Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 231

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 231

by Thenaruvi Tamil Novels
41 views

அத்தியாயம் 231: ரித்திகாவை முத்தமிட்ட வருண் (பார்ட் 1)

ரித்திகா வீட்டில்…

மாலை 6: 15 மணி… 

விஷ்ணு கேட்டதால் தங்களுடைய காதல் கதையை ரேவதியும், சுதாகரும்,  விஷ்ணுவிடமும் ஷாலினியிடமும் சொல்லிக் கொண்டு இருந்தனர். அதைக் கேட்டுக் கொண்டு அமர்ந்து இருந்த வருண், ஜான்வியைப் பற்றி யோசித்து கொண்டு இருந்ததில் அவன் நேரம் போனதை கவனிக்கவில்லை. சித்தார்த்திற்க்கு தன்னுடைய வீட்டில் இருப்பதைவிட அவனுடைய ரித்திகா அம்மாவின் வீட்டில் இருப்பதை மிகவும் விரும்பினான். 

சுதாகர் உட்பட அனைவரும் சித்தார்த்துடன் மாறி மாறி விளையாடி கொண்டே இருந்ததால் அவன் அவர்களுடன் பிஸியாகவே இருந்தான். தொடர்ச்சியாக தன்னுடைய வாட்சில் நேரத்தை கவனித்த வருண் சுதாகரிடம் சென்று, “நான் இங்கே வந்த உடனே சாப்பிட்டு கிளம்பிடலாம்ன்னு நினைச்சு தான் வந்தேன். ஆனா ஆல்ரெடி ரொம்ப நேரம் ஆயிடுச்சு மாமா சோ நான் இப்போ ஆபீசுக்கு கிளம்புறேன். நைட் டின்னருக்கு வரேன்.” என்று சொன்னான். 

சுதாகர்: “ஆல்ரெடி மணி 6 -க்கு மேல ஆயிடுச்சு தம்பி. நீங்க இங்க இருந்து ஆபீஸ்க்கு போறதுக்கே 40 நிமிஷத்துக்கு மேல ஆயிடும். நீங்க ஆபீஸ்க்கு போய் மேக்ஸிமம் ஒன் ஆர் டூ ஹார்ஸ் தான் ஒர்க் பண்ணுவீங்க. அதுக்குள்ள டின்னர் டைம் ஆயிடும். அதுக்கு எங்க கூடயே இருங்களேன்.” என்று அக்கறையுடன் கேட்டார்.

வருண்: “கரெக்ட் தான் அங்கிள். பட் நான் இங்க இருந்து மட்டும் என்ன பண்ண போறேன்…?? இம்பார்ட்டெண்ட் ஆன பெண்டிங் ஒர்க் நிறைய இருக்கு. நான் போனா தான் அது எல்லாத்தையும் செக் பண்ணி ஃபைனலைஸ் பண்ண முடியும்.” என்று அவன் சொல்லி கொண்டு இருக்க அந்நேரம் சரியாக கரண்ட் கட் ஆகிவிட்டது. 

உடனே வருண் தன்னுடைய மொபைல் போன் ஐ எடுத்து அதில் இருந்து பிளாஷ் லைட்டை ஆன் செய்தான். ரித்திகாவின் வீட்டில் ஒரே ஒரு எமர்ஜென்சி லைட் மட்டும் தான் இருந்தது. அதை தேடி எடுத்து ஆன் செய்து சோபாவின் அருகே வைத்தத ரேவதி, கிச்சனுக்கு சென்று அங்கே இருந்த மெழுகுவர்த்திகளில் கொண்டு வந்து தங்களுடைய வீட்டில் ஆங்காங்கே ஏற்றி வைத்தாள். இப்போது அங்கே கரண்ட் வேறு போய்விட்டதால் இங்கே இருந்து கொண்டு தான் என்ன செய்வது என்று நினைத்த வருண் மீண்டும் சுதாகரிடம், “நான் கிளம்புறேன் மாமா. கரண்ட் வேற போயிடுச்சு. நைட்டு 10 ஓ கிளாக் மேல வரேன். எனக்காக நீங்க யாரும் சாப்பிடாம வெயிட் பண்ண வேண்டாம்.” என்றான்.

அவர்கள் இருவரும் பேசி கொண்டு இருப்பதை கவனித்த ரேவதி வேகமாக வருணின் அருகே வந்தவள், “வெளியில பாருங்க தம்பி. ரொம்ப இடி இடிக்குது. மழை வர மாதிரி இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல எப்படியும் மழை நல்லா அடிச்சுக்கிட்டு ஊத்தும்னு நினைக்கிறேன்.🌩️ அதுவும் நீங்க கிளம்புறேன்னு சொன்ன உடனே கரண்டும் போயிடுச்சு. இது ஏதோ சகுனமே சரி இல்லாத மாதிரி இருக்கு. சோ நீங்க எங்கயும் வெளில போக வேணாம் மாப்பிள்ளை. செண்பகம் அம்மா இங்க இருந்து இருந்தா அவங்களும் இதையே தான் சொல்லி இருப்பாங்க.” என்று அக்கறையுடன் சொன்னாள்.

தன்னுடைய மாமியாரும் மாமனாரும் தன்னிடம் இவ்வளவு சொல்லிய பின்பும் தான் வெளியே கிளம்பி சென்றால் நன்றாக இருக்காது என்று நினைத்த வருண், “ஓகே அத்தை. நான் எங்கேயும் போகல இங்கே இருக்கேன். நீங்க சொல்றத பார்த்தா கரண்ட் வர்றதுக்கு ரொம்ப லேட் ஆகும் போலவே..!!! நான் வேணா ஏதாச்சும் ஏதாச்சும் எமர்ஜென்சி ஃபேன், இல்லைனா லைட் யாரையாவது விட்டு வாங்கிட்டு வர சொல்லட்டுமா..???” என்று கேட்டான். 

ரேவதி: “சாரி மாப்பிள்ளை. எங்களுக்கு இன்னைக்கு கரெண்ட் போகும்ன்ற ஐடியாவே இல்ல. எங்களுக்கு இது தோனி இருந்துச்சுன்னா, நாங்களே ஏதாச்சு அரேஞ்ச் பண்ணி இருப்போம். உங்களுக்கு இங்கே இருக்கிறதுக்கு சிரமமா இருந்துச்சுன்னா, வேணும்னா அரேஞ்ச் பண்ணுங்க. பட் இந்த கிளைமேட்டுக்கு ஃபேன் எல்லாம் தேவையில்லை. நீங்களே ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணி பாருங்க. மழை பெய்ய ஆரம்பிச்சிருச்சுனா, வீடு ஜிலு.. ஜிலுன்னு சூப்பரா இருக்கும்.” என்று அவள் வருனிடம் ஒசொல்லிக் கொண்டு இருக்கும்போதே பலத்த இடி சத்தத்துடன் மழை வேகமாக பெய்யத் தொடங்கியது. 🌩️ 🌩️ ⛈️ 🌧️

ரேவதி சொன்னதைப் போல் மழை பெய்ய தொடங்கியவுடன் அந்த இடமே ஜிலு ஜிலுவென்று மாறிவிட்டது. அதை உணர்ந்த வருண் இப்போது தான் தன்னிடம் நிறைய காசு இருக்கிறது என்பதற்காக உடனே பேட்டரியில் ஓடும் ஃபானையோ, லைட்டையோக்ஸ் இங்கே வாங்கிக்கொண்டு வந்து மாட்டி விட்டால் அதை இவர்கள் தர்ம சங்கடமாக உணர்வார்கள் என்று நினைத்தவன்; இப்படிப்பட்ட சூழ்நிலை தனக்கு புதிது என்பதால் இதை தானும் தன்னுடைய மகனும் எக்ஸ்பீரியன்ஸ் செய்தால் நன்றாக தான் இருக்கும் என்று யோசித்து பார்த்துவிட்டு, “ஆமா அத்தை நீங்க சொன்ன மாதிரி ஜில்லுனு தான் இருக்கு. இதுவும் நல்லா தான் இருக்கு.” என்றவன், மீண்டும் சோபாவில் சென்று அமர்ந்து கொண்டான். 

 சுதாகரின் அருகே சென்று அமர்ந்து கொண்ட சித்தார்த், “ஏன் தாத்தா இங்க ஒரே இருட்டா இருக்கு…?? அப்புறம் வெளியில இருந்து டம்மு டம்முன்னு சவுண்டு வேற கேக்குது. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.” என்று பயந்த குரலில் சொன்னான். சித்தார்த்தை தூக்கி கொண்டு வாசலின் அருகே சென்ற சுதாகர், “வெளியில மழை பெய்து சித்தார்த் அதான் இடி இடிக்குது. இப்படி மழை பெய்யும் போது வேகமா காத்து அடிக்கும். அப்போ ரோட்ல போற கரண்ட் ஒயர் ஏதாச்சு கட் ஆகி கீழ விழுந்திருச்சுன்னா, ரோட்ல போறவங்களுக்கு ஷாக் அடிச்சிடும்ல்ல… அதான் உடனே கரண்டை ஆஃப் பண்ணிடுவாங்க.” என்று அவனுக்கு புரியும் படி எளிமையாக சொன்னார். 

சித்தார்த்: “அப்போ இந்த மழை ரொம்ப பேடா இருக்கு. இது ஏன் எல்லாரையும் இப்படி கஷ்டப்படுத்துது…??? எனக்கு இத புடிக்கவே இல்ல.” என்று அப்பாவியாக கேட்டான். 

சுதாகர்: நோ நோ அப்படியெல்லாம் சொல்ல கூடாது. மழை வரவே இல்லைனா தான் நம்ப ரொம்ப கஷ்டப்படுவோம். நம்ம டெய்லியும் தண்ணி குடிக்கிறோம், பிளான்ட்ஸ் ட்ரீஸ்  குரோ ஆகணும்னா அதுக்கு தண்ணி நிறைய வேணும். தண்ணி இல்லைனா நம்மளால வாழவே முடியாது. சோ மழை வந்தா நம்ம ரொம்ப ஹாப்பியா அத என்ஜாய் பண்ணனும். உங்க அம்மாவுக்கு கூட ரெயின்னா, ரொம்ப பிடிக்கும் தெரியுமா…!!” ☔ 💧 என்று ஒரு ஆசிரியராக தனக்கு இருக்கும் அனுபவத்தில் ஒரு சிறுவனிடம் எப்படி பேசி அவனை எங்கேஜ்ட் ஆக வைத்துக் கொள்வது என்று நன்கு அறிந்து இருந்த சுதாகர், வெகு நேரமாக அவனுக்கு சிறிய சிறிய கதைகளாக சொல்லி நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டு இருந்தார்.

சித்தார்த்தும் ஆர்வம் நிறைந்த கண்களுடன் சுதாகரை பார்த்து அவர் சொல்லும் அனைத்தையும் குறுக்கு கேள்விகள் பல கேட்டு புதிய விஷயங்கள் நிறையவற்றை கற்றுக் கொண்டான். சுதாகரையும் சித்தார்த்தையும் ஏக்கம் நிறைந்த கண்களுடன் பார்த்துக் கொண்டு இருந்தான் வருண். இப்போது சுதாகரை பார்க்கும்போது அவனுக்கு இறந்து போன தன்னுடைய தந்தை நாராயணனின் ஞாபகம் வந்தது. வருணின் சிறுவயதில் அவனுடைய அப்பா அவனுக்கும் இப்படி தான் அவருக்கு தெரிந்த அனைத்து நல்ல விஷயங்களையும் ஒவ்வொன்றாக வயதிற்கு ஏற்ப சொல்லிக் கொடுத்து வளர்த்தார்.

அதனால் தனக்கு எல்லாமுமாகவும் இருந்த தன்னுடைய தந்தை இப்போது தன்னுடைய மகனின் முகத்தைக் கூட பார்க்காமல் அதற்கு முன்பே இறந்து விட்டாரே என்று எத்தனையோ நாள் வருண் நினைத்து வருத்தப்பட்டு இருக்கிறான். அந்த வருத்தம் இப்போது அவனுக்கு சித்தார்த் மற்றும் சுதாகரை ஒன்றாக பார்க்கும்போது அப்படியே குறைந்துவிட்டதை போல் இருந்தது. அது மட்டும் இன்றி ரித்திகாவை பார்ப்பதற்கு முன்பு இருந்த சித்தார்த்திற்கும் இப்போது இருக்கும் சித்தார்த்திற்கும் இருக்கும் நல்ல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் வருணால் கண்கூடாக எளிதாக பார்க்க முடிந்தது.

இதற்கு முன் மிகவும் பயந்தவனாகவும், தன்னம்பிக்கை அற்றவனாகவும், எவரையும் நம்பி பழகாதவனாகவும் இருந்த சித்தார்த் இப்போது மிகவும் மகிழ்ச்சியான மற்றும் அனைவரிடத்திலும் அன்பாக பழகும் குழந்தையாகவும் அனைவருக்கும் பிடித்தமான குழந்தையாகவும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டே வருவதை கவனித்த வருண், இந்த மாற்றங்கள் அனைத்தும் ரித்திகாவோடு வரவாலும் அவளுடைய குடும்பத்தினர் கூட தன்னுடைய மகனை அவர்களுடைய குடும்பத்தில் ஒருவராக நினைத்து நன்றாக பார்த்துக் கொள்வதால் தான் என்று நினைத்து உள்ளம் மகிழ்ந்தான் வருண். 😍 🥰

இப்படியே அவன் தன்னுடைய மகனைப் பார்த்தபடி ரித்திகாவை பற்றி யோசித்து கொண்டே அவள் எங்கே இருக்கிறாள் என்று சுற்றி முற்றிப் பார்த்தான். “அம்மா இந்த ரெய்னி கிளைமேட்ல சுட டீயும், உளுந்த வடையும், போட்டு சாப்பிட்டா சூப்பரா இருக்கும். சித்தார்த்துக்கு உளுந்த வடைன்னா ரொம்ப பிடிக்கும்.” என்று கிச்சனில் நின்று கொண்டு ரேவதியிடம் பேசிக்கொண்டு இருந்தாள் ரித்திகா.

ரேவதி: “உளுந்து வடை வேணும்னா உளுந்த ஊறவெச்சு ஏற்கனவே ஆட்டி எடுத்து வச்சிருக்கனுமே டி..!!! இப்ப கரண்ட் வேற போயிடுச்சு. எப்படி ஆட்றது..?? பேசாம நான் இப்ப உளுந்து ஊற போட்டுடறேன். நல்லா ஊறட்டும். கரண்ட் வந்த உடனே   ஆட்டி சுடலாம். இல்லைனா, நாளைக்கு காலையில சுட்டுக்கலாம். இப்போதைக்கு கடலைமாவு போண்டா போடட்டுமா…??? அதுவும் நல்லா தானே இருக்கும்..!!!” என்று கேட்டாள். 

ஷாலினி: ரித்திகா பதில் சொல்வதற்குள் முந்தி கொண்டவள், “அம்மா நீங்க எது பண்ணாலும் நல்லா தான் இருக்கும். நீங்க கடலை மாவு போண்டாவே போடுங்க. நான் அதுக்குள்ள டீ வைக்கிறேன்.” என்று ரேவதியிடம் சொன்னவள்; ரித்திகாவை பார்த்து, “அக்கா நீங்க ஏன் இங்கே நிக்கிறீங்க..?? அங்க பாருங்க உங்க ஹஸ்பண்ட் தனியா உக்காந்திருக்காரு. போய் அவருக்கு கம்பெனி குடுங்க. பாவம் அவருக்கும் போர் அடிக்கும்ல்ல…!!!” என்று கிண்டலாக சொன்னாள். 😂 😂 😂

ரித்திகா: “அடியே சும்மா இருக்க மாட்டியா நீ..?? சுத்தி வேற அமைதியா இருக்கு. அவர் காதுல விழுந்து அவர் கோபப்படுற போறாரு.” என்று சொல்லி ஷாலினியை அதட்டினாள். 

ரேவதி: “இப்ப எதுக்கு டி அவள அதரட்ற நீ..?? அந்த தம்பி தனியா தானே உட்கார்ந்து இருக்காரு…!! பாவம் அவருக்கு மட்டும் போர் அடிக்காதா..?? நீயும், விஷ்ணுவும், அங்க போய் அவர் கூட இருங்க. ஏதாவது விளையாடுங்க ஜாலியா இருக்கும்.” என்று அவள் சிறிது சத்தமாகவே சொன்னாள். 

விஷ்ணு: “விளையாடினா நல்லா தான் அம்மா இருக்கும். ஆனா இப்ப என்ன விளையாடுறது..?? இப்ப கரண்ட் வேற இல்லையே..!!! பாவம் என் ஆளு ஷாலினிக்கு எல்லாம் பகல்லையே பசு மாடு தெரியாது. அவ இந்த இருட்டில என்ன பண்ணுவா சொல்லுங்க..??? நீங்க இதுல அவளை நம்பி டீ வேற போட சொல்றீங்க…!!!” என்று நக்கலாக சொல்லிவிட்டு சிரித்தான். 😂 😂 😂

ஷாலினி தன் கையில் இருந்த ஒரு கரண்டியை வைத்து விஷ்ணுவின் மண்டையில் அடித்தவள், “நான் உன்னை இப்ப இதுல இழுத்தனா.. நீ எதுக்கு தேவை இல்லாம என்ன பத்தி பேசுற..?? நீ பேசுற வாய்க்கு உனக்கு டீயும் கிடையாது. போண்டாவும் கிடையாது. போடா எரும மாடு.” என்று சிறு கோபத்துடன் சொன்னாள். 

விஷ்ணு: “அட போடி நீ பெரிய இவ…!! நீ எனக்கு தரலனாலும், எங்க அம்மா எனக்கு தருவாங்க.” என்று அவளிடம் சொல்லிவிட்டு பழித்து காட்டியவன், ரேவதியை பார்த்து, “ஏதோ விளையாடலாம்னு சொன்னீங்களே.. என்ன மா விளையாட்டுறது..???” என்று மீண்டும் கேட்டான். 

ரித்திகா: “ராஜா ராணி விளையாடலாமா..?? இல்லனா பரமபதம் இருக்கு. அது வேணா விளையாடலாம். தாங்க எங்க ஊர்ல இருக்கும்போது எல்லாம் அடிக்கடி அது தான் விளையாடுவோம். ரொம்ப ஜாலியா இருக்கும்.” என்று சிறு குழந்தை போல் ஆர்வமான குரலில் சொன்னாள். 😍

அவள் சொன்னதை கேட்டு சிரித்த விஷ்ணு, “என்ன அண்ணி நீங்க.. இன்னும்  குழந்தையாக இருக்கீங்க..??? என்று கிண்டலாக சொன்னான். 😂 😂 😂 “ஆமா நான் குழந்தை தான். அதுக்கு இப்ப என்ன..?? நமக்கு எத்தனை வயசு ஆனாலும், நமக்குள்ள இருக்கிற குட்டி குழந்தையை சாகாம பார்த்துக்கணும். அத எத்தனை நாள் நம்ம உயிரோட வச்சிருக்கோமோ, அத்தனை நாள் நம்ம ஜாலியா, சந்தோஷமா, இருக்கலாம்.” என்று தன் கொழுந்தனாரிடம் பதிலுக்கு பதில் வாக்குவாதம் செய்தாள். 

அவள் சொன்னதை கேட்டு மீண்டும் சிரித்த விஷ்ணு, “அதுவும் கரெக்டு தான். சரி வாங்க நம்ம ராஜா ராணியே விளையாடலாம். ஆனா அதுக்கு நிறைய பேர் இருந்தா தான் நல்லா இருக்கும். நானே சின்ன வயசுல விளையாண்டது. அத  திருப்பி விளையாட போறோம்னு யோசிச்சாலே எனக்கு ரொம்ப ஜாலியா இருக்கு. நான் கூப்பிட்டா வருண் அண்ணா வரமாட்டாரு. அதனால நீங்களே போய் அவரையும் கூட்டிட்டு் வாங்க.” என்று ரித்திகாவிடம் மெல்லிய குரலில் சொன்னான்.

நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured