Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 230

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 230

by Thenaruvi Tamil Novels
44 views

அத்தியாயம் 230: என் ஆளுடா அவ (பார்ட் 2)

இப்போது ஷாலினியம் ரேவதியும் டைனிங் டேபிளில் சாப்பிடுவதற்காக அமர, அவர்களுடன் தானும் அமர்ந்து கொண்ட சுதாகர் அவர்களுக்கு பரிமாறியப்படியே தனக்கும் பரிமாறிக் கொண்டு சாப்பிட தொடங்கினார். அப்போது ரேவதிக்கு என்னென்ன உணவுகள் பிடிக்குமோ அதையெல்லாம் தன்னுடைய மனைவிக்கு பார்த்து பார்த்து பரிமாறிய சுதாகர், “ரேவா மா உனக்கு தான் எலும்பே பிடிக்காதுல்ல.. அங்க பாரு உன்னோட இலையில ஒரு எலும்பா கிடக்கு அத எடுத்து என்னுடைய இலையில போடு. நான் சாப்பிடுறேன். இந்தா இந்த ஈரலை சாப்பிடு. உனக்கு இது பிடிக்கும்ல்ல..!!” என்று இத்தனை வயது ஆகியும் மாறாத அன்புடனும் பாசத்துடனும் தன்னுடைய மனைவியை காதல் நிறைந்த கண்களுடன் பார்த்து ரசித்து சாப்பிட்டார்.

இந்த வயதிலும் அவர்களுக்குள்ளே குறையாமல் இருக்கும் இந்த கெமிஸ்டிரியை வருண் முதல் ரித்திகா வரை அனைவரும் கவனித்தனர். 😍 என்ன தான் வருணிற்கு அவர்களை இப்படி காண மிகவும் சந்தோஷமாக இருந்தாலும், இப்படி ஒரு வாழ்க்கையை தான் அவன் ஜான்வியுடன் வாழ வேண்டும் என்று கனவு கண்டான். ஆனால் அவனுடைய கனவு வெறும் கானல் நீராக போய்விட்டதால், அதை நினைத்து வருத்தப்பட்ட வருண்; தன் அருகே அமர்ந்து இருக்கும் ரித்திகாவையும், அவளுடன் மகிழ்ச்சியாக விளையாடி கொண்டு இருக்கும் சித்தார்த்தையும் ஏக்கம் நிறைந்த கண்களுடன் பார்த்தான். 😟 😞

இப்படியே அவன் ஜான்வியைப் பற்றிய நினைவுகளுக்குள் தன்னை தொலைக்கவிருக்க, ஒரு சேர் ஐ எடுத்துப் போட்டு டைனிங் டேபிளின் அருகே அமர்ந்த விஷ்ணு, “அப்பா நீங்களும், அம்மாவும், லவ் மேரேஜ் தானே பண்ணீங்க.. உங்களோட லவ் ஸ்டோரியை சொல்லுங்க. நானும் உங்ககிட்ட இதை பத்தி ரொம்ப நாளா கேட்கலாம்ன்னு நினைச்சேன். இன்னைக்கு தான் கரெக்டான டைம் செட் ஆயிருக்கு. சீக்கிரம் சொல்லுங்க எனக்கு  கேக்குறதுக்கு கியூரியஸ் ஆ இருக்கு.” என்று ஆர்வம் நிறைந்த குரலில் கேட்டான்.

விஷ்ணு தங்களுடைய காதல் கதையை பற்றி பேசியவுடன் வெட்கப்பட்ட சுதாகர் ஓர கண்ணால் ரேவதியை பார்த்துவிட்டு, “என்ன மா சொல்லட்டுமா..??” என்று அமைதியான குரலில் கேட்டார். “சொல்லுங்க.. சொல்லுங்க. எல்லாரும் நம்ம பிள்ளைங்க தானே இருக்காங்க.. அவங்க கிட்ட சொல்றதுல என்ன இருக்கு…???” என்று ரேவதியும் சிறுவெட்கத்துடன் சொன்னாள். 😍 ☺️ 🥰

ஜான்விக்கும் தனக்குமான காதலைப் பற்றி யோசித்து கொண்டு இருந்த வருணிற்கு கூட ரித்திகாவின் பெற்றோர்களின் காதல் கதையை கேட்க ஆர்வம் தோன்றியது. அதனால் அவனும் அமைதியாக அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்க தொடங்கினான்.

சுதாகர்: “உங்க அம்மாவுக்கு சொந்த ஊர் கரூர். எனக்கு திண்டுக்கல். உங்க அம்மா கரூர்ல இருக்கிற ஒரு கவர்மெண்ட் ஸ்கூல்ல கெமிஸ்ட்ரி டீச்சரா வொர்க் பண்ணிட்டு இருந்தாங்க. அப்போ எனக்கு நான் ஒர்க் பண்ண ஸ்கூல்ல இருந்து டிரான்ஸ்பர் கிடைச்சு நான்  கரூருக்கு உங்க அம்மா ஒர்க் பண்ற ஸ்கூலுக்கு வேலை பாக்குறதுக்கு வந்தேன். 

அங்க நான் பிசிக்ஸ் டீச்சர். அந்த ஸ்கூல்ல வர்க் பண்ணவங்களிலேயே நாங்க ரெண்டு பேரும் மட்டும் தான் சின்னவங்களா இருப்போம். மத்தவங்க எல்லாருமே கல்யாணம் ஆனவங்க. நான் ஃபர்ஸ்ட் டே ஸ்கூலுக்கு வேலைக்கு போகும்போது ஆபீஸ் ரூம் எங்க இருக்குன்னு தெரியாம தொழாவிக்கிட்டு இருந்தேன். அப்ப உங்க அம்மா கையில 12த் ஸ்டாண்டர்ட் கெமிஸ்ட்ரி புக்கோட ஆபீஸ் ரூம்ல இருந்து வெளியில வந்தவங்க, நீங்க தான் நியூ ஜாயினியா ஹெட் மாஸ்டர் உங்களை கூப்பிடுகிறாருன்னு என்கிட்ட வந்து சொன்னாங்க.” என்று சொல்லியபடி அந்த நாளை மீண்டும் தன்னுடைய மனதிற்குள் ஓட்டி பார்த்து கொண்டு இருந்தார்.

விஷ்ணு: அவர் சொல்லும் கதையை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டு இருந்தவன், “அப்ப உங்களுக்கும் என்ன மாதிரியே லவ் அட் பர்ஸ்ட் சைட் தானா..???” என்று உற்சாகமான குரலில் கேட்டான். 😍 😁 😁 😁

சுதாகர்: ம்ம்ம். ஆமா விஷ்ணு. அந்த காலத்துல எல்லாம் படிச்ச பொண்ண பாக்குறதே அபூர்வம். அதுவும் அப்ப உங்க அம்மாவுக்கு இப்ப ரித்திகாக்கு இருக்கிறதை விட அதிகமா முடி இருக்கும். அத பின்னி அழகா முன்னாடி போட்டுட்டு குடையை புடிச்சுகிட்டு அப்படியே எயிட்டிஸ்ல வர ஹீரோயின் மாதிரி டெய்லியும் பஸ்ல வருவாங்க. அழகா, அறிவா, நல்லா படிச்சு, நிறைய முடியோட இருக்கிற பொண்ணு கிடைச்சா யாருக்கு அந்த பொண்ண விட மனசு வரும்..?? சோ அப்பவே கட்ணா உங்க அம்மாவ தான் கட்டணும்னு முடிவு பண்ணிட்டேன். அதனால அவங்களுக்காகவே நானும் அவ போற அதே பஸ்ல டெய்லியும் போவேன். 

அப்படியே தூரத்துல இருந்து பார்த்து சைட் அடிச்சு, அப்புறம் பயந்து பயந்து கொஞ்சம் கொஞ்சமா பேசி பிரெண்ட்ஸ் ஆகி ஒரு நாள் கிரீட்டிங் கார்டில் ரோஸ் வச்சு எடுத்துகிட்டு போய் ப்ரொபோஸ் பண்ணிட்டேன்.

ஷாலினி: “அப்போ அம்மா என்ன அப்பா சொன்னாங்க உடனே உங்களுக்கு ஓகே சொல்லிட்டாங்களா..???” என்று ஆர்வமான குரலில் கேட்டாள். 

ரேவதி: “இல்ல மா ஷாலினி. அது எப்படி ஒரு பையன் டக்குனு வந்து ப்ரொபோஸ் பண்ணா உடனே நம்ம ஓகே சொல்ல முடியும். அதுவும் நம்ம வீட்ல ஒத்துக்க மாட்டாங்கன்னு நமக்கே தெரியும். அவங்க என்ன கஷ்டப்பட்டு படிக்க வச்சதே பெரிய விஷயம். இதுல நமக்கு இதெல்லாம் தேவையான்னு தோணுச்சு. 

அண்ட் இது எல்லாத்தையும் தாண்டி வீட்ல தெரிஞ்சு ஏதாவது பெரிய பிரச்சனை ஆகிடுமோன்னு ரொம்ப பயமா வேற இருந்துச்சு. அதனால அழுதுகிட்டே ஓடிப் போயிட்டேன். எதுவும் சொல்லாம.” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். 😁 😁 😁

விஷ்ணு: அப்புறம் எப்படி அப்பா அவங்கள ஓகே சொல்ல வச்சீங்க..???

சுதாகர்: வேற எப்படி… அவ நோ சொன்னா உடனே விற்றவா முடியும்..?? அவ பின்னாடியே சுத்திட்டு இருந்தேன். அப்ப ஒரு நாள் உங்க அம்மா திடீர்னு ஸ்கூலுக்கு வரல. நானும் சரி ஏதோ சும்மா லீவு போட்டு இருப்பாங்க அப்படின்னு விட்டுட்டேன். ஆனா ரெண்டு மூணு நாள் ஆகியும் உங்க அம்மா வரவே இல்ல. எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. அதனால ஏன் இவங்க வரலைன்னு தெரிஞ்சுக்கணும்னு எச். எம். கிட்ட போய் அப்படி இப்படின்னு பேசி போட்டு வாங்கினேன். 

ஹெச். எம். சார் உங்க அம்மாவுக்கு டைபாய்டு ஃபீவர் அதனால ஒன் வீக் மெடிக்கல் லீவ்ல போயிருக்காங்கன்னு சொன்னாரு. அதைக் கேட்ட உடனே எனக்கு மனசே சரியில்ல. எப்படியாவது ரேவதியை போய் பாத்தே ஆகணும்னு தோணுச்சு. அதனால அன்னைக்கே கிளம்பி நேரா அவ வீட்டுக்கு போயிட்டேன். 

விஷ்ணு: அவங்க வீட்டு ஆளுங்க யாராவது பார்த்து எதுவும் பிரச்சனையா ஆயிடுச்சா..??? அதனால தான் நீங்க தனியா அம்மாவ கூட்டிட்டு வந்து மேரேஜ் பண்ணிட்டீங்களா அப்பா..???

சுதாகர்: “இல்ல.. இல்ல.. அப்ப எல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல. நான் அவ வீட்டுக்கு போனதே நடு ராத்திரியில தானே… அப்ப யாரு என்ன பாக்க போறாங்க..!! அவங்க வீடு ஓட்டு வீடு தான். அதனால ஒவ்வொரு ஜன்னலா ஆராய்ச்சி பண்ணி உங்க அம்மா எந்த ரூம்ல இருக்காங்கன்னு கண்டுபிடிச்சு அந்த பக்கம் யாருக்கும் தெரியாம ஒரு ஏணிய போட்டு மேலே ஏறி ஓட்ட பிரிச்சு உள்ள இறங்கிட்டேன். 

நான் உள்ள வந்து குதிச்ச சவுண்ட்ல உங்க அம்மா கண்டுபிடிச்சுட்டாங்க. அப்புறம் ஏன் இங்கே வந்தீங்க யாருக்காவது தெரிஞ்சா பிரச்சனை ஆயிடும்னு ஒரே அழுகை. அப்புறம் திருப்பியும் என்னோட லவ்வ அவங்க கிட்ட சொல்லி, உன்ன பாக்காம இருக்க முடியல அதனால தான் வந்தேன்னு சொன்னேன். உங்க அம்மா அப்படியே ஃபீல் ஆயிட்டாங்க.” என்று அவர் பீல் செய்து சொன்னார். 😍 🥰 ❤️

ரேவதி: நோ.. நோ.. சுதா. நான் அப்பலாம் எதுவும் பீல் ஆகல. இவர் என் பின்னாடியே சுத்திகிட்டு இருக்கிறதை யாரோ ஒருத்தர் நோட் பண்ணி எங்க அப்பா கிட்ட போட்டு கொடுத்துட்டாங்க. அதனால எங்க அப்பா எங்க ரிலேட்டிவ் பையன் ஒருத்தன் ஐயன் கடை வைத்திருந்தான் அவன் கூட   அவசர அவசரமா எனக்கு என்கேஜ்மென்ட் பண்ணிட்டாரு.

என்ன ஸ்கூலுக்கும் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறமா போய்க்கலாம்னு சொல்லி லீவ் போட வச்சுட்டாங்க. கிட்டத்தட்ட ஹவுஸ் அரசிட்ல இருந்தேன். அப்ப ஒரு நாள் காலையில உங்க அப்பா தைரியமா எங்க வீட்டுக்கு வந்து எங்க அப்பா கிட்ட பேசினாரு. நான் தான் இதுவரைக்கும் உங்க பொண்ண லவ் பண்றேன்னு அவ பின்னாடி சுத்திட்டு இருக்கேன். ஆனா இன்னவரைக்கும் உங்க பொண்ணு எனக்கு ஓகே சொல்லல. அதனால என்னால ஏதாவது பிரச்சனை வந்துருமோன்னு இப்படி படிக்காத இந்த வேலை செய்றவனுக்கு நீங்க உங்க பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்து அவ வாழ்க்கையை கெடுத்துறாதீங்க. 

நான் இனிமே உங்க பொண்ணு பக்கமே வரமாட்டேன். அவளை தொந்தரவு பண்ணவும் மாட்டேன். நீங்க அவளை எனக்கு கட்டிக் கொடுக்கலைனாலும் பரவால்ல. பொறுமையா அவளை யாராவது நல்ல படிச்ச பையனா பாத்து கல்யாணம் பண்ணிகுடுங்கன்னு சொல்லிட்டு அவர் பாட்டு போயிட்டாரு. அப்ப தான் எனக்கு பீல் ஆச்சு. இவர் தான் என்ன நல்லா பார்த்துப்பாரு. இவரை விட அதிகமா யாரும் என்ன பத்தி யோசிக்க மாட்டாங்கன்னு தோணுச்சு. 

அதுக்கப்புறம் நானும் எங்க அப்பா அம்மாகிட்ட  எவ்வளவோ பேசி பாத்தேன், கெஞ்சி பாத்தேன். ஆனா அவங்க என்ன தவிர மத்த எல்லாத்தையும் யோசிச்சாங்க. எல்லாரையும் பத்தி யோசிச்சாங்க. அதனால எனக்கு அவங்க மேல ஒரு டைம்க்கு மேல கோபம் வந்துடுச்சு. சோ, யாருக்கும் தெரியாம என் பிரண்டை விட்டு உங்க அப்பாவ மீட் பண்ணனும்னு ஒரு கோயிலுக்கு வர சொல்லி அவர்கிட்ட என்ன கல்யாணம் பண்ணிக்கிறீங்களான்னு கேட்டேன்.

ஷாலினி: “அப்புறம் என்ன ஆச்சு அவர் என்ன சொன்னாரு..??” என்று தன்னுடைய ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டாள். 

சுதாகர்: “நான் லவ் பண்ண பொண்ணு என்கிட்டயே வந்து என்ன கல்யாணம் பண்ணிக்கிறீங்கன்னு கேட்கும்போது நான் என்ன சொல்லுவேன்… உடனே ஓகேன்னு சொல்லி அங்க இருந்த கடையில தாலியை வாங்கி அந்த கோயில்லயே கட்டிட்டேன். அதுக்கு அப்புறம் தான் எங்க ரெண்டு பேர் வீட்லயும் தெரிஞ்சு பெரிய பிரச்சினை ஆயிடுச்சு. அவங்க யாருமே எங்களை அக்செப்ட் பண்ணிக்க ரெடியா இல்ல. சோ எங்களை வேணாம்னு சொல்றவங்க எங்களுக்கும் வேணாம்னு நாங்க கிளம்பி டவுனுக்கு வந்துட்டோம்.

நாங்க அந்த ஸ்கூல்லயே தான் வேலை பாத்தோம். கடைசி வரைக்கும் நாங்க ரிட்டையரே ஆயிட்டோம் எங்களோட பேரண்ட்ஸ் எங்களை வந்து பாக்கவே இல்லை. அதனால நாங்களும் அவங்கள போய் பாக்கல. எங்களுக்கு பார்க்கிற தைரியமும் இல்லை.” என்று சொல்லி தங்களுடைய கதையை முடித்தார். 

சுதாகர் தங்களுடைய காதல் கதையை சொல்லி முடிக்கும் போது ரேவதி மற்றும் அவருடைய கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது. 🥺 இருந்தாலும் இந்த நன்னாளில் தங்களுடைய சோக கதையை பேசி இந்த நாளிற்கான சந்தோஷத்தை கெடுத்து விட வேண்டாம் என்று நினைத்து தங்களை தாங்களே கட்டுப்படுத்திக் கொண்டனர். ரித்திகாவும் அவர்களை மனதை புரிந்து கொண்டு கண்கலங்கி அவர்களைப் பார்த்தாள். 

ரித்திகாஅழுவதை கவனித்த சித்தார்த், “ஏன் ரித்திஅம்மா அழுகிற..??” என்று சோகமான குரலில் கேட்டான். 😟 அப்போது தான் வருணும் தன் அருகே அமர்ந்து இருந்த ரித்திகாவை கவனித்தான். தன்னுடைய கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு உடனடியாக போலியாக சித்தார்த்தை பார்த்து சிரித்த ரித்திகா, “ஒன்னும் இல்ல சித்து. இப்ப உனக்கு செண்பகம் பாட்டி இருக்காங்க. எங்க அம்மா அப்பா இருக்காங்களா. உனக்கும் அவங்க  பாட்டி தாத்தாவும் இருக்கிறாங்கல்ல . ஆனா எனக்கு அப்படி யாரும் இல்ல. என்னோட பாட்டி தாத்தா எப்படி இருப்பாங்கன்னு கூட எனக்கு தெரியாது அதான் அத யோசிச்சு பார்த்தேன்னா.. லைட்டா அம்மா கண்ல தண்ணி வந்துருச்சு.” 😁 😁 😁

சித்தார்த்: “அப்ப இனிமே யோசிச்சு பாக்காத ரித்தி. உனக்கு நான் இருக்கேன் சரியா… சித்து ஓட்ட ரித்திஅம்மா அழ கூடாது.” என்றவன் பாசத்துடன் தன்னுடைய அம்மாவை கட்டிப்பிடித்துக் கொண்டான். 😍 🤗

ரித்திகா: அந்த மழலையின் அன்பில் கரைந்து போனவள், “அம்மா இனிமே அழவே மாட்டேன்.” என்று சொல்லிவிட்டு மனதார சிரித்தாள்.

  • நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured