அத்தியாயம் 233: உன்னிடம் மயங்குகிறேன் (பார்ட் 1)
ரித்திகாவின் அறையில்…
ஒரு நொடியில் எதைப்பற்றியும் யோசிக்காமல் ரித்திகாவை பிடித்து இழுத்து பெட்டில் அமர வைத்து அவளுடைய உதட்டில் உணர்ச்சி பொங்க முத்தமிட தொடங்கியவன்; அவளை பெட்டில் தள்ளி அவள் மீது படர்ந்தான் வருண். 😍 🤗 😗 😘 👩❤️👨 அவனுடைய இந்த வினோதமான திடீர் செய்கைகளால் குழம்பிய ரித்திகாவும், என்ன நடக்கிறது இங்கே என்பது போல ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் வருணை பார்த்து கொண்டே இருந்தாளே தவிர அவளால் வேறு எதுவும் செய்து விட முடியவில்லை.😍
மெது மெதுவாக முன்னேறிய வருண், அவளுள் தன்னை தொலைக்க விருந்து தருணம், இதே போன்று அவன் ஜான்வியுடன் நெருக்கமாக இருந்த தருணம் அவனுக்கு ஞாபகம் வர; இப்போது அவன் ஜான்வியை முத்தமிட்டு கொண்டு இருப்பதைப் போல் அவனுக்கு ஒரு கணம் தோன்ற; ரித்திகாவின் இதழ்களில் இருந்து தன்னுடைய இதழ்களை பிரித்து கொண்ட வருண் மெலிதான குரலில், “ஜான்வி” என்று முனுமுனுத்தான். அவன் மெதுவாக சொல்லி இருந்தாலும், அது ரித்திகாவிக்கு தெளிவாகவே கேட்டது. அதனால் தான் அதுவரை இருந்த மோனநிலையில் இருந்து சட்டென்று வெளிவந்த ரித்திகா, வேகமாக தன்னுடைய கண்களை திறந்து வருணின் கண்களை நேருக்கு நேராக பார்த்தாள்.
ரித்திகாவின் அந்த பார்வை வருணை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தி அவனை கொன்றது. 😞 💔 ஆனால் இப்போது அவன் எதற்காக குற்ற உணர்ச்சியில் இருக்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை. ஒரு வேளை அவன் தன் ஜான்வியின் இடத்தை இதனை எளிதாக புதிதாக வந்த ரித்திகாவிக்கு தூக்கிக் கொடுக்கவிருந்ததை நினைத்து அவன் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறானா…?? இல்லை ரித்திகாவுடன் இருக்கும்போது அவன் இறந்து போன ஜான்வியை பற்றி நினைத்து அவளுடைய பெயரை ரித்திகாவிடம் சொன்னதற்காக ரித்திகா என்ன நினைப்பாளோ என்று நினைத்து குற்ற உணர்ச்சியில் தவிக்கிறானா..?? என்று அவனுக்கே புரியவில்லை. 🙄 😞
அதனால் ரித்திகாவிடம் இருந்து விலகியவன், “ஐ அம் சாரி.” என்று சொல்லிவிட்டு வேறு புறமாக திரும்பிப் படித்துக் கொண்டான். அவனுடைய இதயம் வேகமாக துடித்துக் கொண்டு இருந்தது. ❤️ வருண் சட்டென்று ஜான்வியின் பெயரை சொன்னதால், அவன் இப்போது என்ன மன நிலையில் இருக்கிறான் என்று நன்கு புரிந்து கொண்ட ரித்திகா, அவளும் அமைதியான குரலில் “இட்ஸ் ஓகே.” என்று சொல்லிவிட்டு வேறு ஒரு புறமாக திரும்பிப் படித்துக் கொண்டாள்.
ஆனால் அவர்கள் இருவருமே உறக்கம் வராமல் தவித்தனர். அவ்வப்போது ரித்திகா உறங்கி விட்டாளா என்று வருனும், வருண் உறங்கி விட்டானா என்று ரித்திகாவும், ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் ஓரக்கண்ணால் திரும்பி பார்த்துக் கொண்டனர். தன்னுடைய கண்களை மட்டும் மூடிக்கொண்டு படுத்து இருந்த ரித்திகா தனக்குள், “அவரோட இந்த பிஹேவியர நம்ப எப்படி எடுத்துக்கறதுன்னு தெரியலையே…!!! ஒரு வேளை அவருக்கு என்ன பிடிக்க ஆரம்பிச்சிடுச்சோ…?? இல்லனா கல்யாணத்துக்கு முன்னாடி நான் அவர்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்க கூடாது, அவர் என்கிட்ட ஹஸ்பண்டா நடந்துக்கணும்னு நான் எதிர்பார்க்க கூடாது, அப்படி இப்படின்னு பேசினவரு ஏன் இப்ப இப்படி பிஹேவ் பண்ணனும்..??? இன்கேஸ் இப்போ அவரோட மைண்ட் செட் மாரி இருக்கலாம். ஆர் இது எல்லாமே ஜஸ்ட் ஹீட் ஆப் எமோஷன் ஆர் மொமென்ட் -ல பண்ணி இருக்கலாம்.” என்று சில நிமிடங்கள் வருணை பற்றி யோசித்தவள் பின்,
“வெயிட்..!! அவர் என்னமோ பண்ணிட்டு போறாரு. அவர் மைனட் -ல என்னமோ ஓடட்டும். நீ இப்ப என்ன பண்ணிட்டு இருக்க ரித்திகா..??? நீயும் அவர்கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடி அந்த மாதிரி தானே பேசுன… ஆனா அவர் வந்து கிஸ் பண்ண உடனே, நீ என்ன வேணான்னு சொல்லி அவரை தள்ளி விட்டுட்டியா என்ன..?? அவரா ஸ்டாப் பண்ணாம இருந்து இருந்தா, நீ லாஸ்ட் வரைக்கும் அமைதியாவே தானே இருந்திருப்ப..??” என்று அவளுடைய மனசாட்சி அவளிடம் கேள்வி கேட்டது. ஆனால் அந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தான் அவளுக்கு தெரியவில்லை.
இப்படியே வருனும், ரித்திகாவும், ஒருவரை பற்றி ஒருவர் யோசித்தபடி வெகு நேகமாக தூங்காமல் தவித்துக் கொண்டு இருந்தனர். பின் சில நிமிடங்களில் கரண்ட் வந்துவிட, தங்களை அறியாமல் சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் தானாக தூங்கிவிட்டனர்.
அடுத்த நாள் காலை…
காலை 7: 27 மணி…
ரித்திகாவின் அறையில் வருண், ரித்திகாவும், இருவருமே ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துதனர். 💒 ⛅ 👩❤️👨 அப்போது வருணின் மொபைல் போன் -க்கு கால் செய்த செண்பகம், “வருண், நான் உனக்கும், சித்தார்த்துக்கும், சிவா கிட்ட டிரஸ் ஐ குடுத்து அனுப்புறேன். ரித்திகாவுடைய டிரஸ் எப்படியும் அவ வீட்ல அங்கயே இருக்கும். சோ பிரச்சனை இல்ல. நீயும் அவளும் சீக்கிரமா கிளம்பி இங்க வாங்க.” என்று அவசரமான குரலில் சொன்னாள்.
வருண்: நாங்க அங்க கிளம்பி வர்றதெல்லாம் ஓகே தான். ஆனா நீங்க ஏன் இவ்ளோ டென்ஷனா பேசுறீங்க.. ஏதாவது பிராப்ளமா அம்மா…??? நான் வேணா உடனே அங்க வரட்டுமா..??
செண்பகம்: “அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. நீ இங்கே கிளம்பி வா பாத்துக்கலாம்.” என்றவள், இதற்கு மேல் தான் பேசிக் கொண்டிருந்தால் இவன் தன்னிடம் கேள்வி கேட்டு கொண்டே இருப்பான் என்று நினைத்து அந்த காலை துண்டித்து விட்டாள்.
ரித்திகா: அரை தூக்கத்தில் தன்னுடைய கண்களை தேய்த்தபடியே எழுந்து அமர்ந்தவள், “என்ன ஆச்சு ஏதாவது ப்ராப்ளமா ஏன் உடனே வர சொல்றாங்க அம்மா..?? அவங்க தானே இரண்டு மூன்று நாள் இருந்துட்டுவாங்கன்னு சொல்லி நம்மள அனுப்பி விட்டாங்க..!!!” என்று கேட்டாள்.
வருண்: “தெரியல. சிவா கிட்ட டிரஸ் ஐ கொடுத்து விடுகிறேன்னு அம்மா சொன்னாங்க. அவன் வந்த உடனே சீக்கிரம் நீ சித்தார்த்தை ரெடி பண்ணிடு. நீயும் கிளம்பு.” என்றவன், வேகமாக எழுந்து கிளம்ப தொடங்கினான்.
ஆடைகளை கொடுக்க வந்த சிவாவிடம் என்ன ஆனது என்று விசாரித்தான் வருண். அவனிடம் மட்டும் எதையோ சீக்ரடாக சொன்னன சிவா, “அதான் மேடம் உங்களை கிளம்பி வர சொல்லி இருக்காங்க.” என்றான். “சரி விடு. நான் பாத்துக்குறேன். நீ வீட்டுக்கு போ.” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டு வேகவேகமாக கிளம்பி தன்னுடைய மகனையும் ரித்திகாவையும் அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்குகு சென்றான்.
நாராயணன் பேலஸுல்…
வருண் குடும்பமாக தன்னுடைய வீட்டிற்குள் நுழைய, செண்பகத்துடன் ஹாலில் ஒரு வயதான தம்பதிகள் அமர்ந்து பேசி கொண்டு இருப்பதை கவனித்த ரித்திகா, “இவங்க யாருன்னு தெரியலையே…!!! இவங்க வந்திருக்காங்கன்னு தான் அம்மா உடனே எங்களை கிளம்பி வர சொல்லிட்டாங்க போல.” என்று நினைத்தவள், வருனுடன் உள்ளே வந்தாள். 👪 வருண் குடும்பமாக உள்ளே வருவதையும், சித்தார்த் ரித்திகாவுடன் நன்றாக ஒட்டி கொண்டு இருப்பதையும் பார்த்த அந்த வயதான பெண்மணி அவர்களை கண்டு ஏளனமாக புன்னகைத்தாள். 😁😁 😁 அந்தப் பெண்மணியின் கணவர் வருணை பார்த்து லேசாக முறைத்தார். 😒 🤨
அவர்களைக் கண்டு லேசாக புன்னகைத்த வருண் அவர்கள் அருகே சென்று, “ஹலோ ஆன்ட்டி, ஹலோ அங்கிள்.” என்றான். 😁 😁 😁 ரித்திகாவும் அவர்களை பார்த்து மரியாதை நிமித்தமாக கையெடுத்து கும்பிட்டாள். 🙏 வருணை குறுகுறு வென்று பார்த்தபடி இருந்த அந்த வயதானவர், “ஸ்டில் உங்களுக்கு எங்கள ஞாபகம் இருக்கிறதுன்னு நினைத்தாலே ரொம்ப ஆச்சரியமா இருக்கு மிஸ்டர் வருண் நாராயணன்.” என்று ஹிந்தியில் சொன்னார்.
வருண்: “ஏன் அங்கிள் இப்படி சொல்றீங்க என்னால எப்படி உங்களை மறக்க முடியும்..???” என்று அவனும் ஹிந்தியில் பதில் சொன்னான்.
அந்த வயதானவர்: இப்போது அவனைப் பார்த்து நக்கலாக சிரித்தவர், “நீங்க எங்கள எந்த அளவுக்கு ஞாபகம் வச்சிருக்கீங்கன்னு எங்களுக்கு தான் ரொம்ப நல்லா தெரியுமே…!!!” என்றார் ஹிந்தியில். 😁 😁 😁
அதுவரை அமைதியாக அமர்ந்து இருந்த அந்த வயதானவரின் மனைவி இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாமல் எழுந்து நின்றவள், “நீங்களும் எங்கள மறந்துட்டீங்க. எங்க பேரனுக்கும் எங்கள மறக்கடிக்க வச்சிட்டீங்க. அவனுக்கு இப்ப அவன் அம்மா யாருன்னு கூட ஞாபகம் இல்லை. அதுக்குள்ள அவனுக்கு புது அம்மா வந்தாச்சு.
உலகத்துக்கே மிஸ்டர் வருண் நாராயணன் ஓட மேரேஜ் ஐ பத்தி தெரிஞ்சிருக்கு. அப்படி தான் நாங்களும் நியூஸ்ல பார்த்து தெரிஞ்சுக்கிட்டோம். நீங்களும் உங்க நியூ வைஃபும் எப்படி எல்லாம் ஹேப்பியா வாழ்றீங்கன்னு டெய்லியும் புதுசு புதுசா அப்டேட் வருது. ஆனா இப்ப வரைக்கும் ஒரு வார்த்தை கூட இந்த கல்யாணத்தை பத்தி என்கிட்ட சொல்லணும்னு உங்களுக்கு தோணவே இல்லல்ல..???
ஆமா, எங்க பொண்ணு ஜான்வி செத்துப் போயிட்டா. அதனால நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கலாம். அதுல ஒன்னும் தப்பு இல்ல. நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கன்னு நாங்க கேக்குறதுக்கு ஒன்னும் இங்க வரல. நாங்க எங்களோட பேரன் எப்படி இருக்கான்னு பாத்துட்டு, இந்த கல்யாணத்தை பத்தி ஒரு இன்பர்மேஷன் சொல்ற அளவுக்கு கூட நாங்க உங்களுக்கு வேண்டாத ஆள் ஆயிட்டமான்னு கேட்டுட்டு போலாம்னு தான் வந்தோம்.” என்று சற்று கோபம் நிறைந்த குரலில் ஹிந்தியில் சொன்னாள் ஜான்வின் அம்மா சோனியா மேத்தா. 😡 😤
அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று செண்பகத்திற்கும், ரித்திகா விற்கும், புரியவில்லை என்றாலும் கூட, நிலமை சரி இல்லை என்று மட்டும் அவர்கள் நினைத்துக் கொண்டனர். சோனியா என்ன தான் தன்னிடம் குரலை உயர்த்தி பேசினாலும் ஒரு தாயாக தங்களுடைய மகளின் இறப்பிற்கு பின் அவள் வாழ்ந்த வீட்டில் தங்களுக்கு ஒரு மரியாதையும் இல்லையே என்று நினைத்து அவர் வருத்தப்படுவதை புரிந்து கொண்ட வருண், “ஐ அம் சாரி ஆன்ட்டி. நீங்க கோபப்படுறதில ஒரு நியாயம் இருக்கு தான். என்னோட ஆபீஸ் அட்மின் ஆபீஸியல்லா இன்விடேஷன் அனுப்ப வேண்டியவங்களுக்கு மட்டும் அனுப்பிட்டாங்க. உங்களைன்னு இல்ல, பர்சனலா நான் யாரையுமே இன்வைட் பண்ணல.
நான் ரீசன் என்ன சொன்னாலும், உங்ககிட்ட நான் இத பத்தி இன்பார்ம் பண்ணாம இருந்தது தப்பு தான். உண்மைய சொல்லனும்னா, எனக்கு இந்த கல்யாணத்துல பெருசா இன்டெரெஸ்ட்டே இல்ல ஆன்ட்டி. நானும் சரி, ரித்திகாவும் சரி, சித்தார்த்துக்காக தான் இந்த மேரேஜ் -ஜயே பண்ணிக்கிட்டோம். இந்த கல்யாணமே நிறைய பிரச்சனைக்கு நடுவுல தான் நடந்துச்சு. கல்யாணம் முடிஞ்சும் பிராப்ளம் வந்துருச்சு. சொல்லப்போனா கொஞ்ச நாளாவே நான் டென்ஷன்ல தான் சுத்திக்கிட்டு இருக்கேன்.
பட் நான் இன்வைட் பண்ணலினாலும் நீங்க என்னோட மேரேஜுக்கு வந்திருந்தா, நான் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன். இது உங்க பொண்ணோட வீடு. நீங்க இங்க எப்ப வேணாலும் வரலாம். சித்தார்த் கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம். ஜான்வி இப்ப இல்லைன்றதுக்காக எதுவுமே இல்லைன்னு ஆகிறது ஆன்ட்டி. அகைன் நான் சாரி கேட்டுக்கிறேன். நான் எதைப் பத்தியும் யோசிக்கிற மைண்ட் செட் -ல அப்பவும் இல்ல இப்பவும் இல்லை.
என் ஜான்வி எப்ப செத்துப் போனாளோ அப்பவே நானும் செத்துப் போயிட்டேன் ஆன்ட்டி. இப்ப நீங்க பார்க்கிறது உண்மையான வருண்னே இல்ல . ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் மீ. என்ன தப்பா நினைக்காதீங்க.” என்று கலங்கிய கண்களுடன் சொன்னான். 😥 😰
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)