Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 158

மூர்கனின் காதலி CH 158

by Thenaruvi Tamil Novels
37 views

அத்தியாயம் 158

விஷ்வாவும் மகேஷும் அவர்கள் இருந்த இடத்தை தேடி கண்டுபிடித்து செல்லும்போது, சௌபர்ணிகாவும் சேரனும் registration முடிந்து வெளியில் வந்து கொண்டு இருந்தார்கள். தன் தம்பியை அங்கே எதிர்பார்த்து இருக்காத சௌபர்ணிகா அப்படியே stunஆகி நின்றுவிட, “ஐயையோ இவன் எப்படி இங்க வந்தான்…?? நல்லவேளை இவன் வர்றதுக்குள்ள registration processஐ முடிச்சாச்சு. இல்லைனா ஏதாவது பண்ணி எல்லாத்தையும் Stop பண்ணி இருப்பான்.” என்று நினைத்து மகிழ்ந்த சேரன் விஷ்வாவை “நான் என் gameல ஜெய்சு இப்போ உன் முன்னாடி தைரியமா நிக்கிறேன்டா. அடுத்தடுத்து ஒவ்வொரு லெவல்லையும் நான் உன்னை ஜெயிச்சுகிட்டே இருப்பேன். நீயும் உன் குடும்பமும் கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுகிட்டே இருப்பீங்க. உன்னால இப்படி தூரமா நின்னு நான் பண்ற‌ எல்லாத்தையும் இப்படி எல்லாம் வேடிக்கை மட்டும் தான்டா பார்க்க முடியும். உன்னால என்ன வேற எதையும் புடுங்க முடியாது.” என்பது போல நக்கலாக பார்த்து புன்னகைத்தான்.

அதன் அர்த்தம் விஷ்வாவிற்கு தெளிவாக புரிந்தது. விஷ்வாவும், மகேஷும் அதே இடத்தில் அப்படியே நிற்க; அவர்கள் அருகில் சென்ற சௌபர்ணிகா “நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க..??” என்று பதட்டமான குரலில் கேட்டாள்.

“இங்க நீங்க என்ன பண்றிங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..??” என்று விஷ்வா கேட்க, “நான்.. அது வந்து..‌ இன்னைக்கு என் friend ஒருத்தங்க இங்க property Registrationகாக வந்தாங்க. நாங்க சும்மா அவங்க கூட வந்தோம்.” என்று திக்கி திணறி சொன்னாள் சௌபர்ணிகா. “உங்க friend எங்க?” என்று விஷ்வா தனது கனீர் குரலில் சத்தமாக கேட்க, பயத்தில் சௌபர்ணிகாவின் உடல் நடுங்கி அவளுக்கு வேர்த்து கொட்ட ஆரம்பித்தது.

“என்னாச்சு.. டக்குனு என்ன பொய் சொல்றதுன்னு தெரியலயா… உங்களுக்கு..?? பரவால்ல, அதுக்கு ஏன் இப்படி பயந்து நடுங்கறீங்க..?? Relax. நீங்க எனக்கு தெரியாம ஏதாவது பண்ணா, கடைசி வரைக்கும் அது எனக்கு தெரியாமையே போயிடும்னு நினைச்சிட்டீங்களா..??” என்று விஷ்வா கேட்க,

“எல்லாம் தெரிஞ்சுதான் இவன் இங்க வந்திருக்கானா.. ஆனா இவன்கிட்ட இத பத்தி யார் சொன்னது..?? யார் சொல்லி இருந்தாலும், இதுக்கு மேல நான் பொய் சொன்னா அசிங்கமா போயிடும். இவனால நான் தப்பு பண்ணிட்டு, இப்போ என் தம்பி முன்னாடி குற்றவாளி மாதிரி நிற்கிறேன்.” என்று நினைத்த சௌபர்ணிகா “sorry Vishwa.” என்று சொல்லிவிட்டு தலை குனிந்தாள்.

“எனக்கு உங்க sorry எல்லாம் வேண்டாம். இது எல்லாமே நீங்க கஷ்டப்பட்டு சம்பாரிச்ச உங்க own property. அத உங்களுக்கு புடிச்ச மாதிரி நீங்க மத்தவங்களுக்கு கொடுக்க கூடாதுன்னு சொல்ற rights எனக்கும் இல்ல. வேற யாருக்கும் இல்ல. But நீங்க ஏன் அதை எனக்கு தெரியாம பண்ணனும்னு நினைச்சீங்க..?? உங்களுக்கும் இவருக்கும் marriageஆகி one year கூட முழுசா complete ஆகல. அதுக்குள்ள இப்படி யாருக்கும் தெரியாம நீங்க உங்க properties and sharesஐ இவர் பேர்ல எழுதி வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு..??” என்று விஷ்வா கேட்க, பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தாள் சௌபர்ணிகா

அதனால் சேரனை பார்த்த விஷ்வா “சரி, அவங்க தான் ஏதோ உங்க மேல இருக்கிற லவ்வுல அவங்க propertiesஐ உங்களுக்கு எழுதிக் கொடுக்கணும்னு நெனச்சிருக்காங்க. எங்க இது எங்களுக்கு தெரிஞ்சா, நாங்க ஏதாவது சொல்லுவமோன்னு நினைச்சு கூட, அவங்க எங்ககிட்ட எதுவும் சொல்லாம இத செஞ்சிருக்கலாம். ஆனா உங்களுக்கு என்னாச்சு? நீங்க responsibleஆ இருக்க வேண்டாமா..?? அவங்க கூட சேர்ந்துட்டு நீங்களும் இப்படி பண்ணி இருக்கீங்க..!! அவங்களே இப்படி பண்ணாலும், நீங்க வேண்டாம்னு சொல்லி இருக்கணும்ல்ல..!!” என்று கேட்க,

“Oh.. God.. விஷ்வா.. என்ன நீங்க.. ஒரு நிமிஷத்துல என்ன தப்பா நினைச்சிட்டீங்க..?? நான் உங்க அக்காகிட்ட அவ இந்த விஷயத்தை பத்தி என்கிட்ட பேசுனதுல இருந்தே இத பத்தி முதல்ல போய் உன் தம்பிகிட்ட சொல்லுன்னு நான் சொல்லிக்கிட்டே தான் இருந்தேன். அவதான் வேண்டாம் விஷ்வா ஏதாவது சொல்லுவான். முதல்ல registration முடியட்டும். அப்புறமா நானே இதை பத்தி அவன்கிட்ட பொறுமையா பேசுறேன், நான் சொன்னா என் தம்பி எல்லாத்தையும் புரிஞ்சுக்கவான்னு சொன்னா. அவ அப்படி சொல்லும்போது நான் என்ன பண்ண முடியும்..??” என்று நல்லவனை போல நடித்த சேரன் மொத்த பழியையும் தூக்கி சௌபர்ணிகாவின் மீது போட்டான்.

“வாவ்… இப்ப கூட ஒரு வார்த்தை கூட என் பக்கம் பேச மாட்டல்ல.. உன்ன நம்பி உனக்காக இவ்ளோ பண்ணி இருக்க நான் கண்டிப்பா பைத்தியக்காரி தான்னு எனக்கு தெரியும் சேரன். But என்ன பண்றது..?? Love பண்ணாலே இப்படித்தான் இருக்கும் போல.. நான் பண்றது தப்புன்னு எனக்கு நல்லா தெரிஞ்சா கூட, அத என்னால பண்ணாம இருக்க முடியாதுல்ல..!!” என்று நினைத்த சௌபர்ணிகா,

“நான் ரொம்ப நாளா வேலை வேலைன்னு ஓடிட்டேன் விஷ்வா. எனக்கு கொஞ்சம் break வேணும்னு தோணுச்சு. இப்போ எனக்காக என்ன பாத்துக்க என் சேரன் இருக்கான்.‌ அதான் அவன்கிட்ட எல்லா responsibilitiesஐயும் குடுத்துட்டு நான் கொஞ்சம் freeஆ இருக்கலாம்னு நெனச்சேன். நீ கேட்டது கரெக்ட் தான். இதை நான் உன்கிட்ட மறைச்சு செய்ய வேண்டிய அவசியம் இல்ல.
இத பத்தி நான் என் friends கிட்ட discuss பண்ணும்போது, அவங்களே அவசரப்படாத. உன் husband எல்லாத்தையும் பாத்துகிட்டும். அதுக்காக நீ இப்பவே உன் Propertiesஐ‌ எழுதி வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்துச்சுன்னு கேட்டாங்க. நான் உங்ககிட்ட என் decisionஐ‌ சொல்லி இருந்தா, கண்டிப்பா நீங்களும் அப்படித் தான் சொல்லி இருப்பீங்கன்னு எனக்கு தெரியும். நீ இதை செய்ய வேண்டாம்னு சொல்லிட்டா, என்னால உன்னை மீறி கண்டிப்பா எதுவும் ‌செய்ய முடியாது.‌ அதான் செஞ்சிட்டு சொல்லிக்கலாம்னு நினைச்சேன். நான் இப்படி எந்த ரீசன் சொல்லி சமாளிச்சாலும், உன்கிட்ட மறைத்து நான் இத செஞ்சது தப்புதான் விஷ்வா. I am so sorry. இதுக்கு மேல எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.” என்று சொல்லிவிட்டு தலை குனிந்தாள்.

அவள் எவ்வளவு வருத்தப்படுகிறாள் என்று அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அதனால் மேலும் பேசி அவளை காயப்படுத்த விரும்பாத விஷ்வா, “அதான் நீங்க நெனச்சத பண்ணிட்டீங்களே.. இதுக்கு மேல அதை பத்தி பேசி என்ன ஆகப்போகுது..?? நீங்க வீட்டுக்கு போங்க. நான் ஆபீஸ் போறேன். See you later. Bye.” என்றவன் அவளது பதிலுக்கு காத்திருக்காமல் தன் காரை நோக்கி நடக்க தொடங்கி விட்டான். சௌபர்ணிகாவின் கையை பிடித்த சேரன் “Thanks for everything.” என்று சொல்ல, அவன் கையை உதறிவிட்ட சௌபர்ணிகா அவன் வருவதற்குள் நேராக சென்று தன் காரில் அமர்ந்து அதை start செய்து அங்கிருந்து கிளம்பினாள்.

“ஐயையோ அப்பப்பா.. ரொம்பத்தான். இவ தம்பி இவ மேல கோச்சுக்கிட்டான்னு.. உடனே இவளுக்கு என் மேல கோவம் அப்படியே பொத்துகிட்டு வருதோ.. ஏய்.. சௌபர்ணிகா.. என் மேல கோச்சிக்கிட்டு நீ எங்கடி போவ..?? உனக்குன்னு என்னை தவிர இங்க வேற ஒன்னும் இல்ல. சோ என்ன ஆனாலும், நீ என் கால்ல தான் வந்து விழுந்து கிடக்கணும். உனக்கு வேற option இல்ல baby.‌ you are under my control.” என்று நினைத்த சேரன் ஒரு call taxi book செய்து ‌யாருக்கும் தெரியாமல் தனியாக எங்கேயோ சென்றான்.

செல்லும்போதும் கூட வேகமாக கார் ஓட்டிய விஷ்வா, “கண்டிப்பா இந்த சேரன்கிட்ட ஏதோ ஒன்னு சரியில்ல. Maybe அக்கா கிட்ட இப்ப தெரிகிற changesக்கு எல்லாம் அவர் தான் reasonஆ இருக்கணும். நான் அவங்க கூட பேசாம இருந்தப்பவே, ஒவ்வொரு தடவையும் புதுசா அவங்க ஏதாவது செய்யும்போது ஏதோ ஒரு விதத்துல அத பத்தி என்கிட்ட சொல்லாம அவங்க அது செஞ்சதில்ல. ஏன் V2 fashion houseஓட first branchஐ அவங்க open பண்ணும் போது கூட எனக்கு invitation send பண்ணாங்களே..!! அதுக்கப்புறம் இப்ப வரைக்கும் அவங்க என்ன பண்ணாலும் அதை எனக்கு at least message பண்ணியாவது update பண்ணிட்டே இருப்பாங்க. அப்படி இருந்த அக்கா, இவ்ளோ பெரிய விஷயத்தை என்கிட்ட சொல்லாம மறைச்சிருக்காங்கன்னா அதுக்கு பின்னாடி எந்த ரீசனும் இல்லாம இருக்காது. I think she is in trouble.” என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

அவன் காரின் பின் சீட்டில் தயாளனும், அரவிந்தும் அமர்ந்திருந்தார்கள். “அதான் register officeல நம்ம போறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சே.. இப்ப நம்ம ஆபீஸ்க்கு தானே போயிட்டு இருக்கோம்.. அப்புறம் எதுக்கு பாஸ் வேகமா போறீங்க..?? அங்க நம்ம இவ்வளவு வேகமா போய் என்ன பண்ண போறோம்..?? உங்க கோபத்தை drivingல‌ காட்டாதீங்க பாஸ். அப்புறம் நம்ம எல்லாரும் மொத்தமா மேல போயிடுவோம்.” என்று தயாளன் சொல்ல,

அவனை கண்டுகொள்ளாமல் ‌“சேரன்கிட்ட ‌ என்னமோ சரி இல்லன்னு எனக்கு தோணுது. அவன பத்தி இன்னும் detailஆ விசாரிச்சு பாரு. Closeஆ அவன watch பண்ணிக்கிட்டே இரு. அவனுக்கும், அக்காவுக்கும் நடுவுல ஏதாவது problem இருக்கான்னு கண்டுபிடி. Don’t waste time. Make it fast.” என்று யாருக்கோ message அனுப்பினான் விஷ்வா.‌

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured