அத்தியாயம் 152
காவியா விஷ்வாவை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு dance floorக்கு சென்று அவனுடன் சேர்ந்து ஆட தொடங்கினாள்.
“காவியா.. என் wife அங்க தனியா நின்னுட்டு இருக்கா. நான் அவள போய் பாக்கணும். நீ ஆடு. நான் போறேன்.” என்ற விஷ்வா அவளிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்க, “டெய்லியும் நீ உன் wife கூட தானே இருக்க.. எத்தனை வருஷம் கழிச்சு நம்ம மீட் பண்ணி இருக்கோம். இன்னிக்கு ஒரு நாள் என்க்கூட இரு. உன் wife ஒன்னும் கோச்சுக்க மாட்டாங்க..!!” என்ற காவியா அவனை விடாமல் இழுத்து பிடித்து வைத்துக் கொண்டு அவனுடன் சேர்ந்து ஆடிக் கொண்டு இருந்தாள்.
“என்னது.. இன்னைக்கு உன் கூட இருக்கவா.. அடியேய்.. இத மட்டும் நீ யாரும் இல்லாதப்ப சொல்லிருந்தினா.. காவியாவாவது ஓவியாவாவதுன்னு உன் செவுல்லையே ஒன்னு உட்றுப்பேன். சுத்தி இத்தனை பேர் இருக்கும் போது, harshஆ behave பண்ணிட கூடாதுன்னு நான் controlல்ல இருக்க try பண்ணா.. இவ நம்ம பொறுமைய ரொம்ப சோதிக்கிறாளே..!!” என்று நினைத்த விஷ்வா வேண்டா வெறுப்பாக அவளுடன் ஆடிக் கொண்டு இருந்தான்.
அப்போது தற்செயலாக அவர்கள் இருவரையும் கவனித்த மேகா “அடப்பாவி.. எனக்கு பொண்ணுங்கனாலே allergy. எவ கூடையும் பக்கத்துல நின்னு கூட பேசமாட்டேன்.. தொடமாட்டேன்.. அப்படி இப்படின்னு இத்தனை நாளா சீன் போட்டுட்டு இருந்துட்டு, இப்போ இப்படி இன்னொருத்தி கூட closeஆ dance ஆடிற அளவுக்கு வந்துட்டியா நீ..!! இப்ப மட்டும் உனக்கு mentally disturb ஆகாதா..?? நான் தானே உன்னை சரி பண்ணேன்.. நான் இருக்கும் போதே, என்ன விட்டுட்டு இன்னொருத்தி கூட நீ ஆடுறல.. ஏன் உனக்கு மட்டும் தான் ஆள் கிடைக்குமா..?? எனக்கு எவனும் கிடைக்க மாட்டானா..?? நீ வேற ஒருத்திக் கூட dance ஆடுற மாதிரி இருடா நானும் handsomeஐ ஒருத்தனை கண்டுபிடிச்சு அவன்க்கூட ஆடுறேன்.” என்று அவனை பார்த்து தன் மனதிற்குள் சொன்ன மேகா சுற்றி முற்றி பார்த்துவிட்டு வேண்டுமென்றே அவள் பின்னே நின்று கொண்டிருந்த யாரோ ஒருவனை சட்டென தன் பக்கம் பிடித்து இழுத்து அவனுக்கு நெருக்கமாக சென்று “நீ என்கூட dance ஆடுறியா..??” என்று போதையில் கேட்டாள்.
“இத்தனை நாளா எப்பயும் உன்ன என்னால தூரத்தில இருந்து மட்டும்தான் பார்க்க முடியும்னு நினைச்சுட்டு இருந்தேன். But today, நீ என் பக்கத்துல வந்து.. நீயாவே என்கிட்ட dance ஆடலாமான்னு கேட்கும்போது நான் எப்படி வேண்டாம்னு சொல்லுவேன் மேகா..??” என்று நினைத்த அந்த இளைஞன், “Yeah Sure.. why not..??” என்று கேட்டுவிட்டு அவள் இடுப்பில் கைவைத்து அவளை இன்னும் தனக்கு நெருக்கமாக இழுத்துக் கொண்டவன், அவள் கையை பிடித்து அவளுடன் சேர்ந்து slowஆக Salsa dance ஆட தொடங்கினான். அதனால் தன் முகத்தை சுருக்கிய மேகா, “உன் பேர் என்ன..??” என்று கேட்க, “கௌத்தம்.” என்றான் அவன்.
“ஓஓ… கௌத்தம்.. உனக்கு dance ஆட தெரியுமா தெரியாதா..?? இங்க high volumeல Fast beat music ஓடிட்டு இருக்கு. நீ என்ன இப்படி slowவா dance ஆடிட்டு இருக்க..??” என்று அவள் கேட்க, “அப்படியா இப்ப பாரு..!!” என்ற கௌத்தம் அவள் இரண்டு கைகளையும் பிடித்து; அவளுடன் சேர்ந்து அப்படியும் இப்படியுமாக சுற்றி, அவளோடு சேர்ந்து தன் உடலை வளைத்து என்று ஒலிக்கும் பின்னணி இசைக்கு தகுந்தவாறு உடலை வளைத்து வேகமாக dance ஆடினான் கௌத்தம்.
போதையில் இருந்த மேகா கொஞ்சம் சொதப்பினாலும் கூட, அதையும் manage செய்து அவளுடன் சேர்ந்து அவன் அசத்தலான performanceஐ கொடுக்க, “அங்க ஆடிட்டு இருக்கிறது விஷ்வா சார் wife தானே.. அவங்க கூட ஆடுறது யாரு..?? ரெண்டு பேரும் சேர்ந்து செமையா ஆடுறாங்க.” என்று நினைத்து அனைவரும் அவர்கள் இருவரையும் பார்க்கத் தொடங்கி இருந்தார்கள். அதனால் அவர்கள் மீது focus light அடிக்கப்பட்டது. காவியா உடன் ஆடிக் கொண்டிருந்த விஷ்வாவும் அந்தக் காட்சியை பார்த்து அதிர்ந்தான்.
“அங்க பாரு.. உன் wife என் cousin கௌத்தம் கூட சேர்ந்து எவ்ளோ நல்லா dance ஆடுறாங்க.. ஆனா நீ ஒழுங்கா ஆடாம ஏதோ சாணி மிதிக்கிற மாதிரி சும்மா அந்தப் பக்கமும் இந்த பக்கமும் போயிட்டு போயிட்டு வர்ற.. அவங்கள பார்த்தாவது நல்லா dance அட கத்துக்கோ விஷ்வா.” என்று காவியா சொல்ல; ஏற்கனவே அவளுடன் வேண்டா வெறுப்பாக ஆடிக் கொண்டிருந்த விஷ்வா இப்போது மேகா கௌத்தம் உடன் dance ஆடிக் கொண்டிருப்பதை பார்த்து இன்னும் கடுப்பாகி “எனக்கு danceஏ ஆட தெரியாது. போய் தொலைடி.” என்றுவிட்டு காவியாவை பிடித்த கீழே தள்ளிவிட்டு வேகமாக மேகாவின் அருகே சென்றான்.
“ஆஆஆ.. விஷ்வா.. நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி என்னை தள்ளி விட்டுட்டு போற..??” என்று சத்தமாக கத்தி கேட்டுவிட்டு சினுங்கிய காவியா சிரமப்பட்டு எழுந்து நின்றாள். விஷ்வா செல்லும்போது சரியாக ஒரு பாடல் முடிவு பெற, lastஆக மேகாவை தூக்கி சுற்றி அவளுடன் சேர்ந்து அழகாக pose கொடுத்தான் கௌத்தம்.
அது அவர்களது performanceன் highlightஆக இருக்க, அனைவரும் “wow… super.. nice performance” என்று சொல்லி கை தட்டி அவர்களை பாராட்டினார்கள்.
மேகா இன்று ஒரு கருப்பு நிற sleeveless long gown அணிந்து தனது நீண்ட கூந்தலை கொஞ்சம் சுருட்டி விட்டிருந்தாள். அதனால் அது இன்னும் அடர்த்தியாக தெரிய, அவர்கள் ஆடும் போதெல்லாம் அதுவும் சேர்ந்து அசைந்து unpaid artistஆக இருந்து அவர்களது performance support செய்தது. விஷ்வாவின் black colour coat suitக்கு matchingஆக இருக்கட்டுமே என்று நினைத்து தான் மேகா அந்த black colour gownஐ அணிந்து கொண்டு வந்திருந்தாள். ஆனால் அவளது gown அதைவிட கௌத்தமின் blue colour coat suitக்கு பக்காவாக matchஆக, அவர்கள் இருவரும் பார்க்கும் அனைவரின் கண்களுக்கும் நல்ல ஜோடியாக தெரிந்தார்கள். அதை சிலர் வாய்விட்டும் சொல்ல, விஷ்வாவிற்கு அதை எல்லாம் கேட்க கேட்க கோபம் பற்றி கொண்டு வந்தது. கூடவே கௌத்தமின் மீது பொறாமையில் வயிறும் எரிந்தது.
“கௌத்தம் நீ சூப்பரா dance ஆடுற. I like you.” என்று மேகா உற்சாகமான குரலில் சொல்ல, “Thanks.” என்று சொல்லிவிட்டு வெட்கப்பட்டான் அவன்.
அங்கே துக்கப்பட்டு கொண்டு இருந்த விஷ்வா சட்டென அவர்கள் இருவருக்கும் நடுவில் சென்று மேகாவை யாரும் தவறாக நினைத்து விடக்கூடாது என்பதற்காகவே “உங்க ரெண்டு பேரோட dance நல்லா இருந்துச்சு. Please don’t mind கௌதம், நாங்க கிளம்புறோம். எங்களுக்கு நிறைய important work இருக்கு. நீங்க partyஐ enjoy பண்ணுங்க.” என்று சொல்லிவிட்டு மேகாவின் கையை பிடித்து அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
“அப்பயும் இப்படித் தான் நான் என் மேகா கிட்ட போக நினைக்கும் போது, நீ குறுக்க வந்த. இப்போ அவளா என் கிட்ட வரும்போதும், நீ குறுக்க வந்து அவளை என்கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போறியா விஷ்வா..?? நீ என்ன பாத்து பொறாமைப்படுறத என்னால புரிஞ்சுக்க முடியுது. நிஜமாவே இப்படி உன்ன பாக்குறது நல்லா இருக்கு. ஆனா நான் மேகா எனக்கு வேணும்னு நினைச்சா, உன்னால மட்டும் இல்ல.. அந்த கடவுளால கூட அவளை என் கிட்ட இருந்து பிரிக்க முடியாது. இத்தனை நாளா நானும் அவளுக்கு marriage ஆயிடுச்சுன்னு நெனச்சு கஷ்டப்பட்டு என் feelingsஐ control பண்ணிட்டு இருந்தேன். But இப்போ அவளை இவ்ளோ பக்கத்துல பாத்ததுக்கு அப்பறம், அவளை touch பண்ணி அவளோட presenceஐ feel பண்ணதுக்கு அப்புறம், இனிமே என்னால அப்படி இருக்க முடியுமான்னு தெரியல. My mhega is like magic for me.” என்று நினைத்த கௌத்தம் விஷ்வா மற்றும் மேகாவை பின் தொடர்ந்து சென்றான்.
மேகாவை யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்ற விஷ்வா “என்னடி எல்லார் முன்னாடியும் அவன்க்கூட அப்படி ஆடிட்டு இருக்க.. அறிவில்லையா உனக்கு..?? உனக்கு மேரேஜ் ஆயிடுச்சி. நான் கட்டுன தாலி உன் கழுத்துல தொங்கிட்டு இருக்கு. உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா..??” என்று கோபமாக கேட்க,
அவன் கையை உதறிவிட்ட மேகா “என்ன question பண்றதுக்கு முன்னாடி முதல்ல நீ என்ன பண்ணேன்னு யோசிச்சு பாருடா. நீ மட்டும் அந்த மேனாமினுக்கி கூட ஒட்டிக்கிட்டு உரசிக்கிட்டு dance ஆடலாம். நான் மட்டும் கௌத்தம் கூட ஆட கூடாதா..?? நான் யார் கூட வேணாலும் ஆடுவேன். அதெல்லாம் நீ கேக்க கூடாது.” என்று போதை ஏறிய குரலில் தன் ஆள்காட்டி விரலை அவன் முகத்திற்கு நேராக நீட்டி கோபமாக சொன்னாள்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️ இந்த நாவலை இலவசமாக நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் வெப்சைட்டில் படிக்கலாம் ✅)