அத்தியாயம் 151
சாராவும், அனுப்பமாவும் மேகாவை அழைத்துக் கொண்டு dance floorக்கு சென்றார்கள். அங்கே பல வண்ண party lightsகள் அவர்களது கண்களை கூச, DJ play செய்த music அந்த இடம் முழுவதும் high volumeல் எதிரொலிக்க, அனைவரும் கையில் alcohol கிளாஸுடன் ஜோடி ஜோடியாக ஆங்காங்கே ஆடிக் கொண்டு இருந்தார்கள்.
அதுவரை அங்கே தானும் ஒரு பெண்ணுடன் ஆடி கொண்டிருந்த ரிஷி சாரவை பார்த்தவுடன் “I have to go, bye.” என்று அவளிடம் சொல்லிவிட்டு சாராவிடம் ஓடிச் சென்றான். மூச்சு வாங்க அவன் அவளைப் பார்த்து, “என் கூட dance ஆட வரியா..??” என்று கேட்க, “இவ்ளோ நேரம் உன் கூட ஒரு aunty dance ஆடிட்டு இருந்தாங்களே.. போய் அவங்க கூடயே ஆடு. என்னை எதுக்கு கூப்பிடுற..??” என்று கேட்ட சாரா தன் உதட்டை சுளித்தாள்.
“என்னது auntyஆ.. அந்த பொண்ணு உன்னவிட கொஞ்சம் அழகா இருக்கான்னு சும்மா பொறாமைல சொல்லாதடி. அவள பாத்தா உனக்கு aunty மாதிரியா தெரியுது..??” என்று ரிஷி கேட்க, “ஆமா எனக்கு அப்படித்தான் தெரியுது. உனக்குதான் கண்ணு ஒழுங்கா தெரியலன்னு நினைக்கிறேன். போய் நல்ல டாக்டரா பாரு.” என்றாள் சாரா.
“போதும் வாய மூடு. அவ எவ்ளோ அழகா dance ஆடுனா தெரியுமா..??” என்று அவன் feel செய்து சொல்ல, “ம்ம்.. தெரியுமே.. அவங்க நல்லா dance ஆடுவாங்க. நீ சொன்ன மாதிரி பாக்கவும் அழகா இருப்பாங்க. But என்ன பண்றது.. age தான் எப்படியும் 40+ இருக்கும். நீ ஆசைப்பட்டாலும் அவங்கள உன்னால கரெக்ட் பண்ண முடியாது. Because அவங்களுக்கு ஒரே ஒரு தடவை கல்யாணம் ஆயிடுச்சு.” என்றாள் அவள்.
“அடிப்பாவி.. என்னமோ அந்த பொண்ண பத்தி உனக்கு எல்லாமே தெரிஞ்ச மாதிரி எதுக்கு இப்படி இஷ்டத்துக்கு ரீல் சுத்துற…?? இது மட்டும் அந்த பொண்ணு காதுல விழுந்துச்சுனா பாவம் அவளுக்கு எவ்ளோ hurtingஆ இருக்கும்.. வாய மூடு.” என்று ரிஷி சொல்ல, சத்தமாக சிரித்த சாரா “எனக்கு தெரிஞ்சதனால தாண்டா சொல்றேன். அந்த auntyஐ கூப்பிட்டு கூட இத சொல்லுவேன். அவங்க பேரு சோபனா. அவங்க பொண்ணு சுகாசினி என் schoolmate. என் வயசுல அவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கு. அப்போ அவங்க உனக்கு aunty இல்லையா..??” என்று கேட்டாள். “அப்ப நிஜமாவே அது aunty தானே.???” என்று நினைத்து ஷாக்கான ரிஷி, “இப்ப.. அவங்க auntyஆ இருந்தாத்தான் என்ன..?? இப்படி ஒரு beautifulஆன aunty கூட சேர்ந்து danceஆட chance கிடைச்சதுல எனக்கு சந்தோசம் தான். போடி…” என்று சொல்லி சமாளித்தான்.
அதுவரை அமைதியாக இருந்த மேகா “நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் தேவையா ரிஷி..??” என்று கேட்க, “I am sorry அண்ணி. இனிமே பாருங்க எல்லாத்தையும் யோசிச்சு கரெக்டா பண்றேன். நீ வா சாரா நம்ம போய் dance ஆடலாம்.” என்ற ரிஷி சாராவின் கையை பிடித்து இழுத்தான்.
“நான் போகட்டுமா மேடம்..??” என்று கேட்பதை போல அவள் மேகாவை பார்க்க, “போங்க.. போங்க.. போய் partyஐ enjoy பண்ணுங்க.” என்று சிரித்த முகமாக அவள் சொன்னதால் ரிஷியுடன் danceஆட சென்றாள் சாரா. மகேஷ் ஓரமாக நின்று சோகமாக குடித்துக் கொண்டிருப்பதை கவனித்த அனுப்பமா “ஒரு நிமிஷம் இருங்க மேடம் வந்துடுறேன்.” என்று மேகாவிடம் சொல்லிவிட்டு அவன் அருகில் சென்றாள்.
அவளைப் பார்த்தவுடன் “நீ dance ஆட போகலையா..??” என்று போதை ஏறிய குரலில் மகேஷ் கேட்க, “எனக்குதான் என் கூட சேர்ந்து ஆட partner இல்லையே.. அப்புறம் நான் யார்க்கூட dance ஆடுறது..??” என்று கேட்டாள் அனு.
“உனக்கும் இல்லையா..?? எனக்கும் இல்ல. எனக்கே எனக்குன்னு கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் இருந்தா ஒருத்தி. இப்போ அவ இன்னொருத்தனுக்கு wifeஆகி அவன் குழந்தைக்கு அம்மாவாவும் ஆகப் போறா..!! நான் பாத்தியா இப்படி தனியா நின்னு தேவதாஸ் மாதிரி feel பண்ணி குடிச்சிட்டு இருக்கேன்..!!” என்ற மகேஷ் பின் போதையில் “நான் தண்டச்சோறு கிங்கு.. Tamil is my mother tongueக்கு.. I am single and I am youngஉஉஉ…!!!” என்று பாடிக் கொண்டு இருந்தான்.
“இன்னும் நீங்க அவங்கள மறக்கலையா..??” என்று அனு கேட்க, “எப்படி டி மறக்க முடியும்..?? அவள நான் எங்க வச்சிருந்தேன் தெரியுமா.. இங்க.. இங்க.. வச்சிருந்தேன்டி.” என்று தன் நெஞ்சை தட்டி சொன்னவன், “என் heart, liver, kidney, lungs எல்லாத்துலயும் என் ஹர்ஷினி சொல்லம் தான் இருந்தா. அடுத்த மாசம் அவ birthday வரப்பகுது தெரியுமா.. அன்னைக்கு surprise plan பண்ணி அவளுக்கு marriage proposal பண்ணலாம்னு இருந்தேன். ஆனா அவ.. அதுக்கு முன்னாடியே எனக்கு பெரிய ஷாக்கா குடுத்துட்டு எனக்கு tata காட்டிட்டு வேற ஒருத்தன் கூட ஓடி போயிட்டா…!!” என்று உடைந்த குரலில் சொன்ன மகேஷ் விட்டால் அழுது விடுவேன் என்ற நிலைமையில் இருந்தான்.
“இவரை இப்படி பாக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.” என்று நினைத்த அணு “சரி விடுங்க. அவங்களையே நெனச்சு feel பண்ணிட்டு இருக்காம move on ஆக பாருங்க. எனக்கு இப்படியே நின்னு மத்தவங்கள வேடிக்கை பார்த்துட்டு இருக்க boringஆ இருக்கு. என்கூட dance ஆட வரீங்களா ப்ளீஸ்..??” என்று கேட்க, “நானா.. உன் கூடவா..??” என்று கேட்டான் மகேஷ்.
“ஆமா என்கூட தான். ஏன் உங்களுக்கு என் கூட dance அட பிடிக்கலையா..??” என்று அவள் சோகமாக கேட்க, “அப்படிலாம் இல்ல. என்கூடயும் ஒரு பொண்ணு dance ஆடணும்னு ஆசைப்படுறான்னு என்னால நம்ப முடியல. அதான்.. அப்படி கேட்டேன். சரி வா.. நம்ம போய் ஆடலாம்.” என்ற மகேஷ் போதையில் தட்டு தருமாறு அவள் கையை பிடித்துக்கொண்டு dance ஆட சென்றான்.
வந்திருக்கும் மற்றவர்களுடன் பேச பிடிக்காமல் மறைந்து ஒரு ஓரமாக இருந்த tableல் மேகா அமர்ந்திருக்க, தூரத்தில் கையில் ஒரு கிளாஸ் மதுவுடன் நின்று கொண்டிருந்த ஒருவன் அவளையே கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். மேகாவின் tableக்கு சென்ற server “mam do you want any drinks??” என்று கேட்க, “no thanks. நான் குடிக்க மாட்டேன்.” என்றாள் அவள்.
“இதுல alcohol content கம்மியா தான் இருக்கும். Just one shot மட்டும் try பண்ணி பாருங்க. உங்களுக்கு இது கண்டிப்பா பிடிக்கும்.” என்று server சொல்ல, “ஒன்னு தானே.. இத குடிச்சா என்ன ஆகிட போகுது..??” என்று நினைத்த மேகா அவன் கொண்டு வந்த drinkல் ஒன்றை எடுத்து குடித்தாள்.
அதன் taste அவளுக்கு பிடித்துப் போக, அவளையும் மீறி 2, 3, 4, 5 என்று தொடர்ந்து குடித்த மேகா அவன் கொண்டு வந்த trayவில் இருந்த அத்தனையையும் குடித்து தீர்த்தாள். அப்போதும் அந்த server “Mam, do you want more?” என்று கேட்க, “No… No.. இதுவே போதும். நான் நிறைய குடிச்சிட்டேன். என்னமோ alcohol content இதுல கம்மி. சோ போதை ஏறாதுன்னு சொன்னீங்க.. ஆனா இப்பவே எனக்கு பாக்குறது எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுது. ஏன் அப்படி ஆகுது..??” என்று போதை ஏறிய குரலில் அவனிடம் கேட்டாள் மேகா.
“மேம் நான் உங்கள one shot தான் எடுத்துக்க சொன்னேன். நீங்க extra குடிச்சிட்டீங்க. அதான் அப்படி இருக்கு.” என்று server சொல்ல, “அட ஆமா.. அது குடிக்க ரொம்ப நல்லா இருந்துச்சா.. அதான் நிறைய குடிச்சிட்டேன். சரி நீங்க போங்க.” என்றாள் மேகா. பின் ஏற்கனவே போதையில் இருந்த மேகாவிற்கு அங்கிருந்த party atmosphereம், musicம் இன்னும் போதை ஏற்றிவிட, அவளுக்கு dance ஆட வேண்டும் போல இருந்தது. அதனால் தட்டு தடுமாறி எழுந்து dance floorக்கு சென்றாள்.
மேகாவை தேடிக்கொண்டு விஷ்வாவும் அங்கே சென்றான். மேகாவை பார்த்துவிட்டு “பாவம்.. எல்லாரும் இங்க ஜோடி ஜோடியா dance ஆடிட்டு இருக்காங்க. இவ மட்டும் தனியா சுத்திட்டு இருக்கா.” என்று நினைத்து அவன் அவள் அருகில் செல்ல போக, தனது அப்பா தினகரனுடன் அந்த partyக்கு வந்திருந்த காவியா அவனைப் பார்த்துவிட்டு வேகமாக அவன் அருகில் ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டு “ஹாய் விஷ்வா.. How are you..?? School daysக்கு அப்புறம் நீ நம்ம cool friends கூடயெல்லாம் ஏன் contactலயே இல்ல.. நம்ம பேருக்கு தான் ஒரே ஊர்ல இருக்கோம். நான் உன்னை ரீச் பண்ண எவ்ளோ try பண்ணேன் தெரியுமா.. என்னால உன் mobile numberஐ கூட கண்டுபிடிக்க முடியல. finally இன்னைக்கு நான் உன்னை நேர்ல்ல மீட் பண்ணிட்டேன். I am so happy to see you.” என்று அவள் பாட்டிற்கு பேசிக் கொண்டே போனாள்.
Formalityகாக “ஹலோ..!!” என்ற விஷ்வாவிற்கு “யாருடா இவ.. இவ மூஞ்சிய எல்லாம் எப்பயோ school படிக்கும்போது பார்த்தது. இத்தனை வருஷம் கழிச்சு இப்ப வந்து பேசி உயிரை வாங்கிட்டு இருக்கா..!!” என்று கடுப்பாக இருக்க, நாசுக்காக அவளை தன்னைவிட்டு விளக்கி நிறுத்தினான்.
அப்போதும் அவள் அவன் கையை பிடித்துக் கொண்டு அவன் தோள்களில் சாய்ந்தவாறு “ஆமா.. உனக்கு marriage ஆயிடுச்சுல்ல.. நீ ஏன் என்ன invite பண்ணவே இல்ல..??” என்று கேட்க, “ம்ம்ம்.. மறந்துட்டேன். கொஞ்சம் கையை எடுத்துட்டு நேரா நின்னு பேசுறியா..??” என்று கேட்டான் விஷ்வா.
“அட போ.. விஷ்வா இன்னும் நீ மாறவே இல்ல. கல்யாணமே ஆயிடுச்சு. இன்னுமா இப்படி எல்லாத்துக்கும் shyஆ feel பண்ணிட்டு இருப்ப..??” என்ற காவியா வலுக்கட்டாயமாக “வா..நம்மளும் போய் dance ஆடலாம்.” என்று சொல்லி அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு dance floorக்கு சென்றாள்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️ இந்த நாவலை இலவசமாக நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் வெப்சைட்டில் படிக்கலாம் ✅)