Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 248

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 248

by Thenaruvi Tamil Novels
14 views

அத்தியாயம் 248: விஷ்ணு மற்றும் வைஷாலியின் திருமணம்

நாராயணன் பேலஸுல்…

செண்பகத்துடன் பேசிவிட்டு தன்னுடைய அறைக்கு வந்த வைஷாலி, அமெரிக்காவிற்கு செல்வதற்காக கிளம்பி கொண்டு இருந்தாள். அப்போது அவளுக்கு தொடர்ந்து மகேஷிடம் இருந்து கால் வந்து கொண்டே இருந்தது. இன்று எப்படியாவது தன்னுடைய காதலை வைஷாலி இடம் சொல்லிவிட வேண்டும் என்ற முனைப்பில் அவளுக்கு தொடர்ந்து கால் செய்து கொண்டே இருந்தான்் மகேஷ். வைஷாலிக்கு இப்போது அவனிடம் தான் என்ன பேசுவது என்று தெரியவில்லை. 

அவனைப் பற்றி யோசித்தாலே நேற்று அவள் அவனோடு இருந்த தருணங்கள் தான் அவளுடைய நினைவலைகளில் அரை குறையாக ஓடியது. அதை நினைத்துப் பார்க்கும்போதே அவளுக்கு ஏதோ போல் இருந்தது. மகேஷிடம் அவள் என்ன தான் பிராக்டிக்கலாக பேசிவிட்டு வந்து இருந்தாலும், மனதில் விஷ்ணுவை சுமந்து கொண்டு உடலளவில் அவள் மகேஷுடன் தன்னை பகிர்ந்து கொண்டு விட்டதை அவளால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லைை. இதை அப்படியே சாதாரணமாக எடுத்து கொண்டு அவளால் கடந்து செல்லவும் முடியவில்லைை.

அதனால் இப்போதைக்கு அவனை தவிர்த்து விடுவதே நல்லது என்று நினைத்த வைஷாலி, அவனுடைய என்னை பிளாக் செய்து விட்டாள். அவர்கள் இருக்கும் இந்த ஈரோட்டில் ஏர்போர்ட் கண்டிப்பாக இல்லை என்பதால், வேறு ஒரு ஊருக்கு சென்று தான் அவள் பிளைட்டில் எப்படியும் செல்வாள் என்று கணக்கிட்ட மகேஷ், அவள் நாராயணன் பேலஸில் இருந்து வெளியே செல்லும்போது, எப்படியாவது அவளை பார்த்து பேசி விட வேண்டும் என்று நினைத்து அதன் நுழைவாயிலில் அவளுடைய கார் வருவதற்காக காத்திருந்தான். 

ஆனால் வருண் வைஷாலியை ஏர்போர்ட் வரை கூட்டி சென்று வைஷாலியை பிளைட்டில் ஏற்றிவிட்டு வரும் பணியை சிவாவிடம் கொடுத்து இருந்ததால், சிவா உடன் அவனுடைய காரில் தன்னுடைய உடைமைகளுடன் கிளம்பி சென்றாள் வைஷாலி. நாராயணன் பேலஸ் இன் வாசலில் நின்றுகொண்டு இருந்தத மகேஷ், சிவா உடன் காரில் செல்லும் வைஷாலியை பார்த்துவிட்டு அந்த காரை பின் தொடர்ந்து ஓடி வந்தான்.

“மேடம் இவர் சித்தார்த் படிக்கிற ஸ்கூல்ல வொர்க் பண்றவர் தானே..!! உங்கள பாத்துட்டு தான் உங்க கிட்ட பேசுறதுக்காக பின்னாடியே ஓடி வராருன்னு நினைக்கிறேன். கார் ஐ ஸ்டாப் பண்ணட்டா…???” என்று வைஷாலி இடம் கேட்டான் சிவா. “வேணா சிவா விடுங்க. அவன் கிட்ட பேசுறதுக்கு எனக்கு எதுவும் இல்ல. கொஞ்ச தூரம் ஓடி வந்துட்டு அப்புறம் அவனே நின்னுறுவான்.” என்று உணர்ச்சியாற்ற குரலில் சொன்னாள். 

வைஷாலியை பார்க்கும் பரிதவிப்பில் காரின் பின்னே ஓடிவரும் மகேஷ் ஐ பார்ப்பதற்கே சிவாவிற்கு மிகவும் பாவமாக இருந்தது. இருப்பினும் வைஷாலி பார்க்க விரும்பவில்லை என்று சொல்லிவிட்ட பின் தன்னால் என்ன செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டவன், இன்னும் வேகமாக டிரைவ் செய்ய தொடங்கினான். அதனால் மகேஷால் அவர்களுடைய காரை பின் தொடர்ந்து வர முடியவில்லை.

சாலையின் நடுவே மூச்சு வாங்க நின்று கொண்டு இருந்த மகேஷின் கண்களில் இருந்து நிக்காமல் கண்ணீர் மட்டும் வடிந்து கொண்டே இருந்தது. 😭 😭 😭 ஏற்கனவே தனக்கு எட்டாக்கனியாக இருந்த தன் காதலி வைஷாலி, இப்போது தான் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் கூட தன்னால் எட்டி பிடிக்க முடியாத தூரத்திற்கு தன்னவள் ஆகியும் செல்கிறாளே என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைை.

சந்தோஷ் டிஸ்சார்ஜ் ஆகி தன்னுடைய வீட்டிற்கு சென்றிருக்கும் செய்தியை கேள்விப்பட்ட க்ரிஷா அவனை பார்ப்பதற்காக; கையில் நிறைய பழங்கள் மற்றும் எனர்ஜி ட்ரிங்க்குகளுடன் அவனுடைய வீட்டிற்கு சென்று இருந்தாள். இவளுக்கு வைத்த பொறியில் தன்னுடைய மகன் சிக்கிக் கொண்டு இப்படி கத்தி குத்து வாங்கி படுத்து கிடக்கிறானே என்ற கோபம் இன்னும் க்ரிஷாவின் மீது சந்தோஷின் அம்மா சாரதாவிற்கு இருந்து கொண்டு தான் இருந்தது.

அதனால் அவள் ஃபார்மாலிட்டிக்காக க்ரிஷாவை வரவேற்றாளே தவிர, மத்தபடி அவளிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஒரு தாயாக சாரதாவிற்கு தன் மீது இருக்கும் கோபத்தை புரிந்து கொண்ட க்ரிஷா அவளும் சாரதாவை பேசி தொந்தரவு செய்யவில்லை. சந்தோஷ், தன்னுடைய அறையில் வயிற்றில் கட்டுடன் மேல் சட்டை அணியாமல் ஒரு கைலியை கட்டி கொண்டு கட்டிலில் படுத்திருந்தான்.

அவனுடைய முகம் சோர்வாக இருந்தது. க்ரிஷாவிற்கு அவனை அப்படி பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருந்தது. 😪 சந்தோஷின் பாட்டி கையில் ஒரு கப் காபியுடன் உள்ளே வந்து அதை க்ரிஷாவிடம் நீட்டி, “நீ தான் க்ரிஷாவா மா..?? என் பேரன் உன்ன பத்தி தான் அடிக்கடி பேசிக்கிட்டே இருப்பான். அவன் சொன்னதை விட நேர்ல பார்க்கும்போது நீ இன்னும் அழகா இருக்க. இந்தாம்மா ஆடிட போது காபி குடி.” என்று சொல்லிவிட்டு அன்பாக அவளைப் பார்த்து புன்னகைத்தார். ☕ 😁 😁 😁 

அதை வாங்கி கொண்டு “தேங்க்ஸ் பாட்டி.” என்ற க்ரிஷா, ஓர கண்ணால் சந்தோஷை பார்த்தாள். அவன் அவளைப் பார்த்து வெட்கமின்றி இளித்து வைத்தான். 😁 😁 😁 சின்னஞ் சிறுசுகள் தனியாக பேசி கொண்டு இருக்கட்டும் என்று நினைத்த பாட்டி, அவர்களுக்கு தனிமையை கொடுத்துவிட்டு வெளியே சென்று விட்டார்.

சந்தோஷ்: காபி நல்லா இருக்கா மேடம்..??? ☕

க்ரிஷா: ம்ம்ம்.. நல்லா தான் இருக்கு. என்று சொன்னபடியே அவன் அருகே வந்து கட்டிலில் அமர்ந்தாள்.

சந்தோஷ்: க்ரிஷா தன் அருகில் வந்து அமர்ந்த உடனேயே அவனுக்கு ஏதோ போல் ஆகி விட்டது. அதனால் லேசாக நெளிந்தவன், சமாளிப்பதற்காக அவளைப் பார்த்து வலுக்கட்டாயமாக புன்னகைத்தான். 😁 😁 😁  

க்ரிஷா: அதான் ஏசி ஓடுதே..  சந்தோஷ். அப்புறம் ஏன் உனக்கு வேர்க்குது..?? என்று எதுவும் தெரியாதவளை போல் கேட்டாள். 

சந்தோஷ்: தெரியலையே மேடம்..!!! மேபி இது சம்மர்ல அதனால இருக்கும்.

க்ரிஷா: “சம்மர் சீசன் முடிஞ்சிடுச்சுடா வெண்ண. உனக்கு ஆக்சிடென்ட் ஆச்சு தான். ஆனா நீ ஒன்னும் கோமாவுக்கு போகல. இது ஜூலை மந்த்.” என்று கேஷுவலாக ஒரு சிப் காப்பியை குடித்து கொண்டு அவனை மொக்கை செய்தாள்.

சந்தோஷ்: மீண்டும் அவளைப் பார்த்து சிரித்து சமாளித்தவன், “உங்களுக்கு தான் எல்லாமே தெரியுதுல்ல மேடம்.. அப்ப நீங்களே சொல்லுங்க. எனக்கு ஏன் வேர்க்குதுன்னு…!!!” என்று சொல்லி தன் பக்கம் வந்த அம்பை அவள் பக்கமே திருப்பி விட்டான். 😁 😁 😁

க்ரிஷா: “என்ன கேட்டா எனக்கு என்ன தெரியும்..?? மேபி உனக்கு ஏதாவது ஹெல்த் இஸ்யூஸ் இருக்கலாம். நீ ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருந்தப்ப உனக்கு மாஸ்டர் ஹெல்த் செக் அப் பண்ணலையா…??? பண்ணலேன்னா, சீக்கிரம் போய் பண்ணிடு. அப்ப தான் ஏதாவது பெரிய டிஸிஸா இருந்தா, ஸ்டார்டிங்லயே கண்டுபிடிச்சு க்யூர் பண்ணிடலாம்.” என்று சீரியஸாக தன்னுடைய முகத்தை வைத்து கொண்டு சொன்னாள். 

சந்தோஷ்: அட போங்க. அப்படி எல்லாம் எனக்கு எதுவும் இல்ல. எல்லாம் உங்களால தான். 😒

க்ரிஷா: நான் உன்னை என்னயா பண்ணேன்..?? 🙄

சந்தோஷ்: “நீங்க எதுவுமே பண்ண தேவை இல்ல. சும்மா நீங்க என் பக்கத்துல வந்தாலே எனக்கு என்னென்னமோ ஆகுது. அத எல்லாம் நான் எப்படி உங்ககிட்ட சொல்றது..?? நீங்க வேற என்னோட பாஸ்..!! என் மேல கோபப்பட்டு நீங்க என்ன வேலைய விட்டு தூக்கிட்டீங்கன்னா… நாங்களே பாவப்பட்ட மிடில் கிளாஸ் ஃபேமிலி.. அப்புறம் ப்புவாவுக்கு என்ன பண்ணுவோம்..???” என்று அப்பாவியாக தன்னுடைய முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான். 

க்ரிஷா: அவன் என்ன அர்த்தத்தில் தன்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறான் என்று அவளுக்கு நன்றாக புரிந்தது. இருப்பினும் அதை வெளியில் காட்டி கொள்ளாதவள் அவனுடைய தலையின் மீது தன்னுடைய கையை வைத்து லேசாக விரட்டியபடி, “ஆர் யு ஓகே நவ்..?? இன்னும் பெயிண் இருக்கா..??” என்று அக்கறையுடன் விசாரித்தாள். 

சந்தோஷ்: அவள் பேச்சை மலுப்புகிறாள் என்று புரிந்து கொண்டவன் தானும் அதை தொடராமல், “பெயிண் லைட்டா இருக்கு. பட் ஓகே தான். முன்ன இருந்த அளவுக்கு இல்ல. யூ டோன்ட் வரி.” என்று சிரித்த முகத்துடன் சொன்னான். 😁 😁 😁

க்ரிஷா: நீ என்னால தான் இப்ப  கஷ்டப்பட்டுட்டு இருக்க. அப்புறம் உன்ன நினைச்சு நான் எப்படி கவலைப்படாம இருக்க முடியும்..?? யூ ஆர் இம்பார்டன்ட் டு மீ சந்தோஷ். டூ யு நோ தட்..??

சந்தோஷ்: எஸ் மேம், ஐ டூ. உங்க கண்ண பார்க்கும்போது, நீங்க என்ன பாக்கும்போது அதுல ஸ்பெஷலா ஏதோ ஒன்னு தெரியும். அது என்னான்னு கண்டுபிடிக்க நான் நான் ரொம்ப நாளா ட்ரை பண்றேன். அது உங்களுக்கு தெரிஞ்சா நீங்களே சொல்றீங்களா..??

க்ரிஷா: “நான் அது அதுஎன்னான்னு கண்டுபிடிச்சா, கண்டிப்பா அத உன்கிட்ட சொல்றேன் சந்தோஷ். அதுவரைக்கும் அது என்னான்னு தெரியாமையே இருக்கட்டும். இதுவும் ஒரு மாதிரி நல்லா தான் இருக்குல்ல…!!! 

நான் உன்னை பார்க்கிற வரைக்கும் ஒரு மாதிரி எப்பவுமே டென்ச்டு ஆ, டிப்ரெஸ்ட்டாவே சுத்திட்டு இருந்தேன். பட் இப்போ என்கிட்ட குட்டிக்குட்டியா நிறைய சேஞ்சஸ் வந்திருக்கு. உன்கிட்ட பேசும் போது எனக்கு கம்ஃபர்டபிலா இருக்கு. ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் மனசு விட்டு உன் கூட சேர்ந்து தான் சிரிச்சேன். தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங் சந்தோஷ். கெட் வெல் சூன். சீக்கிரம் ஆபிஸ்க்கு வா.” என்று ஒரே மூச்சில் எப்படியோ தன் மனதில் இருந்தவற்றை அவனிடம் ஒரு வழியாக சொல்லி முடித்தாள். 

சந்தோஷ்: “உங்கள ஃபர்ஸ்ட் டைம் பார்க்கும்போது நீங்க ரொம்ப டெரர் பீஸ்ன்னு நினைச்சேன். பட் போக.. போக.. தான் தெரிஞ்சது நீங்க ஒரு காமெடி பீஸ்ன்னு… ஒரு பாஸ் என்றத தாண்டி எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் மேம். இவ்ளோ சீக்கிரம் எனக்கு ஒருத்தவங்களை பிடிக்கும்னு நானே நெனச்சு கூட பாக்கல. 

இன் பாக்ட் நான் ஒரு ஒன் சைட் லவ் ஹார்ட் பிரேக் ஓட தான் நம்ம ஆபீஸ்ல வந்து ஜாயின் பண்ணுனேன். பட் எப்படி இது ஆச்சுன்னு தெரியல. அங்க வந்த உடனே மேஜிக் மாதிரி அந்த பீலிங்ஸ் எல்லாமே போய் நான் பழைய சந்தோஷ் ஆ மாறிட்டேன். யூ சேஞ்சுடு மீ. அண்ட் மை லைஃப் அண்னோஇங்கிலி. தேங்க் யூ.” என்று அவனும் தன் பங்கிற்கு தன் மனதில் இருந்தவற்றை அவளிடம் சொன்னான். ஏதோ ஒரு தைரியத்தில் அவளிடம் சொல்லிவிட்டானே தவிர, அவள் இதை கேட்டு தன் மீது கோபப்பட்டால் என்ன செய்வது என்ற பயம் அவனுக்குள் இருந்தது.

ஆனால் அவன் நிறைத்ததற்கு எதிர் மாறாக அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்த க்ரிஷா, “ஓகே நீ ரெஸ்ட் எடு. நான் கிளம்புறேன். ஃப்ரீ டைம் கிடைக்கும்போது எல்லாம் உன்ன வந்து பாக்குறேன். பாய்.” என்று சொல்லிவிட்டு அங்கே இருந்து கிளம்பினாள். 

ஷாலினியின் உடல்நிலை இப்போது சற்று சீராக இருந்ததால் அவளை இங்கே இருந்து நாராயணன் மருத்துவமனைக்கு ஷிப்ட் செய்வதற்காக ஒரு ஆம்புலன்ஸ் ஐ ஏற்பாடு செய்துவிட்டு அது வருவதற்காக ஹாஸ்பிடலில் காத்திருந்தான் விஷ்ணு. அப்போது அவனுக்கு செண்பகத்திடம் இருந்து கால் வந்தது.

நேற்று இருந்து தான் தன்னுடைய அம்மாவிடம் பேசாததால் தனக்கு ஏதேனும் தவறாக நேர்ந்து விட்டது என்று நினைத்து அவள் பயந்து விடக்கூடும் என்று நினைத்த விஷ்ணு, அந்த கால் ஐ அட்டென்ட் செய்தான். “எங்க டா இருக்க..?? நைட்டும் வீட்டுக்கு வரவே இல்ல. எப்ப வீட்டுக்கு வருவ..???” என்று கடுமையான குரலில் கேட்டாள் செண்பகம். 😒

“ஷாலினிக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சில்லம்மா.. அதான் நானும், ரேவதி அம்மாவும், ஹாஸ்பிடல்ல அவ கூட இருக்கோம். ரித்திகா அக்காவும் இங்க வரேன்னு தான் சொன்னாங்க. ஆனா சித்தார்த் தான் அவங்க இல்லாம இருக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறான். அதான் நாங்களே பார்த்துகிறோம்ன்னு சொல்லிட்டோம்.” என்று எதையும் மறைக்காமல் உண்மையாக தன்னுடைய அம்மா கேட்ட கேள்விக்கு பதில் சொன்னான் விஷ்ணு.

 “ஷாலினி ஓட அம்மா தானே செத்து போயிட்டாங்க.. அவங்க இல்லைன்னாலும் அவளோட சித்தியும் அப்பாவும் இன்னும் உயிரோட தானே இருக்காங்க..!!! அவங்க கிட்ட இன்பார்ம் பண்ணிட்டு நீங்க கிளம்பி வர வேண்டியது தானே..!!! இன்னும் உங்களுக்கு அங்க என்ன வேலை..?? சரி சம்பந்தி அம்மாவுக்கு தான் அவ மேல பாசம் அதிகம்னு அவங்க சொந்த பொண்ணு மாதிரி நினைச்சு கூட இருந்து பாத்துக்குறாங்க. நீ ஏன்டா இன்னும் அங்கேயே இருக்க உனக்கு வேற வேலை இல்லையா..??” என்று எரிச்சரான குரலில் கேட்டாள். 😒

விஷ்ணு: ஷாலினிய பாத்துக்குறத விட எனக்கு முக்கியமான வேலைன்னு எதுவும் இல்ல மா. நம்ப ஹாஸ்பிடல் இருந்து ஆம்புலன்ஸ் வர சொல்லி இருக்கேன். அது வந்த உடனே ஷாலினிய இங்க இருந்து நம்ம ஹாஸ்பிடலுக்கு சிப்ட் பண்ணனும் நிறைய வேலை இருக்கு.

செண்பகம்: நான் உன்னை கிளம்பி வீட்டுக்கு வான்னு சொன்னா கூட, நீ அவ கூட தான் இருப்பியா..??

விஷ்ணு: ஏன் மா இப்படி எல்லாம் பேசுறீங்க..??? ஒருத்தருக்கு உடம்பு சரி இல்லாத நேரத்துல இந்த மாதிரி ஈகோ ப்ராப்ளம்ஸ் எல்லாத்தையும் பார்க்கலாமா சொல்லுங்க..???

செண்பகம்: நீ தேவை இல்லாம பேசாத. எனக்காக நீ வருவியா.. மாட்டியா..??? அத மட்டும் சொல்லு டா.

விஷ்ணு: “சாரி மா, நான் இப்படி சொல்றேன்னு கோச்சுக்காதீங்க. ஷாலினி கூட ஆயிரம் பேர் இருந்தாலும் நான் இருக்கிற மாதிரி வராது. இந்த நிலைமையில என்னால அவளை தனியா அப்படியே விட்டுட்டு வர முடியாது. நீங்க கோச்சுக்காதீங்க ப்ளீஸ்…!!!” என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும்போதே அவன் ஏற்பாடு செய்து இருந்த ஆம்புலன்ஸ் அங்கே வந்து சேர்ந்தது. அதனால், “ஆம்புலன்ஸ் வந்துருச்சு மா. நான் உங்ககிட்ட அப்புறம் பேசுறேன் பாய் சாரி.” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்து விட்டான். 

 வைஷாலி தன்னிடம் விஷ்ணு மற்றும் ஷாலினியின் காதலைப் பற்றி சொன்னதில் இருந்து அதைப் பற்றி தான் யோசித்து கொண்டு இருந்தாள் செண்பகம். இப்போது அவள் விஷ்ணுவிடம் பேசியதை வைத்தே எவ்வளவு தீவிரமாக தன்னுடைய மகன் ஷாலினியின் மீது காதல் வயப்பட்டு இருக்கிறான் என்று அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் இப்போது தான் அவனிடம் நீ ஷாலினியை காதலிக்கிறாயா..?? என்று கேட்டால், “ஆமா மா நான் ஷாலினிய லவ் பண்றேன் எனக்கு அவ தான் முக்கியம்.” என்று சொல்லிவிட்டு மொத்தமாக தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டால் என்ன செய்வது என்று யோசித்தவள், இப்போதைக்கு இந்த விஷயம் தனக்கு தெரிந்ததை போல் தான் காட்டிக் கொள்ளக் கூடாது என்றும், இதைப் பற்றி ரித்திகாவிடம் கூட பேசக்கூடாது என்றும், முடிவெடுத்தாள். 

அதேசமயம் எதுவும் இல்லாத ஷாலினியை விஷ்ணு திருமணம் செய்து தன்னுடைய வீட்டிற்கு மருமகளாக கூட்டி கொண்டு வருவதை விட வைஷாலி மேல் என்று நினைத்தவள், முதலில் ஹரி மற்றும் தர்ஷினியின் திருமணத்தை முடித்துவிட்டு அடுத்த வேலையாக உடனே வைஷாலிக்கும், விஷ்ணுவிற்கும் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

அந்தப் பக்கம் செண்பகம் வில்லத்தனமாக திட்டம் போட்டுக்கொண்டு இருக்க, இந்த பக்கம் பிரவீன் வெறித்தனமாக லக்ஷனாவை தேடி கொண்டு இருந்தான். லக்ஷனா தன்னுடைய வீட்டின் கேட் திறந்து வெளியே சென்றதை சி. சி. டிவி. கேமராவில் பார்த்தவன் அங்கே இருந்து அவள் ஆட்டோவில் செல்வதை கண்டுபிடித்து, அப்படியே நூல் பிடித்தார் போல் ஒவ்வொரு சி. சி. டிவி. கேமரா ஃபுட்டேஜ் ஆக செக் செய்து அவள் எங்கே சென்று இருக்கிறாள் என்று தேடியவன் அவள் சென்ற ஆட்டோவின் நம்பரை கண்டு பிடித்தான்.

பின் அதை வைத்து அந்த ஆட்டோக்காரரை தூக்கிக் கொண்டு வந்து அடித்து சித்திரவதை செய்து அவன் லக்ஷனாவை எங்கே இறக்கி விட்டான் என்று கேட்டு தெரிந்து கொண்டான். அந்த ஆட்டோகாரர் சொன்ன வீட்டில் பிரவீன் வந்து பார்க்கும்போது அங்கே லக்ஷனாா இல்லை. அதற்குள் அந்த இடத்தை காலி செய்து இருந்த லக்ஷனா வேறு எங்கே சென்றிருப்பாள் என்று பித்து பிடித்தவன் போல தேடத் தொடங்கினான் பிரவீன். 

லக்ஷனா தங்கி இருந்த வீடு நடுத்தர மக்கள் வசிக்கும் இடம் என்பதால் அங்கே அவ்வளவாக சிசிடிவி கேமராக்கள் இல்லை என்பதால் அவனால் எளிதாக லக்ஷனாவை பின் தொடர முடியவில்லை. இருப்பினும் தான் 24 மணி நேரத்தில் தன் மனைவி லக்ஷனாவை கண்டுபிடித்தே தீருவேன் என்று போட்டு இருந்த சபதத்தில் வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் இருந்த பிரவீன் அவளை விடாமல் தேடி கொண்டே இருந்தான்.

வைஷாலியை பிலைட்டில் ஏற்றி விட்டுவிட்டு ரிட்டன் தன்னுடைய ஊரை நோக்கி வந்து கொண்டு இருந்தான் சிவா. அப்போது அவனுக்கு ஒரு அன்நோன் நம்பரில் இருந்து கால் வந்தது. இது ஏதேனும் ஒரு இம்பார்டன்ட் ஆன கால் ஆக இருக்கக்கூடும் என்று நினைத்தவன், அதை அட்டென்ட் செய்து ஹலோ என்றான். 

மறுமுனையில் இருந்து பதட்டமான குரலில் பேசிய திவ்யா, “ஹே சிவா.. நான் தான் திவ்யா. இன்னும் நீ என்ன ஞாபகம் வச்சிருக்கியா டா…???” என்று வலி நிறைந்த குரலில்் கேட்டாள். 😰 🥺  திவ்யாவின் குரலை கேட்ட உடனேயே தன்னுடைய காரை சடென் பிரேக் போட்டு நிறுத்திய சிவா, “திவ்யா.. எப்படி டி இருக்க..?? நான் எப்படி உன்னை மறப்பேன்..?? அன்னைக்கு உங்க அப்பா கேட்கும்போது நீ ஈஸியா சரின்னு சொல்லிட்டு உள்ள போயிட்ட. அதுக்கப்புறம் அவர்கிட்டயும் என்னால எதுவும் பேச முடியல. அதான் அங்க இருந்து அமைதியா கிளம்பி வந்துட்டேனே தவிர, என்னால இங்க வந்தும் நிம்மதியாவே இருக்க முடியல. எப்பயும் உன் நினைப்பாவே இருக்கு. நீ எப்படி இருக்க என்ன பண்ணிட்டு இருக்கன்னு தான் நான் யோசிச்சுகிட்டே இருக்கேன். எப்படி டி என்ன விட்டுட்டு உன்னால வேற ஒருத்தனுக்கு கழுத்த நீட்டட முடியுது..???” என்று கரகரத்த குரலில் கண்ணீருடன் கேட்டான். 😭 😭 😭

திவ்யா: நான் மட்டும் நீ இல்லாம எப்படி சிவா சந்தோஷமா இருப்பேன்..?? அன்னைக்கு எங்க அப்பா செத்துருவேன்னு சொல்லி பிளாக் மெயில் பண்ணதுனால வேற வழி இல்லாம நான் சரின்னு உள்ள வந்துட்டேன். இத நான் அவருக்காக தானே பண்ணேன்.. ஆனா அவர் கொஞ்சம் கூட என்ன பத்தி யோசிச்சு பாக்கவே இல்ல.

எனக்கு கொஞ்சம் டைம் கொடுக்கணும்னு கூட யோசிக்காம, அந்த பையன் கூட பேசு பழகு அங்க போ இங்க போன்னு அனுப்பி வைக்கிறாரு. இப்ப எல்லாம் அவரோட குடும்ப மானம் போகாத..?? என்னமோ நான் ஒரு பொம்மை மாதிரி அவர் இஷ்டத்துக்கு என்னை ஆட்டி வைக்கணும்னு நினைக்கிறாரு. சத்தியமா என்னால முடியல சிவா. எனக்கு நீ வேணும். எனக்கு நீ மட்டும் போதும். உன்னோட இடத்தை கண்ட நாய்க்கு எல்லாம் என்னால தர முடியாது.

இப்ப நான் கூப்பிடுறேன். எனக்காக நீ மறுபடியும் வருவியா..?? ஏதாவது பண்ணு. உன்னால முடியலன்னா, வருண் சார் கிட்ட ஹெல்ப் கேளு. பட் ப்ளீஸ் என்ன இங்க இருந்து கூட்டிட்டு போயிடு டா. நீ இல்லாம என்னால வாழ முடியாது சிவா. 

என்ன ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி அடிமை மாதிரி வச்சிருக்காங்க. இப்ப கூட எங்க ரிலேடிவ் ஒரு சின்ன பொண்ணு கிட்ட கெஞ்சி போன் வாங்கி உனக்கு யாருக்கும் தெரியாம கால் பண்ணி இருக்கேன். என்னால எவ்வளவு நேரம் பேச முடியும்னு தெரியல. உன்னால மறுபடியும் ஏதாவது பிரச்சனை வந்துருமோன்னு பயந்து ஆல்ரெடி ஃபிக்ஸ் பண்ண டேட்டுக்கு முன்னாடியே எங்க அப்பா கல்யாணம் வச்சிடலாம்னு பிளான் பண்ணிக்கிட்டு இருக்காரு. ஆனா அந்த டேட் எப்பன்னு எனக்கு தெரியல. சோ லேட் பண்ணாம சீக்கிரம் வந்து என்னை கூட்டிட்டு போ டா ப்ளீஸ்..!!! என்னால இங்க இருக்க முடியல.” என்று சொல்லிவிட்டு கதறி அழுதாள். 😭 😭 😭

அந்நேரம் யாரோ வருவதை போல் அவர்களுக்கு சத்தம் கேட்க.. அவளுடன் இருந்த அந்த சின்ன பெண், “அக்கா யாரோ வராங்க. போன் ஐ குடுங்க.” என்று கேட்க; வேகமாக அந்த அழைப்பை துண்டித்து விட்டாள் திவ்யா. அந்த கால் துண்டிக்கப்பட்ட உடன் சிவாவின் இதயத்தையும் யாரோ இரண்டாக துண்டித்ததை போல் பெரும் வலியை உணர்ந்தான் அவன். 💔

இப்போது அடுத்து தான் என்ன செய்வது என்று அவனால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. ஆனால் தன் திவ்யா அங்கே தன்னுடைய வருகைக்காக தன்னை நம்பி காத்திருக்கும் போது அவளுக்காகவாவது எதையாவது செய்ய வேண்டும் என்று மட்டும் நினைத்துக் கொண்டான்.

  • நேசம் தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured