Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 159

மூர்கனின் காதலி CH 159

by Thenaruvi Tamil Novels
38 views

அத்தியாயம் 159

Register officeல் இருந்து தனியாக கிளம்பிய சௌபர்ணிகா தொடர்ந்து தன் கண்களில் வலிந்த கண்ணீரை துடைத்தபடி அவள் பாட்டிற்கு எங்கே செல்கிறோம் என்று தெரியாமல் காரில் சென்று கொண்டு இருந்தாள்.

“நான் ஏதோ தெரியாம சேரன லவ் பண்ணி தப்பு பண்ணதுக்கு, இப்போ தெரிஞ்சே இந்த marriage lifeஐ காப்பாத்திக்க ‌ மறுபடியும் மறுபடியும் தப்பு பண்றனா..?? அப்படியே இருந்தாலும், இதுக்கு மேல என்ன பண்ணி நான் இது எல்லாத்தையும் சரி பண்ண முடியும்..?? Uff… எதுவும் பண்ண முடியாது. இனி நானே நினைச்சாலும் எதுவும் பண்ண முடியாது. It’s all over. இப்படி அப்பப்போ தனியா feel பண்ணி என்னால இனி அழுதுட்டு இருக்க மட்டும் தான் முடியும்.

நான் எல்லாத்தையும் பார்த்து பார்த்து develop பண்ணி கொஞ்சம் கொஞ்சமா குழந்தை மாதிரி வளர்த்து இவ்ளோ தூரம் கொண்டு வந்த என் V2 fashion house, இனிமே என்னோடது இல்லை. இனிமே நான் அங்க போனாலும், முன்னாடி மாதிரி இருக்க முடியுமா..?? என்னமோ.. நடக்கிறது நடக்கட்டும். நானே என் இஷ்டப்படி எல்லாத்தையும் செஞ்சுட்டு, அப்புறம் ஏன் இப்படி செஞ்சோம்ன்னு யோசிக்கிறதுல ஒரு பிரயோஜனமும் இல்ல.” என்று நினைத்த சௌபர்ணிகா மன ஆறுதலை தேடி அருகில் இருந்த கோவிலை நோக்கி காரை திருப்பினாள்.

“இப்போ விஷ்வா ஆபீஸ்ல இல்ல. இதுதான் கரெக்டான டைம்.‌ எப்படியாவது admin office head ஹரிய brainwash பண்ணி நம்ம projectல மேகாவையும் include பண்ண வைக்கணும்.” என்று நினைத்த கௌத்தம் நேராக Tech team admin ஆபிஸுறாக்கு சென்றான்.‌ அவன் இப்போது MV Techல் working partnerஆக இணைந்திருப்பதால் ‌ அவனை அதிக மரியாதையுடன் வரவேற்ற ஹரி “நானே உங்க கேபின்க்கு வந்து உங்கள meet பண்ணலாம்னு நினைச்சேன் சார். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க. Do you want anything..??” என்று கேட்க,

“Yeh.. Actually இப்போ MV Techஓட products எல்லாம் peakல போயிட்டு இருக்கு. Next one monthல நம்ம நம்மளோட couples smartwatchஐ launch பண்ணிட்டா, கண்டிப்பா அந்த projectம்‌ நல்லா reach ஆகும். So, நான் இன்னைக்கு என் project related worksஐ start பண்ணலாம்னு இருக்கேன்.
அதுக்கு எனக்கு ஒரு young and energeticஆன talented team mates வேணும். நான் இப்பதான் இங்க வந்து இருக்கேன். எனக்கு யாரை choose பண்றதுன்னு தெரியல. So உங்ககிட்டயே suggestion கேட்கலாம்னு தான் இங்க வந்தேன். எனக்கு team set பண்ன help பண்றீங்களா ஹரி..??” என்று கேட்டான் கௌத்தம்.
“Sure sir definitely.. I’m so happy to do that.” என்ற ஹரி, கடைசியாக அவர்கள் செய்த mobile phone projectல் மேகா சொன்ன alterationsகளை last minuteல் திறம்பட செய்து கொடுத்து ‌ அந்த project successஆக பெரும்பங்காற்றிய முக்கியமான ஆட்களை list out செய்து அந்த listஐ print out எடுத்து அதை ‌ கௌத்தமிடம் கொடுத்தான். அந்த listல் 25 நபர்களுக்கு மேல் இருந்தார்கள். அதை மேலிருந்து கீழ் வரை அவன் தன் கண்களால் அலச, அதில் மேகாவின் பெயர் இல்லை.

அதனால் எரிச்சல் அடைந்த கௌத்தம் “ஆளுங்க ரொம்ப கம்மியா இருக்காங்களே ஹரி.. இந்த லிஸ்ட்ல இருக்கவங்க மட்டும் தானா..?? வேற யாரையும் இல்லையா..?? நல்லா யோசிச்சு பார்த்து at least இன்னும் ஒரு 4, 5 பேரையாவது இதுல add பண்ணுங்க. என் ‌‌Teamல members அதிகமா இருந்தா தான் இந்த projectஐ என்னால சீக்கிரம் முடிக்க முடியும்.” என்று ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி அழுத்தி சொன்னான்.‌

“இன்னும் ஆளுங்க வேணும்னா, இந்த teamல வேற யார add பண்றது..??” என்று ஹரி யோசித்துக் கொண்டு இருக்க, “என் டீம்ல இருக்கிறவங்க, creative thinkerஆ, hard workerஆ, problem solverஆ மொத்தத்துல multitasking personalityயா இருக்கணும். அவங்களுக்கு already‌ இந்த மாதிரி projects பண்ண experience இருக்கணும். முக்கியமா அவங்க என் ideas கூட sync ஆகணும்.” என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தான் கௌத்தம்.

அதனால் உடனே “ஆஆ‌.. சார் நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு ஞாபகம் வருது. நான் மேகா மேடம் nameஐ இந்த listல add பண்ண மறந்துட்டேன். நேத்து இந்த project selection நடந்தப்பவே அவங்க இத பத்தி positiveஆ நிறைய சொன்னாங்க. அவங்களுக்கு இந்த projectல interest இருக்கு. அவங்களும் உங்க கூட சேர்ந்து work பண்ணா இந்த project கண்டிப்பா நல்லா வரும்.” என்ற ஹரி அந்த name list இருந்த paperல் மேகாவின் பெயரை எழுதிவிட்டு அவளது டீமில் அவளுக்கு கீழே வேலை பார்ப்பவர்கள் சிலரின் பெயரையும் எழுதி கௌத்தமின் கையில் கொடுத்தான்.

“Thanks ஹரி. இதுக்கு மேல வேற ஏதாவது help தேவைப்பட்டா நான் HR teamஐ contact பண்ணிக்கிறேன்.” என்று கௌத்தம் சொல்ல,

“it’s okay sir. Last time நாங்க எல்லாரும் சேர்ந்து தான் அந்த smart phone projectஐ‌ பண்ணோம். உங்ககிட்ட நான் கொடுத்த லிஸ்ட்ல இருக்குற எல்லாரையும் எனக்கு நல்லா தெரியும். நானே அவங்களுக்கு officialலா இந்த project detailsஐ mail பண்ணி ‌one hourல‌ உங்ககூட ஒரு meeting arrange பண்றேன்.” என்ற ஹரி உடனே அந்த வேலையை செய்ய தொடங்கினான்.‌ அதனால் தான் நினைத்தது அனைத்தும் சரியாக நடந்து கொண்டிருக்கிறது என்ற சந்தோசத்தில் அங்கிருந்து தனது கேபினுக்கு சென்றான் கௌத்தம்.

‌ விஷ்வா ஆபீஸுற்க்கு வரும்போது அவனைத் தேடிக் கொண்டு அவனது கேபினுக்கு சென்றுவிட்டு சரியாக வெளியில் வந்த மேகா அவனைப் பார்த்து “ஓய்.. எங்க போன நீ..?? Call பண்ணாலும் எடுக்க மாட்டேங்கற..!! இவ்வளவு நேரம் Register officeல தான் இருந்தியா..??” என்று கேட்க, “சும்மாதான் வெளிய போனேன். ஏன்.. ஏதாச்சு சொல்லனுமா என்கிட்ட..?? எதுக்கு என்ன தேடுன..??” என்று கேட்டான் அவன்.

“கௌத்தம் நான் நினைச்சதை விட ரொம்ப speedஆ இருக்காரு. நேத்து தான் நம்ம இந்த ‌ projectஐ sign பண்ணோம். இன்னைக்கே அவரு team ready பண்ணி இந்த ‌project பத்தி discuss பண்ண meeting arrange பண்ணிருக்காரு. You know what? அந்த Teamல நானும் இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல meeting start ஆயிடும். நீயும் வரியான்னு கேட்க தான் உன்னை தேடி நான் இங்க வந்தேன்.‌” என்றாள் அவள்.

“இந்த கௌத்தம் பெருச்சாளி சும்மாவே இருக்க மாட்டானா..??” என்று நினைத்து கடுப்பான விஷ்வா, “உன்ன அந்த டீம்ல யார் போட்டது..??” என்று கேட்க, “தெரியலையே.. but new project relatedஆ ஒரு meeting இருக்கு. வந்துருங்கன்னு எனக்கு Hari sir தான் mail பண்ணாரு.” என்றாள் மேகா. “சரி நீ போ. நான் அப்புறமா வரேன்.” என்ற விஷ்வா தனது கேபினுக்கு சென்று விட்டான். அதனால் meeting hallக்கு தனியாக சென்றாள் மேகா.

கோவிலுக்கு சென்று இருந்த சௌபர்ணிகா மதிய வேளையில் வீட்டிற்கு சென்றாள். அப்போது ஹாலில் உள்ள டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்த பாட்டி “எங்கம்மா போன நீ..?? காலையில இருந்து உன்ன ஆளையே காணோம்னு சொல்லிட்டு இருந்தாங்க.. நீ உன் புருஷன் கூட வெளியே போனா சொல்லிட்டு போக மாட்டியா..?? மேகா அப்பப்ப நீ வந்துட்டியான்னு கேட்டுக்கிட்டே இருந்தா தெரியுமா..?? உனக்கு எவ்ளோ வயசாகுது.. நம்ம சொல்லாம கொள்ளாம எங்கையாவது கிளம்பி போனா, வீட்ல இருக்கவங்க பதட்டப்படுவாங்கன்னு யோசிக்க மாட்டியா சௌபர்ணிகா..??” என்று அவளைப் பார்த்து கோபமாக கேட்க, “Sorry பாட்டி. இனிமே நான் இப்படி பண்ண மாட்டேன்.” என்று உடைந்த குரலில் சொன்ன சௌபர்ணிகா பாட்டியின் அருகே சென்று தரையில் அமர்ந்து அவர் மடியில் சாய்ந்து கொண்டாள்.

அதனால் கோபத்தை விடுத்து உடனே அன்புடன் அவள் தலையை வருடிய பாட்டி “ஏன் ஒரு மாதிரி இருக்க..?? ஏதாச்சும் பிரச்சனையா மா..?? எதா இருந்தாலும் மனசுவிட்டு என்கிட்ட சொல்லு.” என்று கேட்க, பாட்டியின் முகத்தை நிமிர்ந்து பார்த்த சௌபர்ணிகா “அதெல்லாம் ஒன்னும் இல்ல பாட்டி.” என்றுவிட்டு வராத புன்னகையை வரவழைத்து சிரித்தாள்.

“சரி மா, என்னமோ நீ சொல்ற.. நானும் கேட்டுக் கொள்கிறேன். இன்னும் இந்த வயசான கிழவி எத்தனை நாள் இருக்க போறனோ தெரியல.‌ ஆனா பிரிஞ்சு இருந்த நீயும், விஷ்வாவும் ஒன்னு சேர்ந்துட்டீங்க. எனக்கு அதுவே போதும். விஷ்வா பாக்குறதுக்கு எதையும் கண்டுக்காத மாதிரி இருந்தாலும், உனக்கு ஒரு பிரச்சனைனா கண்டிப்பா வந்து நிப்பான்மா. எதா இருந்தாலும் நீ அவன்கிட்ட தயங்காம சொல்லு. உனக்காக என் பேரன் இருப்பான்.” என்று பாட்டி சொல்ல, “தெரியும் பாட்டி. அவன் என் தம்பி. எப்பவும் எனக்காக அவனும், அவனுக்காக நானும் இருப்போம்.” என்று பெருமையாக சொன்னாள் சௌபர்ணிகா.

தொடரும்…

You may also like

Leave a Comment

About Me

Featured