அத்தியாயம் 154
காலை தேன்மொழியை அவள் தங்கி இருந்த ரூமிற்கு சென்று பார்த்த அர்ஜுன் அவளுடன் ஆருத்ரா உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து மகிழ்ந்தான். “அவளை என்ன சொல்லிக்கிட்டினாளும் இவளுக்கும் சரி, சித்தார்த்துக்கும் சரி, தேன்மொழி மேல பாசம் இருக்கத் தான் செய்யுது. இவங்களால சியா இறந்ததை ஏத்துக்க முடியல. அதனாலையே தேனை என்னமோ விள்ளி மாதிரி பாக்குறாங்க.
ஆருத்ரா கூட நம்ம ஏதாவது சொன்னா புரிஞ்சுக்குவா. ஆனா இந்த சித்தார்த்தை தான் என்ன பண்றதுன்னு தெரியல. எல்லாம் தானா சரியாகட்டும்னு வெயிட் பண்றத தவிர வேற வழியில்லை.” என்று நினைத்தவன் நேராக ஜானகி தங்கி இருந்த ரூமிற்கு சென்றான்.
ஜானகியை எழுப்பி “நீங்க எல்லாரையும் கூட்டிகிட்டு வீட்டுக்கு கிளம்புங்க மாம். நானும் ஈவினிங் வரைக்கும் ஹாஸ்பிடல்ல இருந்துட்டு டாக்டர் சொன்னவுடனே கிளம்பி வந்துடறேன்.” என்று அர்ஜுன் சொல்ல, “அந்த கன்ஸ்ட்ரக்ஷன் சைட் இஷ்யூ என்ன ஆச்சு அர்ஜுன்?” என்று வருத்தத்துடன் கேட்டாள் ஜானகி.
“அது இன்னைக்குள்ள முடிஞ்சிடும் மாம். இனிமே இதைப் பத்தி யாரும் யோசிச்சு ஃபீல் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. வேணும்னே வீம்புக்கு என் பொண்டாட்டி மறுபடியும் அவங்க அம்மா வீட்டுக்கு போறேன்னு சொன்னாலும் சொல்லவா.
நீங்க தான் அவளை எப்படி ஆச்சு கன்வின்ஸ் பண்ணி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகணும். பாத்தீங்களா நேத்து ஆருத்ரா தேன்மொழி கூட தூங்கிருக்கா. முன்னாடி இருந்த மாதிரி எல்லாரும் ஒரே வீட்ல இருந்தா தான் குழந்தைகளுக்கும் அவளுக்கும் நடுவுல இருக்குற கேப் குறையும்.” என்று அர்ஜுன் சொல்ல,
“ம்ம்.. ஆமா அர்ஜுன் நானும் கவனிச்சேன். முன்னாடியில இருந்தே ஆருத்ராவும் தேன்மொழியும் ரொம்ப க்ளோஸா தானே பழகிட்டு இருந்தாங்க.. ஒருவேளை தேனு சியா மாதிரி இல்லைனா கூட ஆருதிராவுக்கு அவளை கண்டிப்பா புடிச்சி போயிருக்கும்.
அவ அவங்க அம்மாவ ரொம்ப மிஸ் பண்றா. இப்போ அந்த இடத்துல இருக்கிற தேன்மொழியே எப்படி அவங்களால வெறுக்க முடியும்? குழந்தைகளோட கோபம் எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான். எல்லாம் சரியாயிடும், நான் பாத்துக்குறேன். நான் ஆகாஷை இங்கே வந்து உன் கூட ஹாஸ்பிடல்ல இருக்க சொல்லி இருக்கேன். அவன் வந்ததும் நான் மத்தவங்கள கூட்டிகிட்டு கிளம்புறேன்.” என்றாள் ஜானகி.
தூங்கிக் கொண்டு இருந்த ஆருத்ரா திடீரென்று எழுந்து கொள்ள, அவளது அசைவால் தானும் கண் விழித்த தேன்மொழி எதிரில் இருந்த கடிகாரத்தில் நேரத்தை பார்த்துவிட்டு “டைம் 7 தான் ஆகுது. தூக்கம் வந்தா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு பரவால்ல.” என்று சொல்ல, “இல்ல எனக்கு தூக்கம் போயிடுச்சு. நான் போறேன். சித்தார்த் அண்ணா என்ன பண்றான்னு பார்க்கிறேன்.” என்ற ஆருத்ரா அவசரமாக பெட்டில் இருந்து கீழே இறங்கினாள்.
“ஒரு நிமிஷம்!” என்றுவிட்டு அவள் கையைப் பிடித்த தேன்மொழி “நீ என்ன இனிமே மம்மின்னு கூப்பிட மாட்டியா ருத்ரா?” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு ஏக்கத்துடன் கேட்டாள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, தன் தலையை கீழே குனிந்து கொண்ட ஆருத்ரா “எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. I really miss my mom so much. அவங்க உயிரோட இல்லைன்னு என்னால நினைச்சு கூட பாக்க முடியல. அவங்க இறந்து போகும்போது அவங்களுக்கு ரொம்ப வலிச்சிருக்கும்ல!” என்று அழுதபடி உடைந்த குரலில் கேட்டுவிட்டு நிமிர்ந்து அவளை உடைந்த இதயத்துடன் பார்த்தாள்.
உடனே தானும் கண் கலங்கிய தேன்மொழி அவளை இழுத்து அணைத்துக் கொண்டு, சியா எப்படி இருந்தாள் என்று அவளுக்கு தெரிந்தாலும் அதைப்பற்றி ஆருத்ராவிடம் விளக்கமாக அவளால் சொல்ல முடியாது என்பதால் “உங்க மம்மி எங்கயாவது இருந்து கண்டிப்பா உங்கள பாத்துகிட்டு தான் இருப்பாங்க. அவங்களுக்கு ருத்ரா பாப்பா இப்படி அழுதுட்டு இருக்கிறது பிடிக்குமா என்ன?
உங்கள பாத்து அவங்களும் ஃபீல் பண்ணுவாங்க தானே! அதான் நீங்க எல்லாரும் எப்பவும் ஹாப்பியா இருக்கணும்னு உங்க பாட்டி என்னை உங்க டாடிக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க.
இந்த மேரேஜ் நடக்கும்போது உங்க டாடி யாருன்னு கூட எனக்கு தெரியாது. என்ன நடக்குதுன்னு நான் புரிஞ்சிக்கிறதுக்குள்ள எல்லாமே நடந்து முடிஞ்சிருச்சு ஆருத்ரா. உங்களுக்கு என்னை அம்மாவா பார்க்கிறது எப்படி புதுசா இருக்கோ, அதே மாதிரி தான் ஃபர்ஸ்ட் டைம் நீ என்ன மம்மின்னு கூப்பிடும்போது எனக்கு இருந்துச்சு.
பட் நான் இத்தனை நாளா உங்க கூட சேர்ந்து வாழ்ந்ததுல நீங்க தான் என் ஃபேமிலின்னு நான் நினைக்க ஆரம்பிச்சிட்டேன். இப்ப எனக்குன்னு ஒரு குழந்தை பிறக்கப்போகுது. ஆனாலும் அதுக்கு முன்னாடியே உன்னையும், சித்தார்த்தையும் நான் என் குழந்தைகள தான் பார்த்தேன். நீங்க தான் என் first and second babies-ன்னு மனசார நெனச்சேன்.
திடீர்னு எல்லாமே இப்படி மாறி போகும்ன்னு நான் எதிர்பார்க்கல. நீங்க என்ன யாரோ மாதிரி பார்க்கிறது எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா? உங்க மம்மியா இருக்கிறதுக்கு உங்க அப்பாவை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது மட்டும் பத்தாதுன்னு எனக்கு புரிஞ்சிடுச்சு.
With all of my heart, I truly love you guys. உங்க மேல எனக்கு இருக்கிற பாசம் பொய் இல்ல. அதை என்ன பண்ணி உங்களுக்கு ப்ரூவ் பண்றதுன்னு எனக்கு தெரியல. Please don’t avoid me.” என்று சொல்லிவிட்டு குழந்தை போல கதறி அழுதாள்.
ஆருத்ராவும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவளை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருக்க, அவர்களை அழைப்பதற்காக சித்தார்த்துடன் அங்கே வந்த ஜானகி அவர்கள் பேசியதை கேட்டுவிட்டு கண் கலங்கினாள்.
தனது கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்த சித்தார்த் “நான் கார்ல போய் வெயிட் பண்றேன் பாட்டி. நீங்க வாங்க.” என்று உடைந்த குரலில் சொல்லிவிட்டு சென்றான்.
தன் கண்ணீரை துடைத்துவிட்டு உள்ளே சென்ற ஜானகி தேன்மொழியை பார்த்து “என்ன தேன்மொழி.. நம்ம வீட்டுக்கு போலாமா? அர்ஜுன் ஈவினிங் வரேன்னு சொன்னான்.” என்று சொல்ல, ஆருத்ராவை விட்டு பிரிந்த தேன்மொழி தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு “ம்ம்ம்.. போலாம் அத்தை. ஒரு 10 மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க. நான் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்.” என்று விட்டு எழுந்து சென்றாள்.
அலாரம் அடித்ததால் தூங்கி எழுந்த மைக்கேல் ரெப்ரெஷ் ஆகிவிட்டு வந்து தனது ரூமில் உள்ள மினி சோஃபாவில் அமர்ந்தான். நேற்று மீண்டும் மீண்டும் விழுந்து வாறியதில் இன்னும் அவனுக்கு இடுப்பு வலி தீரவில்லை. அதனால் ஒரு பக்கமாக சாய்ந்து தன் இடுப்பை பிடித்துக் கொண்டிருந்த மைக்கேல் “நல்ல physiotherapist-ஆ பாத்து full body massage பண்ணா தான் இந்த பெயின் போகும் போல..!!” என்று புலம்பியவன் தயாராகி லிஃப்ட் மூலமாக கீழே சென்றான்.
லிண்டா ஜனனியின் ஒரு குழந்தையை கையில் வைத்து கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்க, தனது மற்றொரு குழந்தையை கையில் வைத்தபடி சந்தோஷுடன் நடந்து சென்று கொண்டிருந்த ஜனனி “இன்னைக்கு என்ன நாள்ன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று ஆர்வமனை முகத்துடன் அவனிடம் கேட்டாள்.
“இன்னைக்கா? இன்னைக்கு ஃப்ரைடே.. வேற என்ன?” என்று சந்தோஷ் ஆர்வம் இல்லாமல் அவளிடம் கேட்க, “வேற என்னவா? என்ன சந்தோஷம் இப்படி இருக்க.. நமக்கு மேரேஜ் ஆன உடனே நீ டோட்டலா மாறிட்ட. எனக்கு இந்த சந்தோஷை சுத்தமா பிடிக்கல போ.” என்ற ஜனனி தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அப்போதும் அவளை பெரிதாக கண்டு கொள்ளாமல் வெளியில் செல்வதிலேயே குறியாக இருந்த சந்தோஷ் “சப்பா மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா? இன்னைக்கு இதை ரீசனா வச்சு என் கூட சண்டை போட்டுட்டு இருக்க போறியா? இப்ப இருக்குற சுச்சுவேஷன்ல இன்னைக்கு என்ன டேன்னு டிஸ்கஸ் பண்றது தான் உனக்கு ரொம்ப முக்கியமா ஜனனி? அவன் அவன் ஆயிரம் மெண்டல் பிரஷர்ல இருக்கான். உனக்கு அதைப்பத்தி எல்லாம் கவலை இல்லை.
எப்பயும் நீ உன்ன பத்தியே யோசித்து இருப்ப.. நானும் அதே மாதிரி உன்ன பாத்தியே யோசிச்சிட்டு இருந்தா ஆபீஸ் வர்க்கை எல்லாம் யார் பார்க்கிறது? சும்மா எதாவது கேட்டு என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்காத. எனக்கு ஆல்ரெடி லேட் ஆகுது நான் கிளம்புறேன். நான் வெளியவே சாப்பிட்டுக்குறேன் பாய்.” என்று அவளிடம் எரிந்து விழுந்து விட்டு வேகா எட்டுக்கள் வைத்து மெயின் கேட்டை நோக்கி சென்றான்.
அவன் பேசியதில் மனம் உடைந்த ஜனனி கண்களில் கண்ணீருடன் திரும்ப, “நமக்கு தெரிஞ்ச சந்தோஷா இது? ஜனனி சொன்ன மாதிரி அவ பின்னாடி சுத்தி அவள லவ் பண்ணிட்டு இருக்கும் போது இவன் புள்ள பூச்சி மாதிரி இருந்தான். இப்ப என்ன ஆளே டோட்டலா மாறி போயிருக்கான்! ஏதோ சரி இல்லையே!” என்று யோசித்தபடி லிஃப்டில் இருந்து இறங்கி வந்திருந்த மைக்கேல் நடந்ததை பார்த்தபடி அப்படியே நின்று கொண்டிருந்தான்.
மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)