Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 69

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 69

by Thenaruvi Tamil Novels
236 views

அத்தியாயம் 69 

உதயாவை அழைத்துக் கொண்டு அவனுடன் பேசுவதற்காக மாடிக்கச் சென்றாள் தேன்மொழி. அவள் முகத்தையே குறுகுறு வென்று பார்த்துக் கொண்டு இருந்த உதயா “அழுதியா நீ! ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று அவளிடம் கேட்க, உடனே தலை குனிந்த தேன்மொழி “இல்லையே.. ஏன் அப்படி கேக்குற? நான் நார்மலா தான் இருக்கேன்.” என்றாள். 

உடனே அவள் முகத்தை உயர்த்தி அவளை தன் கண்களை பார்க்கச் செய்த உதயா “எது இது தான் உனக்கு நார்மலா இருக்கிறதா? உன்னை எத்தனை வருடமாக எனக்கு தெரியும்… உன்ன பாத்தா நீ எந்த மைன்ட் செட்டுல இருக்கேன் கூடவா எனக்கு தெரியாது? என்ன நடந்துச்சுன்னு   மறைக்காமல் சொல்லு. உன் ஹஸ்பண்ட் கூட எதுவும் சண்டையா? அதனால தான் இந்தியா கிளம்பி வந்துட்டியா?” என்று அனைத்தையும் நேரில் இருந்து பார்த்தவனை போல கரெக்டாக கேட்டான். 

அதனால் அவன் முகத்தை ஆச்சரியமாக பார்த்த தேன்மொழி “முன்னாடி எல்லாம் அம்மா தான் இப்படி நான் மனசுல நினைக்கிறது எல்லாத்தையும் அப்படியே கண்டுபிடிப்பாங்க. இப்ப உதயா கூட என்ன நல்லா தெரிஞ்சு வச்சிருக்கான் போல.. என் புருஷனுக்கு தான் என் மனசு புரிய மாட்டேங்குது. அந்த ஆளை வச்சுக்கிட்டு நான் என்ன பண்றதுனே தெரியல.” என்று நினைத்து சலித்துக் கொண்டு, “அவர் கூட எனக்கு சண்டை எல்லாம் ஒன்னும் இல்ல. சும்மா நாங்க பேசிட்டு இருந்தோம் அவ்வளவு தான்.‌  எனக்கு அவர் அங்கே இருக்கிறதும் நான் இங்கே இருக்கிறதும் தான் ஒரு மாதிரி இருக்கு.” என்று சோகமாக சொன்னாள். 

“அப்போ நீ அவரை மிஸ் பண்றியா?” என்று கனத்த இதயத்துடன் உதயா கேட்க, அவனைப் பார்த்து விரக்தியுடன் புன்னகைத்த தேன்மொழி “என்ன இப்படி கேக்குற? அவரு  என் ஹஸ்பண்ட் உதயா. என்னால எப்படி அவர மிஸ் பண்ணாம இருக்க முடியும்? அவரும் கூட இப்ப என்னை மிஸ் பண்ணிட்டு தான் இருப்பாரு. எனக்கு தெரியும்.” என்றாள். 

“அது தான் எப்படின்னு எனக்கு புரிய மாட்டேங்குது. உனக்கு நீ இங்க இருந்து காணாமல் போற வரைக்கும் பாய் ஃப்ரெண்ட் கூட யாரும் இருந்ததில்லை. திடீர்னு யாரோ யாருக்கோ உன்னை கல்யாணம் பண்ணி வச்சா, எப்படி அது சரியா வரும்? நீ எப்படி அவர் தான் உன் ஹஸ்பண்டுன்னு இப்படி உரிமையா சொல்ற அளவுக்கு மாறிட்ட? இங்க என்ன நடக்குது தேனு? நெஜமாவே உனக்கு அவர புடிச்சிருக்கா? இல்ல மத்தவங்க முன்னாடி நீ சந்தோஷமா இருக்கிற மாதிரி காட்டுகிறதுக்காக இப்படி பொய் சொல்றியா?” என்று உதயா கேட்க,

“இந்த விஷயத்துல பொய் சொல்லணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல உதயா. நான் அவரை முழுமனசா என் ஹஸ்பண்ட் ஏத்துக்கிட்டேன்.. அப்படி இல்லைனா என்ன கடத்திட்டு போய் அவருக்கு கல்யாணம் பண்ணி வச்ச என் மாமியார் வீட்டு ஆளுங்க எப்படி என்னை இந்தியா மறுபடியும் அனுப்ப ஓகே சொல்லி இருப்பாங்க? நெஜமாவே அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். 

என்னோட ஃபர்ஸ்ட் லவ் அவர் தான். எங்க மேரேஜ்க்கு அப்புறம் தான் நான் அவரை லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணேன். அவரும் என்னை ரொம்ப லவ் பண்றாரு. அவங்க ஃபேமிலில இருக்கிறவங்களும் நிஜமாவே என்ன ஒரு குயின் மாதிரி ட்ரீட் பண்றாங்க. அங்கே இருந்த வரைக்கும் எனக்கு எந்த குறையும் இல்லாம தான் பாத்துக்கிட்டாங்க. என் ஃபேமிலில இருக்கிறவங்க இங்கிருந்து கஷ்டப்படும்போது நான் மட்டும் அங்க எப்படி சந்தோஷமா இருக்கிறதுன்னு நினைச்சுத் தான் எனக்கு ஒரே உறுத்தலா இருந்தது. அதையும் புரிஞ்சுகிட்டு எங்களுக்கு மேரேஜ் ஆகும் போது என் ஹஸ்பண்ட் அவங்களையும் ரஷ்யா வர வச்சாரு.” என்றாள் தேன்மொழி. 

அவள் சொன்னதை ஷாக்காகி கேட்டுக் கொண்டு இருந்த உதயா “என்ன சொல்ற உன் மேரேஜ்க்கு வர வச்சாரா? அப்போ இப்ப தான் உங்களுக்கு கல்யாணம் ஆச்சா? ஆனா அன்னைக்கு நீ ஃபேஸ்புக்ல ஃபோட்டோ அனுப்பும்போதே உன் கழுத்துல தாலி இருந்துச்சே.. அது எப்படி?” என்று கேட்க, “ஆமா நான் இங்க இருந்து போன அடுத்த நாளே எனக்கும் அவருக்கும் மேரேஜ் ஆயிடுச்சு.” என்ற தேன்மொழி தன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் அவனிடம் தெளிவாகச் சொன்னாள். 

ஆனால் அர்ஜுனின் மறுபக்கத்தை பற்றி யாருக்கும் தெரிய வருவதை அவள் விரும்பவில்லை என்பதால் அதை மட்டும் சொல்ல மறைத்தாள்  தேன்மொழி, “நான் அவரோட ஒய்ஃப் மாதிரியே இருந்ததுனால மட்டும் தான் எனக்கும் அவருக்கும் கல்யாணம் ஆச்சு. பட் இப்ப நாங்க ரெண்டு பேரும் ஹாப்பியா தான் இருக்கோம். அவரே என் கிட்ட அவரோட ஃபர்ஸ்ட் வைஃபை எப்படி எல்லாம் லவ் பண்ணாருன்னு கூட சொன்னாரு. எதையுமே அவர் என் கிட்ட மறைக்க மாட்டாரு. அந்த ஒரு விஷயத்துல என் அர்ஜுனை எனக்கு ரொம்ப பிடிக்கும்.” என்று அவள் தொடர்ந்து அவனைப் பற்றி பெருமை பேசிக் கொண்டே இருந்தாள். 

அவளுக்கு உள்ளுக்குள் அர்ஜுனனின் மீது ஆயிரம் கோபங்களும் வருத்தங்களும் இருந்தாலும், அவள் அதை உதயாவிடம் தெரியப்படுத்த விரும்பவில்லை. மற்றவர்களின் முன்னிலையில் தன் கணவனை ஒரு ஹீரோ போல என்று அவள் பெருமையுடன் பாராட்டி தள்ளினாள். 

அனைத்தையும் கேட்டு பொறாமையில் பொங்கிய உதயா “நீ சொல்றது எல்லாம் ஓகே தான். பட் நீ என்ன சொன்னாலும் என்னால இதையெல்லாம் ஏத்துக்கவே முடியல தேனு. அது எப்படி உன்னால ஒரு வயசான வர போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவரு கூட சந்தோஷமா வாழ முடியும்? உனக்கு இப்ப அப்படி என்ன வயசு ஆயிடுச்சு சொல்லு.. அவ்ளோ பெரிய பையன் உன்ன அம்மான்னு கூப்பிடுறான்‌.. 

இது உனக்கு கொஞ்சம் கூட கஷ்டமாவே இல்லையா? அது எப்படி வேற யாரோ ஒருத்தரோட குழந்தைக்கு நீ அம்மாவாக முடியும்? அந்த குடும்பமே அவங்களோட சுயநலத்துக்காக எல்லாருமா சேர்ந்து உனக்கு அவரை கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. இப்ப உன்னால அவரே கோமால இருந்து எந்திரிச்சு நார்மல் ஆயிட்டாரு. உன் ஹஸ்பண்ட் அவ்ளோ நல்லவரா இருந்தா, நியாயமா உனக்கு தேங்க்ஸ் சொல்லி உன்னை நல்லபடியா உன்னை இந்தியா அனுப்பி வச்சு இருக்கணும்.  அத விட்டுட்டு ஏதோ ஒரு சின்ன பொண்ணு தானா வந்து நம்ம வலையில சிக்கிடுச்சு.. என்ன ஆனாலும் இவளை விடவே கூடாதுன்னு பக்காவா பிளான் பண்ணி உன்னை அபிசியல்லா மேரேஜ் பண்ணிக்கிட்டாரு. அவரு உனக்கு நல்லவரா தெரியுறாரா? 

அர்ஜுனும் அவர் ஃபேமில இருக்கறவங்க மாதிரியே பக்கா செல்பிஷ். இங்க யாருமே உன்ன பத்தி யோசிக்கல தேன்மொழி. அவங்களோட சுயநலத்துக்காக உன்னை எல்லாரும் யூஸ் பண்ணி இருக்காங்க.” என்று கோபமாக சொன்னான். 

ஆபீஸில் இருந்து தேன்மொழி இடம் வீடியோ கால் பேசிக் கொண்டிருந்த அர்ஜுன் அவள் அப்படி அழுது கொண்டே பேசியதை பார்த்தவுடன் அதற்கு மேல் வேலை செய்ய முடியாமல் தன் காரை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி பயணித்தான். தேன்மொழி இங்கே இருந்து செல்வதற்கு முன்பாகவே அவளிடம் சண்டை போட்டுவிட்டு அவன் கிளம்பி ஆபீஸிற்க்கு சென்று விட்டான். கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவன் இப்போது தான் மீண்டும் தன் வீட்டிற்கு செல்கிறான். 

இந்த நான்கு நாட்களில் அவன் ஒரு நொடி கூட தூங்கவில்லை. அவனே தூங்க நினைத்தாலும் அவனுக்கு தூக்கம் வரவில்லை. காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது கூட அவனது என்ன ஓட்டம் முழுவதும் தேன்மொழி தான் நிறைந்திருந்தாள். இதுவரை தனக்கு அவள் மீது இருக்கும் கோபத்தையே இறுக்கி பிடித்துக் கொண்டிருந்த அர்ஜுன் இப்போது தான் முதல் முறையாக அவள் பக்கத்தில் இருந்து யோசித்துப் பார்த்தான். 

“எல்லாரும் என்ன புரிஞ்சுக்கணும்னு நான் எதிர்பார்க்கிறேன். பட் நான் யாரையும் புரிஞ்சுக்க ரெடியா இல்ல. எல்லாமே கரெக்டு தான். அதுக்காக இப்போ என்னால என்ன பண்ண முடியும்? என்னோட 25 வருஷ உழைப்பை ஒரே செகண்ட்ல எப்படி என்னால தூக்கி போட முடியும்? நான் அப்படி செஞ்சாலும் அதனால எல்லாரும் பாதிக்கப்படுவாங்க. இப்போ இத நான் நேர்ல போய் அவ கிட்ட சொன்னா கூட கேட்க மாட்டா.

மத்தது எல்லாத்துக்கும் இம்பார்ட்டன்ஸ் கொடுத்துட்டு ஃபேமிலில இருக்கிறவங்க கூட சந்தோஷமா வாழ  முடியலன்னா அது எல்லாம் என்ன வாழ்க்கை? நீ தான் எல்லாத்தையும் பேலன்ஸ் பண்ண கத்துக்கணும் அர்ஜூன். முதல்ல அவளை எப்படி சமாதானப்படுத்துறதுன்னு யோசி. அதுதான் இப்ப எல்லாத்தையும் விட இம்போர்ட்டண்ட்.” என்று யோசித்தபடி தன் வீட்டிற்கு சென்ற அர்ஜுன் பிரிட்டோவிற்கு கால் செய்து தேன்மொழியைப் பற்றி விசாரித்தான். 

அதற்கு பிரிட்டோ “மேடம் இப்போ அவங்க ஃபிரண்டு கூட மாடியில் பேசிட்டு இருக்காங்க சீஃப்.” என்று சொல்ல, அதைக் கேட்டு பொறாமையில் பொங்கிய அர்ஜுன் “இந்த டைம்ல என் பொண்டாட்டி கூட தனியா மொட்ட மாடியில நின்னு அவனுக்கு என்ன பேச்சு வேண்டி இருக்கு? இன்னும் அவனை எதுக்கு அந்த வீட்ல வச்சிருக்கீங்க? அவளைப் பார்க்க வந்தா பார்த்துட்டு கிளம்பி போக மாட்டானா அவன்.. இன்னும் எதுக்கு இங்கேயே இருக்கான்?” என்று கோபமாக கேட்டான். 

“மேடம் காணாம போகும்போது அவங்க ஃபிரண்டு தான் விஜயா மேடம்க்கு நிறைய ஹெல்ப் பண்ணினாராம். சோ தேன்மொழி மேடம் ஓட ஃபேமில இருக்கறவங்க அந்தப் பையனை கூடவே இன்னைக்கு இருக்க சொல்லிட்டாங்க. அவனும் இங்கயே தங்கிடான் சீஃப்.” என்று பிரிட்டோ சொல்ல,  “எனக்கு என்னமோ அவன் தேன்மொழி லைஃப்ல இருக்கிறது சரியாவே படல பிரிட்டோ. ஏதாவது பண்ணி நாளைக்கு பொழுது விடிஞ்ச உடனே அவனை பேக்கப் பண்ணி அங்க இருந்து அனுப்பி விட்டுடு. என் பொண்டாட்டி கூட பேசி பழகுற ஒரே ஆம்பள எனக்கு அப்புறம், என் ஃபேமிலில இருக்கிறவங்களுக்கு அப்புறம், அவ தம்பி ஆதியா மட்டும் தான் இருக்கணும். எனக்கு அவ கூட அவன் இருக்கிறதை பார்த்தாலே இரிடேட் ஆகுது.” என்று அர்ஜுன் சொல்ல, 

“எனக்கு புரியுது சீஃப். பட் அதுக்காக நம்மளால என்ன பண்ண முடியும்? முக்கியமா எங்களால எதுவும் பண்ண முடியாது. நீங்க வேணும்னா டைரக்டா தேன்மொழி மேடம் கிட்ட உங்களுக்கு உதயா இங்க இருக்கிறது புடிக்கலன்னு சொல்லி பாருங்க.” என்றான் பிரிட்டோ.

“ஏது நான் போய் பிடிக்கலைனு சொல்றதா? நான் மட்டும் அப்படி சொன்னா, அதை நான் சொல்றதுக்காகவே அவ கேக்க மாட்டா. முதல்ல அவளுக்கு என் மேல இருக்கிற கோபம் குறையணும். நான் பேச வர்றதை அவள் கேட்கிற அளவுக்கு அவள ரெடி பண்ணனும். அதுக்கு ஏதாவது பண்ணனும். ஐடியா கொடு டா.” என்று அர்ஜுன் கேட்க, அவனும் பிரிட்டோவும் அடுத்து என்ன செய்து தேன்மொழியை சமாதானப்படுத்துவது என்று டிஸ்கஸ் செய்ய தொடங்கினார்கள். 

-மீண்டும் வருவான் 💕 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured