல நேற்று டாக்டர் வந்து தனக்கு ட்ரீட்மென்ட் கொடுத்ததை எல்லாம் நினைவுக்குர்ந்த அர்ஜுன் “நேத்து நடந்தது எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சா?” என்று உடைந்த குரலில் கேட்க, “no no chief! அது எப்படி நாங்க தெரியபடுவோம்? நேத்து தேன்மொழி மைக்கேல் கிட்ட நடந்ததை சொல்லி இருக்காங்க. அப்புறம் அவன் தான் எனக்கு கால் பண்ணி கிளாராவை கூட்டிகிட்டு உங்க ரூமுக்கு வர சொன்னான். நம்ம ஆளுங்கள தவிர நடந்தது வேற யாருக்கும் தெரியாது.
நேத்தே அந்த பொண்ணு அனிதாவை ஃபுல்லா விசாரிச்சாச்சு. இதை அவளா பண்ணல சீஃப். அவ சொன்னது எல்லாம் உண்மையான நம்ம சைட்ல வெரிஃபை பண்ணியாச்சு. அவ பொய் சொல்லல. பட் ஸ்டில் எதுக்கும் இருக்கட்டுமேன்னு அந்த பொண்ணையும், அவளோட பொண்ணையும் நம்மளோட கஸ்டடியில வீட்டிலேயே வச்சிருக்கோம்.” என்று நடந்த அனைத்தையும் அவனிடம் விளக்கத் தொடங்கினான் பிரிட்டோ.
“இப்ப அவ எங்க இருக்கா? நான் அவளை பாக்கணும். யார் என்ன சொன்னாலும் இந்த அர்ஜுனுக்கு எதிரா ஒன்னு செய்றதுக்கு முன்னாடி அவ 1000 தடவை யோசிச்சு இருக்கணும். ஏன் உண்மையான நம்மகிட்ட சொல்லி இருந்தா, அவ பொண்ணை நம்ம காப்பாத்தி குடுத்திருக்க மாட்டோமா?
நேத்து மட்டும் ஏடாகூடமா ஏதாவது நடந்திருந்தா என் பொண்டாட்டி மூஞ்சில நான் எப்படி முழிக்கிறது? ரீசன் எருவா இருந்தாலும் அவ பண்ணது தப்பு பிரிட்டோ. ரொம்ப பெரிய தப்பு. எனக்கு அவளை அப்படியே விடுறதுக்கு மனசு வரமாட்டேங்குது.” என்ற அர்ஜூன் அவனிடம் அனிதா எங்கே இருக்கிறாள் என கேட்டு தெரிந்து கொண்டு அங்கே சென்றான்.
அர்ஜுன் அனிதாவின் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல, தன் மகள் ரியாவை கட்டிப் பிடித்துக் கொண்டு அங்கே உறங்கிக் கொண்டு இருந்த அனிதா பயத்தில் பதறி அடித்துக் கொண்டு கதவு திறக்கும் சத்தம் கேட்டு எழுந்து அமர்ந்தாள். ருத்ர மூர்த்தியாக அந்த ரூமிற்குள் அவளை அனல் கத்தும் பார்வை பார்த்தபடி உள்ளே வந்த அர்ஜுனை கண்டவுடன் அவளுக்கு பயத்தில் ஈரக் கொலை எல்லாம் நடுங்கியது.
இருப்பினும் தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. தன் மகளுக்கு எதுவும் ஆகக் கூடாது என்ற எண்ணத்தில் ஒரு தாயாக அவள் தன் மகளை இறுக்கமாக கட்டிப்பிடித்து, “நீங்க என் மேல கோபமா இருக்கிறது நியாயம் தான் சார். அதுக்காக நீங்க என்னை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க. எனக்கு என்ன பத்தி கவலை இல்லை. பட் என் பொண்ண மட்டும் விட்டுருங்க சார். அவ பாவம் சின்ன பொண்ணு அவளுக்கு எதுவும் தெரியாது.” என்று அழுது கதறி அவனை பார்த்து கையெடுத்து கும்பிட்டு அழுதாள்.
ஆருத்ராவிற்கும் ரியாவிற்கும் ஒரே வயது தான் என்பதாலும், அவள் தன் மகளின் ஃபிரண்டாக இருக்கிறாள் என்பதாலும் அந்த சிறிய பெண்ணை இந்த விஷயத்தில் சம்பந்தப்படுத்தி அவளை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்த அர்ஜுன் சர்வண்டுக்கு இன்டர்காம் மூலம் கால் செய்து ரியாவை அழைத்துச் சென்று கிளாராவிடம் விடச் சொன்னான்.
அவர்களும் வந்து அவளை இழுத்துக் கொண்டு போக, அதில் பயந்து துடித்துப்போன ரியா “ஐயோ அங்கிள் ப்ளீஸ் என்ன விட்ருங்க! நீங்க ஆருத்ராவோட டாடி தானே! உங்களுக்கு எங்க மேல என்ன கோபம் அங்கிள்? எதுக்காக இப்படி எங்களை டார்ச்சர் பண்றீங்க? உங்களால மம்மி என்ன விட்டு பிரிஞ்சு போக பார்த்தாங்க. நாங்க ரெண்டு பேருமே நைட்டு ஃபுல்லா புல்லா தூங்கவே இல்ல. மம்மி அழுதுகிட்டே இருந்தாங்க நானும் அவங்கள பார்த்த அழுதுகிட்டே இருந்தேன்.” என்று அர்ஜுனை பார்த்து சொல்ல,
அந்த குழந்தையை பார்த்தவுடன் அவன் கோபம் கொஞ்சம் குறைந்ததால் அவள் அருகில் சென்ற அர்ஜுன் “இங்க பாரு.. உன்ன ஹர்ட் பண்றது என் இன்டென்ஷன் இல்ல. உங்க அம்மா பண்ணவே கூடாதா பெரிய தப்பா பண்ணி இருக்காங்க. உங்க அம்மாவால இந்நேரம் நானும் உங்க தேன் மொழி ஆண்டியும் பிரிஞ்சு போற சுச்சுவேஷன் கூட வந்திருக்கும்.
நல்லவேளை பெருசா எதுவும் தப்பு நடக்குறதுக்குள்ள கடவுள் என்னை காப்பாத்திட்டாரு. இல்லனா உங்க அம்மாவ என் கிட்ட இருந்து யாராலயும் காப்பாத்திருக்க முடியாது. எனக்கும் உங்க அம்மாவுக்கு நடுவுல பேசுறதுக்கு இப்ப நிறைய இருக்கு. அதை நாங்க பார்த்துக்கிறோம்.
பெரியவங்க பிரச்சனைக்குள்ள சின்ன புள்ளைங்கள இண்டர்ஃபியர் பண்றது எனக்கு சுத்தமா விருப்பம் இல்லை. Just stay out of this. உனக்கு இந்த சிட்டுவேஷன்ல என்ன பாக்கும்போது வில்லன் மாதிரி தெரியலாம். பட் உங்க அம்மாவால பாதிக்கப்பட்டது நான் தான்.” என்று அவளுக்கு புரியும்படி சொல்லிவிட்டு தனது ஆட்களிடம் “இவளை இங்க இருந்து கூட்டிட்டு போங்க.” என்று கட்டளையிட்டான்.
உடனே ரியாவை மற்றவர்கள் வெளியில் இழுத்து சென்று விட, செல்லும் தன் மகளை பார்த்து கண்ணீர் சிந்தி கொண்டு இருந்த அனிதா “நீங்க எனக்கு என்ன பனிஷ்மென்ட் வேணாலும் குடுங்க சார். பட் என்னை உயிரோட மட்டும் விட்டுருங்க. என் பொண்ணுக்காக இருக்கிறது நான் மட்டும் தான். நானும் இல்லாம போய்ட்டா அவ ரொம்ப கஷ்டப்படுவா.” என்று அர்ஜுனின் காலில் விழுந்து கெஞ்சினாள்.
அவள் தன் காலை தொடுவது கூட அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் அவளை “ச்சீ.. அந்த பக்கம் போ. மன்னிப்பு கேக்குறதுக்காக என் கால்ல விழுகிற தகுதி கூட உனக்கு இல்ல.” என்று கோபமாக சொன்ன அர்ஜுன் அவளது குரல் வளையை பிடித்து நெறித்து அப்படியே அவளை மேலே எழுப்பினான்.
அவனது எப்படி இறுக்கமாக இருந்ததால் எப்படியாவது இன்று தன் உயிரை அர்ஜுனிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என நினைத்து அவல நிலையில் இருந்த அனிதா அவனிடம் உயிர் பிச்சை கேட்டு போராடிக் கொண்டிருந்தாள். அந்த நேரம் அர்ஜுனை தேடிக் கொண்டு அங்கே வந்த தேன்மொழி அந்த காட்சியை பார்த்து ஷாக்காகி “அர்ஜுன்!” என தனது அடித் தொண்டையில் இருந்து கத்த, அவளது குரலைக் கேட்டவுடன் அனிதாவை விட்டுவிட்ட அர்ஜூன் தேன்மொழியை திரும்பி வலி நிறைந்த கண்களுடன் பார்த்தான்.
அவன் கண்கள் லேசாக கலங்கியது. அதை கவனித்த தேன்மொழி கனத்த இதயத்துடன் அவன் அருகில் சென்று “அவ பண்ணது ரொம்ப பெரிய தப்பு தான். பட் ப்ளீஸ் எனக்காக அவளை விட்ருங்க அர்ஜுன்! அவ நடந்த உண்மை எல்லாத்தையும் மறைக்காம சொல்லிட்டா நான் அவளை எதுவும் பண்ண மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணிருக்கேன். நான் கேட்ட மாதிரி அவளும் எல்லாத்தையும் மறைக்காம சொல்லிட்டா!
அவளை ஏதாவது பண்றதுக்கு பதிலா அவளை இந்த மாதிரி பண்ண வெச்சவங்கள கண்டுபிடிச்சு நீங்க ஒரேடியா கொன்னு கூட போடுங்க. இந்த தடவ நான் உங்கள தடுக்க மாட்டேன்.” என்று உணர்ச்சிவசப்பட்டு சொன்னாள்.
– மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)