Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 184

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 184

by Thenaruvi Tamil Novels
3 views

அத்தியாயம் 184: ஐ லவ் யூ (பார்ட் 1)

இன்று வருண் மற்றும் ரித்திகா நிச்சயதார்த்தம் என்பதால் நாராயணன் பேலஸ் ஏ விழாக்கோலம் பூண்டு இருந்தது. வழக்கத்தை விட அதிகமாக அந்த இடம் முழுவதும் அதிக பாடி கார்டுகள் குவிக்கப்பட்டு இருந்தனர். ரித்திகாவின் குடும்பத்தினர் காலை நேரமாக எழுந்து கிளம்பி ஷாலினியையும் தங்களுடன் கூட்டி கொண்டு நாராயணன் பேலஸ்க்கு வந்து சேர்ந்தனர்.

ரித்திகா ஒரு சாதாரண பட்டுப் புடவை அணிந்திருந்தாள். ஷாலினியும் அதே போல தான் இருந்தாள். ரித்திகாவிற்கு செண்பகம் ஏற்கனவே ஏராளமான பட்டுப்புடவைகளையும் விலை உயர்ந்த ஆடைகளையும் வாங்கிக் கொடுத்து இருந்தாலும், தாங்கள் வாங்கிய புடவையை தங்களுடைய மகளுக்கு கட்டி அழகு பார்க்க விரும்பிய ரித்திகாவின் பெற்றோர்கள், அந்த புடவையை கொடுத்து அவளை கட்டிக் கொள்ளும்படி ஆசையுடன் சொன்னார்கள். 

தன்னுடைய வீட்டிற்கு வந்த ரித்திகாவையும் அவளுடைய பெற்றோர்களையும் வரவேற்ற செண்பகம், ரித்திகா கட்டியிருந்த புடவையை குறுகுறுவென்று பார்த்தாள். அவளுடைய பார்வையின் அர்த்தத்தை உணர்ந்து கொண்ட ரேவதி, “இந்த புடவை ரித்திகாவோட அப்பா அவளுக்காக ஆசையா வாங்குனது. அதான் அவளை இதையே கட்டிக்க சொல்லி கூட்டிட்டு வந்தோம்.” என்று சிறு தயக்கத்துடன் சொன்னாள். ரேவதியையும், சுதாகரையும், சங்கடமான முகத்துடன் பார்த்த செண்பகம்; “நான் இப்படி சொல்றனேன்னு என்ன தப்பா நினைச்சுக்காதீங்க அண்ணி. நம்ம குடும்பத்துக்குன்னு இன்னொரு கௌரவம் இருக்கு. இவ எங்க வீட்டு மருமகளாக போறவ. இந்த மாதிரி ஒரு புடவையில மண்டபத்துக்கு கூட்டிட்டு போனா, பாக்குகுறவங்க எங்கள பத்தி என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சு பாருங்க. 

அவ கல்யாணம் ஆகி இங்க வந்தாலும் உங்க வீட்டு பொண்ணு தான். நீங்க ஆசைப்பட்டு அவளுக்கு என்ன வேணாலும் நீங்க செய்யறதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு. ஆனா பொது இடத்துக்கு வரும்போது  நம்மளோட குணத்தை விட நம்மளோட தோற்றத்த வச்சு தானே மதிக்கிறாங்க. என் மருமக எல்லார் முன்னாடியும் கெத்தா நிக்கணும்னு ஆசைப்படறேன். என்ன தப்பா நினைச்சுக்காதீங்க. அவ போய் வேற புடவை மாத்திட்டு வரட்டும். அப்புறமா நம்ம மண்டபத்துக்கு கிளம்பலாம்.” என்று தங்கி தயங்கி சொன்னாள்.

அமைதியாக ரேவதியும் சுதாகரும் ஒருவரை ஒருவர் தங்களுடைய முகத்தை பார்த்துக் கொண்டனர். ரித்திகாவிற்கு  அவளுடைய பெற்றோர்கள் வாங்கி கொடுத்த புடவையை குறைந்தபட்சம் நிச்சயதார்த்தம் நடப்பதற்கு முன்பு வரை ஆவது கட்டியிருக்கலாம் என்ற ஆசை இருந்தது. அதனால் அவள் தன் வாயை திறந்து செண்பகத்திடம் எதையோ சொல்ல வந்தாள். அதை புரிந்து கொண்ட ரேவதி வேகமாக ரித்திகாவின் கையை இறுக்கி பிடித்தவள், “நீங்க என்ன அர்த்தத்துல சொல்றீங்கன்னு எங்களுக்கும் புரியுது சம்பந்தி அம்மா. நாலு பேர் முன்னாடி எங்க பொண்ணு மரியாதையா நிமிர்ந்து நிக்கணும்னு நீங்க ஆசைப்படுறீங்க. அதை நினைக்கும் போது எங்களுக்கு சந்தோஷமா தான் இருக்கு. இப்ப என்ன நாங்க எடுத்து கொடுத்த புடவை ரித்திகா கிட்டயே தான் இருக்க போகுது அவ எப்ப வேணும்னாலும் அதை கட்டிக்கிட்டும். நீங்க அவளுக்கு வேற ஒரு புடவை எடுத்து கொடுங்க.” என்று அவசரமான குரலில் சொன்னாள். 

சுதாகருக்கும் அது தான் சரி என்று பட்டது அதனால் அவரும் எதுவும்் பேசவில்லை. தன் மனதில் இருப்பதை புரிந்து கொண்டு தன்னை ரித்திகாவின் பெற்றோர்கள் தவறாக எண்ணவில்லை என்று நினைத்து மகிழ்ந்த செண்பகம், சுகந்தியை அழைத்து ரித்திகாவை அவளுடன் தன்னுடைய அறைக்கு அனுப்பி வைத்தவள் அவளுக்கென புதிதாக வாங்கி வைத்திருந்த ஏதேனும் ஒரு பட்டுப்புடவையை கட்டிக்கொண்டு வரும்படி சொல்லி அனுப்பினாள். ரித்திகா வேறு வழி இன்றி அமைதியாக சுகந்தியுடன் சென்றாள். 

இன்று வருண் நிச்சயதார்த்தம் என்பதால் அனைவரும் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். இன்னும் இரண்டு நாட்களில் தன்னுடைய ரித்திஅம்மா தன்னுடனே இந்த வீட்டில் இருக்கப் போகிறாள் என்று நினைத்து மகிழ்ந்த சித்தார்த், காலையிலேயே நேரமாக எழுந்து குளித்து ரெடி ஆகி விட்டான். அவன் ஹாலுக்கு வரும் போது ரித்திகாவின் பெற்றோர்களுடன் ஷாலினி மட்டும் தான் அமர்ந்து இருந்தாள். அதனால் ஷாலினியின் அருகே ஓடிச் சென்ற சித்தார்த் அவளுடைய புடவையின் நுனியை பிடித்துக் கொண்டு, “ஷாலி ரித்தி அம்மா எங்க..???” என்று பாசமுடன் கேட்டான். 😍

அவனை கேஷுவலாக தூக்கி தன்னுடைய மடியில் அமர்த்தி வைத்து கொண்ட ஷாலினி, “புலிக்குட்டியோட ரித்திஅம்மா, ரெடியாக பாட்டி ரூமுக்கு போயிருக்காங்க. சீக்கிரம் வந்துருவாங்க.” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். அதைக்கேட்ட சித்தார்த், ரித்திகாவின் வருகைக்காக காத்திருக்க தொடங்கினான். சில நிமிடங்கள் கடந்து இருந்தும் ரித்திகா அங்கே வந்து இருக்க வில்லை. அதனால் மீண்டும் ஷாலினியை அழைத்த சித்தார்த், “என்ன ஷாலி இவ்ளோ நேரம் ஆகியும் ரித்திஅம்மாவ காணோம்… நீ போய் கூட்டிட்டு வா போ.” என்று அவளிடம் உரிமையாக சொன்னான். 

அதைக்கேட்ட ஷாலினி தான் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பமான முக பாவனைகளுடன் செண்பகத்தை பார்த்து கொண்டு இருந்தாள். செண்பகத்தின் முகத்திலும் குழப்ப ரேகைகள் தென்பட்டன. செண்பகத்திற்கு தெரிந்தவரை ரித்திகா அளவிற்கு சித்தார்த் யாரிடமும் இப்படி நன்கு பழகக் கூடியவன் இல்லை எனும் போது, இந்த ஷாலினியுடன் மட்டும் எப்படி சகஜமாக இப்படி பேசி கொண்டு இருக்கிறான் என்று செண்பகம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். 

அதனால் ஷாலினி தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை செண்பகம் கவனிக்கவில்லை. செண்பகத்தை அழைத்த ரேவதி, “ரித்திகா கிளம்பிட்டாளான்னு ஷாலினியை அனுப்பி போய் பாத்துட்டு வர சொல்லலாமா சம்பந்தி அம்மா…???” என்று சிறு தயக்கத்துடன் கேட்டாள். ஒருவேளை நிஜமாகவே ரித்திகாவிற்கு புடவை கட்ட தெரியாமல் தான் அவள் தயாராக லேட் ஆகிறதோ என்று நினைத்த செண்பகம் ஷாலினியை பார்த்து, “நீ போய் பாத்துட்டு வா மா. நல்ல நேரம் முடியறதுக்குள்ள நம்ம வீட்ல இருந்து கிளம்பி மண்டபத்துக்கு போகணும். அதுக்குள்ள நான் மத்தவங்க எல்லாரும் கிளம்பிட்டாங்களான்னு பார்த்து அவங்கள கீழ வர சொல்றேன்.” என்று சொல்லிவிட்டு எழுந்து நேராக சீதாவின் அறையை நோக்கி சென்றுவிட்டாள் செண்பகம்.

“ஓகே வெயிட், நான் போய் உன் ரித்திஅம்மாவ கூட்டிட்டு வரேன்.” என்று சொன்ன ஷாலினி தன் மடியில் இருந்த சித்தார்த்தை கீழே இறக்கிகி விட்டாள். ஆனால் செண்பகத்தின் அறை எங்கே இருக்கிறது என்று அவளுக்கு தெரியாததால் குழப்பத்துடன் சுற்றி முற்றி அங்கேயும் இங்கேயும் அவள் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளுடைய இந்த செய்கைகளை கவனித்த சித்தார்த், “நீ ரித்திஅம்மாவ கூட்டிட்டு வர போறேன்னு தானே சொன்ன..!!! அப்ப போக வேண்டியது தானே… அங்க போகாம இங்க நின்னுகிட்டு என்ன வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கிறவங்க மாதிரி வீட்டை சுத்தி பார்த்துட்டு இருக்க ஷாலி..???” என்று நக்கலாக கேட்டு சிரித்தான் சித்தார்த். 😂  😂 😂

தன் அருகே யாரும் இல்லை என்பதை சுற்றிமுற்றி பார்த்து உறுதி செய்து கொண்ட ஷாலினி சித்தார்த்தின் தலையில் கொட்டுவதை போல் பாவலா செய்தவள், “இந்த வாய்க்கு ஒண்ணும் உனக்கு குறைச்சல் இல்ல டா. நானே இப்ப தானே உங்க வீட்டுக்கு ஃபர்ஸ்ட் டைம் வரேன்.. உங்க பாட்டி ரூம் எங்க இருக்குன்னு எனக்கு எப்படி தெரியும்..???” என்று சற்று கோபத்துடன் கேட்டாள் ஷாலினி. 

சித்தார்த்: அவள் சொன்னதை அவன் புரிந்து கொண்டாலும் வேண்டும் என்றே… “இவ்வளவு பெருசா வளர்ந்திருக்க உனக்கு இது கூட தெரியலையா..??? லூசு ஷாலு…. ஃபர்ஸ்ட் ப்ளோர் -ல தான் பாட்டி ரூம் இருக்கு. அங்க இருக்கிற லிஸ்ட்ல போ.” என்று சொன்னவன் அங்கு ஓரமாக இருந்த லீஃப்டை அவளுக்கு கை காட்டினான். அதை வியப்புடன் பார்த்த ஷாலினி, “பார்ரா வீட்டுக்குள்ளயே லிப்ட் எல்லாம் வச்சிருக்காங்க. இந்த வீடு இப்படி இருக்கும் அப்படி இருக்கும்னு எத்தனை நாளா நான் மத்தவங்க சொல்லி தான் கேள்விப்பட்டு இருக்கேன். இன்னைக்கு ரித்திகா அக்காவால நான் இந்த வீட்டுக்கு வந்து இருக்கேன். ஒரு நாள் நான் செண்பகம் அம்மாவோட சம்பதத்தோட விஷ்ணுவ கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டோட மருமகளா இங்கே வரணும். அதுக்கு நீங்க தான் கொஞ்சம் மனசு வைக்கணும் கடவுளே…!!!!” என்று தனக்குள் நினைத்துக் கொண்ட ஷாலினி லிப்டில் ஏறி முதல் தளத்திற்கு சென்று கொண்டு இருந்தாள். 

அப்போது முதல் தளத்தில் இருந்த வருணின் அறையில் இருந்து வெளியே வந்த விஷ்ணு லிப்ட் -காக வெளியே காத்திருந்தான். சில நொடிகளில் லிப்டின் கதவுகள் திறக்க… அவனுடைய கண் முன்னே அவனுடைய தேவதை அவன் அவளுக்கென வாங்கி கொடுத்த புடவையில் அழகாக அவனுக்கு தரிசனம் கொடுத்தாள். ஆம் ஷாலினி விஷ்ணு முதன்முதலாக தனக்கு ஆசையாக வாங்கி கொடுத்த அதே புடவையை தான் இன்று மீண்டும் உடுத்தி கொண்டு வந்து இருந்தாள். 

நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured