Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 226

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 226

by Thenaruvi Tamil Novels
27 views

அத்தியாயம் 226: நீங்க என் கிட்ட கோச்சுக்க கூடாது ஓகேவா? (பார்ட் 2)

அவன் எளிதாக நேற்றை போல் இன்றும் தூங்கலாம் என்று ரித்திகாவிடம் சொல்லிவிட்டான். ஆனால் அதை செய்வதற்கு அவனுக்கு மிகவும் தயக்கமாகவும், கூச்சமாகவும், இருந்தது. அதனால் தன் அருகே கிடந்த ஒரு குட்டி தலையணையை எடுத்து அதை கட்டிப்பிடித்துக் கொண்டு வேறு ஒரு புறமாக திரும்பி படுத்து கொண்டான். 🤗 வருண் சொன்னதைப் பற்றி யோசித்துப் பார்த்த ரித்திகா இந்த பணக்காரர்களின் வாழ்க்கை முறையை பற்றி தனக்கு எப்படியும் புரியப் போவதில்லை என்னும்போது… அவர்கள் என்ன யோசிக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள், ஒரு விஷயத்தை எதற்காக செய்கிறார்கள் என்றெல்லாம் நாம் யோசித்து ஒரு பயனும் இல்லை என்று நினைத்தவள், தன்னுடைய கண்களை மூடி சில நிமிடங்களிலேயே நிம்மதியாக தூங்க தொடங்கி விட்டாள். 

ஆனால் வருண் தூக்கம் வராமல் அந்தப் புறமும் இந்த புறமும் புரண்டு புரண்டு படுத்து கொண்டு இருந்தான். அப்போது ரித்திகாவின் புறமாக திரும்பிப் படுத்தவன், தன்னுடைய சிறிய உடலை இன்னும் சிறியதாக குறுக்கிக் கொண்டு தன்னுடைய இரு கைகளையும் அவளுடைய கன்னத்திற்கு அடியில் வைத்து கொண்டு ஏசியின் குளூரில் நடுங்கிக் கொண்டு இருந்தாள். ஏற்கனவே சிறிய பெண்ணாக எப்போதும் வருணின் கண்களுக்கு தெரியும் ரித்திகா இந்நிலையில் பள்ளியில் படிக்கும் சிறுமியை போல் அவனுடைய கண்களுக்கு தெரிந்தாள். 

அவளுடைய கழுத்தில் அவன் கட்டிய தாலியும், அவளுடைய நெற்றியில் இருக்கும் குங்குமம் மட்டும் இல்லை என்றால் சத்தியமாக ரித்திகாவை அவனால் தன்னுடைய மனைவி என்று ஒரு பேச்சுக்கு கூட நினைத்து பார்க்க முடியாது. இதில் அவன் அடித்த காயத்தின் அடையாளங்கள் வேறு இன்னும் அவளுடைய கன்னத்தில் இருப்பதால் ஒரு சிறிய பெண்ணை திருமணம் என்ற பெயரில் கூட்டி கொண்டு வந்து தன்னுடைய  வீட்டில் தான் வைத்து அவளை சித்திரவதை செய்து கொண்டு இருப்பதாக அவனுக்கு தோன்ற தன்னைத்தானே ஒரு கேவலமான ஆளாக நினைத்து கில்டியாக ஃபீல் செய்தான் வருண்.

பின் தன்னுடைய காலிற்கு கீழே கடந்த போர்வையை எடுத்து அவளுக்கு போற்றி விட்டவன், தானும் அதற்குள் புகுந்து கொண்டு அப்பாவி குழந்தையை போல் சலனமின்றி தூங்கும் ரித்திகாவின் முகத்தை பார்த்தான். அந்த அமைதியான முகத்தை பார்க்கும்போது அவனுடைய மனமும் சற்று நிம்மதி அடைந்தது. அதனால் அவள் தூங்கிவிட்ட தைரியத்தில் சிறு தயக்கத்துடன் அவளை அனைத்தவன், தன்னுடைய கண்களை மூடி சில நிமிடங்களில் தன்னை அறியாமலே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டான். 😍 🤗 🥰

மறு நாள் காலை….

நேரமாக எழுந்து குளித்து வருனும், ரித்திகாவும், கிளம்பி கொண்டு இருந்தனர். அப்போது வழக்கம் போல் வருண் தான் அணியும் கோர்ட் சூட் ஐ அணிந்து கொண்டு இருக்க, சீப்பால் தன்னுடைய தலையை வாரியப்படியே அவன் அருகே சென்ற ரித்திகா , “நான் உங்ககிட்ட ஒன்னு கேட்டா நீங்க கோவிச்சுக்க மாட்டீங்களே..!!!” என்று வழக்கம்போல அவனிடம் கேட்டாள். 

வருண்: தன்னுடைய கோட் ஐ ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியை பார்த்து சரி செய்து கொண்டேன், “இப்ப நான் கோச்சிக்குவேன்னு சொன்னா மட்டும் நீ அத என்ன கேட்காமையாய இருக்க போற..?? அதான் வாய் வரைக்கும் வந்திருச்சுல்ல…  கேட்டுறு.” என்றான். 

ரித்திகா: சிறு புன்னகையுடன், “வெஸ்டர்ன் கண்ட்ரிஸ் எல்லாமே கோல்ட் கன்ட்ரிஸ். சோ அங்க இருக்கிறவங்க அவங்க கிளைமேட்டுக்கு தகுந்த மாதிரி இந்த மாதிரி கோட் சூட் வியர் பண்ணா அதுல ஒரு நியாயம் இருக்கு. வெயில் கொளுத்துற நம்ப நாட்டுல எதுக்கு இந்த மாதிரி எல்லாரும் டிரெஸ் பண்ணிட்டு இருக்காங்க..??? 

ஒரு பிசினஸ் மேன்னா, அவரோட ஐடென்டிடியே இந்த மாதிரி கோட் சூட் தான்னு பிக்ஸ் ஆயிடுச்சுச்சு. பட் அவங்களோட ரியல் ஐடென்டிட்டியே அவங்களோட சக்சஸ் ஆ தானே இருக்கணும்..??? நீங்க என்ன தான் ஏசி ரூம் குள்ளேயே இருந்தாலும் கூட, சில சமயத்துல இந்த கோட் ஐ போட்டுட்டு இருக்கிறது உங்களுக்கு இரிடேட் ஆகாதா அது எப்படி உங்களுக்கு மட்டும் வேர்காமையே இருக்கு..???” என்று சிறு குழந்தை போல் அவனிடம் தனக்கு தோன்றியவற்றை எல்லாம் கேட்டாள்.

வருண்:  ஃபீமேல் ஓட டிரஸ் கலெக்ஷன் -ல இது அபிசியல் ஆன டிரஸ்ன்னு தனியா டிஃப்ரண்ட் பண்றது ரொம்ப கஷ்டம். பட் எங்களுக்கு அப்படி இல்லையே இருக்கிறதே நாலு ஸ்டைல் தான். ஆபீஸ்க்கு வொர்க் பண்ண வர்றவனே ஃபார்மஸில தான் வருவான். 

அப்போ பாஸ் நான் அவங்க கிட்ட இருந்து டிஃபரண்டா தெரியனும்ல்ல… அண்ட் நமக்கு இருக்கிறவங்க நிறைய பேர் பாரின் லைன்ஸ் அவங்க முன்னாடி நம்ம இதைஎல்லாம் ஃபாலோ பண்ணி ஆகணும்ன்றது ஒரு அன் ரிட்டன் ரூல் ஆயிடுச்சு. பட் நீ சொன்ன மாதிரி டெய்லியும் ஸ்கூல் யூனிபார்ம் மாதிரி இதயே போட்டுட்டு போறது எனக்கும் ஒரு மாதிரி இரிடேட்டிங் ஆ தான் இருக்கு. இனிமே மீட்டிங் அப்போ மட்டும் கோட் போட்டுகிறேன்.” என்றவன், தான் மாட்டி இருந்த கோட்டை கழட்டி மீண்டும் தன்னுடைய வாட்ரோப்பிலேயே வைத்து விட்டான். 

“பரவாயில்லையே இவர் நம்ப சொல்றத கூட கன்சிடர் பண்றாரு.. நல்ல முன்னேற்றம் தான்.” என்று நினைத்து தனக்குள் மகிழ்ந்த ரித்திகா, சீக்கிரமாக கிளம்பி வருனுடன்  தன்னுடைய பிறந்த வீட்டிற்கு சென்றாள். 😁 😁 😁

சோபியாவின் வீட்டில்…

தான் தன்னுடைய வேலையை பார்ப்பதற்கு செல்வதற்கு முன்பே சோபியாவுடன் அவளுடைய வீட்டிற்கு சென்று அவளுடைய பெற்றோர்களை சந்தித்து தங்களுடைய காதல் விவகாரத்தைப் பற்றி அவர்களிடம் பேசி சம்மதம் வாங்கி விட வேண்டும் என்று நினைத்த ஆதித்யா, சோபியாவின் தங்கை நான்ஸிக்கு பிறந்துள்ள பெண் குழந்தைக்கு சில ஆடைகள், பால் பவுடர், குழந்தைகளுக்கு பயன்படுத்தும் எண்ணெய், பவுடர், டயப்பர்கள் என தனக்கு தோன்றிய அனைத்தையும் வாங்கிக் கொண்டு சோபியாவுடன் அவளுடைய வீட்டிற்கு வந்தான். 

இதுவரை சோபியா அவளுடைய பெற்றோர்களிடம் எந்த பையனை பற்றியும் பேசியது இல்லை. அவளுக்கு குறைந்தபட்சம் ஒரு ஆண் நண்பர் இருக்கிறான் என்பது கூட அவர்களுக்கு தெரியாது. அதனால் திடீரென்று சோபியா ஆதித்யாவுடன் அங்கே வருவதை வைத்து இவர்களுக்குள் ஏதோ ஒன்று ஓடிக்கொண்டே இருக்கிறது என்பதை உணர்ந்த சோபியாவின் பெற்றோர்கள், இருப்பினும் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் அவனை  வரவேற்று உபசரித்தனர். 

தான் நான்சியின் குழந்தைக்காக வாங்கி வந்த பொருட்களை அவளிடம் ஆதித்யா கொடுக்க அதைப் பெற்றுக் கொண்ட நான்சி, “நீங்களே இப்ப தான் ஃபர்ஸ்ட் டைம் எங்க வீட்டுக்கு வரீங்க அதுக்குள்ள ஏன் இவ்ளோ வாங்கிட்டு வந்து இருக்கீங்க..???” என்று அர்த்தமாக கேட்டவள், தன்னுடைய அக்கா சோபியாவை ஓர கண்ணால் பார்த்துவிட்டு தன் கையில் இருந்த பைகளை அங்கே இருந்த ஒரு மேஜையின் மீது வைத்தாள். 

ஆதித்யா: “அப்ப செகண்ட் டைம் வரும்போது நிறைய வாங்கிட்டு வந்தா பரவாயில்லையா மா..???” என்று கேட்டுவிட்டு நான்சியை பார்த்து லேசாக புன்னகைத்தவன் சோபியாவின் அப்பா ஜோசப் ஐ பார்த்து, “அங்கிள் எனக்கு சுத்தி வளச்சு எல்லாம் பேச தெரியாது. உண்மைய சொல்லனும்னா, எனக்கு பெரியவங்க கிட்ட சரியா பேசவே தெரியாது. ஆனா எனக்காக நான் தான் பேசி ஆகணும். பிகாஸ் எனக்காக பேசுற அளவுக்கு எனக்கு யாரும் இல்லை.

நானும், சோபியாவும், லவ் பண்றோம் அங்கிள். நான் ஆல்ரெடி சொன்ன மாதிரி எனக்குன்னு யாரும் கிடையாது. இப்போதைக்கு என்ன பத்தி யோசிச்சு எனக்காகன்னு இருக்குற ஒரே ஆளு சோபி மட்டும்தான். சோபியா எங்க வொர்க் பண்றா என்னவா ஒர்க் பண்றான்னு உங்களுக்கே தெரியும். 

நானும் அதே வொர்க் ஐ தான் வருண் சாருக்காக பண்றேன். சோ நீங்க அவளுக்கும் எனக்கும் செட் ஆகுமான்னு யோசிச்சு கவலைப்பட தேவை இல்லை. நீங்க அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சு நான் அவள பாத்துக்கணும்ன்ற எந்த அவசியமும் இல்ல. அவளே அவளை பார்த்துக்கிற அளவுக்கு ரொம்ப டேலண்டான பொண்ணு தான். 

பட் நீங்க எங்களுக்கு மேரேஜ் பண்ணி வச்சீங்கன்னா; நாங்க ரெண்டு பேரும் நல்ல பிரண்ட்ஸா, ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல கம்பெனியன்னா, லைஃப் லாங் சந்தோஷமா வாழுவோன்றை நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. அண்ட் யாரும் இல்லாத எனக்கு இந்த மாதிரி ஒரு நல்ல ஃபேமிலி கிடைக்கும். ப்ளீஸ் அங்கிள் எங்களை பிரிச்சிராதீங்க. எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியல.” என்று சொன்னவன், தன்னுடைய இரு கைகளையும் கூப்பி பவ்யமாக கெஞ்சும் தோரணையில் சோபியாவின் அப்பாவை பார்த்தான். 🙏

ஜோசப்: சோபியாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆதித்யாவை பார்த்தவர், “நீங்க இவ்ளோ பேசுனத கேட்டுட்டு என்னோட பொண்ணு அமைதியா இருக்கானாளே அவளுக்கும் உங்கள புடிச்சிருக்குன்னு எனக்கு நல்லா தெரியுது. நீங்க சொன்ன மாதிரி என்னோட பொண்ணு ரொம்ப இண்டிபெண்டன்ட் ஆனவ தான். அவளுக்கு என்ன வேணும்னு அவளுக்கே தெரியும். 

அவளோட சாய்ஸ் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு தம்பி. பட் உங்களோட பேரும் உங்க ரிலிஜியனும் தான் எங்களுக்கு இருக்கிற ஒரே ஒரு பிராப்ளம். ஆல்ரெடி என்னோட பொண்ண பத்தி எல்லாரும் தப்பா பேசிகிட்டு இருக்காங்க. அவளாலயும், அவ பாக்குற இந்த வேலைனாலயும் என்னோட சின்ன பொண்ணு லைஃப்லையும் நிறைய பிரச்சனை வந்துட்டே இருக்கு. இப்ப போய் நான் வேற ரிலிஜியன் ல இருக்கிற பையனுக்கு நான் அவளை கல்யாணம் பண்ணி வச்சன்னா  அதனால எங்க ஃபேமிலிகுள்ள நிறைய பிராப்ளம்ஸ் கிரியேட் ஆகும். 

நாலு பேர் நாலு விதமா பேசி சொசைட்டில எங்களுக்கு இருக்கிற மிச்சம் மீதி மரியாதையையும் கெடுத்து விட்டுருவாங்க. அதனால தான் கேட்கிறேன்.. நீங்க எங்க மதம் மாறுவதற்கு உங்களுக்கு சம்மதமா…??? உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க. உங்க கல்யாணத்தை நான் உடனே பண்ணி வைக்கிறேன்.

 ஆதித்யா: “நான் குழந்தையா இருக்கும்போது நான் வளர்ந்த ஆசிரமத்துல எனக்கு ஆதித்யான்னு பேர் வச்சாங்க. அதனால நான் இப்படி வளந்துட்டேன். மத்தபடி நான் எந்த ரிலிஜியன் ஐ சேந்தவன்னு எனக்கே தெரியாது  அங்கிள். என் சோபிக்காக நீங்க என்ன ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்னு என்னோட நேம் ஐ சேங்ஜ் பண்ணிக்க சொன்னா கூட, சந்தோஷமா பண்ணிட்டு என்னோட ஆயுசு முடியிற வரைக்கும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்ன்னு சொல்லிட்டு வாழ்ந்துட்டு போயிடுவேன். சோபியாக்காக நான் என்ன வேணா பண்ணுவேன் அங்கிள்.” என்று சொல்லி ஜோசப்பிடம் ஒட்டு மொத்தமாக சரணடைந்து விட்டான். 

“படுத்தே விட்டான் ஐயா…!!!” என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்ட ஜோசப், தன்னுடைய மகளின் அடாவடியான குணத்திற்கு அவள் அவளுக்கேற்ற ஆளை தான் சரியாக செலக்ட் செய்து இருக்கிறாள் என்று நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டவர்; “என்ன தம்பி எனக்கு பேசவே தெரியாதுன்னு சொல்லிட்டு இவ்வளவு நல்லா பேசிட்டீங்க..!!! இப்ப தான் தெரியுது என் பொண்ணு எதுக்காக உங்களை லவ் பண்ணிருக்கான்னு… பேசி பேசியே நீங்க அவளை கரெக்ட் பண்ணிட்டீங்க போல…!!! 

உங்களுக்குள்ள செட் ஆகும்னு எனக்கு நம்பிக்கை வந்துருச்சு. நான் எங்க சர்ச்சில உங்களுக்கு  ஞான ஸ்தானம் பண்றத பத்தி பேசிட்டு என்னைக்கு பண்றோம்னு முடிவு பண்ணிட்டு சொல்றேன். அன்னைக்கு வந்துருங்க. உங்க ஞான ஸ்தானம் முடிஞ்சதுக்கு அப்புறமா சர்ச்சிலேயே உங்க மேரேஜ் -க்கான டேட்டையும் பிக்ஸ் பண்ணிரலாம். முடிஞ்ச வரைக்கும் உங்களுக்கும், சோபியாவுக்கும், நான் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சுரறேன். இப்போ உங்களுக்கு சந்தோஷமா…???” சிரித்துக் கொண்டே கேட்டார். 😁😁 😁

ஆதித்யா: “சந்தோஷமா.. ஐயோ அங்கிள் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ப்ளீஸ் பிளஸ் மீ.” என்றவன் ஜோசப்பின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். 🙏 🥰

ஆதித்யாவை தூக்கிவிட்ட ஜோசப் அவனுடைய நெற்றியில் தன்னுடைய ஒரு விரலால் சிலுவை ஒன்றை வரைந்து, “காட் பிளஸ் யூ மை சைல்ட்.” என்று சொல்லி அவனை ஆசீர்வாதம் செய்தார். “என்னையும் பிளஸ் பண்ணுங்க டாடி.” என்ற சோபியாவும் தன்னுடைய அப்பாவின் கால்களில் விழுந்து வணங்கினாள். 

  • நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured