அத்தியாயம் 244: விஷ்ணுவிற்கு பெரிய வரும் உண்மைகள்
விஷ்ணுவிற்கு தெரியவரும் உண்மைகள்
சித்தார்த்தின் பள்ளியில்…
ரித்திகா சென்றவுடன் வேக வேகமாக வைஷாலியை தேடி சென்ற லாவண்யா, அவளிடம் ஷாலினிக்கு நடந்த ஆக்சிடென்ட் ஐ பற்றி சொல்லி.. “இத பத்தி உங்களுக்கு தெரியுமா வைஷு..??” என்று பதட்டமான குரலில் கேட்டாள். அவள் பேசுவதை கேட்டு வாய்விட்டு சத்தமாக சிரித்த வைஷாலி, “என்ன லாவண்யா நீங்க இவ்ளோ அப்பாவியா இருக்கீங்க..!!! ஷாலினிக்கு இப்படி ஒன்னு நடக்குதுன்னா, அது யாரால நடக்கும்ன்னு நீங்க யோசிக்க வேண்டாமா..?? அவளோட மாமா ரவிய வச்சு இதை பண்ணதே நான் தான்.
இப்ப தான் அவன் எனக்கு கால் பண்ணி எல்லாம் பக்கவா முடிஞ்சதுன்னு சொன்னான். கரெக்டா நீங்களும் வந்து அதே குட் நியூஸ் ஐ சொல்றீங்க. இப்ப தான் எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு. இனிமே எனக்கும் விஷ்ணுவுக்கும் நடுவுல அந்த ஷாலினி இருக்க மாட்டா.” என்று சொன்ன வைஷாலி மீண்டும் பைத்தியம் பிடித்தவளை போல் சத்தமாக சிரிக்கத் தொடங்கினாள். 😂 😂 😂
அவளுடைய முகத்தில் தெரிந்த வெற்றி களிப்பை பார்த்த லாவண்யாவிற்கு கோபம் வந்தது. ஆனால் அதை அவளிடம் காட்டிக் கொள்ள விரும்பாதவள், “இருந்தாலும் நீங்க அவள கொலை பண்ற அளவுக்கு போவீங்கன்னு நான் எதிர்பார்க்கல.” என்று வருத்தமான குரலில் சொன்னாள். 😨 😰
மீண்டும் அவளைப் பார்த்து சிரித்த வைஷாலி, “என்ன உன் பிரண்டா நினைச்சு பீலிங்கா..!! பின்ன நான் வேற என்ன பண்ணுவேன்னு நினைச்ச..?? நான் அவளுக்கு விஷ்ணுவ விட்டு போவதற்கு நிறைய சான்ஸ் கொடுத்தேன். ஆனா அவ எங்க வீட்டிலேயே வந்து உட்கார்ந்துகிட்டு எங்க கண்ணு முன்னாடியே விஷ்ணு கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தா.
இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு ஹர்ட் ஆகும்னு கூட அவங்க ரெண்டு பேரும் யோசிக்கல. எங்க அத்தையை ஏமாத்திட்டு கிடைக்கிற சான்ஸ் எல்லாத்துலயும் ஜாலியா இருக்காங்க. இது எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு நான் எப்படி சும்மா இருக்க முடியும்..?? என்ன பத்தி மட்டும் யாரும் யோசிக்க மாட்டாங்கும்போது நான் மட்டும் யாரை பத்தி யோசிக்கணும்..?? ஷாலினிய விஷ்ணு கிட்ட இருந்து பிரிக்கிறதுக்கு எனக்கு வேற எந்த வழியும் கிடைக்கல. அதான் இப்படி பண்ணுனேன். நான் ஒன்னும் ப்ரொபஷனல் கொலைகாரி கிடையாது ஓகேவா…!!!
நான் என் விஷ்ணு மாமாவ எவ்ளோ லவ் பண்றேன்னு அவனுக்கே புரியல. இப்ப அதெல்லாம் அவனுக்காக தான் பண்ணேன்னு நான் உன்கிட்ட எக்ஸ்ப்ளைன் பண்ணா உனக்கு மட்டும் புரியவா போகுது…?? எனிவேஸ் எல்லாம் நான் நினைச்ச மாதிரியே நடந்துருச்சு. தேங்க்ஸ் டூ யூ. நீ தான் நல்ல வேலையா எனக்கு அந்த ரவிய பத்தி சொன்ன. இப்போ இந்த கேஸ்ல அவன் மாட்டினாலும், அவனுக்கு ஷாலினியா கொல்றதுக்கு மோட்டிவ் இருக்கிறதுனாலே போலீஸ் என் மேல சந்தேகப்பட மாட்டாங்க. ஓகே கிளாஸ் ஸ்டார்ட் ஆக போது நான் கிளம்புறேன் பை. அண்ட் இந்த விஷயம் நமக்குள்ள இருக்கிறது தான் உங்களுக்கும் நல்லது. அத உங்க மைண்ட்ல வச்சுக்கோங்க.” என்று சொல்லிவிட்டு கிரவுண்டிற்கு சென்றுவிட்டாள் வைஷாலி.
வைஷாலி சென்ற பின்பு லாவண்யாவின் மனம் குற்ற உணர்ச்சியில் குமுரியது. தான் அந்த பள்ளியில் சேர்ந்ததில் இருந்து தனக்கு உயிர் தோழியாக இருந்த ஷாலினிக்கு தன்னாலேயே இப்படி ஒரு ஆபத்து வந்து அவள் உயிர் பிளைபாளா மாட்டாளா என்ற நிலையில் ஹாஸ்பிடலில் கிடப்பதற்கு தானே ஒரு காரணமாகிவிட்டோமே என்று யோசித்துப்் பார்க்கும்போது தன்னையே ஒரு கேவலமான பிறவியாக உணர்ந்த லாவண்யா, உடனே சென்று தான் ஷாலினியை பார்க்க வேண்டும் என்று நினைத்தவள், யாரிடமும் எதுவும் சொல்லாமல் தன்னுடைய ஹேண்ட் பேக்கை மட்டும் எடுத்துக்கொண்டு ரித்திகாக்கு கால் செய்து அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்டுக் கொண்டு அங்கே தானும் சென்றாள்.
ஹாஸ்பிடலில் ஷாலினி, அவசர சிகிச்சை பிரிவில் சுய நினைவின்றி அட்மிட் செய்யப்பட்டு இருந்தாள். வெளியே விஷ்ணுவும், ரித்திகாவும் , கண்ணீர் நிறைந்த கண்களோடு டாக்டரின் வருகைக்காக காத்திருந்தனர். 😭 😭 😭 வேகமாக அவர்களின் அருகே சென்ற லாவண்யா, “அக்கா ஷாலினி இப்ப எப்படி இருக்கா…??” என்று அவசரமான குரலில் ரித்திகாவிம் கேட்டாள்.
தன்னுடைய கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்ட ரித்திகா, “ஷாலினிய அட்மிட் பண்ணும் போது உள்ள போன டாக்டர் இன்னுமே வெளியில வரல லாவண்யா. டாக்டர் வந்து அவ சரி ஆயிட்டான்னு சொல்லணும்னு நாங்க கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கோம். கடவுள் புண்ணியத்துல அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது. சின்ன வயசிலேயே அவ படாத கஷ்டம் எல்லாத்தையும் பட்டுட்டா.
இப்ப தான் அவ ஏதோ கொஞ்ச நாளா நிம்மதியா இருந்தா. அதுவும் அந்த கடவுளுக்கு பொருக்கல போல. அதான் அவளை இப்படி கஷ்டப்படுத்துறாரு. பாவம் ஷாலினி எத்தனை கஷ்டத்தை தான் தாங்குவா..!!!” என்று சொன்னவளின் கண்கள் மீண்டும் வேதனையில் கலங்கியது. 😭 😭 😭
லாவண்யா என்ற ஒருத்தி அங்கே வந்ததை கூட கண்டு கொள்ளாமல் ஷாலினி அட்மிட் செய்யப்பட்டு இருந்த அறையின் கதவையே வெறித்து பார்த்துக் கொண்டு சித்தபிரம்மை பிடித்தவன் போல நின்று கொண்டு இருந்தான் விஷ்ணு. அவனை அப்படி பார்த்தவுடன் லாவண்யாவின் இதயம் குற்ற உணர்ச்சியில் துடித்து ஒவ்வொரு நொடியும் செத்துக்கொண்டு இருந்தது. 💔 😞 அதனால் தான் செய்த பாவத்திற்கு எப்படியாவது விஷ்ணுவிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் தன்னால் நிம்மதியாகவே வாழ முடியாது என்று நினைத்த லாவண்யா விஷ்ணுவின் அருகே சென்று, “சார் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். ப்ளீஸ் தனியா வரிங்களா..??” என்று தாழ்மையான குரலில் கேட்டாள்.
“நான் உங்ககிட்ட எத பத்தியும் பேசுற நிலைமையில இல்ல லாவண்யா.” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னான் விஷ்ணு. “ப்ளீஸ் சார் நான் ஷாலினிய பத்தி தான் உங்க கிட்ட பேசணும் அவளுக்கு யார்னால இப்படி ஆச்சுன்னு எனக்கு தெரியும். நான் சொல்றத தயவு செஞ்சு கேளுங்க இதுக்கு மேலயும் எனக்கு தெரிஞ்ச உண்மை எல்லாத்தையும் நான் உங்ககிட்ட சொல்லாம இருந்தா, குற்ற உணர்ச்சியிலே நான் செத்துருவேன். உங்கள கெஞ்சி கேட்டுக்குறேன். ஒரு அஞ்சு நிமிஷம் மட்டும் நான் சொல்றத கேளுங்க.” என்று கெஞ்சும் தோரணையில் சொன்னாள்.
“என்ன லாவண்யா சொல்றீங்க ஷாலினிக்கு யாரால இப்படி ஆச்சுன்னு உங்களுக்கு தெரியுமா? அப்போ இது ப்ரீ பிளான்ட் மர்டரா ஆக்சிடென்ட் இல்லையா..?? சொல்லுங்க என் ஷாலினியை கொல்லப் பார்த்தது யாருன்னு சொல்லுங்க. எனக்கு தெரிஞ்சே ஆகணும்.” என்று கோபம் நிறைந்த குரலில் அவசரமாக கேட்டான்.😒 😡
அவன் பேசிய விதத்தில் தனக்கு தெரிந்த உண்மைகளை அவனிடம் சொல்லுவதற்கே லாவண்யாவிற்கு பயமாக தான் இருந்தது இருப்பினும் இத்தனை தூரம் வந்துவிட்ட பின் தான் அதை சொல்லாமல் சென்றாலும் தன்னால் நிம்மதியாக வாழ முடியாது என்று நினைத்து ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள், “சொல்றேன் சார்… எனக்கு என்னென்ன தெரியுமோ அது எல்லாத்தையும் நான் உங்ககிட்ட சொல்றேன். பட் ப்ளீஸ் ஒரு அஞ்சு நிமிஷம் மட்டும் தனியா போய் பேசலாம் வாங்க.” என்று சொன்னவள் மீண்டும் அவனை தன்னுடன் வரும்படி அழைத்தாள்.
அவள் மீண்டும் மீண்டும் தன்னை தனியாக அழைப்பதை கண்டு கருப்பான விஷ்ணு, “இங்கே பாருங்க லாவண்யா அவங்க என்னோட அண்ணி. அவங்களுக்கு தெரியாம எங்க லைப்ல எதுவுமே இல்ல. ஷாலினியை பத்தின எந்த விஷயமாக இருந்தாலும் அது தெரிஞ்சுக்கறதுக்கு அவங்களுக்கும் ரைட்ஸ் இருக்கு. சோ பரவால்ல நீங்க அவங்க முன்னாடியே சொல்லுங்க.” என்று உறுதியான குரலில் சொல்லி விட்டான் அதனால் வேறு வழி இன்றி பேசத் தொடங்கினாள் லாவண்யா.
“ஐ அம் சாரி சார். நம்ம ஷாலினிக்கு இப்படி ஆகுறதுக்கு நானும் ஒரு காரணம் தான். இதை இப்போ இப்படி ஒரு சிச்சுவேஷன்ல சொல்லுவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. உங்க கிட்ட இத சொல்றதுக்கே எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு. நான் உங்கள பார்த்த பர்ஸ்ட் டேல இருந்தே உங்களை ரொம்ப லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன் சார்.
அப்ப உங்களுக்கு ஷாலினி மேல தான் இன்ட்ரஸ்ட் இருக்குன்னு எனக்கு தெரியாது. அதனால நான் ஆசைய வளத்துக்கிட்டேன். ஒரு கட்டத்துல எனக்கு உங்களுக்கு ஷாலினி மேல இன்ட்ரஸ்ட் இருக்குனு தெரிஞ்சாலும், அவ எப்படியும் உங்களை லவ் பண்ண மாட்டாங்கற நம்பிக்கை இருந்துச்சு.
எப்படியும் உங்களுக்கும் ஷாலினிக்கும் செட் ஆகாது. சோ, அவள வச்சே உங்க கூட நான் க்ளோஸ் ஆகிடனும்னு நெனச்சேன். ஆனா அவளும் உங்கள திரும்பி லவ் பண்ணுவான்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணல. இருந்தாலும் ஷாலினியோட ஃபேமிலி சரி இல்லாததுனால அவளை எப்படியும் உங்க வீட்ல அக்செப்ட் பண்ணிக்க மாட்டாங்கன்னு நினைச்சு ஸ்டில் எனக்கு ஒரு சான்ஸ் இருக்குன்னு நம்பிட்டேன்.
வைஷாலி இங்க வந்ததுக்கு அப்புறம் தான் எனக்கு உங்களை பத்தின ஒவ்வொரு உண்மையா தெரிஞ்சது. ஷாலினிக்கு இப்படி ஒரு வாழ்க்கையான்னு என்னால அவளை நினைச்சு பொறாம படாம இருக்க முடியல. அதனால நானா வழிய போய் வைஷாலி கூட ஃப்ரெண்ட்ஷிப் பண்ணேன். உங்கள பத்தி அவ கிட்ட சொன்னேன். அவ உங்களோட ஷாலினி ஓட ரிலேஷன்ஷிப், அவளோட ஃபேமிலி பத்தி, எல்லாத்தையும் கேட்டா. நானும் ஒன்னு விடாம சொல்லிட்டேன்.
வைஷாலி எப்படி ஆச்சு உங்கள பத்தின விஷயத்தை வீட்ல பேசி பிரச்சினை பண்ணி உங்களையும் ஷாலினியையும் பிரிச்சிட்டா, அந்த கோவத்துல நீங்க வைஷாலி கூடையும் பேச மாட்டீங்க. சோ, லாஸ்ட்ல எனக்கு ஒரு சான்ஸ் இருக்கும்னு நினைச்சேன். அப்பப்ப வைஷாலி கிட்ட போய் பேசி அவளை உங்களுக்கு எதிரா திருப்பி விட்டேன். நான் இப்படி எல்லாம் பண்ணா, அவ டென்ஷன் ஆகி செண்பகம் மேடம் கிட்ட உங்கள பத்தி சொல்லுவான்னு நினைச்சேன்.
ஆனா அவ இவ்ளோ வில்லத்தனமா யோசிச்சு ரவிய வச்சு பிளான் பண்ணி ஷாலினிய கொலை பண்ண நினைப்பான்னு நான் சத்தியமா யோசிச்சு கூட பாத்ததில்லை சார். இப்ப ரித்திகாஅக்கா ஸ்கூல்ல இருந்து கிளம்பும்போது அவங்க சொல்லி தான் ஷாலினிக்கு ஆக்சிடென்ட் ஆனதே எனக்கு தெரியும். அதைக் கேட்டவுடனே எனக்கு என்னமோ மாதிரி ஆயிடுச்சு. அதனால இதை வைஷாலி தான் செஞ்சிருப்பாளான்னு டைரக்ட்டா அவ கிட்டையே போய் கேட்டேன். அவளும் ஆமான்னு ஒத்துக்கிட்டா. அது மட்டும் இல்லாம நான் இதை வேற யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொல்லி என்னை மிரட்டுனா.
ஷாலினி சாகனும்னு நான் எப்பவுமே ஆசைப்பட்டதில்லை விஷ்ணு சார். சத்தியமா வைஷாலி இந்தளவுக்கு போவான்னு எனக்கு தெரியாது. அது தெரிஞ்சிருந்தா, நான் உங்கள பத்தின உண்மைகளை அவகிட்ட சொல்லி இருக்கவே மாட்டேன். இப்ப ஷாலினி இருக்கிற இந்த நிலைமைக்கு நானும் ஒரு காரணம் ஆயிட்டேன். அதை நினைக்கும் போதே எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு. தயவு செஞ்சு என்ன மன்னிச்சிடுங்க. இப்பயும் இந்த உண்மையை உங்ககிட்ட சொல்லாம இருந்தா என்னாலயே என்ன மன்னிச்சிருக்க முடியாது. அதான் உங்ககிட்ட வந்து எல்லாத்தையும் சொல்லிட்டேன்.
நான் தான் இதை உங்ககிட்ட சொன்னேன்னு தெரிஞ்சா, அந்த வைஷாலி என்ன சும்மா விடமாட்டா. அதனால உங்களால முடிஞ்சா, தயவு செஞ்சு இதை நான் தான் சொன்னேன்னு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. நான் பண்ண தப்புக்கு பிராய்ச்சித்தமா உங்க கண்ணுல படாம இந்த ஊரை விட்டே போயிடுறேன். உங்களால முடிஞ்சா என்ன மன்னிச்சிடுங்க. தயவு செஞ்சு என் மேல எந்த ஆக்ஷனும் எடுத்துறாதீங்க சார். என்னுடைய ஃபேமிலியால இருக்கிறவங்க அதையெல்லாம் தாங்க மாட்டாங்க . அவங்க ரொம்ப மனசு உடைஞ்சு போய்டுவாங்க ப்ளீஸ் சார்….!!!” என்று கண்கள் நிறைய கண்ணீருடன் தன்னுடைய இரு கைகளையும் கூப்பி அவன் முன் கெஞ்சினாள்.
அவள் பேசியதை கேட்டு கொண்டு இருந்த விஷ்ணு தான் என்ன செய்வது என்று தெரியாமல், லாவண்யாவை முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் பேசியதை விஷ்ணுவின் அருகில் இருந்து கேட்ட ரித்திகா கோபத்தில் வேகமாக வந்து லாவண்யாவின் கன்னத்தில் பளார் என்று அறைந்தவள், “இந்த கடைசி நிமிஷத்துலயாவது உனக்கு புத்தி வந்து நீ மனசு மாறியிருக்கிறதுனாலயும், உன் கூட பழகுன பாவத்துக்காகவும், உன்ன சும்மா விடுறேன். இங்க இருந்து ஓடிப் போயிடு. போய் ஷாலினிக்கு எதுவும் ஆக கூடாதுன்னு கடவுள் கிட்ட வேண்டிக்கோ. அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா நாங்க உன்ன சும்மாவே விட மாட்டோம்.” என்று அவளை எரித்து விடும் பார்வை ஒன்றை பார்த்துவிட்டு கோபமாக கர்ஜித்தாள்் ரித்திகா. 😡 😤 🔥
ரித்திகாவின் இந்த ஆங்கார ஸ்வரூபத்தை இதற்கு முன் பார்த்திராத லாவண்யா பயத்துடன், “சாரி அக்கா.” என்று சொல்லிவிட்டு அங்கே இருந்து சென்றுவிட்டாள். லாவண்யா சென்றவுடன் சோகமாக விஷ்ணுவை திரும்பிப் பார்த்தாள் ரித்திகா. விஷ்ணு அவளிடம் வாயைத் திறந்து எதுவும் பேசவில்லை ஆனால் அவனுடைய கண்களில் இருந்து மட்டும் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. அவனை சற்று தேற்ற முயன்ற ரித்திகா அவன் அருகே சென்று அவனுடைய தோளில் தன்னுடைய கையை வைத்தாள்.
தான் இருக்கும் இடத்தை கூட ஒரு நொடியில் மறந்துவிட்ட விஷ்ணு ரித்திகாவை கட்டிப்பிடித்துக் கொண்டு, “என்ன அக்கா நடக்குது இங்க..??? நம்ப வைஷாலியா இப்படி எல்லாம் பண்ணி இருக்கா..??? அவளால இந்த மாதிரி எல்லாம் யோசிக்க முடியும்னு என்னால இப்ப கூட நம்ப முடியல. லவ்க்காக ஒருத்தவங்க இப்படி எல்லாமா அக்கா செய்வாங்க..??? கடைசியில யோசிச்சு பார்த்தா ஷாலினிக்கு இப்படி ஒன்னு நடக்கிறதுக்கு நான் தான் காரணம் ஆயிட்டேன்.
நேத்தே அவளோட அம்மாவும் அப்பாவும் வந்து எங்களை பார்த்து வான் பண்ணிட்டு போனாங்க. அந்த வைஷாலி என்ன வேணாலும் பண்ணுவா நீங்க சேஃபா இருங்கன்னு சொன்னாங்க. ஆனா நான் தான் அதை பெருசா எடுத்துக்கல. இவங்க சொல்ற அளவுக்கு எல்லாம் அவ போக மாட்டான்னு நம்புனேன். ஆனா அவ என் ஷாலினி போய் இப்படி பண்ணிட்டாளே அக்கா…!!!!” 😤 🤗 😭 😭 😭 என்று அவளிடம் சொல்லி கொண்டு அழத விஷ்ணு அவனுக்கு வந்த கோபத்தில் ரித்திகாவிடம் இருந்து பிரிந்து தன்னுடைய கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை வேகமாகாக துடைத்தவன், “எனக்கு அந்த வைஷாலியை வெட்டி போட்டா தான் அக்கா என் ஆத்திரமே அடங்கும். நான் ஆல்ரெடி அவளை வான் பண்ணி தான் விட்டேன். அப்பயும் நான் சொன்னதை கேட்காம அவ என் ஷாலினிய இந்த நிலைமைக்கு கொண்டு வந்து போட்டுட்டா. அவ எல்லாம் உயிரோடவே இருக்கக் கூடாது அக்கா. ஷாலினி கண் முழிக்கறதுக்குள்ள வைஷாலி செத்து போயிட்டான்ற நியூஸ் அவளுக்கு கிடைக்கணும்.” என்று ஆக்ரோஷமான குரலில் சொன்னான். 😒 😡 🔥
விஷ்ணுவிற்கு இருந்த கோபத்தை கண்டு பயந்த ரித்திகா அவனை இழுத்து கொண்டு வெயிட்டிங் ஹாலுக்கு சென்றவள், “கோவத்துல வைஷாலி பண்ண தப்பை நீயும் பண்ண போறியா விஷ்ணு..?? நீ அவளை கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிட்டா, ஷாலினி சரியாகி வந்ததுக்கு அப்புறம் நீ எங்கன்னு கேட்பாளே நான் அவளுக்கு பதில் என்ன சொல்றது..?? ஷாலினி ஓட அப்பா அம்மா உங்க கிட்ட பேசினப்பையே நீங்க என்கிட்ட இல்லன்னா உன்னோட அண்ணா கிட்ட இதை பத்தி சொல்லி இருக்கணும்.
இதுக்குள்ள அவ வந்திருந்தா, ஈஸியா வைஷாலிய நம்ம கண்ட்ரோல் பண்ணி இருக்கலாம். இப்பவும் எதுவும் நம்ம கையை மீறி போகல ஷாலினிக்கு எதுவும் ஆகாது நீ அவ கூடையே இரு நான் உங்க அண்ணா கிட்ட பேசுறேன். நம்ம கண்டிப்பா வைஷாலியயும் சும்மா விட முடியாது. நீ அவள பத்தி யோசிக்கிறத விட்டுட்டு ஷாலினிய பத்தி மட்டும் யோசி. போய் அவ கூட இரு. டாக்டர் என்ன சொல்றாருன்னு கேளு. அவள பாத்துக்கோ. நான் உங்க அண்ணன் கிட்ட பேசிட்டு வரேன்.”
என்று சொல்லி அவனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தவள், வருணிக்கு கால் செய்து நடந்த அனைத்தையும் அவனிடம் தெளிவாக சொன்னாள். “ஓகே நீ பயப்படாத. ஷாலினிக்கு எதுவும் ஆகாது. எவ்வளவு செலவானாலும் நம்ப அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து அவளை சரி பண்ணிடலாம். நான் இப்ப ஒரு இம்பார்டன்ட் ஆனா வொர்க் -ல மாட்டிகிட்டேன். என்னால ஆபீஸ விட்டு வெளியில வர முடியாது.
நீ அங்க இருந்து எல்லாத்தையும் பாத்துக்கோ. நான் டாக்டர்ஸ் ஐயும், ஆம்புலன்ஸ் ஐயும், அங்க அனுப்பி வைக்கிறேன். ஷாலினி ஓட கண்டிஷன் கொஞ்சம் ஸ்டேபிள் ஆன உடனே அவளை நாராயணன் ஹாஸ்பிடலுக்கு சிப்ட் பண்ணிடுங்க. நான் உனக்கு ஒரு போலீஸ் கமிஷனர் ஓட நம்பர் ஐ சென்ட் பண்றேன். நீ அவர்கிட்ட என்னோட வைஃப்னு சொல்லி கால் பண்ணி, ஷாலினிக்கு நடந்த ஆக்சிடன்ட்ல ரவி மேலே டவுட் இருக்குன்னு மட்டும் சொல்லு. வைஷாலி ஓட பேர் இதுல வெளில வர கூடாது.
அவர் இன்வெஸ்டிகேட் பண்ணி எல்லாத்தையும் கண்டுபிடிப்பாரு மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ விஷ்ணு கூடையே இரு. அவன தனியா விடாத. அவன் எங்களை மாதிரி இல்ல.. ரொம்ப சென்டிமென்டல் டைப். சோ டேக் கேர் ஆஃப் எவரிதிங்.
என்னோட நாலேஜ் இல்லாம வெளியில போகாதீங்க. நீங்க இருக்கிற இடத்துக்கு நான் உங்களுக்கு ப்ரோடுக்ஷன் கொடுக்கிறதுக்கு அரேஞ்ச் பண்றேன். மீடியா பீப்பிள் யாராவது இத ஸ்மெல் பண்ணி அங்க வந்துட்டாங்கனா, அவங்க கிட்ட எதுவும் வாய திறக்காத. முக்கியமா விஷ்ணுவ யார் கண்ணுலையும் காமிச்சிராத. அவன் ரொம்ப சென்சிடிவ். மீடியா பீப்பிள் கேட்கிற கொஸ்டின் எல்லாம் அவனால ஆன்சர் பண்ண முடியாது.” என்று சொல்லிவிட்டு அந்த கால ஐ துண்டித்தான் வருண் .
வருணின் பேசிய பின்பு தான் ரித்திகாவிக்கு அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவே பிறந்தது. இது ஆக்சிடென்ட் கேஸ் என்பதால் அந்த ஹாஸ்பிடலில் இருந்தவர்களே ஏற்கனவே போலீசுக்கு இன்பார்ம் செய்து இருந்தனர். அதனால் அந்த ஏரியாவின் இன்ஸ்பெக்டர் அங்கே வந்திருந்தார். அவரை சென்று சந்திப்பதற்கு முன்பு வருண் தனக்கு அனுப்பி இருந்த கமிஷனரின் நம்பருக்கு கால் செய்து பேசிய ரித்திகா அவரை வைத்தே அந்த இன்ஸ்பெக்டரை சமாளித்து அங்கே இருந்து அனுப்பி வைத்து விட்டாள்.
வருண் அவர்களிடம் சொன்னதைப் போல் சிவாவை வைத்து அவர்கள் இருந்த ஹாஸ்பிடல் தங்களுடைய பாடி கார்டுகளின் படையை வைத்து சுற்றி வளைத்து. பாதுகாப்பிற்காக ஆதித்யாவும் அங்கு வந்து சேர்ந்தான் ஷாலினிக்காக தங்களுடைய மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஸ்பெஷல் இன் சார்ஜ்யும், உயர்தர ஆம்புலன்ஸ் ஐயும் அனுப்பி வைத்தான். விஷ்ணு மற்றும் ரித்திகா உடனே இருந்த ஆதித்யா யாராலும் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொண்டான்.
– நேசம் தொடரும் ❤️
(உன்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)