Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 130

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 130

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 130

பிரிட்டோவும், கிளாராவும் தங்களது அன்பை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொண்டு இருந்தார்கள். அவளுக்கு பூங்கொத்தை பரிசாக கொடுத்த பிரிட்டோ அப்படியே அவளை தூக்கிக் கொண்டு கட்டிலின் அருகில் சென்று அவளுடன் அதில் விழுந்தான். அடுத்து அவன் என்ன செய்யப் போகிறான் என்று உணர்ந்து வெட்கத்துடன் புன்னகைத்த கிளாரா, “ஓய் டோர் ஓப்பன்ல இருக்கு.” என்றாள்.

“சாரி சாரி.. இதை வேற க்ளோஸ் பண்ண மறந்துட்டேன்.” என்ற பிரிட்டோ அவசரமாக எழுந்து சென்று டோரை லாக் செய்துவிட்டு “now I am ready!” என்றபடி கட்டிலில் விழுந்து கிடந்த கிளாராவின் மீது பாய்ந்தான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து பின்னிப்பிணைந்து போர்வைக்குள் உருள, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவர்களுடைய இனிமையான முனகல் ஒலிகள் அந்த அறை முழுவதும் நிறைந்தது.

அரை மணி நேரத்திற்கு பிறகு கிளாராவின் மென்மைகளில் தலை வைத்து மூச்சு வாங்க அவளை அணைத்துக் கொண்டு படுத்திருந்த பிரிட்டோ “லவ் யு பேபி!” என்று காதலுடன் சொல்ல, அவனை தன்னுடன் சேர்த்து அனைத்துக்கொண்ட கிளாரா அவனது மென்மையான கேசத்தை  வருடியவாறு “லவ் யூ டூ பேபி!” என்றாள். அவர்கள் இருவருக்கும் நடுவில் சில நிமிடங்கள் மௌனம் நிலவ, “நான் உன் கிட்ட ஒன்னு சொல்லணும். நீ கோபப்படாம, எதுவும் ரியாக்ட் பண்ணாம அமைதியா கேக்கணும். ஓகேவா?” என்று அவனிடம் மென் குரலில் கேட்டாள் கிளாரா.

அவள் இப்படி குதர்க்கமாக பேசினால் கண்டிப்பாக தன் மனம் வருத்தப்படும்படி தான் எதையாவது சொல்வாள் என்று நினைத்து பயந்த பிரிட்டோ தன் தலையை தூக்கி அவள் முகத்தை பார்த்து “நீ எதுவும் சொல்ல வேண்டாம். நான் இப்ப ஹேப்பியா இருக்கேன். இது மொமண்ட தயவு செஞ்சு ஸ்பாயில் பண்ணிடாத. I beg you please!” என்று கெஞ்சும் குரலில் சொல்ல, அவன் இதழ்களை தன் ஒற்றை கையால் மூடிய கிளாரா “ஒருவேளை நான் இதை இப்ப சொல்லாம விட்டுட்டா, maybe futureல எனக்கு இதை சொல்றதுக்கான chance கிடைக்காம போயிட்டா என்ன பண்றதுன்னு பயமா இருக்கு பிரிட்டோ.

நானும் இப்போ ரொம்ப ஹாப்பியா இருக்கேன். சோ இந்த டைம்ல இதை மனசார நான் உன் கிட்ட சொல்லணும்னு ஆசைப்படறேன். ஒருவேளை நாளைக்கு நான் இந்த பூமியை விட்டு போனாலும், எந்த regrets-ம் இல்லாம போகணும். இந்த ஒரு தடவை நான் சொல்றத பொறுமையா கேளு ப்ளீஸ்!” என்று கலங்கிய கண்களுடன் உடைத்த குரலில் சொன்னாள்.

அவள் பேசப்பேச “என்னமோ இப்பயே எனக்கு குட் பாய் சொல்லிட்டு போக போற மாதிரி எதுக்கு இவ இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கா?” என்று நினைத்து மனம் உடைந்த பிரிட்டோவின் கண்களில் ஏற்கனவே அருவி போல கண்ணீர் கொட்டத் தொடங்கி இருந்தது. தன் வாயை அவள் கையை வைத்து மூடிக் கொண்டிருந்ததால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக அவன் அவளை பார்த்தான்.

மற்றொரு கையால் தனது கண்ணீரை துடைத்த கிளாரா, “நான் இன்னும் எத்தனை நாள், இல்ல எத்தனை வருஷம் உயிரோட இருப்பேன்னு எனக்கே தெரியாது. Of course இதுவரைக்கும் எனக்கு டிரீட்மென்ட் குடுத்த எந்த டாக்டருக்கும் தெரியாது. இனிமே நான் அத பத்தி பேச விரும்பல. நம்ம சீஃப் கூட ஒரு ஸ்பெஷல் டாக்டர் டீமை அரேஞ்ச் பண்றதுக்கு யாருக்கும் தெரியாம ஒர்க் பண்ணிட்டு இருக்காருன்னு எனக்கு தெரியும்.

என் கண்டிஷன் என்னன்னு எனக்கே தெரியும் பிரிட்டோ. அதான் எவ்வளவோ ட்ரீட்மென்ட் பண்ணியும் எதுவும் ஆகாதுன்னு தெரிஞ்சிருச்சே.. அப்புறம் எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு? எனக்கு கிடைச்சிருக்கிற டைம் எவ்வளவா இருந்தாலும் அதை நான் உன் கூட ஸ்பென்ட் பண்ணனும்னு நினைக்கிறேன். தேவை இல்லாம என்னால ட்ரீட்மென்ட்ல டைம் வேஸ்ட் பண்ண முடியாது.

நான் இருக்கிற வரைக்கும் உன் கூட இருக்கேன். நம்ம ஹாப்பியா வாழலாம். பட் அதுக்கப்புறம்!” என்று சொல்லிவிட்டு தான் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க அப்படியே கண்களில் இருந்து நீர் வடிய ஒரு நொடி அமைதியானாள்.

தன் வாயில் இருந்த அவள் கையை எடுத்துவிட்ட பிரிட்டோ உடைந்த குரலில் “அதுக்கு அப்புறம் என்ன?” என்று கனத்த இதயத்துடன் கேட்க, “நான் செத்துப் போனதுக்கு அப்புறமா, கொஞ்சம் கூட கில்ட்டி ஃபீலிங் இல்லாம என்ன மறந்துட்டு உனக்குன்னு ஒருத்திய நீ கண்டுபிடிக்கணும் பிரிட்டோ. என்னை விட அதிகமாக நீ அவளை லவ் பண்ணனும். அவளுக்காக நீ வாழனும்.

நீங்க ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணிக்கிட்டு ஹாப்பியா இருக்கணும். நிறைய குழந்தைங்க பெத்துக்கோங்க. அப்ப கூட சென்டிமென்ட்டா சும்மா பொண்ணு பொறந்தா என் பெயர் எல்லாம் வைக்காத. என் கிட்ட இருக்கிற நெகட்டிவிட்டி தெரியாம கூட அந்த குழந்தைக்கு வந்துட கூடாது. நான் எங்க இருந்தாலும் சரி. நீ ஹாப்பியா இருந்தா மட்டும் தான் நான் ஹாப்பியா இருப்பேன். இது தான் என்னோட last wish. எந்த மறுப்பும் சொல்லாமல் நீ இதை எனக்காக நிறைவேத்தனும். இது என் மேல ப்ராமிஸ்.” என்ற கிளாரா அவன் கையை தூக்கி தன் தலையில் வைத்து அவனிடம் தன் மீது சத்தியம் வாங்கிக் கொண்டாள்.

அதனால் கோபப்பட்ட பிரிட்டோ சட்டென்று அவளை விட்டு விலகி “ஏண்டி இப்படி சாகப் போறேன் சாகப் போறேன்னு சொல்லி ஒவ்வொரு செகண்டும் என்ன கொன்னுட்டு இருக்க? கொஞ்ச நேரம் சந்தோஷமா இருந்தேன். அது உனக்கு பிடிக்கல இல்ல! Successfully என் happy mind set-ஐ spoil பண்ணிட்ட! தேங்க்யூ சோ மச்!” என்றவன், சற்று முன் அவன் கீழே கழட்டி எறிந்த ஃபேண்டை தேடி எடுத்து அதை மட்டும் அணிந்து கொண்டு அந்த அறையின் கதவை அடித்து சாத்திவிட்டு வெளியில் சென்று விட்டான்.

செல்லும் அவனை கனத்த இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த கிளாரா “நான் இல்லைன்னாலும், உனக்காகன்னு ஒருத்தி வேணும் பிரிட்டோ. நான் சொல்றது உனக்கு இப்ப புரியாம இருக்கலாம். நான் போனதுக்கு அப்புறமா ஒரு நாள் கண்டிப்பா புரியும். அன்னைக்கு நீ கண்டிப்பா எனக்காக நான் சொன்னதை கன்சிடர் பண்ணுவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்று நினைத்து தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு அப்படியே இழுத்து போர்த்திக் கொண்டு படுத்தாள்.

தேன்மொழியை தூக்கி சுற்றிக் கொண்டு இருந்த அர்ஜூன் அந்த நேரத்தில் அவளைப் பற்றி அவனுக்கு என்னென்ன தோன்றியதோ அதை எல்லாம் ஒரு பாடலாக பாடினான். அனைத்தும் முடிந்து அவன் அவளை கீழே இறக்கிவிட, அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்ட தேன்மொழி “இந்த நாளை நான் எப்பவும் மறக்கவே மாட்டேன். நீ நெஜமாவே இந்த மொமெண்டை ரொம்ப பியூட்டிஃபுல்லா ஸ்பெஷலா மாத்திட்ட அர்ஜுன். Thanks a lot!” என்றாள். அவளை தன்னை விட்டு விலகி அவளுடைய சிறிய மூக்கை பிடித்து லேசாக ஆட்டிய அர்ஜுன் “புருஷனுக்கு தேங்க்ஸ் சொல்ல கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா மேடம்?” என்று கேட்டான்.

பதிலுக்கு அவனது உயரத்திற்கு லேசாக எக்கி தானும் அவன் மூக்கை எட்டிப் பிடித்த தேன்மொழி “இப்ப தெரிஞ்சுகிட்டேன். இனிமே சொல்ல மாட்டேன் சார்.” என்று சொல்லிவிட்டு சிரித்தாள். “okay okay something is waiting for you. சீக்கிரம் வா.” என்று சொல்லி அவளது கண்களை மூடி மெல்ல அவளை அழைத்துச் சென்று ஓரமாகக் கிடந்த சோஃபாவில் அமர வைத்த அர்ஜுன் அவள் கழுத்தில் ஒரு பெண்டென்ட்டை அணிவித்தான்.

தேன்மொழி ஆச்சரியத்துடன் அதை தன் கையில் தொட்டுப் பார்த்தாள். சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்ட செயினில் இதய வடிவிலான பெண்டன்ட் இணைக்கப்பட்டிருந்தது. அந்த இதயத்திற்கு நடுவில் உள்ள சிறிய இதயத்தில் பாதி ப்ளூ நிறம் மீதி சிவப்பு நிறம் என்று நேர்த்தியாக வெட்டப்பட்டிருந்த கோஹினூர் வைரங்கள் பதிக்கப்பட்டு இருந்தது. அதன் கீழ்ப் பகுதியில் அவர்களுக்கு இருக்கும் இரண்டு குழந்தைகளையும், இப்போது பிறக்கவிருக்கும் மூன்றாவது குழந்தையையும் குறிப்பிடும் விதமாக மூன்று சிறிய வெள்ளை நிற வைர கற்கள் இருந்தது.

அந்த டிசைனை பார்த்தவுடனேயே அதன் தீம் என்னவென்று அவன் சொல்லாமலே புரிந்து கொண்ட தேன்மொழி ஆச்சரியத்தில் விழிகள் விரிய, “so thoughtful! எனக்கு இந்த பெண்டன்ட் ரொம்ப பிடிச்சிருக்கு.” என்றாள். எப்படியும் இந்த நேர்த்தியான neck piece-ஐ உருவாக்க அவன் கண்டிப்பாக பல கோடிகளை செலவழித்து இருப்பான் என்று அவளுக்கு தெரியும்.

அப்படி ஒரு காஸ்ட்லியான பொருளை தன் கழுத்தில் சுமந்து கொண்டிருப்பது அவளுக்கு கொஞ்சம் பயத்தையும் ஏன் பாரத்தையும் கூட கொடுக்க, அர்ஜுனின் மனைவியாக வாழப் பழகிக் கொள் என்று மகேஷ் தனக்கு அட்வைஸ் செய்ததை நினைத்து பார்த்த தேன்மொழி அர்ஜுனிடம் அதன் விலையை பற்றி கேட்டு, இவ்வளவு செலவு எதற்காக செய்ய வேண்டும் என்று திட்டி அவனை கடுப்பேற்ற வேண்டாம் என நினைத்து விட்டு விட்டாள்.

அவள் அந்த பெண்டென்ட்டை வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் கேப்பில் அவள் முன்னே தேன்மொழிக்கு மிகவும் பிடித்த black forest cake-ஐ கொண்டு வந்து வைத்தான் அர்ஜுன். அதில் “3rd baby loading!” என்று எழுதி அதற்கு கீழே மூன்று இதயங்கள் மறையப்பட்டிருந்தது. கேக்கில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை படித்துவிட்டு சிரித்த தேன்மொழி அவனுடன் சேர்ந்து அந்த கேக்கை வெட்டினாள்.

ஒரு பீசை கையில் எடுத்து அவள் அவனுக்கு ஊட்ட போக, “ச்ச்.. நான் எனக்கு இப்படி எல்லாம் சாப்பிட்டா பிடிக்காதுன்னு உன் கிட்ட எத்தனை தடவை தான் சொல்றது?” என்று சலித்துக் கொண்ட அர்ஜுன் அந்த கேக்கை அவளிடம் இருந்து வாங்கி அவள் வாயில் வைத்து அழுத்தி தன் இதழ்களை அவளுடைய இதழ்களின் மீது பொருத்தி தனக்கு வேண்டிய அளவு அவளிடம் இருந்து பெற்றுக் கொண்டான்.

அவன் இப்படி செய்வான் என்று எதிர்பார்த்து இருக்காது தேன்மொழி அவனது தோள்களில் கை வைத்து தள்ளிவிட்டுவிட்டு லேசாக இரும்பியபடி “உன்னை எல்லாரும் பெரிய மாஸ் ஹீரோன்னு நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா நீ சரியான பொறுக்கி பையன் டா.” என்றபடி சிரித்தாள். “ஒன்னு இரும்பு. இல்லைன்னா சிரி. இரண்டையும் ஒரே டைம்ல பண்ணி ஏதாவது ஆயிடப்போகுது!” என்று அர்ஜுன் கிண்டலாக சொல்ல, “ச்சீ.. போ!” என்றாள் தேன்மொழி.

– மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured