Home FREE NOVELSஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 210

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 210

by Thenaruvi Tamil Novels
45 views

அத்தியாயம் 210

“கிளாரா எங்க ஜனனி? அவ ஏன் இன்னும் வந்து என்ன பாக்கல?” என்று பிரிட்டோ கேட்டவுடன் அவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் கலவரமான முகத்துடன் நின்று கொண்டு இருந்தாள் ஜனனி. கிளாராவின் கணவனாக அவளுக்கு என்ன ஆனது என தெரிந்து கொள்ளும் அனைத்து உரிமையும் அவனுக்கு இருக்கிறது. ஆனால் அவன் இந்த மாதிரியான சூழ்நிலையில் இருக்கும்போது அப்படி ஒரு ஷாக் ஆன நியூஸை அவனிடம் சொல்லி அவனுக்கு வேறு ஏதேனும் நடந்து தன் அண்ணனைப் போல அவனும் கோமாவிற்கு ஏதேனும் சென்று விட்டால் என்ன செய்வது என நினைத்து அவள் பயந்தாள்.

தான் நேரடியாக கிளாராவை பற்றி கேட்டும் ஜனனி தன்னிடம் அவளைப் பற்றி சொல்ல தயங்குகிறாள் என்றால் அவளுக்கு ஏதேனும் தவறாக நடந்துவிட்டதோ என நினைத்து பதறிய பிரிட்டோ “என்ன ஆச்சு ஜனனி? நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்..  நீங்க சைலன்ட்டாவே இருக்கீங்க! கிளாரா எங்க? அவளுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லுங்க ப்ளீஸ். ஒருவேளை என்ன மாதிரி அவளுக்கும் அடிப்பட்டு அவள இதே ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கீங்களா? ப்ளீஸ் ஜனனி எதுவா இருந்தாலும் சொல்லுங்க. நான் இவ்வளவு தூரம் கேட்டும் நீங்க சைலன்டா இருக்கிறத பார்க்கும்போது எனக்கு ரொம்ப பயமா இருக்கு.” என்று கண்கள் கலங்க அவளை பார்த்து பாவமாக கேட்டான்.

அவன் பேச பேச ஜனனியின் சிவந்த கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல கொட்டிக் கொண்டு இருந்தது. அவளது முகம் வெளிரிப் போய் இருக்க, அவனை விட அங்கே பரிதாபமான நிலையில் இருந்தது அவள் தான். “இந்த குடும்பத்துக்காக கிளாரா அவங்களோட உயிரை விட்டிருக்காங்க. அவங்கள நம்ம ஃபேமிலி மெம்பருக்கு எவ்வளவு மரியாதை கொடுத்து அடக்கம் பண்ணுவோமோ அதே மாதிரி பண்ணனும். அவங்களுக்கு முறைப்படி செய்ய வேண்டியது எல்லாத்தையும் பிரிட்டோ கூட இருந்து செஞ்சு தான் ஆகணும். அதனால நடந்ததை அவர் கிட்ட சொல்றத விட்டா வேற வழியில்லை.” என்று நினைத்த ஜனனி,

“ஐ எம் சாரி டு சே திஸ் பிரிட்டோ.. பட் இத சொல்லாம இருக்க முடியாது. ப்ளீஸ் நீங்க உங்க மனசை ஸ்ட்ராங்கா வச்சுக்கோங்க. இதைக் கேட்டு நீங்க எமோஷனல் ஆகி மறுபடியும் உங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா அதை எங்களால தாங்க முடியாது.” என்று ஜனனி சொல்லிக் கொண்டு இருக்கும்போதே பிரிட்டோவின் கண்கள் ஏதோ சரியில்லை என நினைத்து தன் காதல் மனைவியை நினைத்து கண்ணீர் சிந்த தொடங்கிவிட்டது. இருப்பினும் என்ன நடந்தது என ஜனனி அவள் வாயால் சொல்வதற்காக அவன் அமைதியாக காத்திருந்தான்.

தான் நினைத்ததை போல எதுவும் தவறாக நடந்து இருக்க கூடாது என அவனது இதயம் ஒவ்வொரு நொடியும் அவனுக்கு தெரிந்த அனைத்து கடவுள்களிடம் பிரார்த்தித்துக் கொண்டு இருந்தது. ஆனால் கல்லாய் போன கடவுள் அவனது பிரார்த்தனைக்கு செவி சாய்க்காததால் இதற்கு மேலும் அமைதியாக இருந்தால் நன்றாக இருக்காது என்று நினைத்த ஜனனி “she is no more britto! We are really sorry for that. நாங்க எவ்ளோ ட்ரை பண்ணியும் எங்களால கிளாராவை காப்பாத்த முடியல.

தேன்மொழி அண்ணியையும் குழந்தைகளையும் காப்பாத்துறதுக்காக கிளாரா அவங்க உயிரை விட்டுட்டாங்க.  ஸ்பாட்லயே அவங்க உயிர் போயிடுச்சு. எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் அவங்களுக்கு முறைப்படி funeral நடத்தணும்ன்றத்துக்காக அவங்களோட டெட் பாடிய நாங்க பிரஷர்வ் பண்ணி வச்சிருக்கோம்.” என்று உடைந்த குரலில் சொல்லிவிட்டு தன் முகத்தை மூடிக் கொண்டு கதறி அழுதாள்.

அவள் இத்தனையையும் சொல்லி முடித்தும் கூட பிரிட்டோ தன் வாயை திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. “நீ நினைச்ச மாதிரியே என்னை விட்டு போயிட்ட இல்ல.. என்ன ஆனாலும் எனக்காக நீ திரும்ப வருவேன்னு நெனச்சேன். என்ன ஏமாத்திட்டீல? உனக்கு என்னடி அவ்ளோ அவசரம்? இன்னும் ஒரு நாலு மாசம் என் கூட இருந்திருந்தா நாம ரெண்டு பேரும் சேர்ந்து நம்மளோட 12th இயர் love anniversaryஐ செலிப்ரேட் பண்ணி இருக்கலாமே.. அதுக்குள்ள போயே ஆகணுமா அவனுக்கு?

எனக்குன்னு பிரைவேட் டைம் வேணும் ஸ்பேஸ் வேணும் அப்படி இப்படின்னு சொல்லி இங்க வந்ததுல இருந்து என் கூட சண்டைக்கு போட்டுக்கிட்டே இருந்தியே டி.. அதான் என் கூட இனிமே இருக்கவே வேண்டாம்னு மொத்தமா என்ன விட்டுட்டு போயிட்டியா?” என்று கண்களை மூடி தனக்குத் தானே அவளிடம் கேட்டான் பிரிட்டோ.

அவனது மூடி இருந்த கண்களில் இருந்து தொடர்ந்து கண்ணீர் விடாமல் கொட்டிக் கொண்டே இருந்தது. ஏற்கனவே அவன் உடல் வலிமையை இழந்து இருந்ததால் இப்போது அந்த செய்தியை கேட்டு அவன் மனம் மேலும் அவனை பலவீனப்படுத்த, அவனுக்கு திடீரென fix வந்தது.

அவன் திடீரென தன் கண்களை திறக்க, அவனது கருவிழிகள் இரண்டும் மேலே செல்ல, நரநரவென அவன் தன் பற்களை கடிக்க தொடங்கினான். அவன் கை கால்கள் எல்லாம் இழுத்துக்கொள்ள அதை பார்த்த ஜனனி பயந்து போய் “பிரிட்டோ!” என்று கத்திவிட்டு மயங்கி விழுந்தாள். பாவம் எத்தனை இழப்புகளை தான் தாங்குவாள்? அங்கே இருந்த யாருக்கும் எதையும் தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லாமல் போய்விட்டது.

ஏற்கனவே பிரிட்டோ ஐசியூ வார்டில் இருந்ததால் அங்கே இருந்த டாக்டர்கள் துரிதமாக செயல்பட்டு பிரிட்டோவிற்கு  ட்ரீட்மென்ட் கொடுக்க தொடங்கினார்கள். இன்னொரு பக்கம் மயங்கி விழுந்த ஜனனியை அருகில் இருந்த பெட்டில் போட்டுவிட்டு நடந்ததைப் பற்றி வெளியில் இருந்த பாடிகார்டுகளிடம் இன்ஃபார்ம் செய்தார்கள்.

அவர்கள் சென்று ஜானகி மற்றும் பிரதாப்பிடம் விசயத்தை சொல்ல, “ஐயோ கடவுளே இன்னும் உன் கோவம் தீரலையா? என் பிள்ளைங்கள எவ்வளவு தான் கஷ்டப்படுத்துவ?” என்று வெளிப்படையாகவே அழுது புலம்பிய ஜானகி தன் கணவனுடன் ஜனனி மற்றும் பிரிட்டோவைக் கான சென்றாள்.

மொத்தத்தில் அவர்கள் ஹாஸ்பிடலில் இருந்த அந்த பத்து நாட்கள் அவர்கள் அனைவருக்கும் மரண வேதனையை நொடிக்கு நொடி கொடுத்தது. மூன்று நாட்களுக்கு பிறகு ஓரளவிற்கு பிரிட்டோவின் உடல்நிலை முன்னேறியவுடன் அவனை வீல்சேரில் அமர வைத்து பிரதாப்பிற்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸுற்க்கு அழைத்து சென்றார்கள். அங்கே உள்ள தோட்டத்திலேயே அவனை வைத்து கிளாராவிற்கான இறுதி சடங்குகளை செய்து  சமாதியில் அவள் உடலை சகல மரியாதையுடன் அடக்கம் செய்தார்கள்.

இத்தனை கெட்டதுகளிலும் நடந்த ஒரே நல்ல விஷயம் தேன்மொழியின் மகன் வேகமாக இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டு இருந்தான். அவனது வளர்ச்சி சீராக இருந்தது. அதனால் தேன்மொழியை டிஸ்டர்ஜ்  செய்யும்போது குழந்தையையும் கூட்டி செல்லலாம் என்று டாக்டர் சொல்லி விட்டார்கள்.

குழந்தைகள் அனைவரையும் சமாளிக்க கெஸ்ட் ஹவுஸில் இருக்கும் லிண்டா ஒரு பக்கம் போராடிக் கொண்டு இருக்க, வளர்ந்த குழந்தை போல சூழ்நிலையை புரிந்து கொண்டு நடந்ததில் இருந்து வெளியே வந்து அனைத்தையும் ஏற்றுக் கொண்டு வாழ பழக முடியாமல் அர்ஜூன் தன்னையும் மீறி பசி தன்னை வாட்டும் போது எப்போதாவது சாப்பிட்டு விட்டு மத்த நேரங்களில் எல்லாம் குடி போதையில் மூழ்கி முழு நேர குடிகாரனாக மாறிக் கொண்டு இருந்தான்.

மீண்டும் வருவாள் 💕

You may also like

Leave a Comment

About Me

Featured