அத்தியாயம் 158
தேன்மொழியின் பிரக்னன்சி அலோன்ஸ்மென்ட் பங்க்ஷனில் அவளும் அர்ஜுனும் உட்பட அனைவரும் சித்தார்த் மற்றும் ஆருத்ராவின் வருகைக்காக காத்திருந்தார்கள். சில நிமிடங்கள் கடந்து இருந்தும் அவர்கள் வராததால், தேன்மொழியின் அருகில் சென்ற ஜானகி “அவங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்க வேண்டாம் நீங்க கேக் கட் பண்ணுங்க. அவங்க வரும்போது வரட்டும். கெஸ்ட் எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.” என்றாள்.
“இல்ல அத்தை, அவங்க வராம நான் கேக் கட் மாட்டேன். இந்த செலிப்ரேஷனை குழந்தைக்காக தானே நடக்குது.. என்னோட குழந்தைங்க இல்லாம நான் எப்படி தனியா செலிப்ரேட் பண்ண முடியும்? அவங்க வரலேன்னா கடைசி வரைக்கும் இந்த செலிப்ரேஷன் நடக்காது. ப்ளீஸ்.. நான் இப்படி சொல்றேன்னு நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க.” என்று தேன்மொழி சொல்ல,
“ஓகே வெயிட், நான் போய் அவங்க ரெண்டு பேரையும் கன்வின்ஸ் பண்ணி கூட்டிட்டு வரேன்.” என்ற அர்ஜுன் மேடையை விட்டு கீழே இறங்கவிருக்கும் தருணம் தனது நீண்ட சிவப்பு நிற கவுனை பிடித்துக் கொண்டு அவனை நோக்கி மெல்ல நடந்து வந்தாள் ஆருத்ரா. அவளைப் பார்த்து சந்தோஷப்பட்ட தேன்மொழி அப்போதும் சுற்றிமூற்றி சித்தார்த்தை தான் தேடினாள்.
ஆருத்ராவின் கையை பிடித்து அழைத்து வந்து தங்கள் இருவருக்கும் நடுவில் நிற்க வைத்த அர்ஜுன் “சித்து எங்க பேபி?” என்று கேட்க, “டாடி சித்து அண்ணா இன்னும் கோபமா தான் இருக்கான். எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க கீழ வான்னு நான் கூப்பிட்டேன். சித்து அண்ணா இந்த ஃபங்ஷனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லிட்டான். அவன் வர மாட்டான் டாடி. அவனுக்காக நீங்க வெயிட் பண்ண வேண்டாம். நீங்க ஃபங்ஷனை ஸ்டார்ட் பண்ணுங்க.” என்று வாடிய முகத்துடன் சொன்னாள் ஆருத்ரா.
வந்தவர்களிடம் சித்தார்த்திற்கு உடம்பு சரி இல்லை அதனால் தான் அவன் கீழே வரவில்லை என்று சொல்லி சமாளித்த ஜானகி “அதான் ஆருத்ரா வந்துட்டாளே.. நீங்க மூணு பேரும் சேர்ந்து கேக் கட் பண்ணுங்க.” என்றாள். உடனே அர்ஜுன் ஆருத்ராவை தூக்கிக் கொள்ள, அவள் கையில் கத்தியை கொடுத்த தேன்மொழி அவள் கையைப் பிடித்து தன் முன்னே இருந்த பிரம்மாண்டமான 8 டயர் கேக்கை 🥞 வெட்டினாள்.
முதலில் அவள் கேக் துண்டை எடுத்து ஆருத்ராவிற்கு ஊட்ட, அந்த நிமிடம் தேன்மொழியை தனது உண்மையான அம்மா சியாவாகவே உணர்ந்த ஆருத்ரா கண் கலங்க அவள் கொடுத்த கேக்கை தன் வாயில் வாங்கிக் கொண்டாள். அதன் பிறகு அர்ஜுன் தேன்மொழி இருவரும் மாறி மாறி கேக் ஊட்டிக் கொண்டார்கள். அந்த ஃபங்ஷனுக்கு வந்திருந்த மற்றவர்களுக்கும் கேக், ஸ்நாக்ஸ் என்று அனைத்தும் வழங்கப்பட தொடங்கியது.
நடக்கும் அனைத்தையும் மாடியில் நின்று பார்த்துக் கொண்டு இருந்த சித்தார்த்தின் கண்கள் ஓரமாக வழிந்தது கண்ணீர். என்னவோ இந்த பெரிய உலகில் தான் மட்டும் தனித்து விடப்பட்டதை போல அவனுக்குள் ஒரு உணர்வு ஏற்பட, “ஆருத்ரா அப்ப அந்த ஆண்டியை நெஜமாவே நம்ம மம்மியா பக்க ஆரம்பிச்சுட்டாளா? இப்ப அவங்க மூணு பேரும் பாக்குறதுக்கு ஒரு ஹாப்பி ஃபேமிலி மாதிரி இருக்காங்க. இங்க நான் தான் odd man out மாதிரி இருக்கேன்.
மம்மி போனதுக்கு அப்பறமே என் கிட்ட இருந்த எல்லாமே போன மாதிரி ஆயிடுச்சு. ஏன் மம்மி இப்படி பண்ணீங்க? எதுக்காக என்ன விட்டுட்டு போனீங்க? நம்ம வீட்டுக்குள்ள எதுக்காக இந்த ஆன்ட்டியை வர விட்டீங்க? இவங்க எதுக்காக உங்களை மாதிரி இருக்காங்க? இவங்க பாக்குறதுக்கு உங்கள மாதிரி இருக்குறதனால என்னால இவங்கள வெறுக்கவும் முடியல ஏத்துக்க முடியல. இப்ப நான் என்ன பண்றது?” என்று யோசித்து யாருக்கும் தெரியாமல் கண்ணீர் சிந்திய சித்தார்த் இந்த நிலையில் யாரும் அவனை பார்ப்பதில் அவனுக்கு விருப்பமில்லை என்பதால் அமைதியாக அவனது ரூமிற்கு சென்று விட்டான்.
தேன்மொழி வெகு நேரம் நிற்பது அவளுக்கு நல்லது இல்லை என்பதால் மேடையில் பெரிய டிசைனர் சோஃபா ஒன்றை போடச் சொன்ன ஜானகி அர்ஜுனையும் தேன்மொழியையும் ஜோடியாக அங்கே அமர வைத்தாள். மீண்டும் தன் மகளை அவளது கணவனுடன் சந்தோஷமாக பார்த்ததில் ஆனந்த கண்ணீர் சிந்திய விஜயா தன் மகன் ஆதவனிடம் “இதுக்கு அப்புறம் என்ன ஆனாலும் கடைசி வரைக்கும் என் பொண்ணு மாப்பிள்ளையும் இதே மாதிரி ஒத்துமையா சந்தோஷமா இருப்பாங்கன்னு இப்ப எனக்கு ஒரு வழியா நம்பிக்கை வந்திருச்சு டா ஆதி.
இந்தப் பொண்ணு வீடு வேலையின்னே இருக்காளே.. இவளுக்குன்னு ஒரு குடும்பத்தை அமைத்துக் கொடுத்து இவளை எப்படித் தான் வாழ வைக்கப் போறேனோன்னு நினைத்தேன்.. தானாவே அந்த கடவுள் என் தேனுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துட்டாரு..
அதை கெடுத்துக்காம மாப்பிள கூட சண்டை போடாம இவ நிம்மதியா வாழ்ந்தாலே போதும். ஒரு தகப்பன் ஸ்தானத்தில இருந்து உனக்கும் என் மாப்பிள்ளை நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுப்பாருன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீயும் கல்யாணம் ஆகி இப்படி உன் பொண்டாட்டியோட சந்தோஷமா வாழ்றதை மட்டும் என் கண்குளிர பாத்துட்டேனா, என் கடமை எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு நான் நிம்மதியா உங்க அப்பா போன இடத்துக்கே போயிடுவேன்.” என்று உடைந்த குரலில் சொன்னாள்.
“என்ன மா அதுக்குள்ள இப்படி எல்லாம் பேசுறீங்க? நான் இன்னும் சின்ன பையன் தான். எப்படியும் நான் கல்யாணம் பண்றதுக்கு எல்லாம் இன்னும் பத்து 15 வருஷம் ஆய்டும். மாமா கண்டிப்பா எனக்காக ஏதாவது செய்வாரு, அது எனக்கு தெரியும்.
ஆனா எனக்கு அதுல எல்லாம் விருப்பம் இல்ல. நான் அக்கா மாதிரி எனக்கு என்ன வருதோ அதை செஞ்சு என் சொந்தக் கால்ல நிக்கணும்னு தான் நினைக்கிறேன். நான் நல்ல நிலைமைக்கு, எப்ப ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து காப்பாத்த முடியும்னு தோணுதோ அப்ப தான் நான் கல்யாணத்தைப் பற்றிய யோசிப்பேன்.
அதனால என் கல்யாணம் நடக்கவே இன்னும் ரொம்ப வருஷம் இருக்கு. அப்புறம் எனக்கு குழந்தை பிறக்கணும். அதுக்குள்ள அக்கா குழந்தையை எல்லாம் வளக்கணும். உங்களுக்கு எவ்ளோ வேலை இருக்கு! அதுக்குள்ள நீங்க அப்பா கிட்ட போறத பத்தி எல்லாம் பேசவே கூடாது. ரொம்ப வருஷத்துக்கு நீங்க எங்க கூட இருக்கனும் மா. அப்பா தான் எங்களோட நல்லது கெட்டது எதுலயும் இல்லாம போயிட்டாரு. நீங்களும் ஏன் எங்களை பாதியிலே விட்டுட்டு போகணும்னு நினைக்கிறீங்க?” என்று கலங்கிய கண்களுடன் ஆதி கேட்க, “சரி டா சரி டா நல்ல நாள் அதுவும் அழுவாத . என் புள்ளைங்கள தவிக்க விட்டுட்டு உங்க அப்பா போன மாதிரி எல்லாம் அவ்வளவு சீக்கிரம் நான் போயிட மாட்டேன்.” என்று சொல்லி அவனை சமாதானப் படுத்தினாள் விஜயா.
சில நிமிடங்களுக்கு பிறகு வந்திருந்த முக்கியமான கெஸ்டுகளை எல்லாம் டைனிங் ஏரியாவிற்கு அனுப்பிவிட்டு தனது நெருங்கிய நண்பர்கள் அனைவருடனும் தங்களுக்கான பிரைவேட் டைனிங் ரூமில் அர்ஜுனுடன் அமர்ந்து இருந்த தேன்மொழி “உங்களுக்கு என் ஃபிரண்டு உதயாவையும், அனிதாவையும் மட்டும் தானே தெரியும்.. இன்னைக்கு மத்தவங்க எல்லாரையும் நான் உங்களுக்கு இன்டெர்வியூஸ் பண்ணி வைக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு ஒவ்வொருத்தராக அர்ஜுனிற்க்கு அறிமுகப் படுத்தினாள்.
ஒரு ஓரமாக நின்று அனைத்தையும் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்த மைக்கில் “இவனுக்கு இவன் ஃபிரெண்ட்ஸ் கிட்டையே friendly-ஆ jovialஆ பேச தெரியாது. எப்ப பாத்தாலும் மூஞ்சிய உர்ருன்னு வச்சிட்டு இருப்பான். இதுல உங்க ஃபிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் இவன் நல்லா பேசுவான்னு நினைச்சு அவங்களை இவனுக்கு இவ்ளோ ஆசையா இன்ட்ரோ பண்ணி வைக்கிறீங்களே சிஸ்டர்.. எனக்கு உங்கள பாத்தா பாவமா இருக்கு.. இன்னுமா உங்களுக்கு இவன பத்தி தெரியல?” என்று நினைத்துக் கொண்டான்.
அவனது எண்ணம் சரி தான் என்று உறுதிப் படுத்துவதைப் போல அர்ஜுனும் ரோபோ போல தேன்மொழி ஒவ்வொருவரையாக காட்டி அவர்களைப் பற்றி சொல்லும் போதும் சரி சரி என்று வெறுமனே தலையைப் மட்டும் ஆட்டி கேட்டுக் கொண்டு இருந்தான்.
சில நிமிடங்களுக்கு பிறகு அவர்களிலும் ஒரு சிலர் சாப்பிட்டு முடித்து அங்கிருந்து கிளம்பினார்கள். இப்போது அங்கே தேன்மொழிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மட்டுமே இருந்தார்கள். சாப்பாடு என்றாலே வாயை பிளக்கும் தேன்மொழி தனது நண்பர்களை கண்ட சந்தோஷத்தில் அவர்களுடன் சேர்ந்து விதவிதமான உணவுகளை உண்டு மகிழ்ந்தாள்.
மற்றவர்களிடம் பேச பிடிக்கவில்லை என்றாலும் தேன்மொழி சந்தோஷமாக இருப்பதைக் கண்டு தானும் சந்தோஷமாக உணர்ந்த அர்ஜுன் பல நாட்களுக்கு பிறகு நிம்மதியாக அன்று தான் சாப்பிட்டான். பார்ட்டி முடிய கிட்டதட்ட 11 1/2 மணிக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் அனிதாவையும் உதயாவையும் கெஸ்ட் ரோமில் தேன்மொழி தங்கச் சொல்லிவிட, “இன்னைக்கு நடந்தது எல்லாத்தையும் மீடியா காரணங்கள் விதவிதமா வீடியோ போட்டான்னு எடுத்துட்டு போய்ட்டாங்க. ஊர் கண்ணு மொத்தமும் என் பொண்ணு மேல தான் இருக்க சம்மந்தி. முதல்ல இவளுக்கு சுத்தி போடணும்.” என்ற விஜயா ஜானகியுடன் தேன் மொழியை தனியாக அழைத்துக் கொண்டு கார்டன் ஏரியாவுக்கு சென்றாள்.
ஹாஸ்பிடலில் இருந்து இன்று ஈவினிங் தான் டிஸ்டார்ஜ் ஆகி வந்திருந்ததால் சோர்வாக இருந்த அர்ஜூன் தனது ரூமிற்கு சென்றான். ரெப்ரஷ் ஆகலாம் என நினைத்து அவன் தனது ஆடையை கழட்ட, திடீரென்று அவனுக்கு ஏதோ போல் இருந்தது. அவனது உடல் திடீரென்று சூடாவதை உணர்ந்த அர்ஜூன் “இப்ப திடீர்னு ஏன் நமக்கு டெம்ப்ட் ஆகுது? ஹனி பேபி கூட இப்ப இங்க இல்லையே! அப்புறம் என்ன?” என்று யோசித்து குழம்பினான்.
அவனுக்கு தான் என்னவோ அதீத போதையில் இருப்பதைப் போலவும், அந்த போதை ஏற ஏற அவனது உடல் விரக தாக்கத்தில் தவித்து ஒரு பெண்ணின் அருகாமைக்காக இயங்குவதை போலவும் இருந்தது. ஏதோ ஒன்று சரியாக இல்லை என்று நினைத்த அர்ஜுன் “முதல்ல பிரிட்டோ இல்லனா மைக்லுக்கு கால் பண்ணி இங்க வர சொல்லணும்.” என்று நினைத்து தனது மொபைல் ஃபோனை தேட தொடங்கினான். அந்நேரம் அவன் இருந்த ரூம் திடீரென்று இருட்டானது.
மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)