Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 147

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 147

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 147

அர்ஜுன் ஒரு பக்கம் தனது குடும்பத்தின் பாதுகாப்பை அதிகப்படுத்துவதற்காகவும், தன்னை சுற்றி நடக்கும் மர்மங்களை கண்டுபிடிப்பதற்காகவும் தனது பழைய டீமை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் இறங்கிய அதேசமயம் தனது குழந்தைகளை கூட்டிக் கொண்டு பிரிட்டோ உடன் கிளம்பி இந்தியா வருகிறான்.

அவனுக்கு இந்த குழப்பங்களுக்கு நடுவில் தானும், தனது வயிற்றில் வளரும் குழந்தையும் முக்கியம் இல்லை என்று நினைத்த தேன்மொழி விஜயாவிடம் சொல்லி அர்ஜுனின் வீட்டில் இருந்து கிளம்ப முடிவெடுக்கிறாள்.‌ ஆதவனும் வீட்டிற்கு வந்து தன் அக்காவின் பேச்சைக் கேட்டு அவனது பொருட்களை பேக் செய்து எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான்.

“எனக்கு அர்ஜுன் கூட மேரேஜ் ஆனதுல இருந்து எங்க லைஃப்ல நிறைய நடந்துருச்சு. ஆனா எது எப்படி இருந்தாலும், என்னோட அத்தையும் மாமாவும் எப்பயும் எனக்கு சப்போர்ட் பண்ணி இருக்காங்க. நம்ம அவங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம கிளம்புனா நல்லா இருக்காது.” என்று நினைத்த தேன்மொழி சென்று ஜானகியிடம் விஷயத்தை சொன்னாள்.

அதைக் கேட்டு ஷாக்கான ஜானகி “என்ன மா பேசுற? ஏற்கனவே நீ அர்ஜுன் கிட்ட சண்டை போட்டுட்டு கோச்சிக்கிட்டு தான் ரஷ்யாவுல இருந்து கிளம்பி இந்தியாவுக்கு வந்த. சரின்னு உனக்காக உன் பின்னாடியே நாங்க எல்லாருமே கிளம்பி இங்க வந்துட்டோம்.

என்ன தான் இங்க நமக்கு பிசினஸ் ஒர்க் நிறைய இருந்தாலும், முக்கியமா நாங்க எல்லாரும் உனக்காக தானே இங்க வந்தோம்! அப்படி இருக்கும்போது நீ இந்த வீட்டை விட்டுட்டு உங்க அம்மா வீட்டுக்கு போறேன்னு சொன்னா எப்படி? இப்ப கொஞ்சம் சுச்சுவேஷன் சரியில்ல தான்.

அதுக்காக உடனே இங்கே இருந்து போகணும்னு நீ முடிவு எடுக்கலாமா? எதுவா இருந்தாலும் நீ இங்க இருந்து தானே சமாளிக்கணும்.. அர்ஜுன் எல்லாரையும் கூட்டிக் கொண்டு கிளம்பி இந்தியா வந்துட்டு இருக்கான்னு இப்ப தான் கிளாரா வந்து சொல்லிட்டு போனா. அவன் இங்க குழந்தைகளை கூட்டிட்டு வர்ற சமயத்துல நீ ஏன் இங்கிருந்து போகணும்னு நினைக்கிற தேன்மொழி? என்னால உன்ன புரிஞ்சுக்கவே முடியல.” என்றாள் சோகமாக.

“என்னாலையும் தான் அத்தை யாரையும் புரிஞ்சிக்க முடியல. என்னையும் அவர்களுக்கு புரிய வைக்க எனக்கு தெரியல. இப்படியே போயிட்டு இருந்துச்சுன்னா இங்க இருந்து எனக்கு பைத்தியம் பிடிச்சுருமோன்னு எனக்கு பயமா இருக்கு. நீங்க சொன்னது எல்லாமே கரெக்டு தான்.

எனக்காக நீங்க எல்லாரும் நிறைய பண்ணி இருக்கீங்க.  அது எதையுமே நான் மறக்கல. அதனால தான் கடைசியா இப்ப உங்க கிட்ட இத கேக்குறேன்.‌ தயவு செஞ்சு என்னை போக வேண்டாம்னு தடுக்காதீங்க அத்தை. எனக்கு இங்கு இருந்தாலே நடந்தது எல்லாம் திரும்பத் திரும்ப ஞாபகம் வருது..

அதான் இங்க இருக்குறதுக்கு பதிலா நான் பிறந்து வந்த வீட்டுக்கு போனா மனசு கொஞ்சம் லேசாக வாய்ப்பிருக்குன்னு தோணுது. அர்ஜுன் என் மேல பாசமா தான் இருக்காரு. அதுல எந்த டவுட்டும் இல்ல. ஆனா என்ன.. அவர் எந்த இடத்தில என் பக்கம் இருக்கணுமோ, எனக்காக யோசிக்கணுமோ அப்ப மட்டும் கரெக்டா தப்பா ஏதாவது பண்ணி என்னை கஷ்டப்படுத்திக்கிட்டே இருக்காரு.

இதை அவர் தெரிஞ்சு பண்றாரா இல்ல தெரியாம பண்றாரான்னே எனக்கு தெரியல. நான் பாசமா வளத்த குழந்தைகளும் என்னை புரிஞ்சுக்கல. என்னை தாலி கட்டி இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தவரும் என்ன புரிஞ்சுக்கல. அப்புறம் எதுக்காக நான் இங்க இருக்கணும்னு தோணுது. அவங்களுக்கு என் பாசம் எப்ப புரியுதோ, அப்ப முன்னாடி மாதிரி அவங்களே என்னை தேடி வரட்டும்.

அதுவரைக்கும் நானா திரும்ப வர மாட்டேன். அட்லீஸ்ட் என் வயித்துல வளர்ற இந்த குழந்தையையாவது நான் பத்திரமா பாத்துக்கணும்னு நினைக்கிறேன். அர்ஜுன் மாதிரி என்னால இந்த குழந்தை எப்படியோ போகட்டும்னு இருக்க முடியாது.” என அழுது கொண்டே சொன்னாள் தேன்மொழி.

“என்ன இவ எல்லாத்துக்கும் ரொம்ப எமோஷனல் ஆகுறா.. பாக்குறதுக்கு மட்டும் தான் இவ சியா மாதிரி இருக்கா. ஆனா அவ கிட்ட இருக்கிற boldness இவ கிட்ட இல்ல. நம்ம தேன்மொழி ரொம்ப அப்பாவி. அதேசமயம் எமோஷனலி வீக்கா இருக்கா. மறுபடியும் அர்ஜுன், சித்தார்த் எல்லாரும் கிளம்பி வந்து இங்க இருந்து அவளை ஹர்ட் பண்ற மாதிரி ஏதாவது பண்ணாங்கன்னா இவளால அதை தாங்க முடியாது.

அதான் ஆதவனும் சமந்தி அம்மாவும் இவ கூட போறாங்களே.. அவங்க இவளை எப்படியும் நல்லா பாத்துக்குவாங்க. நம்மளும் அப்பப்ப போய் பாத்துக்கலாம். இந்த டைம்ல தேன்மொழி ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகக் கூடாது அதான் முக்கியம்.” என்று நினைத்த ஜானகி “சரி மா, உன் முடிவு இது தான்னா நான் உன்னை தடுக்கல. ஆனா நீ அங்க தனியா போக வேண்டாம். உன் கூட கிளாரா வரட்டும். அந்த வீட்ல போட்டது எல்லாம் போட்டபடி அப்படியே கிடைக்கும் இல்ல.. உங்களுக்கு ஹெல்ப் பண்ண நான் சர்வன்ஸ் அனுப்பி வைக்கிறேன். நம்ம கார்லயே நீங்க அங்க போங்க. இதுக்கும் நீ நோ சொல்லக் கூடாது.” என்று சொல்லி தேன்மொழியை அனுப்பி வைத்தாள்.

காரில் ஏறி அமர்ந்த தேன்மொழி  அர்ஜுன் இந்த வீட்டை தன் பெயரில் வாங்கிவிட்டு தன்னை மட்டும் தனியாக அழைத்து வந்து இந்த வீட்டை ஆசையாக தனக்கு சுற்றி காட்டியதை எல்லாம் ஜன்னல் வழியாக அந்த வீட்டை எட்டிப் பார்க்கையில் நினைத்து பார்த்து கண்கள் கலங்க அங்கே இருந்து கிளம்பினாள்.

அர்ஜுன் அங்கே வருவதற்குள் தேன்மொழி தனது வீட்டிற்கு சென்று செட்டில் ஆகி இருந்தாள். தேன்மொழி தன் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒரு சில நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் சொல்லி இருந்ததால் அவர்களுடன் சேர்ந்து தேன்மொழியை சந்தித்து வாழ்த்து சொல்ல வேண்டும் என திட்டமிட்டு இருந்தான் உதயா. அதனால் அவன் அவளுக்கு கால் செய்து “நம்ம ஃபிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து நாளைக்கு உன் வீட்டுக்கு வந்து உன்ன பாக்கலாம்ன்னு இருக்கோம். நான் தான் எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணேன். உன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்தா தான் நல்லா இருக்கும்னு கால் பண்ணேன்.” என்று உதயா கால் செய்து தேன்மொழி இடம் கேட்க,

உடைந்த குரலில் “நான் இப்ப அர்ஜுன் வீட்ல இல்ல. நம்ம பழைய வீட்டுக்கு வந்துட்டேன். இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்க தான் இருக்க போறேன். நீங்க வர்றதுனா என்ன இங்க வந்து பாருங்க.” என்றாள் தேன்மொழி. எப்போது எல்லாம் தேன்மொழிக்கும் அர்ஜுனிற்கும் நடுவில் பிரச்சனை வந்து அவர்கள் இருவரும் பிரிகிறார்களோ அப்போது எல்லாம் நடுவில் இந்த கௌஷிக் வந்தா? என்று கேட்பதைப் போல வந்து சேர்ந்து விடுகிறான் உதயா.

‌ தேன்மொழி பேசிய விதத்திலேயே அவளுக்கும் அர்ஜுனிற்கும் நடுவில் ஏதோ ஒரு பிரச்சனை போய்க் கொண்டு இருக்கிறது என புரிந்து கொண்ட உதயா “இந்த தடவை என்ன ஆச்சு? எதுக்கு அர்ஜுன் சார் கூட சண்டை போட்டுட்டு வந்த?” என நேரடியாக கேட்டான். உடனே அவசரமாக தான் பேசும் விதத்தை மாற்றிக் கொண்ட தேன்மொழி “நான் அர்ஜுன் கூட சண்டை போட்டுட்டு வந்தேன் உன் கிட்ட இப்ப நான் சொன்னேன்? நீயா எல்லாத்தையும் இமாஜின் பண்ணிக்கிட்டு பேசுவியா?” என்று பொய் கோபத்துடன் கேட்டாள்.

“இப்படி எடுத்த எடுப்புல கேட்க கூடாது தான். ஆனா உன்ன எனக்கு தெரியாதா? உன் வாய்ஸே சொல்லுதே.. நீ சோகமா இருக்கேன்னு.. இப்டி பிரக்னண்டா இருக்கிற டைம்ல   உன் ஹஸ்பண்ட் வீட்ல இல்லாம இங்க வந்து இருக்கிறத பார்த்தாலே தெரியலையா அங்கு ஏதோ பிரச்சனைன்னு.. உனக்கு என் கிட்ட சொல்ல இஷ்டமில்லைனா பரவால்ல.

நான் நம்ம பிரெண்ட்ஸ் கிட்ட நீ உன் ஹஸ்பண்ட் கூட ரஷ்யா போயிட்டேன்னு சொல்லிடறேன். இல்லைனா வேற ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கிறேன். நாளைக்கு நான் மட்டும் உன்னை அங்க வந்து பார்க்கிறேன் ஓகேவா?” என்று உதயா கேட்க,

“என்ன சுத்தி இருக்கிறவங்க எல்லார் கிட்டயும் என் மனசுல இருக்கிறதை நான் எத்தனை தடவை சொல்லி புரிய வைக்க ட்ரை பண்ணாலும் அவங்க யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க. எனக்கு என்ன வேணும்னு யாருக்குமே தெரியல. ஆனா உதயா மட்டும் எப்படித் தான் நான் சொல்லாமையே எல்லாத்தையும் கண்டுபிடிக்கிறானோ தெரியல. இது தான் பிரண்ட்ஸ்க்கும் மத்தவங்களுக்கும் இருக்கிற வித்தியாசம்.” என நினைத்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்ட தேன்மொழி அப்போதும் வெளிப்படையாக தனக்கும் அர்ஜுனுக்கும் நடுவில் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று காட்டிக்கொள்ளாமல் “மத்தவங்க கிட்ட எனக்கு உடம்பு சரி இல்லைன்னு சொல்லிரு. நீ இங்க வர்ற மாதிரி இருந்தா, ஈவினிங் நாலு மணிக்கு மேல வா. நான் காலையில அம்மா கூட கோவிலுக்கு போலாம்னு இருக்கேன்.” என்று மட்டும் சொன்னாள்.

அவள் சொன்ன அனைத்தையும் சரி சரி என்று கேட்டுக் கொண்டிருந்த உதயா திடீரென்று அவளை “ஓய் தேனு!” என்று அழைக்க, பல நாட்களுக்கு பிறகு தன்னை இப்படி ஒருவர் உரிமையாக தன் பெயரை சொல்லி அழைப்பதை கேட்டதால் கொஞ்சம் சந்தோஷப்பட்ட தேன்மொழி “ம்ம்.. சொல்லு உதயா.” என்று கேட்டாள்.

“நானும் உன்னை நாளைக்கு வந்து பார்க்கலாம்னு தான் நினைச்சேன். பட் உன் கிட்ட பேசுனதுக்கு அப்புறமா எனக்கு உன்னை இப்பவே பாக்கணும்னு தோணுது. ஆபீஸ் முடிஞ்ச உடனே நான் அங்கே கிளம்பி வரவா?” என்று உதயா அவள் மீது இருக்கும் பாசத்தில் கேட்க, அவன் பேச பேச தன் மீது அவன் வைத்திருக்கும் அன்பு அவளுக்கு நன்றாக புரிந்தது.

தன் மீது அன்பு காட்டுபவர்களை எப்படி அவளால் புறக்கணிக்க முடியும்? அதனால் “சரி வா, ஆதவனும் இன்னைக்கி காலேஜ்ல இருந்து பாதியிலேயே வந்துட்டான். நான் அந்த வீட்ல இருந்து வந்ததுனால அவன் கொஞ்சம் சோகமாவே இருக்கான். நீ வந்து அவன் கிட்ட பேசினா, அவனும் கொஞ்சம் நல்லா இருப்பான்.” என்ற தேன்மொழி திடீரென்று அவளுக்கு பானி பூரி சாப்பிட வேண்டும் என்று தோன்றியதால் “அப்புறம் உதயா.. வரும்போது நீ பானிபூரி வாங்கிட்டு வரியா? எனக்கு உன் கிட்ட பேசின உடனே அத இப்ப சாப்பிடணும்னு தோணுது. நம்ம காலேஜுக்கு வெளில விக்கமல்ல  ஒரு கடையில.. அதோட டேஸ்ட் இன்னும் என் நாக்குலயே இருக்கு.‌ அந்த பக்கம் போறதே இல்ல. அதனால அதை சாப்பிட்டே பல வருஷம் ஆச்சு. எனக்கு வேற கடையில வாங்கி சாப்பிட்டாலும் அந்த டேஸ்ட் கிடைக்க மாட்டேங்குது.” என்றாள்.

“பானி பூரி தானே.. நம்ம நரேஷ் பையா கடையிலயே நான் உனக்கு சுட சுட வாங்கிட்டு வந்து கொடுக்கிறேன். ஈவினிங் பார்க்கலாம் ஓகேவா?” என்று உதயா கேட்க, சரி என்ற தேன்மொழி அவன் அழைப்பை துண்டித்தாள்.

தனது கல்லூரி நாட்களை பற்றி பேசியதால் அவளது என்ன ஓட்டங்கள் பின்னோக்கி சென்றது. அவள் எப்போதும் காலேஜ், வீடு என்று தான் இருப்பாள். இருப்பினும் அவ்வப்போது அவளது நண்பர்கள் அவளை அருகில் இருக்கும் இடங்களுக்கு எல்லாம் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு சென்று விடுவார்கள். அப்படி அவர்களுடன் சேர்ந்து இந்த சென்னை முழுவதையும் நிறைய முறை சுத்தி கொண்டிருக்கிறாள்.

அப்போது எல்லாம் “எனக்கு மேரேஜ் ஆனதுக்கப்புறமா இந்த எல்லா இடத்துக்கும் நான் என் ஹஸ்பண்ட் கூட வரணும். இப்போ என் ஃபிரண்ட்ஸ் கூட நான் இங்கே மெமரி ஸ்கிரீன் பண்ற மாதிரி, பியூச்சர்ல அவர் கூட நிறைய மெமரிஸ் கிரியேட் பண்ணனும். எனக்கு வெளிநாட்டுக்கு போகணும், காஸ்ட்லியான ரெஸ்டாரண்டுக்கு போய் சாப்பிடணும் நிறைய செலவு பண்ணி எல்லா ஃபேமஸான இடத்தையும் போய் பாக்கணும்னு எல்லாம் ஆசை இல்லை.‌

நான் போற இடம் எதுவாய் இருந்தாலும் சரி, அவர் என் கூட வந்தா போதும். அடிக்கடி பால் வாங்குறது மாதிரி சின்ன விஷயமா இருந்தா கூட பரவால்ல. அவர் கூட பேசிக்கிட்டே ஜாலியா ரோட்டில நடந்து போனா நல்லா இருக்கும் இல்ல!” என அவள் நினைத்து தனது திருமணத்தைப் பற்றி கனவு கண்டதுண்டு.

அதை ஒரு நொடி நினைத்துப் பார்த்த தேன்மொழிக்கு இப்போது அவள் வாழும் வாழ்க்கையை நினைத்து பார்த்தால் சிரிப்பதா இல்லை அழுவதா என்றே தெரியவில்லை.

– மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured