அத்தியாயம் 142
அர்ஜுன், ஆருத்ரா, சித்தார்த் மூவரும் சியாவின் கல்லறையில் நின்று அவளை நினைத்து கண்ணீர் சிந்திக் கொண்டு இருந்தார்கள். கிட்டத்தட்ட அப்படியே அரை மணி நேரம் கடந்துவிட, சித்தார்த் தேம்பித் தேம்பி அழுது அழுது விட்டால் அப்படியே மூச்சு திணறி மயங்கி விழுந்து விடுவான் என்ற நிலைக்கு சென்று விட்டான். தானே அங்கே உடைந்திருந்தாலும் ஒரு தகப்பனாக இருந்து கொண்டு தன் குழந்தைகள் தனது கண் முன்னே வாடுவதை காண முடியாமல் அவர்கள் தன்னை தவறாக நினைத்தாலும் கூட பரவாயில்லை என்று நினைத்த அர்ஜுன் வலுக்கட்டாயமாக சித்தார்த், ஆருத்ரா இருவரின் கைகளையும் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான்.
அப்பாவின் மீது அதிகப்படியான பயம் கலந்த பாசமும் அதைவிட மரியாதையும் இருப்பதால் ஆருத்ரா எதுவும் சொல்லாமல் அமைதியாக அவனுடன் செல்ல, சித்தார்த் மட்டும் வழக்கம்போல் அர்ஜுனை புரிந்து கொள்ளாமல் “என்ன விடுங்க டாடி.. நான் தான் உங்கள டிஸ்டர்ப் பண்ணவே இல்லையே… அப்புறம் ஏன் நீங்க என்னை force பண்ணி வீட்டுக்குள்ள கூட்டிட்டு போறீங்க?
உங்களுக்கு அந்த ஆன்ட்டி கூட இருக்கிறதுக்கு தானே பிடிக்கும்.. நீங்க எதுக்காக இங்க வந்தீங்க? திரும்பவும் கிளம்பி இந்தியாவுக்கே போங்க. எங்கள எங்க மம்மி கூட நிம்மதியா இருக்க விடுங்க ப்ளீஸ்!” என்று அவன் பாட்டிற்கு பேசிக் கொண்டே போனான்.
அவனது எல்லை மீறிய பேச்சு இப்போதும் அர்ஜுனை கோவப்படுத்தியது. சிரமப்பட்டு அவன் மீது இந்த நேரத்தில் எரிந்து விழ வேண்டாம் என நினைத்து தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்ட அர்ஜுன் சித்தார்த்தை பார்த்து முறைத்தான். அந்த இருள் சூழ்ந்த நேரத்திலும் கூட அர்ஜுனின் கூர்மையான பார்வையை கண்டு சித்தார்த்திற்கு இப்போது அவனைப் பார்த்தால் கொஞ்சம் பயமாக இருந்தது.
மீண்டும் ஒரு முறை தன் அப்பாவிடம் அடி வாங்க அவன் கண்டிப்பாக தயாராக இல்லை. அதனால் அவன் எதுவும் பேசாமல் அமைதியாகி விட, அவர்கள் இருவரையும் அழைத்து சென்று ஜானகியின் ரூமில் விட்ட அர்ஜுன், “நீங்க என் மேல எவ்ளோ கோவப்பட்டாலும், நானே வேண்டாம் நெனச்சா கூட என்னால உங்களை எப்படியோ போங்கன்னு விட முடியாது. You guys are my responsibility. As a Father Till now, உங்களுக்கு எது நல்லதோ அதை மட்டும் தான் நான் செஞ்சிருக்கேன். இனியும் அப்படித் தான்.
உங்களால இப்ப என்ன புரிஞ்சிக்க முடியலனாலும் பரவால்ல. நீங்க இப்படியே இருங்க. எல்லாத்துக்கும் ஒரு டைம் வரும். நீங்களே வளரும்போது உங்களுக்கு தேன்மொழி உங்க மேல வச்சிருக்கற பாசமும், நான் எடுத்த இந்த டிசிஷனை எடுத்ததுக்கான ரீசன்னும் உங்களுக்கு தானாவே புரியும். பட் அதுவரைக்கும் நான் சொல்றத தயவு செஞ்சு என்னை தப்பா நினைக்காம கேட்டு தொலைங்க.
Literally I am exhausted. எனக்கு உங்களை எப்படி ஹேண்டில் பண்றதுன்னே தெரியல. நீங்க உங்க மம்மிய பாக்கணும்னு சொல்லி தானே இங்க வந்தீங்க.. பாத்தாச்சு இல்ல… இதுக்கப்புறம் நான் எப்ப இந்தியாவுக்கு கிளம்பறனோ, அப்ப நீங்களும் என் கூட கிளம்பி தான் ஆகணும். அண்ட் நான் இல்லாத நேரத்துல சும்மா சும்மா அங்க போய் நீங்க சமாதி கிட்ட நின்னுட்டு இருக்க கூடாது. அந்த இடத்துல மார்னிங்க்குள்ள நான் ஒரு கேட் போட சொல்ல போறேன். எனக்கு தெரியாம நீங்க மட்டும் இல்ல வேற யாரும் அங்க போக முடியாது. Got it?” என்று மிரட்டும் தோரணையில் சொன்னான்.
அவன் குரல் கடுமையாக இருந்ததால் அதில் பயந்து போன ஆருத்ரா “ஓகே டாடி!” என்று நடுங்கும் குரலில் சொல்லிவிட்டு தலை குனிந்து கொண்டாள். ஆனால் அப்போதும் சித்தார்த் மட்டும் வாயை திறக்காமல் அழுத்தமாகவே நிற்க, “நான் உன் கிட்டயும் சேர்த்து தான் சொல்றேன் சித். நான் அன்னைக்கு செத்துப் போயிருந்து, உங்க மம்மி உயிரோட இருந்திருந்தது இப்ப எனக்கு நடக்கிறது எல்லாம் அவளுக்கு நடந்திருந்தா, அவளும் இப்ப நான் பண்றதை தான் பண்ணி இருப்பா.
என்ன விட அதிகமா அவளை லவ் பண்றதுக்கு இங்க யாரும் இருக்க முடியாது. உங்களையும் சேர்த்து தான் சொல்றேன். She is my everything. உனக்கு இந்த மாதிரி நான் எக்ஸ்பிளனேஷன் கொடுக்கிறது எல்லாம் இது தான் லாஸ்ட் டைம். நீ பெரிய பையன் ஆயிட்ட. தேவை இல்லாம நிறைய யோசிக்கிறதுக்கு பதிலா, ஆப்போசிட்ல இருக்குறவங்களுக்கும் மனசாட்சி இருக்கு. அவங்க நியாயம்னு ஒன்னு இருக்குன்னு யோசிச்சு பாரு. குட் நைட். இன்னைக்கு நீங்க இங்கயே தூங்குங்க.” என்று கட்டளையிடும் தோனியில் சொல்லிவிட்டு அந்த அறையில் இருந்து வெளியே வந்தான் அர்ஜுன்.
அவன் தனது ரூமிற்கு செல்லலாம் என நினைத்து தான் லிஃப்டில் ஏறினான். ஆனால் அவனையும் அறியாமல் எட்டாவது மாடியில் உள்ள முக்கியமான பொருட்கள் இருக்கும் தனி ஸ்டோர் ரூமிற்கு தன்னையும் அறியாமல் சென்று சேர்ந்தான். அங்கே வெளியில் இருந்த இன்டர்காம் மூலமாக அந்த வீட்டின் மேனேஜருக்கு கால் செய்து சர்வன்டிடம் அந்த அறைக்குள் நுழைய பயன்படுத்தும் கி கார்டை கொடுத்து அனுப்பச் சொல்லி கட்டளையிட்டான்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஒரு வேலையாள் கையில் அந்த ரூமிற்குள் நுழைவதற்கான கீ கார்டூடன் அங்கே வந்தான். அதை வைத்து கதவை திறந்து உள்ளே சென்றான் அர்ஜுன். அங்கே சியாவின் பொருட்கள் மட்டும் தனியாக அதற்கான இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டு அனைத்தும் நன்கு பராமரிக்கப்பட்டு சுத்தமாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதை ஸ்டோர் ரூம் என்று சொல்வதற்கு பதிலாக சியாவின் ரூம் என்று சொல்லலாம்.
அந்த அறை முழுவதும் சியாவின் பொருட்கள் நிரம்பி இருந்ததால், அதன் ஒவ்வொரு மூளை முடுக்கிலும் அவளது ஞாபகம் நிறைந்திருப்பதாக உணர்ந்த அர்ஜுனிற்கு ஒவ்வொரு பொருட்களையும் பார்க்கும்போது அது தொடர்பான ஒரு சில ஞாபகங்கள் வந்து சென்றன. அதில் தொலைந்து போன அர்ஜுன் டோரை லாக் செய்துவிட்டு அங்கே இருந்த சோஃபாவில் சென்று படுத்துக் கொண்டு சுற்றி இருந்த அவளது புகைப்படங்களை பார்த்தபடி இருந்தான்.
அது அவளது அறை என்பதாலோ என்னவோ, அங்கே கிடைக்கும் சோஃபாவில் படுத்து இருக்கும்போது கூட என்னவோ தான் அவளது மிருதுவான மடியில் படுத்திருப்பதைப் போல ஒரு இதமான உணர்வு அவனுக்குள் எலும்ப, அப்படியே தன் கண்களை மூடினான் அவன். அவன் கண்கள் ஓரமாக கண்ணீர் வர, அதை பொருட்படுத்தாமல் அப்படியே படுத்துக் கிடந்த அர்ஜுன் தன்னையும் அறியாமல் சில நிமிடங்களில் உறங்கிப் போனான்.
அங்கே இந்தியாவில் பொழுது விடிந்து அனைவரும் தங்களது தினசரி வேலையை பார்ப்பதற்காக பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தேன்மொழி மட்டும் அர்ஜுன் தனது மொத்த சந்தோஷத்தையும் அவனுடனே எடுத்துச் சென்று விட்டதை போல சோகமே உறவாக இடிந்து போய் தனது ரூமில் அமர்ந்து இருந்தாள் “மத்தவங்க கிட்ட எல்லாம் அர்ஜுனுக்கு டைம் வேணும். குழந்தைகளுக்கு என்ன புரிஞ்சுக்க நாள் ஆகும்னு நானே ஆறுதலா பேசினாலும், என்னால எப்படி யோசிச்சு பார்த்தாலும் இந்த சுச்சுவேஷனை ஏத்துக்கவே முடியல. நம்ம எந்த தப்பும் நடந்திடவே கூடாதுன்னு பார்த்து பார்த்து எல்லாத்தையும் பண்ணி பர்ஃபெக்ட்டா இருந்தாலும் கூட, ஏன் தான் எல்லாரும் நம்ப மேல குறை கண்டுபிடிச்சு நம்மள விட்டு தூரமா விலகி போறாங்களோ தெரியல.. என்னால மட்டும் இப்ப பொதுவா மத்தவங்களுக்கு குறை சொல்ல முடியல. நடக்கிறது நடக்கட்டும்னு அப்படியே விடவும் முடியல.
இப்ப அர்ஜுன் என்ன பண்ணிட்டு இருப்பான்? இன்னும் அங்க பொழுது விடிய கொஞ்சம் டைம் இருக்கு. நைட்டு ஃபுல்லா நல்லா தூங்கிருப்பானா? சாயங்காலத்தில இருந்து சித்தார்த்தும், ஆருத்ராவும் அழுதுகிட்டே இருந்தாங்க. அவங்க சாப்பிட்டு இருப்பாங்களா?” என அவர்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவள் சாப்பிட டைனிங் டேபிளுக்கு வராததால் தானே கையில் இரண்டு பிளேட்டில் விதவிதமான உணவுகளை எடுத்துக் கொண்டு தேன்மொழியின் அறைக்கு வந்தாள் விஜயா. “எனக்கு இப்ப பசிக்கல மா. சாப்பிடுற மூடே இல்ல.” என்று தேன்மொழி சொன்னாலும், வலுக்கட்டாயமாக தன் கைகளால் அவளுக்கு சாப்பாட்டை ஊட்டி விட்ட விஜயா “நீ உன் பிள்ளைகளை நினைச்சு கவலைப்படுற மாதிரி தானே நானும் என் பிள்ளையை நினைச்சு கவலைப்படுவேன்.. உனக்கு இன்னும் எத்தனை வயசு ஆனாலும் உன்ன பத்திரமா பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு தான் தேனு.
வாழ்க்கையில நல்லது கேட்டது எல்லாம் வரும் போகும். அத கடந்து போக கத்துக்கணும். அதையெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்கிட்டு வயித்த காய போட்டுட்டு இருந்தா உடம்பு என்ன ஆகிறது? நீ இப்ப ரெண்டு உசுரு டி. அதை மறந்துடாத. இந்தா சீக்கிரம் சாப்பிட்டுட்டு மாத்திரைய போடு.” என்றாள்.
சில மணி நேரங்களுக்கு பிறகு சியாவின் ரூமில் தூங்கிக் கொண்டிருந்த அர்ஜுனை எழுப்பிய பிரிட்டோ ஆபீஸில் சென்று பார்க்க வேண்டிய சில முக்கியமான வேலைகள் இருப்பதாக சொல்லி அவனை தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.
தூங்கி எழுந்த குழந்தைகள் இருவரும் சியாவின் ஞாபகத்தால் மீண்டும் அவளது கல்லறையை நோக்கி செல்ல, அர்ஜுன் இரவோடு இரவாக யாரும் அனுமதி இல்லாமல் அந்த பக்கம் செல்வதற்கு தடையாக ஒரு பெரிய கேட்டை அங்கே நிறுவி இருந்ததால் அவர்கள் ஏமாந்து திரும்பி வந்தார்கள். “வர வர டாடி ரொம்ப ஓவரா பண்றாரு. எனக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கல. நம்ம மம்மியை போய் பார்க்க கூடாதுன்னு அவர் ஏன் நினைக்கிறாரு! இப்படி எல்லாம் பண்ணிட்டா நம்ம மம்மியை மறந்துட்டு அந்த ஆன்ட்டியை நம்ப ரெண்டு பேரும் ஏத்துக்குவோம்னு நினைச்சுட்டு இருக்காரா அவரு?” என்று சித்தார்த் கோபமாக கேட்க,
“என்ன ஆச்சு சித்து உனக்கு? நீ ஏன் உனக்கு டாடியை பிடிக்கவே பிடிக்காது என்ற மாதிரி பேசிட்டு இருக்க? அவர் மம்மி இறந்து போனதை பத்தி நம்ம கிட்ட சொல்லாம இருந்ததுனால எனக்கும் அவர் மேல கோவம் இருக்கு. அவர் உன்னை அடிக்கும்போது கூட எனக்கு அவர பார்த்தா பயமா தான் இருந்துச்சு. பட் அவர் நம்ம டாடி தானே..
நீ ஏன் அவரை ஏதோ எனிமி மாதிரி பாக்குற! இதுக்கு முன்னாடி எல்லாம் அவர் நம்மகிட்ட ஜாலியா ஃபிரண்ட்ஸ் மாதிரி தானே இருந்தாரு! அதை எல்லாம் மறந்துட்டியா? எனக்கு என்ன பண்றதுன்னு நெஜமா ஒண்ணுமே புரியல. நேத்து டாடி சொன்னாருல்ல.. எல்லாத்தையும் நமக்காக தான் பண்ணதா… அதை மட்டும் நான் நம்புறேன். எனக்கு என் மம்மி, டாடி இரண்டு பேரையுமே பிடிக்கும்.” என்றாள் ஆருத்ரா.
உடனே அவள் கையை உதறிவிட்ட சித்தார்த் “இப்ப நீ மம்மின்னு யாரை சொல்ற? அந்த தேன்மொழி ஆண்டியவா? உனக்கு உன் லைஃப்ல மம்மின்னு ஒரு கேரக்டர் இருந்தா போதும். அது நம்ம மம்மியா இல்ல வேற யாரோ ஒருத்தங்கலானு எதைப் பத்தியும் நீ கவலைப்பட மாட்ட. நீ சரியான fool-ஆ இருக்க ஆருத்ரா. அந்த ஆன்ட்டி அதான் உன்னை ஈசியா ஏமாத்துறாங்க. நம்ம மம்மிய பத்தி யோசிக்காம நீ அவங்களுக்காக என் கிட்ட சப்போர்ட் பண்ணி பேசிட்டு இருக்க! இப்படி பேசுற மாதிரி இருந்தா இனிமே நீ என் கிட்ட பேசாத.” என்று கோபமாக சொல்லிவிட்டு விருட்டென சென்று விட்டான்.
அதனால் அழுது கொண்டே கார்டன் ஏரியாவில் இருந்த ஸ்டோன் பெஞ்சில் சென்று அமர்ந்த ஆருத்ரா “எனக்கும் தான் மம்மி வேணும். நானும் தான் அவங்கள மிஸ் பண்றேன். அத புரிஞ்சுக்காம இவன் ஏன் இப்படி பேசிட்டு போறான்?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.
– மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள்மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)