அத்தியாயம் 174
விஷ்வாவை வெகு நேரமாக தேடிக் கொண்டிருந்த மேகா அவனது mobile phoneக்கு அடியில் ஏதோ letter இருப்பதை பார்த்தாள். நடுங்கிய கைகளுடன் அவள் அதை எடுத்து படித்துப் பார்க்க, “Sorry டி மேகா. I know, நான் இப்படி பண்றது கண்டிப்பா உன்ன hurt பண்ணும். பட் என்ன நான் சரி பண்ணிக்கறதுக்கு எனக்கு வேற option இல்ல. I need some space. நான் போறேன். உங்க எல்லாரையும் விட்டு ரொம்ப தூரமா. ப்ளீஸ் என்னை யாரும் தேட try பண்ணாதீங்க. நீங்க தேடினாலும் உங்களால என்ன கண்டுபிடிக்க முடியாது. So don’t waste your time. எனக்கு திரும்பி வரணும்னு தோணும்போது, நானே வருவேன். அதுவரைக்கும் எனக்காக wait பண்ணுங்க. I love you டி பொண்டாட்டி. Surely Gonna miss you.. bye. Take care.” என்று அதில் எழுதப்பட்டு lastஆக விஷ்வாவின் கையெழுத்து போடப்பட்டு இருந்தது. அதை அவன் எழுதும் போது அழுது கொண்டே எழுதி இருப்பான் போல. அதில் அங்கங்கே ஈரம் பட்டு எழுத்துக்கள் அழிந்து போயிருந்தது.
கலங்கிய கண்களுடன் அதை படித்துக் கொண்டிருந்த மேகாவின் கைகளில் இருந்து நழுவி விஷ்வாவின் அந்த லெட்டர் கீழே விழ, “இதே மாதிரி தான் என் வாழ்க்கையும் என் கை நழுவி போன மாதிரி இருக்கு. நீ எங்க போன விஷ்வா..?? என்ன இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போறதுக்கு உனக்கு எப்படி மனசு வந்துச்சு..?? இப்பதானே உன்ன ஹாஸ்பிட்டல்ல இருந்து discharge பண்ணி கூட்டிட்டு வந்தோம்.. உன் health conditionஐ பத்தி கூட நீ யோசிக்கலயா..??” என்று நினைத்தவள் “Noooo..!!” என்று தனது அடி தொண்டையில் இருந்து சத்தமாக கத்திவிட்டு dressing tableல் இருந்த விஷ்வாவின் பெரிய உயர்தர perfume bottle ஒன்றை எடுத்து வேகமாக கண்ணாடியில் அடித்தாள். பலத்த சத்தத்துடன் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து கீழே பல துண்டுகளாக விழுந்து சிதறியது.
அதைவிட ஆயிரம் துண்டுகளாக அவளது இதயம் கூடத்தான் உடைந்திருக்கிறது. ஆனால் அதன் சத்தம் வெளியில் கேட்காதே..!! அப்படியே தன்னை அறியாமல் கீழே கிடந்த கண்ணாடி துண்டுகளின் மீது மண்டியிட்டு அமர்ந்த மேகா, “ஏன் என்னை இங்க தனியா விட்டுட்டு போன விஷ்வா.. ஏன்… உனக்கு personal space வேணும்னு கேட்டிருந்தா.. அதை உனக்கு நானே குடுத்துட்டு இங்க இருந்து நான் கிளம்பி எங்கேயாவது கொஞ்ச நாள் போயிட்டு வந்திருப்பனே..!! என்கிட்ட எதுவும் சொல்லாம, என்னை இப்படி அம்போன்னு விட்டுட்டு உன்னால எப்படிடா போக முடிஞ்சுது..?? How could you do this to me..??” என்று கத்தி கதறிய மேகா, தன் இரு கைகளாலும் தரையில் வேகமாக அடித்துவிட்டு தொடர்ந்து அழுதாள். அவள் தொண்டை கிழியும் அளவிற்கு அதிக சத்தத்தில் அவளுக்குள் இருந்த வலி, வேதனை, ஏமாற்றம் என்று அத்தனையையும் வெளிப்படுத்தும் விதமாக பீறிட்டு கட்டி அழுதாள்.
பின் வேகமாக எழுந்தவள் அவன் தன்னை விட்டு பிரிந்து சென்ற சோகத்திலும், ஆதங்கத்திலும், தனது கைக்கு கிடைத்த பொருட்களை எல்லாம் அங்கும் இங்கும் தூக்கி எரிந்து உடைத்தாள். விலை உயர்ந்த பீங்கான் பொருட்கள், makeup items, home decors, என அனைத்தும் டமால் டுமீல் என்ற சத்தத்துடன் கீழே விழுந்து உடைந்தது. அந்த சத்தத்தை கேட்டு உள்ளே ஓடி சென்ற servants மேகா இருந்த நிலைமையை பார்த்து பயந்து போய் “மேடம்.. மேடம்.. என்ன மேடம் ஆச்சு உங்களுக்கு.. ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க..?? விஷ்வா சார் எங்க..??” என்று அவளிடம் கேட்டுவிட்டு “சார்.. சார்.. விஷ்வா சார்.. நீங்க எங்க இருக்கீங்க..??” என்று விஷ்வாவை அந்த பெரிய அறை முழுவதும் தேடினார்கள்.
அங்கே அவன் இல்லாததை பார்த்துவிட்டு கீழே ஏதோ லெட்டர் போல கிடந்ததால் அதை எடுத்து படித்துப் பார்த்த servantsக்கு இப்போதுதான் மேகா இப்படி ஏன் அழுது கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது. அதனால் “மகேஷ் சார் ஆபீஸ்க்கு கிளம்பறதுக்குள்ள நான் போய் இத அவர்கிட்ட காட்டுறேன்.” என்ற ஒருவன் அந்த லெட்டருடன் கீழே ஓடினான்.
ஆபீஸுற்க்கு செல்ல கிளம்பி கீழே வந்த மகேஷ் சாப்பிடுவதற்காக dining hallஐ நோக்கி சென்று கொண்டிருந்தான். அப்போது கீழே வந்த servant மூச்சு வாங்க, “சார் விஷ்வா சார்.. விஷ்வா சார் போயிட்டாரு..!!” என்றான். அவன் அரைகுறையாக சொன்னதைக் கேட்டு பதறிப்போன மகேஷ் சட்டென அவன் தோள்களை இறுக்கி பிடித்து தன் பக்கம் இழுத்து “என்னடா சொல்ற அவருக்கு என்னாச்சு..??” என்று வேகமாக கேட்டான். பாவம் ஒரு நொடியில் அவன் கண்களே கலங்கிவிட்டது.
“இங்க பாருங்க அவர் லெட்டர் எழுதி வச்சுட்டு யார்கிட்டயும் சொல்லாம எங்கயோ போயிட்டாரு.” என்று அந்த servant மகேஷின் கையில் ஒரு லெட்டரை கொடுத்தான்.
வேகமாக அதை வாங்கி படித்த மகேஷ் “Shitttt.. இவர் இப்படி பண்ணுவாருன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. பாஸ்.. எங்க பாஸ் போனீங்க..??” என்ற நினைத்தவன் உடனே விஷ்வாவின் நம்பருக்கு கால் செய்தான். இரண்டு மூன்று முறை அவன் கால் செய்தும் யாரும் அதை எடுக்கவில்லை. “ப்ளீஸ் பாஸ்.. என் callஐ அட்டென்ட் பண்ணுங்க.” என்று நினைத்து அவன் மீண்டும் அழைக்க, தட்டு தடுமாறி எழுந்து சென்ற மேகா அந்த callஐ attend செய்து “உங்க பாஸ் அவர் phoneஐ இங்கயே வச்சுட்டு என் தொல்லையை எல்லாம் அனுபவிக்க வேண்டாம்னு எங்கயோ போயிட்டாரு அண்ணா. இதுல யாரும் என்ன தேட வேண்டாம்னு வேற எழுதி வெச்சிட்டு போயிருக்கான் அவன். ப்ளீஸ் அண்ணா.. எப்படியாவது என் விஷ்வாவ தேடி கண்டுபிடிச்சு என்கிட்ட கூட்டிட்டு வாங்க. அவன பாக்காம என்னால இருக்க முடியாது.” என்று சொல்லிவிட்டு தேம்பித் தேம்பி அழுதாள்.
“நீ கவலைப்படாத மா. அவர் எப்படியும் ரொம்ப தூரம் போயிருக்க மாட்டாரு. நான் சீக்கிரம் அவரை கண்டுபிடிக்கிறேன்.” என்ற மகேஷ் தன்னிடம் லெட்டரைக் கொண்டு வந்து கொடுத்த servantஇடம் “போய் சீக்கிரம் தயாவையும், அரவிந்தையும் கீழ வர சொல்லு. சாராவையும், அணுவையும் அலர்ட் பண்ணு. அவங்கள போய் மேகா கூட இருக்க சொல்லு. விஷ்வா சார் இங்க இல்லைன்றது யாருக்கும் தெரியக் கூடாது.
புரிஞ்சுதா..??” என்று கேட்டபடி surveillance roomஜ நோக்கி சென்றான். “.ஓகே சார் புரிஞ்சது. நான் போய் அவங்ககிட்ட சொல்றேன்.” என்ற அந்த servant வேகமாக அங்கிருந்து ஓடினான்.
CCTV camera footageகளை monitor செய்து கொண்டு இருந்தவர்களிடம், “விஷ்வா சார் வெளிய போனத யாராவது பாத்தீங்களா..??” என்று மகேஷ் கேட்க, “இல்லையே சார். நேத்து midnightல இருந்து நாங்க ரெண்டு பேரும் தான் இங்க இருக்கோம். விஷ்வா சார் எங்கேயும் வெளியே போகலையே..!!” என்று அவர்கள் சொல்லி விட்டார்கள்.
“வெளிய போகாம.. அப்புறம் லெட்டர் எழுதி வச்சுட்டு எப்படி தானாவா மறைஞ்சு அப்படியே காணாம போயிருப்பாரு அவரு..??” என்று நினைத்த மகேஷ், “நீங்க நகருங்க. நான் பாத்துக்குறேன்.” என்று சொல்லிவிட்டு நேற்று இரவு முழுவதும் என்னென்ன நடந்தது என்று அத்தனை கேமராவின் footageகளையும் சலிக்காமல் மாறி மாறி play செய்து பார்த்தான்.
விஷயம் அறிந்து அங்கே ஓடிவந்த தயாளனும், அரவிந்தும் கூட அவனுடன் சேர்ந்து camera footageகளை check செய்து பார்த்தார்கள்.
“என்னடா எதுலயுமே பாஸ் இந்த பங்களாவை விட்டு வெளியே போன மாதிரி record ஆகவே இல்ல.. அப்புறம் எப்படி அவர் வெளிய போயிருப்பாரு..?? ஒரு நாள் என்கிட்ட இந்த வீட்டுக்குள்ளேயே நிறைய secret space இருக்குன்னு அவர் சொன்னாரு. ஒருவேளை வெளியே எங்கேயும் போகாம, வீட்டுக்குள்ளேயே அவர் மறைஞ்சு இருக்காரோ…??” என்று அரவிந்த் சந்தேகமாக கேட்க, “டேய் லூசு தனமா யோசிக்காதடா. அவரே நிம்மதிய தேடி தூரமா போறேன்னு எழுதி வச்சிருக்காரு.. இந்த mind setல வீட்டுக்குள்ள ஒழிஞ்சி கண்ணாமூச்சி விளையாடிட்டு இருப்பாரா..?? இந்த வீட்டை வாசுதேவன் சார்கிட்ட இருந்து வாங்குனதுக்கு அப்புறமா, அவர் நிறைய alteration பண்ணாரு. நமக்கே தெரியாம இங்க ஏதாவது secret exit கூட இருக்கலாம். இது அவர் வீடு. சோ அது வழியா யாருக்கும் தெரியாம அவர் வெளியே போயிருப்பாரு.” என்றான் மகேஷ்
“டேய் அவர் எப்படி வெளிய போயிருந்தா என்ன.. அதான் கிளம்பி போயிட்டாரே.. அவர் எங்க போயிருக்காருன்னு தான் இப்ப நம்ம கண்டுபிடிக்கணும்.” என்று தயாளன் சொல்ல, “Yes.. அதான் இப்ப important. அவர் எங்க போய் இருந்தாலும், கண்டிப்பா செலவு பண்ண money வேணுமே.. Phoneஐயும் இங்க வச்சிட்டு போயிட்டாரு. So credit or debit cardsஐ use பணித்தான் ஆகணும். நீங்க finance departmentஐ alert பண்ணுங்க. நான் போய் அவர் ரூம்ல ஏதாவது clue கிடைக்குதான்னு பாத்துட்டு வரேன்.” என்ற மகேஷ் வேகமாக வெளியே சென்றான்.
இப்படி அவர்கள் அனைவரும் நாலாபுறமும் விஷ்வாவைத் தேடி அலைந்து கொண்டு இருக்க, ஒரு சாதாரண சட்டையையும், pantம் அணிந்திருந்த விஷ்வா தன் மடியில் இருந்த ஒரு சிறிய backpackஐ இறுக்கமாக பிடித்துக் கொண்டு ஜன்னல் ஓரமாக அமர்ந்து வெளியில் தெரிந்த காட்சிகளை வேடிக்கை பார்த்தவாறு எங்கேயோ trainல் சென்று கொண்டிருந்தான். அவன் தன் முகத்தில் பெரிய cooling glassம், தலையில் capம் அணிந்து இருந்ததால் அவனை யாரும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை.
அவன் சென்று கொண்டிருந்த train ஒரு stoppingல் நிற்க, “கடலை.. கடலை. மசாலா கடலை.. சமோசா… டீ காபி.. டீ காபி.. veg rice.. lemon rice.. biryani biryani..!!” என்று ஒவ்வொருவரும் அந்த trainற்க்குள் ஒவ்வொன்றை தங்கள் கையில் வைத்துக் கண்டு விற்றபடி சென்றார்கள். கடைசியாக அவன் மேகாவுடன் சேர்ந்து நேற்று இரவு சாப்பிட்டது. நிம்மதியை தேடி செல்கிறேன் என்று கிளம்பி வந்து விட்டான். ஆனால் என்றாவது ஒரு நாள் உயிருடன் பத்திரமாக அவனது ஆருயிர் மனைவியிடம் அவன் திரும்பி செல்ல வேண்டும் அல்லவா..?? அதனால் பசியில் தன் வயிறு சத்தம் போடுவதை உணர்ந்த விஷ்வா, ஒரு lemon riceம், water bottleம் வாங்கி சாப்பிட தொடங்கினான்.
பின் அப்படியே அவன் ஜன்னலில் சாய்ந்து தன் கண்களை மூட, அவனுக்கு பாட்டியின் ஞாபகம் வந்தது. அதனால் அவன் கண்கள் அவனையும் மீறி கண்ணீர் சிந்த, அதை துடைத்துக் கொண்ட விஷ்வா “I am sorry பாட்டி. உங்கள நான் பத்திரமா பாத்துக்குவேன்னு சொன்னேன். ஆனா நான் என் promiseஐ break பண்ணிட்டேன். முடிஞ்சா என்ன மன்னிச்சிடுங்க.” என்று நினைத்துக் கொண்டான்.
தொடரும்..