அத்தியாயம் 235: மை டாடி மை சூப்பர் ஹீரோ (பார்ட் 1)
நாராயணன் பேலஸில்..
வருண் அனைவரையும் அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்தான். அவர்கள் வரும் வரை ஹாலிலேயே காத்திருந்த செண்பகம் வருணை பார்த்து, “கல்லறைகுள்ள போயிட்டு வந்து அப்படியே வீட்டுக்குள்ள போகாதீங்க. என்ன தான் நம்ப வீட்டுக்குள்ளேயே ஒரு ஓரமா கல்லறை வச்சிருந்தாலும் அது கல்லறை தான். எல்லாரும் குளிச்சிட்டு பொறுமையா கிளம்பி வெளியில போங்க. இங்க சாப்பிடுறதுனா சாப்பிட்டுட்டு கிளம்புங்க. இல்லன்னா, வெளிய போய் கூட சாப்பிடுங்க. ஆனா குளிக்காம, இப்படியே இருக்காதீங்க. அவங்க கிட்டயும் நீ இத சொல்லிரு.” என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.
தன்னுடைய அம்மா தன்னிடம் தமிழில் சொல்லிவிட்டு சென்றதை ஜான்வியின் பெற்றோர்களிடம் ஹிந்தியில் சொன்னான் வருண். ஆனால் தன்னுடைய அம்மா சொன்னதைக் கேட்டு அவர்கள் கோபப்பட்டு விடுவார்களோ என்ற பயம் அவனுக்கு இருந்தது. ஆனால் அவன் நினைத்ததற்கு மாறாக, “உங்க அம்மா சொன்னது கரெக்ட் தான் பேட்டா. என்ன தான் நமக்கு வேண்டப்பட்டவங்களா இருந்தாலும், இறந்து போனவங்க… இறந்து போனவங்க தானே…!!! ஜான்வி ஓட சமாதிய நீங்க வீட்டுக்குள்ள வச்சதே தப்பு. நீங்க எங்க பொண்ணு மேல இருந்த பாசத்துல அப்படி பண்ணிட்டீங்க நாங்க அப்ப இருந்த சோகத்துல எங்களாலையும் எதுவும் சொல்ல முடியல. பட் இட்ஸ் ஓகே. இப்ப நம்மளால எதுவும் பண்ண முடியாது. நீங்களும் இனிமே அங்க போயிட்டு வந்தா மறக்காம தலையோட குளிச்சுருங்க.” என்று ஹிந்தியில் சொன்னாள்.
அதனால் அவர்கள் அனைவரும் குளித்துவிட்டு தயாராகி கீழே வந்து சேர்ந்தனர். சித்தார்த்தின் வற்புறுத்தல வருண், ரித்திகா, அவன், என மூவரும் ஒரே மாதிரியான கலரில் ஆடை அணிந்து இருந்தனர். அவர்களை அப்படி பார்ப்பதற்கே ஒரே குடும்பமாக அழகாக தெரிந்தனர். அவர்களை அப்படி பார்ப்பதற்கு ஒரு புறம் ஜான்வியின் பெற்றோர்களுக்கு தங்களுடைய பேரனுக்கு ஒரு புதிய அம்மா கிடைத்து அவள் அவனை நன்றாக நடத்தினால் நல்லது தான் என்று தோன்றினாலும், இந்த வாழ்க்கையை இருந்து வாழ தங்களுடைய மகளுக்கு கொடுத்து வைக்கவில்லையே என்ற வருத்தம் இன்னொரு பக்கம் அதைவிட அதிகமாக இருந்தது.
பின் அவர்கள் அனைவரும் வருணின் காரில் வெளியே கிளம்பினார்கள். மொட்டை மாடியில் வெள்ளை கவுன் அணிந்து தலைவிரி கோலத்தில் காற்றில் தன்னுடைய கூந்தல் அசைந்தாட நின்று கொண்டு இருந்த ஒரு இளம் பெண், செல்லும் அவர்களுடைய கார் -ஐயே வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள். அவளுடைய அழகிய கண்களில் சோகமும், ஏக்கமும், வெளிப்படையாக தெரிந்தது.
பிரவீனின் வீட்டில்…
வருண், தன்னுடைய மாமியார் வீட்டிற்கு மறு வீட்டிற்க்காக சென்று தன்னுடைய மனைவி மற்றும் அவளுடைய குடும்பம் என அனைவருடனும் இணைந்து சந்தோஷமாக விளையாடி மகிழ்வது போன்ற போஸ்ட் ஒன்றை விஷ்ணு பதிவிட்டதை பார்த்த பிரவீன்; வயிற்றெரிச்சலின் உச்சத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ஒரு உயர்தர பாரில் குடித்தே கலைத்துப் போனவன், போதையில் தள்ளாடியபடியே தன்னுடைய வீட்டிற்கு வந்தான்.
அவன் தன்னுடைய அறைக்குள் நுழைந்தான். பிரவீன் அங்கே இல்லாததால் இன்னும் நிம்மதியாக உறங்கிக் கொண்டு இருந்தாள் லக்ஷனா. தான் இப்படி நிம்மதி இன்றி தவிக்கும்போது தன்னுடைய மனைவி மட்டும் எப்படி நிம்மதியாக தூங்கலாம் என்று வக்கிர புத்தியில் யோசித்த பிரவீன், தூங்கிக் கொண்டு இருந்த லக்ஷனாவின் நீண்ட கூந்தலை கொத்தாக பிடித்து இழுத்து அவளை அவன் எழுப்பி நிற்க வைத்தான்.
அவன் தன்னுடைய கூந்தலை வேகமாக பிடித்து இழுத்ததில் அவளுடைய தலையில் அதிக வலியை உணர்ந்த லக்ஷனா கோபத்தில், “விடு டா என்ன பண்ற..??? ஆர் யூ மேட் ஆர் வாட்…???” என்று சத்தமாக கத்தினாள். 😡 😤 🔥 அவள் தன்னிடம் அவளுடைய குரலை உயர்த்தி பேசியதால் அவள் மீது பிரவீனிற்கு இன்னும் கோபம் அதிகரித்து விட அவளுடைய கூந்தலை இன்னும் இறுக்கமாக பிடித்து அதை தன்னுடைய கைகளில் சுற்றியவன், அவளுடைய கன்னங்களில் மாறி மாறி பளார்.. பளார்… என்று அறைந்து, “என் டி உனக்கும் எனக்கும் கூட இப்ப தானே கல்யாணம் ஆச்சு..!!! உன் ஃபேமிலி என்ன ரோட்ல உக்காந்து பிச்சையா எடுக்குறீங்க..??? ஒன்னும் இல்லாதவன் குடும்பத்திலயே இரண்டாவது கல்யாணம் பண்ணவன கூட்டிகிட்டு போய் உட்கார வச்சு மறு வீடு பங்க்ஷன் எல்லாம் செலிபிரேட் பண்றாங்க.
எனக்கு என்ன டி குறைச்சல்…?? எனக்கு இது ஃபர்ஸ்ட் மேரேஜ் டி. எனக்கு நடக்க வேண்டியது எல்லாம் மட்டும் ஒழுங்கா நடக்க வேண்டாமா..?? உன் ஃபேமிலில இருக்கிறவங்க இத மறந்தாலும், நீ இத மறக்கலாமா..??? நீ அவங்ககிட்ட பேசி, இத அரேஞ்ச் பண்ணிருக்கணுமா… இல்லையா…??? ஆனா நீ என்ன பண்ண…?? கட்டுன புருஷன் நேத்து காலையில கிளம்பி வெளியில போனவன் நைட் முழுக்க வீட்டுக்கு வரவே இல்லையேன்னு ஒரு போன் கூட பண்ணி என்ன ஆச்சுன்னு கேட்காம நல்லா படுத்து ஜாலியா தூங்கிட்டு இருக்க.
இதுக்கு தான் நான் உன்னை கல்யாணம் பண்ணனா…?? நீ என் மேல பாசமா இருக்க மாட்டியா..??? நீ என்ன லவ் பண்ண மாட்டியா..???” என்று போதையில் தான் என்ன பேசுகிறோம் என்று கூட உணராமல் பைத்தியக்கார தனமாக பேசி லக்ஷனாவை சரமாரியாக அடிக்க தொடங்கினான். ஒரு கட்டத்தில் அவனுடைய இந்த தொடர் தாக்குதலை தாங்க முடியாமல் மயங்கி கீழே சரிந்தாள் லக்ஷனா.
அப்போதும் கூட அவள் மீது இறக்கப்படாத பிரவீன் அவளை தன்னுடைய கால்களால் உதைத்து எழுப்ப முயன்றவன், “என்ன டி நடிக்கிறியா…?? ஒழுங்கா எந்திரி. இந்த நடிப்பெல்லாம் என்கிட்ட வேலைக்கு ஆகாது. நீயா எந்திரிச்சிட்டின்னா, உன்னை இத்தோட விட்டுருவேன். இல்லன்னா, பர்ஸ்ட்ல இருந்து ஸ்டார்ட் பண்ணி உன்ன அகைன் டார்ச்சர் பண்ணுவேன்.” என்று போதையில் உளறினான்.
ஆனால் அப்போதும் லக்ஷனாவிடம் ஒரு அசைவும் இல்லை. அதனால் அவள் இறந்தே போய்விட்டாளோ என்று நினைத்து லேசாக பயந்த பிரவின், தன்னுடைய தங்கை அபர்ணாவிற்கு கால் செய்து அவளை தன்னுடைய அறைக்கு உடனே வரும்படி அழைத்தான். அவளும் அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்கே விரைந்து வந்தாள்.
உள்ளே வந்த அபர்ணா தரையில் சுயநினைவின்றி ஆங்காங்கே காயங்களுடன் கிடந்த தன்னுடைய அண்ணி லக்ஷனாவை பார்த்து அதிர்ந்தவள், “என்ன அண்ணா இது எல்லாம்… ஏன் அவங்களை இப்படி டார்ச்சர் பண்றீங்க..??? உங்கள கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்த பாவத்துக்கு இவங்க இது எல்லாத்தையும் அனுபவிக்கனுமா.???” என்று முதல்முறையாக தன்னுடைய அண்ணன் மீது கோபப்பட்டு கேட்டவள், லக்ஷனாவின் அருகே சென்று அவளை எழுப்ப முயன்றாள். அபர்ணா அவளுடைய முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்தும் கூட லக்ஷனாவிடம் ஒரு அசைவும் தெரியவில்லை.
அதனால் பயந்து போனவள், “இன்னும் நம்ம டிலே பண்ணிட்டு இருக்க வேண்டாம் அண்ணா. உடனே இவங்கள ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போலாம்.” என்று சொல்லிவிட்டு லக்ஷனாவை தூக்கி கட்டிலில் படுக்க வைக்க முயற்சித்தாள். அப்போது கூட அவளுக்கு உதவ நினைக்காத பிரவீன் எருமை மாடை போல் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தான். அதனால் கடுப்பான அபர்ணா, “டேய் கண்ணு தெரியலையா உனக்கு..?? இவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா இவங்க பேரண்ட்ஸ்க்கு யார் பதில் சொல்றது…??? இவங்கள தூக்கு. உடனே ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகலாம்.” என்று கத்தினாள்.
அதனால் வேக வேகமாக ஓடிச் சென்ற பிரவீன் லக்ஷனாவை தூக்கி கட்டிலில் படுக்க வைத்து விட்டு, அப்போதும் லக்ஷனாவை தான் வேறு ஏதாவது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் விஷயம் வெளியே கசிந்துவிடும் என்று நினைத்தவன்; அவர்களுடைய ஃபேமிலி டாக்டருக்கு கால் செய்து விஷயத்தை சொல்லி யாருக்கும் தெரியாமல் இதை ஹாண்டில் செய்யும் படி சொல்லி அவரையும் வரவழைத்தான்.
காரில் தன்னுடைய குடும்பத்தினருடன் சென்று கொண்டு இருந்த வருண் சித்தார்த்திடம், “நீ அதிகமா எங்கேயும் வெளியில போனதே இல்ல. சோ இப்ப உனக்கு எங்க போகணும்னு சொல்லு. எங்கேயா இருந்தாலும், அப்பா நான் உன்னை கூட்டிட்டு போறேன்.” என்று உற்சாகமான குரலில் சொன்னான். “ஐயா ஜாலி அப்ப நான் எங்க போனனு சொன்னாலும் கூட்டிட்டு போவீங்களா…???” என்று உற்சாகம் பொங்கும் தன் அழகிய மழலை குரலில் கேட்டான். 😍 😁 😁 😁
வருண்: குறிஞ்சி பூவை போல் எப்போதாவது மலரும் தன்னுடைய புன்னகையை தன் மகனிற்காக சிந்தியவன், “எஸ். நீ எங்க போனனு ஆசைப்பட்டாலும், நான் உன்னை அங்க கூட்டிட்டு போவேன் ப்ரோமிஸ்.” என்று தன்னுடைய காரை ஒட்டி கொண்டே சொன்னான்.
நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)