அத்தியாயம் 161
“இருந்தாலும் workplaceல female friends இருந்தா தானே ஆபீஸ்க்கு போகும்போது ஜாலியா இருக்கும்.. பொண்ணுங்க இருந்தா ஆபீஸ்ல நிறைய லவ் stories ஓடும். So Gossip பேசிட்டு free timeஐ enjoy பண்ணலாம்.” என்று உற்சாகமான குரலில் மேகா சொல்ல,
“அதுக்குத்தான் நான் என் ஆஃபீஸ்க்குள்ள எவளையும் விடுறதே இல்லை. ஆபீஸ்க்கு வந்தா ஒழுங்கா வேலைய மட்டும் பார்க்கணும். அத விட்டுட்டு எல்லாரும் காதல் கன்றாவின்னு திரிஞ்சிட்டு இருப்பாங்க. தேவையா அதெல்லாம்..?? அதனால என் work தான் disturb ஆகும்.” என்றான் விஷ்வா.
“ஹலோ ஹலோ.. robot மாதிரி இருந்த நீயே feelings எல்லாம் வந்து love பண்ண ஆரம்பிச்சுட்ட.. அவங்க எல்லாம் பாவம். சாதாரண மனுஷங்க. அவங்களுக்கு லவ் வர கூடாதா..?? நிறைய பேருக்கு workplaceல தான் loveஏ set ஆகும். ஆனா நீ எல்லாத்துக்கும் ஆப்பு வச்சிட்ட. உன் staff எல்லாம் officeக்கு வரும்போதும் போகும்போதும் இவன் மட்டும் கல்யாணம் பண்ணி settle ஆகிட்டான். அப்புறம் இன்னும் ஆபீஸ்ல மட்டும் பொண்ணுங்க இருக்க கூடாதுன்னு rules போடுறான்னு உன்னை கேவல கேவலமா திட்டுவாங்க.” என்று அவள் சொல்ல,
“அவனுங்கள தைரியம் இருந்தா என் முன்னாடி வந்து பேச சொல்லு. எனக்கு லவ் வந்ததுனால தாண்டி மத்தவங்களும் லவ் பண்ணி வீணா போக வேண்டாம்னு நினைக்கிறேன். லவ் வந்தா நல்லா இருக்குறவன் கூட பைத்தியக்காரன் ஆயிடுவான்.
Already அவங்க boss நான் உன் பின்னாடி லூசா சுத்துறது போதும். என் employeesம் இப்படி ஆளுக்கு ஒரு பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருந்தா, எவனும் workல focusedஆ இருக்க மாட்டான். அப்புறம் நீ சொன்ன மாதிரி MV Techஐ இழுத்து மூடிட்டு, உங்க ஊருக்கு போயி நம்ம விவசாயம் தான் பண்ணி பொழைக்கணும். அதுவும் இப்ப நம்ம மேல இருக்கிற காண்டுல நம்ம அங்க போனா உங்க அண்ணன் வீட்டுக்குள்ள கூட நம்மள விட மாட்டாரு.” என்று சொல்லிவிட்டு சிரித்தான் அவன்.
“உங்களை யாரு Boss.. என் பின்னாடி சுத்தி உங்க வாழ்க்கையை கெடுத்துக்க சொன்னது..?? நீங்க எப்பயும் போல robotஆவே இருங்க. Computerஐ love பண்ணி டெய்லியும் நைட்டு அதவே hug பண்ணிட்டு தூங்குங்க. அப்புறம் எப்பயும் பசங்க கூடவே சுத்திட்டு இருங்க. உங்களை யாரு வேணான்னு சொன்னது..??” என்று கேட்ட மேகா தன் உதட்டை சுழித்துவிட்டு முகத்தை திருப்பிக் கொள்ள, “மேடம்க்கு கோபம் வந்துருச்சோ..!!” என்று கேட்டான் அவன். “ஆமா, liteஆ.” என்று அவனை திரும்பி பார்க்காமல் அவள் சொல்ல, “இப்போ நான் என்ன பண்ண உங்க கோபம் போகும்னு சொல்லுங்க மேடம். நல்லா சிறப்பா பார்த்து பண்ணிடலாம்.” என்றான் விஷ்வா.
“இப்போதைக்கு பெருசா ஒன்னும் தோணல. So 2 double chocolate ice cone cream வாங்கி கொடுத்தினா கோபம் போயிடும்.” என்று அவள் சொல்ல, லேசாக புன்னகைத்த விஷ்வா “ஓஹோ இதுக்கு தான் இவ்ளோ build upஆ..?? இதுக்கு நீ directஆவே எனக்கு ice cream வேணும்னு கேட்டிருந்தா, நான் வாங்கி கொடுத்திருக்கப் போறேன்.” என்றான்.
“என்ன சமாதானப்படுத்தணும்னா, அத பண்ணு இதை பண்ணுன்னு ரெண்டு மூணு நாளைக்கு உன்ன நான் என் பின்னாடி நல்லா அலையவிட்டு இருக்கணும். ஈஸியா compromise ஆகிட்டேன்ல.. So நீ இப்படி தான் பேசுவ.” என்ற மேகா மீண்டும் தன் முகத்தை திருப்பிக் கொள்ள, அவளை வீட்டுக்கு செல்லும் வழியில் இருந்த ice cream parlourக்கு அழைத்துச் சென்று அவள் கேட்ட cone ice creamஐ வாங்கி கொடுத்து அவளை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றான் விஷ்வா.
அவர்கள் உள்ளே நுழையும்போது ஹாலில் உள்ள sofaவில் பாட்டியுடன் சௌபர்ணிகா அமர்ந்திருக்க வேகமாக அவர்கள் அருகில் சென்ற மேகா, “அக்கா இந்தாங்க.. நான் உங்களுக்கு ice cream வாங்கிட்டு வந்தேன்.” என்று சொல்லி தன் கையில் இருந்த கவரை அவள் சௌபர்ணிகாவிடம் கொடுக்க,
“அத காசு குடுத்து வாங்குனது நானுடி. என்னமோ நீ மட்டும் வாங்கிட்டு வந்த மாதிரி சொல்ற!” என்ற விஷ்வா பாட்டியின் அருகே சென்று அமர்ந்தான். “நீங்க காசு குடுத்தா, உடனே இது நீங்க வாங்குனதா ஆயிடுமா..?? நான் தானே வீட்டில இருக்கிறவங்களுக்கும் வாங்கிட்டு போலாம்னு சொன்னேன்..!!” என்று அவள் சொல்ல, “சரி விடுங்க, சண்டை போடாம எல்லாரும் சேர்ந்து சாப்பிடுங்க.” என்றார் பாட்டி.
“நீங்க dinner சாப்டீங்களா பாட்டி..??” என்று விஷ்வா கேட்க, “நான் சௌபர்ணிகா கூட எப்பவோ சாப்பிட்டுடேன் விஷ்வா. நீங்க போய் சாப்பிடுங்க.” என்றார் பாட்டி. சாப்பிட்டு முடித்துவிட்டு சாராவுடன் dining areaவில் இருந்து வந்த ரிஷி “என்ன எல்லாரும் என்னமோ ice creamன்னு பேசிட்டு இருந்தீங்க.. எனக்கு குடுக்காம யார் ice cream சாப்பிடுறது..?? எனக்கும் ice cream வேணும்.” என்று சொல்ல, “இதெல்லாம் உனக்கு தூரத்தில இருந்தா கூட கரெக்டா கேட்கும். உன்னை கூப்பிட்டு நான் ஏதாவது வேலை சொன்னா, அத மட்டும் அரைகுறையா செஞ்சுட்டு வருவ..!!” என்றான் விஷ்வா.
“விடுங்க bro.. நான் இங்கயோ தானே இருக்கேன்.. என்ன நீங்க அப்புறமா கூட பாராட்டுங்க. இப்ப சாப்பிடாம விட்டா ice cream உருகி waste ஆயிடும். அதெல்லாம் பார்த்தா என் மனசு வலிக்கும்.” என்ற ரிஷி சென்று சௌபர்ணிகாவின் அருகே அமர, “நான் இதெல்லாம் சந்தோஷமா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு.” என்று நினைத்த சௌபர்ணிகா தான் ஒரு cone ice creamஐ எடுத்துக் கொண்டு மீதியை கவரோடு ரிசியின் கையில் கொடுத்தாள். மேகாவை போலவே அவனுக்கும் double chocolate cone ice cream என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவன் வேகமாக கவருக்குள் கையை விட்டு அதை தேடி ஆசையாக வெளியில் ஒன்றை எடுக்க, அவன் கையில் இருந்து அதை பிடுங்கிய சாரா “இது எனக்கு தான்.” என்றுவிட்டு ice cream உடன் அங்கிருந்து நகர்ந்தாள்.
“ஏய்.. இந்தாடி நில்லு.. அது என் ice cream டி. குடு அத… உனக்கு வேணும்னா அதுல வேற ஏதாவது எடுத்துக்கோ. அதுல double chocolate cone ஒன்னு தாண்டி இருக்கு.” என்று ரிஷி சொல்லிக் கொண்டிருக்க, “நீ என்னமோ சொல்லு… எனக்கு என்ன..??” என்று நினைத்த சாரா அவன் கண் முன்னாடியே அந்த ice creamஐ ரசித்து ருசித்து சாப்பிட்டாள். அவள் சாப்பிடும் அழகை பார்க்கும்போதே அவனுக்கு வாயில் எச்சில் ஊற, “சரியான cunning girl.. என்கிட்ட இருந்து புடுங்கி தின்னாத்தான் இவளுக்கு ice cream தின்ன மாதிரி இருக்குமா..?? போடி.. நீ ஒன்னு தானே தின்ன.. மீதி இருக்கிற எல்லாத்தையும் நானே தின்னு காலி பண்றேன் பாரு…” என்ற ரிஷி sofa பக்கம் திரும்பி பார்த்தான்.
அங்கே அனைவரும் தங்கள் கையில் ஆளாளுக்கு ஒன்று இரண்டு என்று ice creamஐ வைத்து சாப்பிட்டு கொண்டு இருக்க, “என்ன இவனுங்க இப்படி திங்கிறானுங்க..!!” என்று நினைத்து பதறிய ரிஷி வேகமாக சென்று ice cream இருந்த கவரை பார்த்தான். அது காலியாக இருந்தது.
அதனால் கடுப்பானவன் “அடப்பாவிங்களா.. மனுசனுங்களாடா நீங்க எல்லாம்..?? நான் அந்த பக்கம் திரும்பி மறுபடியும் இந்த பக்கம் திரும்பறதுக்குள்ள எல்லாத்தையும் தின்னு தீர்த்துட்டீங்க.. இப்ப எனக்கு ice cream வேணும். ஒழுங்கா யாராவது போய் வாங்கிட்டு வந்து குடுங்க.” என்ற ரிஷி “பாருங்க பாட்டி.. என்னை எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க..!!” என்றுவிட்டு விஷ்வாவை தள்ளிக் கொண்டு சென்று பாட்டியின் அருகே சென்று அமர்ந்தான்.
“சின்ன பையன் மாதிரி இதுக்கெல்லாம் போய் பாட்டிகிட்ட complaint பண்ணிட்டு இருக்க.. வெக்கமா இல்லையாடா உனக்கு..?? உனக்கு வேணும்னா நீயே உன் சொந்த காசுல வாங்கி தின்னு.” என்ற விஷ்வா “நீ வா நம்ம சாப்பிட போலாம்.” என்று சொல்லி மேகாவை அழைத்துக் கொண்டு dining hallக்கு சென்றான்.
“அக்கா என் மேல உங்களுக்கு கூட பாசம் இல்லல்ல..!!” என்று ரிஷி கேட்க, லேசாக சிரித்த சௌபர்ணிகா “நான் முன்னாடி எல்லாம் அடிக்கடி ice cream சாப்பிடுவேன் டா. fridgeல எப்பவுமே வாங்கி stock வச்சிருப்பாங்க. இப்ப கொஞ்ச நாளா நான் அதை எல்லாம் like பண்ணி சாப்பிடுறது இல்ல. So fridgeல நிறையவே இருக்கும். இரு நான் போய் எடுத்துட்டு வரேன்.” என்றுவிட்டு எழுந்து kitchenஐ நோக்கி நடந்தாள்.
அப்போது அவளுக்கு தலை சுற்றி மயக்கம் வருவதைப் போல இருக்க, தன் தலையை பிடித்துக் கொண்டு நின்ற சௌபர்ணிகா கீழே விழப்போனாள். அவள் செல்வதை பார்த்துக் கொண்டிருந்த ரிஷி சுதாரித்துக் கொண்டு அவள் கீழே விழுவதற்குள் சென்று அவளை பிடித்து விட, அவன் மடியில் மயங்கி விழுந்தாள் சௌகர்ணிகா. அதனால் அதுவரை சந்தோஷமாக இருந்த அனைவரும் திடீரென அவளுக்கு அப்படி ஆனதால் பதட்டமானார்கள்.
தொடரும்..