Home FREE NOVELSஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 214

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 214

by Thenaruvi Tamil Novels
45 views

அத்தியாயம் 214

மறுநாள் சாயங்கால நேரத்தில் தேன்மொழி தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள அர்ஜுனின் குடும்பத்திற்கு சொந்தமான பிரைவேட் ஹெலிபோர்ட்டுக்கு வந்து சேர்ந்தாள். மீண்டும் அர்ஜுனனின் வீட்டிற்கு செல்ல விரும்பாமல் அவள் தான் பிறந்த வீட்டிற்கு செல்வதற்காக ஒரு டாக்ஸியை புக் செய்ய விரும்பினாள்.

“உனக்குன்னு இங்க தனியா உன் பேர்ல வீடு இருக்கும்போது நீ எதுக்குமா குழந்தையை வச்சுக்கிட்டு அங்க போய் கஷ்டப்படுங்கன்னு நினைக்கிற? உனக்காக தானே நாங்க எல்லாரும் கூட வந்திருக்கோம்..!!! நீ எங்கள பத்தி யோசிச்சு பாக்க மாட்டியா?” என்று ஜானகி கேட்டவுடன் அவர்களைப் பற்றி யோசித்து அமைதியானாள் தேன்மொழி.

அர்ஜுன் அவளுடன் எவ்வளவு சண்டை போட்டாலும், அவளுக்கு பிடிக்காத எதை செய்தாலும், அவள் திருமணமாகி பிரசாத் குடும்பத்திற்கு சென்ற நாள் முதல் அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் அர்ஜுனின் மீது தவறு இருந்தால் அவள் பக்கம் தான் நின்று இருக்கிறார்கள். இப்போது அவளை நம்பி அவளுடன் சித்தார்த், ஆருத்ரா இருவரும் வேறு வந்து இருக்கிறார்கள்.

தன் ஒருத்தியின் பிடிவாதத்திற்காக லக்ஸ்ரியாக வாழ்ந்த இத்தனை பேரை தன் வீட்டிற்கு கூட்டி சென்று கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்த தேன்மொழி  “சரிங்க அத்தை! நாம அங்கயே போகலாம்.” என்றாள்.

அதனால் தங்களது காரிலேயே ஜானகி அவளையும் மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு ஹனி பேலசுக்கு சென்றாள்.  அங்கே என்ட்ரன்ஸில் இருந்த ஹனி பேலஸ் என்ற அரச்சை  பார்த்தவுடன் தேன்மொழிக்கு என்னவோ போல இருந்தது. முதன் முதலில் அவளை சமாதானப்படுத்துவதற்காக சென்னை வந்த அர்ஜுன் அவளுக்காக இந்த பேலசை உருவாக்கியதையும், அங்கே இருந்த அரச்சை தனக்கு காரில் கூட்டி வந்து காட்டியதையும் நினைத்துப் பார்த்த தேன்மொழி “உன்ன விட அதிகமா என்னை யாரும் சந்தோஷப்படுத்தினதும் இல்ல. கஷ்டப்படுத்தினதும் இல்ல அர்ஜுன்!” என்று நினைத்துக் கொண்டாள்.

பின் உள்ளே சென்றதும் அவள் நேராக இதற்கு முன் அர்ஜுனும் அவளும் அந்த மாளிகையில் தங்கி இருந்த ரூமிற்கு சென்றாள். அங்கே எங்கு பார்த்தாலும் அவளுக்கு அர்ஜுனனின் ஞாபகம் தான் வந்தது. அவளுக்காக அனைத்து வேலையையும் விட்டுவிட்டு எத்தனையோ நாட்கள் அவன் இந்தியா வந்து அவளுடன் அந்த மாளிகையில் தங்கி இருக்கிறான். அப்படியெல்லாம் தன்னை உருகி உருகி காதலித்தவன் தான், தான் வேதனையில் உருகி கரையும் அளவிற்கு தன்னை காயமும் படுத்துகிறான் என நினைக்கும் போது தேன்மொழிக்கு “போதும் தேன்மொழி இனிமே நீ அவன பத்தி யோசிக்காத. உன்னை நம்பி இப்ப மூணு குழந்தைங்க இருக்காங்க. அவங்க அம்மா தான் முக்கியம்னு நினைக்கிறாங்க. இந்த டைம்ல உன்னை கஷ்டப்படுத்துற எதை பத்தியும் யோசிக்க கூடாது. குழந்தைகளுக்கு ஒரு ஹேப்பியான லைப் கிரியேட் பண்ணி கொடுக்கணும். அது உன்னோட ரெஸ்பான்சிபிலிட்டி. அம்மா உன்னையும் ஆதவனையும் தனியா வளர்க்கவில்லையா என்ன? ஆனா உனக்கு சப்போர்ட்டுக்கு  இங்கு எத்தனை பேர் இருக்காங்க. அம்மாவால முடியும்போது உன்னால அது முடியாதா?” என்று தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டாள்.

இப்போது சம்மர் ஹாலிடேஸ் முடிந்து இன்னும் ஓரிரு மாதங்களில் ஸ்கூல் அனைத்தும் திறக்கப்பட்டு விடும் என்பதால் முதல் வேலையாக இங்கே இருந்து சித்தார்த் மற்றும் ஆருத்ரா படிப்பதற்கான ஸ்கூலை அவள் ஆன்லைனில் பார்த்து செலக்ட் செய்ய முயற்சி செய்து கொண்டு இருந்தாள்.

அப்போது “சக்தி தூங்கிட்டானா மம்மி?” என்று கேட்டபடி ஆருத்ரா அவளது ரூமிற்குள் நுழைய, அவளை பின் தொடர்ந்து சித்தார்த்தும் உள்ளே வந்தான். “ம்ம்.. அவனை இப்ப தான் தூங்க வச்சேன். நீங்க அவன் கூட விளையாடுற மாதிரி இருந்தா  இன்னும் ஒரு டூ ஹார்ஸ் கழிச்சு வாங்க. இவன் ரொம்ப நேரம் எல்லாம் தூங்க மாட்டேங்கிறான். நடுவுல நடுவுல முழிச்சுக்கிறான்.” என்றாள் தேன்மொழி.

“பரவால்ல மம்மி அவன் தூங்கட்டும். நான் சும்மா பக்கத்துல உக்காந்து அவனை பார்த்துட்டு இருக்கேன்.” என்ற ஆருத்ரா சக்தியின் அருகில் சென்று அமைதியாக அமர்ந்து கொண்டு அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். தேன்மொழி தனது லேப்டாப்பில் ஸ்கூல்ஸ் பற்றி பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்த சித்தார்த் “அதுக்குள்ள எங்களுக்கு ஸ்கூல் பார்க்க சாட் பண்ணிட்டீங்களா?” என்று அவளிடம் கேட்டான்.

“ஆமா பின்ன நீங்க ஸ்கூலுக்கு போக வேண்டாமா? இப்பவே புக் பண்ணா தான் நல்ல ஸ்கூல்ல அட்மிஷன் கிடைக்கும். பட் எந்த ஸ்கூல் சூஸ் பண்றதுன்னு தான் எனக்கு தெரியல. இங்க வா நீயும் வந்து பாரு. இங்க பக்கத்துல ஒரு Anglo Indian ஸ்கூல் இருக்கு. உங்களுக்கு அது செட் ஆகும்னு நினைக்கிறேன்.” என்ற தேன்மொழி சித்தார்த்தை அழைத்து தன் அருகில் அமர வைத்தாள்.

அவனும் ஆன்லைனில் தனக்கும் தன் தங்கைக்கும் பாதுகாப்பான மற்றும் தங்களது ஒளிமயமான எதிர்காலத்திற்கும் ஏற்றப்படியான ஒரு ஸ்கூலை தேட தொடங்கினான். இறுதியில் தேன்மொழி சொன்ன ஸ்கூல் அவனுக்கும் பிடித்திருந்தது. அதனால் “இந்த ஸ்கூலே ஓகே தான் மம்மி. நீங்க ஆன்லைன்ல அப்ளை பண்ணிடுங்க. நாம டுமாரோ டைரக்டா ஸ்கூலுக்கு போய் பாக்கலாம்.” என்றான் சித்தார்த். இத்தனை நாட்களாக கூண்டுக்குள் கிளி போல தங்களது மாளிகை போன்ற வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்ததால் ஒருவழியாக மற்ற மாணவர்களைப் போல தங்களுக்கும் ஸ்கூலுக்கு சென்று படிக்கும் ஆப்பர்சுனிட்டி கிடைத்ததில் ஆருத்ரா மிகவும் ஹாப்பியாக இருந்தாள்.

தான் என்ன செய்தாலும் நேரா நேராத்திற்கு தன் ரூமிற்கு சாப்பாடு வந்து சேர்ந்ததால் வெளியில் சென்று யாரின் முகத்திலும் முழிக்காமல் குடிப்பது, பசிக்கும்போது சாப்பிடுவது பின் தூங்குவது என இத்தனை நாட்களாக கிடந்த அர்ஜுன் நேற்று இரவில் இருந்து இப்போது ஈவினிங் ஆன பிறகும் கூட தனக்கு யாரும் சாப்பாடு கொண்டு வந்து கொடுக்காததால் அந்த ரூமை விட்டு வெளியே வந்தான்.

அவனது கால்கள் போதையில் தள்ளாடியது. லிவிங் ரூமில் தனது ஆஃபீஸ் லேப்டாப் முன்னே அமர்ந்து இருந்த பிரதாப் தீவிரமான முகத்துடன் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அவரை புறக்கணித்த அர்ஜூன் அந்த கெஸ்ட் ஹவுஸ் முழுவதும் சென்று பார்த்தான். அங்கே ஒரு சில பாடிகார்டுகளையும், பிரதாப்பையும் தவிர வேறு யாருமே இல்லை.

அதனால் குழப்பமான முகத்துடன் அரை போதையில் வந்து லிவிங் ஏரியாவில் இருந்த சோஃபாவில் பிரசாத்துக்கு எதிரே அமர்ந்த அர்ஜூன், “எல்லாரும் எங்க போனாங்க டாடி? வீட்ல யாரையுமே காணோம்! தேன்மொழி எங்க? அவ ஹாஸ்பிடல்ல இருந்து வந்துட்டான்னு சொன்னாங்க! அவளையும் காணோம்.. என் பையனையும் காணோம்.. ஆமா சித்தார்த், ஆருத்ரா எங்க? மம்மி கூட எல்லாரும் எங்கயாவது வெளிய போயிருக்காங்களா?” என்று தன் கண்களை தேய்த்தவாறு கேட்டான்.

அவனை ஓர கண்ணால் முறைத்து பார்த்த பிரதாப் “ஆமா இங்க இருந்து நீ பண்றது எல்லாம் பாக்க புடிக்காம எல்லாரும் கிளம்பி போய்ட்டாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல எனக்கு ரஷ்யாவுக்கு ஃபிளைட் இருக்கு. நானும் கிளம்ப போறேன்.” என்றார். அவரது பேச்சில் அர்ஜுனுக்கு இருந்த போதை அப்படியே பாதியாக குறைந்தது.

தனக்கு எதிரில் இருந்த வாட்டர் ஜக்கை கையில் எடுத்த அர்ஜுன் அதில் இருந்த நீரை மட மடவென குடித்தான். இத்தனை நாட்களாக போதையில்  தெலியாமல்  சாப்பிடாமல் இருந்துவிட்டு இப்போது அப்படி தண்ணீர் குடித்ததால் அவனுக்கு வாந்தி வருவதை போல இருந்தது. இருப்பினும் சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்ட அர்ஜுன் பாவமாக பிரதாபை பார்த்து உடைந்த குரலில் “அப்ப நான் வேண்டாம்ன்னு எல்லாரும் டிசைட் பண்ணிட்டாங்களா டாடி? தேனு என் மேல கோவமா இருந்தா இப்படித் தான் பண்ணுவா எனக்கு தெரியும். பட் சித்தார்த், ஆருத்ரா கூட அவ மட்டும் இருந்தா போதும் என்ன விட்டுட்டு அவ கூட போய்ட்டாங்களா?” என்று பாவமாக கேட்டான்.

வந்த கடுப்பில் தனக்கு அருகில் இருந்த கண்ணாடி வாட்டர் ஜக்கை கையில் எடுத்த பிரதாப் அதை வீசி எரிந்துவிட்டு வேகமாக எழுந்து நின்றார். டமார் என்ற சத்தத்துடன் அந்த கண்ணாடி ஜக் உடைந்த சிதற, அதில் இருந்த தண்ணீர் தரையில் ஊற்றியது. இப்படி எல்லாம் ஒருபோதும் தன் அப்பா தன்னிடம் நடந்து கொண்டது இல்லை என்பதால் அர்ஜுன் அதிர்ச்சியில் விரிந்த கண்களுடன் பிரதாபை பார்க்க, “நீ இப்படி ஒரு irresponsible fatherஆ இருந்தா, உன் கூட இருக்கணும்னு யார் நினைப்பாங்க? இப்ப மட்டும் எதுக்கு அந்த ரூம்ல இருந்து வெளிய வந்த? அப்படியே அங்கயே கடந்து குடிச்சு குடிச்சு சாக வேண்டியது தானே? உன்னை யாரு கேக்க போறாங்க நீதான் ரொம்ப பெரிய ஆளாச்சே.. உன் இஷ்டப்படி தான் நீ எல்லாமே பண்ணுவ! மத்தவங்க சொல்றதை கேப்பியா நீ?” என்று கோபமாக கேட்டார்.

மீண்டும் வருவாள் 💕

You may also like

Leave a Comment

About Me

Featured