Home தாபம் தீர்க்க வந்த தாரமேதாபம் தீர்க்க வந்த தாரமே CH 29

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 29

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 29: மானசாவின் சதி

வேக வேகமாக ஆபீஸ் ரூமிற்குள் வந்த ரித்திகா, தான் சைன் போட வேண்டிய ரிஜிஸ்டரில் சைன் போட்டு கொண்டு இருந்தாள். வழக்கத்தை விட இன்று ரித்திகா கால் மணி நேரம் லேட் ஆக வந்து இருந்தாள். 

அதை அறிந்து ரித்திகாவின் அருகே வந்த மானசா, லேட் ஆக வந்ததற்காக சிறப்பாக அர்ச்சனை செய்தாள்.

தான் டயர்ட் ஆகும் வரை ரித்திகாவை திட்டி விட்டு அங்கு இருந்து கிளம்பிய மானசா, தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டாள். சோர்வாக ஸ்டாஃப் ரூமுக்கு வந்த ரித்திகா தன்னுடைய பொருட்களை எல்லாம் வைத்து விட்டு நேராக அவள் செல்ல வேண்டிய வகுப்பு அறைக்கு சென்றாள்.

அப்போது தான் மாணவர்கள் அனைவரும் தங்களுடைய அசெம்பிளி ஐ முடித்து விட்டு தங்களுடைய வகுப்பு அறைக்கு வந்து கொண்டு இருந்தனர். இது அந்த மாணவர்களுக்கு இங்கிலீஷ் பீரியட் என்பதால் அவர்களுக்கு நடத்த வேண்டிய தினசரி பாடங்களை நடத்தி கொண்டு இருந்தாள் ரித்திகா.

அட்மின் ஆபீஸுல்…

இன்று ரித்திகாவின் மீது தன்னுடைய கோபத்தை எல்லாம் காட்டுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததை நினைத்து சந்தோஷமாக இருந்தாள் மானசா. ஆனால் அவள் அதோடு அமைதியாக இருக்க வில்லை. இனி தான் அவளுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. எப்படி ரித்திகாவையும், சித்தார்த்தையும் பிரித்து வைப்பது என்று பலமாக யோசித்து கொண்டு இருந்தாள்.

அப்போது தான் ரித்திகாவின் டைம் டேபிள் பற்றி மானசாவிற்கு ஞாபகம் வந்தது. அதனால் உடனே அதை தேடி பிடித்து எடுத்து பார்த்தாள். அதில் சித்தார்த் க்ளாஸ்ற்கு ரித்திகா செல்ல வேண்டியது இருக்கிறதா என்று செக் செய்தாள். அவள் நினைத்து பயந்தது போலவே இன்று கூட உணவு இடைவேளைக்கு பின் ஐந்தாவது பீரியட் சித்தார்த்தின் க்ளாஸுற்க்கு டேன்ஸ் பீரியடுக்கு ரித்திகா செல்ல வேண்டியதாக இருந்தது.

ரித்திகாவையும், சித்தார்த்தையும், சந்திக்க விட கூடாது என்று நினைத்த மானசா, ரித்திகாவின் டைம் டேபிள் ஐ ரீசெட்யூல் செய்ய நினைத்தாள். அப்போது தான் அவளுக்கு ரித்திகா டேன்ஸ் டீச்சர் என்பதால் எல்லா கிளாஸுற்க்கும் அவள் எப்படியும் டான்ஸ் டீச்சர் ஆக சென்று தான் ஆக வேண்டும் என்ற ஞாபகமே வந்தது. அதை நினைக்கும் போதே மானசாவின் கண்கள் கோபத்தால் சிவந்தது. 😡

அப்போது மானசா ஒரு முடிவு எடுத்தாள். எப்போதும் எதையாவது செய்து ரித்திகாவையும், சித்தார்த்தையும், பிரிப்பதை விட நிரந்தரமாக அவர்களை சந்திக்க விடாமல் தடுப்பதே சிறந்தது. அதற்கு ரித்திகாவின் மீது ஏதாவது ஒரு பழியை போட்டு அவளை இந்த பள்ளியில் இருந்து விரட்டி விட வேண்டும் என்று சபதம் எடுத்தாள்.

இப்படி செய்வதன் மூலம் அவளை இந்த பள்ளியில் இருந்து விரட்டுவது மட்டுமல்லாமல் வருண் பார்வையின் அவளை தவறாக சித்தரித்து விடலாம் என்று நினைத்த மானசா, வில்லத்தனமாக சிரித்தாள். 😁 அப்போது மானசாவின் பர்சனல் மொபைலுக்கு ஒரு பிரைவேட் நம்பரில் இருந்து கால் வந்தது.

அந்த காலர் ஐடியை பார்த்தவுடன் பதட்டமான மானசா, தன் அருகில் யாராவது இருக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்து விட்டு அந்த கால் ஐ அட்டெண்ட் செய்து மெல்லிய குரலில் பேச தொடங்கினாள். அவளுடைய குரலில் மரியாதையும், பயமும், கலந்து இருந்தது. அந்த கால் இல் மானசாவிடம் கம்பீரமான மற்றும் தெளிவான குரலில் ஒரு ஆண் பேச தொடங்கினான்.

மானசா: “குட் மார்னிங் சார்.”

அந்த ஆண்: “பார்மாலிட்டி காக கூட” அவளிடம் குட் மார்னிங் சொல்ல விரும்பாதவன், நேரடியாக தான் கேட்க வந்த விஷயத்தை பற்றி அவளிடம் பேச தொடங்கினான்.

அருண்: “நீ அங்க போய் ஆறு மாசம் ஆயிடுச்சு இன்ன வரைக்கும் நீ உருப்படியா எதுவுமே பண்ணல. அது உனக்கு ஞாபகம் இருக்கா…?”

மானசா: “நான் எதாவது பர்பஸ் ஆ பண்ணினா ஆர்டிபிசியல் ஆ தெரிஞ்சி நான் மாட்டிப்பேன் சார். அதனால தான் கொஞ்சம் ஸ்லோவா மூவ் பண்ணிட்டு இருக்கேன்.”

அந்த ஆண்: “ஓ… இன்னும் எவ்வளவு ஸ்லோவா பண்ணலாம்னு இருக்க..? உனக்கு வருண் தான் கரெக்ட் பண்ண துப்பில்ல -ன்னு அந்த சின்ன பையன் சித்தார்த் அ கரெக்ட் பண்ண சொன்னா அது கூட முடியலையா…?” 🤨 என்று எகத்தாளமான குரலில் அச்சுறுத்தும் தோரணையில் கேட்டான். 😒

மானசா: அவன் பேசிய விதத்தில் பயந்து போன மானசா, பவ்வியமான குரலில்… “நான் சீக்கிரமா எதாச்சும் கண்டிப்பா பண்றேன். என்னோட பிளானுக்கு நடுவுல ஒரு ச்சீப் ஆனா மிட்டில் கிளாஸ் பொண்ணு குறுக்க வந்துட்டா. அதனால தான் சார் டிலே ஆயிட்டு இருக்கு. அவள இங்க இருந்து தூரத்திறதுக்கு முதல்ல ஏதாச்சும் பண்ணனும் சார். இப்ப அதான் ப்ளான் பண்ணிட்டு இருக்கேன். சீக்கிரமா சித்தார்தை வெச்சே நான் நாராயணன் பேலஸ்குள்ள போவேன். என்ன நம்புங்க. எனக்கு கொஞ்சம் டைம் மட்டும் குடுங்க ப்ளீஸ்..” என்றாள். 

அந்த ஆண்: “சும்மா ரீசன் சொல்லிட்டு இருக்காத. வெளியில இருந்து பண்ற மாதிரி ஏதாச்சும் இருந்தா சொல்லு எதுனாலும், எவ்வளவு செலவானாலும் பண்ணிறலாம். எனக்கு ஒன்னே ஒன்னு மட்டும் தான் வேணும். அந்த வருண் வாழ்க்கைல நிம்மதியாவே இருக்க கூடாது. அதுக்கு நீ நாராயணன் பேலஸ்குள்ள அவன் பொண்டாட்டியா போகணும் புரிஞ்சுதா…?” 🤨 என்று ஆணையிடும் தோரணையில் கேட்டான்.

மானசா: “எஸ் சார். ஐ அன்டர்ஸ்டேன்ட்.” 

அந்த ஆண்: “உன்னோட அக்கவுண்ட்ல ஒன் லேக் கிரெடிட் பண்ணி இருக்கேன். இன்னும் எவ்வளவு வேணாலும் கேளு தறேன். ஆனா இன்னும் ஒன் மந்த்குள்ள நீ சித்தார்த் உன் பேச்சை மட்டும் கேக்குற மாதிரி மாத்தனும். அவன் தான் நம்மளோட கீ கார்ட்.” என்று சொல்ல, 

மானசா: “ஓகே சார்.”

அந்த ஆண்: “நைட் 10:00 ஓ கிளாக் ப்ளூ ஸ்டார் ஹோட்டல்.. ரூம் நம்பர் 108 -க்கு வந்துரு.” என்றவன், மானசாவின் பதிலை கூட எதிர்பார்க்காமல் கால் ஐ கட் செய்து விட்டான்.

மானசா அவன் காலை கட் செய்தவுடன் பெருமூச்சு விட்டவள், பின் தன் வழியில் தனக்கு இடையூறாக இருக்கும் ரித்திகாவை எவ்வாறு ஒட்டு மொத்தமாக விளக்குவது என்று யோசித்து கொண்டு இருந்தாள்.

உணவு இடைவேளை அப்போது தான் ஸ்டார்ட் ஆகி இருந்தது. மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களுடைய வகுப்புகளுக்கு சென்று கொண்டு இருந்தனர். 

ரித்திகாவுக்கு காலையில் இருந்ததை விட காய்ச்சல் அதிகமாகி இருந்தது. அதனால் அதீத சோர்வில் இருந்தவள், ஓரமாக போட பட்டு இருந்த சேரில் சென்று அமர்ந்தாள்.

அவளுடைய தலை மிகவும் பாரமாக இருப்பதை போல் உணர்த்த ரித்திகா, தன்னுடைய தலையில் அவளுடைய இரு கையையும் வைத்து அழுத்தி பிடித்த படி தன்னுடைய தலையை கீழே குனிந்து இருந்தாள். ரித்திகா வழக்கத்தை விட சோர்வாக இருப்பதை காலையில் இருந்தே கவனித்து கொண்டு தான் இருந்தான் கௌத்தம்.

அதனால் இப்போது ரித்திகா இப்படி அமர்ந்து இருப்பதை பார்த்து கொண்டு அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. ரித்திகாவின் அருகே சென்று அவளை அழைக்கும் பொருட்டு எதேர்ச்சையாக அவளுடைய கையை தொட்டான் கௌத்தம். அவளுடைய உடல் நெருப்பாய் கொதித்து கொண்டு இருந்தது.

அதை கண்டு அதிர்ந்த கௌத்தம், ரித்திகாவின் தலையை தன்னுடைய ஒரு கையால் உயர்த்தி அவளை தன்னை பார்க்கும் படி செய்தவன், தன்னுடைய இன்னொரு கையால் அவளுடைய நெற்றியை தொட்டு பார்த்தான். 

அவளுக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதை அவனால் உணர முடிந்தது. உடனே தன்னுடைய கண்களை சுருக்கி கோபமாக ரித்திகாவை பார்த்தான் கௌத்தம். 😒

கௌத்தம்: அதே கோபத்துடன்… ☹️ “அதான் இவ்ளோ காய்ச்சல் அடிக்குதுல அப்புறம் எதுக்கு இங்க வந்த..? லீவு போட்டுட்டு வீட்டிலயே இருந்து இருக்கலாம்ல…?” என்றான்.

ரித்திகா: “நான் லீவு கேட்டேன். அவங்க தான் குடுக்கல.” 😒 என்று தன்னுடைய முகத்தை பாவமாக வைத்து கொண்டு அப்பாவியாக சொன்னாள்.

கௌத்தம்: “யாரு அந்த மேனா மினுக்கி லீவு தர மாட்டேன்னு சொன்னாளா..? வர… வர… அவ ரொம்ப ஓவரா தான் பண்ணிக்கிட்டு இருக்கா. அவ தான் இந்த ஸ்கூலுக்கு ஓனர் -ன்னு நினைப்பு.” 😡 🤬 என்று மானசாவை கோபமாக கழுவி ஊற்றியவன், பின் ரித்திகாவை கோபமாக ☹️ பார்த்து… “அவளாம் ஒரு ஆளுன்னு அவள பாத்து நீ பயந்துட்டு அவ வர சொன்னான்னு நீயும் இவ்ளோ காய்ச்சல்ல கிளம்பி வந்துட்டியா..?” என்று காட்டமாக கேட்டான். 😒 🤨

இன்னும் கௌத்தமிற்க்கு ரித்திகாவின் மீது கோபம் தீரவில்லை. இருந்த கோபத்தில் இன்னும் அவளிடம் நாலு வார்த்தை பேச வேண்டும் என்று தான் நினைத்தான். ஆனால் ரித்திகாவோ தன் அம்மாவிடம் முதன் முறையாக திட்டு வாங்கும் சின்ன குழந்தை போல் அவன் இன்னும் ஒரு வார்த்தை பேசினாலும் நான் அழுது விடுவேன் என்ற நிலையில் கண்ணீர் தேங்கிய கண்களுடன் 🥺 அப்பாவியாக அவனை பார்த்து கொண்டு இருந்தாள்.

ரித்திகாவின் அந்த அப்பாவியான முகம் அவனுடைய கோபத்தை எல்லாம் ஒரு நொடியில் காணாமல் போக செய்து விட்டது. அடுத்த கணமே அவளின் மீது அவனுக்கு அன்பும், அக்கறையும், பெருக்கெடுத்தது. பாசம் நிறைந்த கண்களுடன் அவளை பார்த்தான் கௌத்தம். 

கௌத்தம்: “ஏதாச்சு டேப்லெட் ஆவது சாப்டியா…?”

ரித்திகா: “இல்லை” என்று தன் தலையை ஆட்டினாள்.

கௌத்தம்: அவனுக்கு அவள் மீது கோபம் கோபமாக வந்தது. இருந்தாலும் அவளுடன் பொறுமையாகவே பேசினான்.

கௌதம்  “சரி…!!! ஏதாச்சு டேப்லெட் ஆவது வச்சிருக்கியா..?” என்று கேட்க,

ரித்திகா: “ம்ம்ம்… வெச்சிருக்கேன். சாப்பிட்டு தான் சாப்பிடணும்.” என்றாள். 

கௌத்தம்: “அப்ப நீ இங்கேயே இரு. நான் உங்க ஸ்டாப் ரூமுக்கு போயிட்டு உன் லன்ச் ஐயும், டேப்லெட் ஐயும் கொண்டுவறேன்.” என்று சொல்ல, 

ரித்திகா: “நான் கெளம்புற அவசரத்தில லஞ்ச் கொண்டு வர மறந்துட்டேன்.” 

கௌத்தம்: “நீ டீச்சர்ன்னு ஆவது உனக்கு ஞாபகம் இருக்கா..? இல்ல அதையும் மறந்துட்டியா..? சின்ன பிள்ளைங்க மாதிரி ரீசன் சொல்லிட்டு இருக்க…?”

ரித்திகா: “இப்ப என்ன பண்றது..?”

கௌத்தம்: “நீ ஒன்னும் பண்ண வேணாம். அமைதியா இரு.” என்றவன், செக்யூரிட்டி ஆபிஸுற்க்கு கால் செய்து ரித்திகாவுக்காக உணவும், மாத்திரையும், வாங்கி வரும்படி சொன்னான்.

ஒரு செக்யூரிட்டி பக்கத்தில் இருந்த கடையில் கௌத்தம் சொன்னது அனைத்தையும் பத்து நிமிடத்தில் வாங்கி கொண்டு டான்ஸ் பிராக்டிஸ் ஹாலிற்கு வந்தான். அதற்கான பணத்தை கொடுத்து விட்டு அந்த செக்யூரிட்டி இடம் இருந்து அவற்றை எல்லாம் வாங்கி கொண்டு ரித்திகாவின் அருகே வந்தான் கௌத்தம். பின் அதை எல்லாம் ரித்திகா இடம் கொடுத்து விட்டு அவளை சாப்பிட சொல்லி விட்டு தானும் அவனுடைய லஞ்ச் பாக்ஸ் ஐ எடுத்து வந்து அவளுடன் அமர்ந்து சாப்பிட தொடங்கினான்.

அவன் தனக்கு வாங்கி கொடுத்த உணவிற்காக நன்றி சொன்ன ரித்திகா, அதற்கான பணத்தை பிறகு கொடுத்து விடுவதாக சொன்னாள். அதை கேட்டு கடுப்பான கௌத்தம், “முதல்ல சாப்பிடு” என்று அவளை பார்த்து கடுப்பாக சொன்னவன், தானும் சாப்பிட ஆரம்பித்தான். 

“என்ன இவன் அக்கறையை கூட இப்படி கடுகடுன்னு தான் காட்டுவானோ..? இவனுக்கு பாசமா பேசுறதுன்னா எப்படின்னே தெரியாதோ…?” என்று தன் மனதிற்குள் கேட்டு கொண்டவள்; “இருந்தாலும் நல்லவன் தான்” என்று தானே பதிலும் சொல்லி கொண்டு சாப்பிட தொடங்கினாள்.

காய்ச்சலில் இருப்பவர்களுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கௌத்தமிற்க்கு தெரியாது. அதனால் காய்ச்சலில் இருக்கும் ரித்திகா நன்றாக சாப்பிடட்டும் என்று நினைத்தவன், அந்த செக்யூரிட்டி இடம் ஃபுல் வேஜ் மீல்ஸ் வாங்கி வர சொல்லி இருந்தான். பொதுவாகவே ரித்திகா உணவு குறைவாக தான் சாப்பிடுவாள்.

அந்த பார்சலை திறந்து அதில் இருந்த அவ்வளவு உணவு வகைகளை பார்த்த உடனேயே ரித்திகாவுக்கு இதை எல்லாம் எப்படி சாப்பிட போகிறோம் என்று நினைக்கும் போதே குமட்டி கொண்டு வருவதை போல் இருந்தது. அவளுக்கு லைட்டாக கஞ்சி சாதம் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தான் தோன்றியது. 

ஆனால் அதை சொல்லி தனக்காக இவ்வளவு சிரமப்பட்டு உணவு வாங்கியிருக்கும் கௌத்தம் இன் மனதை நோகடிக்க ரித்திகா விரும்பவில்லை. அதனால் மெதுவாக அங்கு இருக்கும் உணவுகளை சாப்பிட தொடங்கினாள்.

முழுதாக நான்கு வாய் கூட சாப்பிட்டு இருக்க மாட்டாள் அதற்க்குள் அவளுக்கு மீண்டும் வாந்தி வருவதை போல் இருந்தது. இன்னொரு பக்கம் அவள் காலையில் இருந்து சாப்பிடாததால் அவளுக்கு பசி மயக்கமும் இருந்தது. அதனால் மாத்திரை சாப்பிடுவதற்காக ஆவது கொஞ்சமாவது சாப்பிடலாம் என்று நினைத்தவள், சிரமப்பட்டு சாப்பிட்டாள்.

அந்த உணவில் கால் பங்கை கூட அவள் சாப்பிட்டு முடித்து இருக்க மாட்டாள் அதற்குள் அவளுக்கு வாந்தி வந்து விட்டது. அதனால் தன்னுடைய வாயை ஒரு கையால் பொத்திய படி எழுந்தவள் நேராக ரெஸ்ட் ரூம் ஐ நோக்கி ஓடினாள். ரித்திகா திடீரென்று இப்படி எழுந்து ஓடுவதை பார்த்து பதட்டப்பட்ட கௌத்தம், அவனும் எழுந்து அவள் பின்னே வேகமாக சென்றான்.

அப்போது தான் அவள் பெண்களுக்கான ரெஸ்ட் ரூமிற்குள் செல்வதை கவனித்தவன், அப்படியே நின்றுவிட்டான். ரித்திகா சில நிமிடங்களுக்கு பின் அந்த ரெஸ்ட் ரூமில் இருந்து வெளியே வந்தாள். அது வரை வெளியே அமைதியாக காத்திருந்த கௌத்தம் வேகமாக அவள் அருகே சென்று அவளுக்கு என்னவாயிற்று என்று அக்கறையாக விசாரித்தான்.

தனக்கு காய்ச்சல் அடிப்பதால் தான் வாந்தி வந்துவிட்டதாகவும், பெரிதாக அதை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று அவனை சமாதானம் படுத்தியவள்; அவனை சாப்பிடுமாறு சொல்லி விட்டு தானும் அமர்ந்து சாப்பிட தொடங்கினாள். இரண்டு வாய் சாப்பிட்ட பின் மீண்டும் அவளுக்கு வாந்தி வருவதை போல் இருந்தது அதனால் சாப்பிடாமல் அதை அப்படியே மூடி வைத்து விட்டாள்.

கௌத்தமும் அவளை சாப்பிட சொல்லி எவ்வளவோ சொல்லி பார்த்தான். ஆனால் மீண்டும் தனக்கு வாந்தி வந்துவிடுமோ என்று நினைத்து பயந்த ரித்திகா, வேண்டாம் என்று மறுத்து விட்டு அவன் வாங்கி கொடுத்த மாத்திரைகளை மட்டும் போட்டு கொண்டாள். அடுத்த பீரியட் ஸ்டார்ட் ஆகும் முன் அவளை சிறிது நேரம் ரெஸ்ட் எடுக்க சொன்னான் கௌத்தம்.

அவனிடம் சரி என்று சொன்ன ரித்திகா, அங்கு இருந்த ஒரு டேபிள் இன் அருகே சென்று ஒரு சேர் ஐ போட்டு அமர்ந்தவள், அந்த டேபிள் இல் தன் தலையை சாய்த்த படி படுத்து கொண்டாள்.

இப்படியே சில நிமிடங்கள் கடந்திருக்க… சாப்பிட்டு முடித்து விட்ட கௌத்தம், ரித்திகாவின் அருகே வந்தான்.

அப்போது சரியாக லன்ச் பீரியட் முடிந்து ஐந்தாவது பீரியட் தொடங்குவதை உணர்த்தும் வகையில் பெல் அடித்தது. அது வரை நன்றாக தூங்கி கொண்டு இருந்த ரித்திகா, அந்த சத்தத்தால் திடீரென்று கண் விழித்து எழுந்து அமர்ந்தாள்.

-நேசம் தொடரும். 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured