அத்தியாயம் 236: மை டாடி மை சூப்பர் ஹீரோ (பார்ட் 2)
அவனுடைய காரின் முன்னேயும் பின்னேயும் அவர்களுடைய பாதுகாப்பிற்காக ஏராளமான பாடி கார்டுகளை ஏற்பாடு செய்து இருந்த வருண், அது மட்டும் இன்றி சில ஸ்பைகளையும் ஏற்பாடு செய்து வைத்து இருந்தான். என்றும் கிடைக்காத இன்று ஒரு பெரிய சலுகை தன்னுடைய அப்பாவிடம் இருந்து கிடைத்து இருப்பதால் அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைத்த சித்தார்த் அவனுடைய கன்னத்தில் தன்னுடைய ஒற்றை குட்டி ஆள்காட்டி விரலை தட்டியபடி யோசித்தான்.
அப்போது அவனுக்கு தான் டிவியில் தீம் பார்க் பற்றிய விளம்பரங்களை பார்த்தது ஞாபகம் வந்தது. அதனால் மலர்ந்த முகத்துடன் தன் முன்னே இருந்த ரியர் வியூ கண்ணாடியை தன்னுடைய அப்பாவின் முகத்தை பார்த்த சித்தார்த், “அப்பா நம்ப தீம் பார்க் போலாம். அங்க இருக்கிற கேம்ஸ் எல்லாத்தையும் நம்ப எல்லாரும் சேர்ந்து விளையாடலாம். உங்களுக்கு ஓகேவா…???” என்று உற்சாகமான குரலில் கேட்டான்.
அவன் சொன்னதைக் கேட்டு தன்னுடைய மகனை தீம் பாக்கிற்கு அழைத்து செல்லலாமா என்று யோசித்த வருணிற்கு அப்போது தான் தன்னுடைய ஷாப்பிங் மாலில் இருக்கும் பிளே ஏரியாவை பற்றிய ஞாபகம் வந்தது. அதை நினைத்துப் பார்த்தவன் தன்னுடைய இடம் என்பதால் அங்கே தன்னுடைய பாதுகாப்பிற்கு நிறைய ஏற்பாடுகளை தன்னால் செய்து கொள்ள முடியும் என்று நினைத்தவன், அதுவும் ஒரு மினி தீம் பார்க் போலத்தான் இருக்கும் என்பதால் சித்தார்த்திடம் ஓகே என்று சொல்லிவிட்டு அவர்களை அழைத்துக் கொண்டு அங்கே சென்றான்.
அவன் அங்கே செல்வதற்குள் சிவாவிற்கு கால் செய்து தாங்கள் அங்கே செல்லவிருக்கும் செய்தியை தெரிவித்த வருண் அங்கே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் செய்து தான் வருவதற்குள் அனைத்தையும் தயார் செய்து வைக்குமாறு மெசேஜ் செய்தான். வருண் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடித்தான் சிவா. பின் சில நிமிடங்களில் தன்னுடைய குடும்பத்தினருடன் தன்னுடைய ஷாப்பிங் மாலிற்குள் நுழைந்தான் வருண்.
பல தளங்களை கொண்டுள்ள அந்த பெரிய ஷாப்பிங் மால் ஐ முதன் முறையாக கண்டவுடன், உற்சாகத்தில் துள்ளி குதித்தான் சித்தார்த். 😍 இது போன்ற ஷாப்பிங் மால்களில் இருக்கும் பொருட்கள் மிகவும் விலை அதிகமா இருக்கும் என்று எப்போதும் நினைக்கும் ரித்திகா , இதற்குள் சும்மா வந்து கூட பார்த்துவிட்டு செல்வதற்கு கூட விரும்பியதில்லை. அதனால் அவளும் முதன்முறையாக இங்கே வருவதால் சற்று ஆர்வம் நிறைந்த கண்களுடன் அனைத்தையும் சுற்றிப் பார்த்தாள். 😍
அவர்களுடைய முகத்தில் தெரிந்த ஆர்வத்தை கவனித்த வருண், “இது நம்ப மால் தான். உங்களுக்கு ஏதாவது பர்சேஸ் பண்ணனும்னா பண்ணிக்கோங்க. பிளே ஏரியா 5th ஃப்ளோர்ல இருக்கு. நம்ம பொறுமையா எல்லா பக்கமும் போய் சுத்தி பார்க்கலாம்.” என்று சிறு புன்னகையுடன் சொன்னான். 😁 😁 😁 இதுபோன்ற வார்த்தைகள் எதையும் இதுவரை சித்தார்த் தன்னுடைய அப்பாவின் வாயில் இருந்து கேட்டதில்லை என்பதால் இப்போது அதைக் கேட்டு மிகவும் உற்சாகமடைந்தவன், “அப்பா இங்க வாங்க.” என்று வருணை தன்னருகே அழைத்தான்.
வருண்: “என்ன டா உனக்கு ஏதாவது வேணுமா..???” என்று பாசமாக அவனை பார்த்து கேட்டான். 😍
சித்தார்த்: “இல்ல நீங்க கீழ குனிங்களேன்.” என்று தன்னுடைய எலி பல்லை வைத்து கொண்டு சிரித்துக் கொண்டே சொன்னான். 😁 😁 😁
ஒரு வேளை தன்னுடைய மகன் இரகசியமாக ஏதோ ஒரு பொருளை தன்னிடம் வாங்கி தரச் சொல்லி கேட்க போகிறான் போல என்று நினைத்த வருண், சித்தார்த்தின் உயரத்திற்கு அவன் அருகே சென்று குனிந்தான். அப்போது வெகு நாட்களுக்கு பிறகு வருணின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்த சித்தார்த், “தேங்க்ஸ் அப்பா. நீங்க தான் பெஸ்ட் டாடி. என்னோட சூப்பர் ஹீரோ.” என்று அவன் ஜான்வி உயிரோடு இருக்கும்போது சொன்னது போலவே சொன்னான்.😍 ❤️ 🥰
அந்த வார்த்தைகளை கேட்ட வருணின் இதயம் ஆனந்தத்தில் ஒரு நொடி நின்று துடித்தது. ❤️ சித்தார்த்தின் வாயில் இருந்து மீண்டும் இந்த வார்த்தைகளை கேட்பதற்காக வருண் எத்தனை நாட்கள் தவம் இருந்து இருக்கிறான் என்றும், அதை கேட்க முடியாமல் வேதனை பட்டு இருக்கிறான் என்றும், அவனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்.
அதனால் அதீத மகிழ்ச்சியில் தன்னுடைய மகனை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டு அவன் மீது முத்த மழையை பொழிந்த வருண், “தேங்க்ஸ் டா தேங்க்யூ சோ மச். நீ தான் எப்பயுமே என்னோட லிட்டில் சாம்பியன்.” என்று மனதார சொன்னான். 😍 🤗 🥰 ❤️
அந்த காட்சியை பார்த்த ரித்திகாவிற்கு மிகவும் மன நிறைவாக இருந்தது. சித்தார்த் ஏன் தன்னுடைய அப்பாவிடம் இருந்து விலகியே இருக்கிறான் என்று அவள் பலமுறை யோசித்து இருக்கிறாள். ஆனால் அதற்கான பதில் அவளுக்கு கிடைத்தது இல்லை. அதனால் எப்போதுவது வருனிடம் மனம் விட்டு பேச ஒரு வாய்ப்பு கிடைத்தால் அப்போது இதைப்பற்றி அவனிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று தன்னுடைய மனதில் யோசித்துக் கொண்டிருந்தாள் ரித்திகா.
ஜான்வியின் பெற்றோர்களுக்கும் இப்படி தாங்களும் சித்தாத்துடன் சிரித்து பேசி விளையாட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் அவர்களுக்கோ, தமிழ் தெரியாது. சித்தார்த்திர்க்கோ, ஆங்கிலமும் சரி.. ஹிந்தியும் சரி.. எதுவும் முழுமையாக தெரியாது. அதனால் அவர்கள் ஹிந்தியில் பேசினால் வருணும், ஆங்கிலத்தில் பேசினால் அதை ரித்திகா, தமிழில் மொழி பெயர்த்து சித்தார்த்திற்க்கு புரியும் படி அவனிடம் சொல்லி கொண்டு இருந்தார்கள்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)