Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 225

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 225

by Thenaruvi Tamil Novels
12 views

அத்தியாயம் 225: நீங்க என் கிட்ட கோச்சுக்க கூடாது ஓகேவா? (பார்ட் 1)

வருணின் அறையில்….

ரித்திகா: அவன் சொன்னதைக் கேட்டு குழப்பத்துடன் அவனைப் பார்த்தவள், “நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்கு புரியல. நேத்து தூங்கன மாதிரின்னா, நீங்க என்ன மீன் பண்றீங்க..???” என்று கேட்டாள். 🙄

வருண்: தான் சொன்னதை கேட்டு அவள் தன்னை தவறாக புரிந்து கொண்டு விட்டாளோ என்று நினைத்து பயந்தவன், “ஏய்..!! நீ அவ்ளோ யோசிக்கிற அளவுக்கெல்லாம் இதுல ஒன்னும் இல்ல டி. இப்போ உனக்கு ஷாலினி பிரண்டு தானே..!!! நீயும், அவளும் ,ஒரே ரூம்ல ஒண்ணா சேந்து ஒரே பெட் -ல தூங்குவீங்கல்ல… அதே மாதிரி நீயும், நானும், தூங்கலாம்னு சொல்றேன். அவ்ளோ தான். அதுக்கு மேல வேற ஒன்னும் இல்ல. நீ ஓவர் ஆ இமேஜின் பண்ணாத.” என்று அவளுக்கு புரியும் படி தெளிவாக சொன்னான்.

ரித்திகா: அவன் சொன்னதைக் கேட்டு இப்போது புரிகிறது என்பது போல தன் தலையை  ஆட்டியவள், “அப்போ இனிமே நீங்க என்னோட பிரண்டா..??” என்று அப்பாவியாக தன்னுடைய முகத்தை வைத்து கொண்டு கேட்டாள். 😍

வருண்: அவனுக்கு ரித்திகா வுடன்  நட்பாக பழக வேண்டும் என்றெல்லாம் எந்த ஆசையும் கிடையாது. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் அவனுக்கு ரித்திகாவுடன் பேசவோ பழகவோ கூட அவனுக்கு துளியும் விருப்பம் கூட இல்லை இருப்பினும், இப்போது அவனுக்கு அவளுடைய தேவை இருக்கிறது என்பதால் வேறு வழி இன்றி; “ஆமா இனிமே நீ என்னோட ஃப்ரெண்ட். நம்ப நல்ல பிரண்ட்ஸா இருக்கலாம்.” என்றவன் நட்பாக  கை குலுக்க ரித்திகாவின் முன்னே தன்னுடைய ரைட் ஹாண்ட் ஐ நீட்டினான். 😁 😁 😁

ரித்திகா: உற்சாகத்துடன் அவனுடைய கைகளோடு தன்னுடைய கைகளை கோர்த்து குலுக்கியவள், “சூப்பர். இது வரைக்கும் நமக்குள்ள இருக்கிற ரிலேஷன்ஷிப் என்னன்னே தெரியாம இருந்துச்சு. அப்படி எதுவுமே இல்லாம இருக்கறதுக்கு இந்த ஃப்ரெண்ட்ஷிப் நல்லா தான் இருக்கும். நீங்க வேணா பாருங்க.. நான் உங்களோட பெஸ்ட் பிரண்டா இருப்பேன். 

நீங்க சொன்ன மாதிரி நம்ப சேந்து தூங்கலாம். பிரண்ட்ஸ் ஒன்னா தூங்குறதுல ஒன்னும் தப்பில்லையே… அண்ட் நீங்க பொண்ணு நான் பையன் தென்.. எப்படின்னு யோசிச்சா கூட; மோர் ஓவர்.. வி ஆர் அபிசியலி ஹஸ்பண்ட் அண்ட் வைஃப். சோ, நோ ப்ராப்ளம். பட்…..!!!!” என்று இழுத்தாள்.

வருண்: தனக்கு அவளுடைய தேவை இருக்கிறது என்று புரிந்து கொண்டு அவள் பெரிதாக தன்னிடம் சீன் போடத்தான் போகிறார் என்று எதிர்பார்த்து இருந்தவன், அவள் சொன்னதைக் கேட்டு திருப்தி அடைந்தான். இருப்பினும் அவள் இறுதியில் எதையோ சொல்ல வந்ததால் அது என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், “பட் வாட்..??” என்று குழப்பமான குரலில் கேட்டான். 🙄

ரித்திகா: “இல்ல… நமக்குள்ள பிகினிங்ல எல்லாமே நல்லா தான் போகுது. ஆன எண்டிங் தான் எப்பவுமே சரியா அமைய மாட்டேங்குது. இப்ப நீங்க கேட்டீங்கன்னு, நானும் ஓகே -ன்னு சொல்லிட்டேன். பட் திடீர்னு ஒரு நாள் மார்னிங் நீங்க தூங்கி எந்திரிச்சு பார்த்துட்டு; நான் தான் உங்களை ஏதோ பண்ணிட்டேன்… 

உங்ககிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்க ட்ரை பண்றேன்.. இல்ல நீங்க வேற ஏதாவது கூட சொல்லுவீங்க. அப்புறம் நான் எக்ஸ்பிளைன் பண்ண வர்றது கூட கேட்காம கோவத்துல என்ன அடிப்பீங்க. அதான் நான் யோசிக்கிறேன். இப்ப உங்களுக்கு இப்படி தோணுது. இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வேற மாதிரி தோனலாம்ல… அப்ப வந்து நீங்க என் கிட்ட கோச்சுக்க மாட்டீங்களே…??? சம்டைம்ஸ் என்னால உங்க கேரக்டர் ஐ அண்டர்ஸ்டாண்ட் பண்ணவே முடியல. உங்க பிஹேவியர் இப்படி தான் இருக்கும்னு என்னால பிரிடிக்ட் பண்ணவும் முடியல. நீங்க எனக்கு ஒரு மிஸ்ட்ரியாவே இருக்கீங்க. சோ உங்ககிட்ட நான் எப்படி பிஹேவ் பண்ணனும்னு எனக்கு தெரிய மாட்டேங்குது. எனக்கு இது தோணுச்சு அதனால நான் உங்ககிட்ட ஸ்ட்ரெயிட்டா கேட்டுட்டேன். இத அகைன் தப்பா எடுத்துகாதீங்க ப்ளீஸ்.” என்று தங்கி தயங்கி பயத்துடன் சொன்னாள். 

வருண்: தான் அவளை அடித்தது பற்றி அவள் பேசிய பின்பு தான் அவளுடைய கன்னத்தில் தன்னுடைய கைரேகை இன்னும் மறையாமல் அப்படியே இருப்பதை கவனித்தான் வருண். ஆனால் இன்று இரவு அவன் டைனிங் டேபிளில் சாப்பிடும் போது அவளுடைய கன்னத்தில் அதை பார்த்ததாக அவனுக்கு ஞாபகம் இல்லை. அதனால் அதை நினைத்து குழம்பியவன், “உன்னோட சிக்ஸ்ல இப்ப இருக்கிற இந்த மார்க், நம்ம டின்னர் சாப்பிடும் போது இல்லையே ஏன்..???” 🤔 என்று கேட்டான்.

ரித்திகா: “நான் தான் அத மேக்கப் போட்டு ஹைட் பண்ணிட்டனே அப்புறம் எப்படி இருக்கும்..?? என்ன பாக்குறதுக்கு என்னோட பேரன்ட்ஸ் வந்து இருந்தாங்க. நான் கீழ போனா செண்பகம் அம்மா என்ன பாப்பாங்க. அப்ப அவங்க இந்த மார்க் எப்படி வந்துச்சுன்னு கேட்டா, நான் என்ன பதில் சொல்றது….?? 

அதான் நான் இப்ப எல்லாம் எக்ஸ்ட்ரா மேக்கப் போட்டுட்டு சுத்திட்டு இருக்கேன். அப்பா கூட கேட்டாரு இது என்ன புது பழக்கம்னு.. நான் என் வாய்க்கு வந்ததை சொல்லி ஏதோ சமாளிச்சிட்டேன். அவங்களுக்கு உண்மையா என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சா, அவங்க தாங்க மாட்டாங்க.” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னாள். 

வருண்: அவள் தன்னை நேரடியாக எதுவும் குறை கூறவில்லை என்றாலும், அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவள் தன்னை செருப்பால் அடித்ததை போல அவமானமாக உணர்ந்தான். அதனால் சோகமாக தன்னுடைய தலையை கீழே குனிந்து கொண்டவன், “ஐ அம் சாரி.” என்றான். 😞 💆

ரித்திகா: “இட்ஸ் ஓகே. நான் அத அப்பவே மறந்துட்டேன். நீங்க எனக்கு சாரி சொல்லும் என்பதற்காக நான் அத பத்தி இப்ப பேசல. நீங்க கேட்டதுனால நான் ஜஸ்ட் சொன்னேன் அவ்ளோ தான். நீங்க பீல் பண்ணாதீங்க.” என்று அவசரமான குரலில் சொன்னாள். 

வருண்: ம்ம்ம்… நாளைக்கு எத்தனை மணிக்கு உங்க வீட்டுக்கு போகணும்..??? 

ரித்திகா:  நாளைக்கு வெள்ளிக்கிழமைல.. பத்தரை டு 12 ராகு காலமாம். சோ அம்மா சீக்கிரமா கிளம்பி பிரேக் பாஸ்ட்க்கு அங்க இருக்கிற மாதிரி வர சொன்னாங்க. 

வருண்: “ஓ..ஓகே.” என்றவன், அவள் அருகே இருந்த ஒரு தலைவணியை எடுத்து போட்டு படுத்துக் கொண்டான். 

ரித்திகா தானும் தன்னுடைய மொபைல் போன் ஐ ஓரமாக வைத்துவிட்டு ஒரு தலையணையை எடுத்து போட்டு அவன் அருகே படுத்தவள் அவன் அருகே திரும்பி, “நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும். கேட்கட்டுமா..???” என்று சிறு தயக்கத்துடன் கேட்டாள்.

 வருண்: அவனும் அவள் பக்கம் திரும்பிப் படுத்தவன், “என்ன கேளு.” என்று அமைதியான குரலில் கேட்டான்.

ரித்திகா : “என்ன கடத்திட்டு போனாங்கல்ல.. அப்போ நீங்க என்னோட ஜி.பி. எஸ்.  லொகேஷன் ஐ வச்சு தான் கண்டுபிடிச்சீங்கன்னு சொன்னாங்க. சோ நீங்க எனக்கு கிப்ட் பண்ண அந்த பென்டன்ட்ல ஜி. பி. எஸ். ஐ எனக்கே தெரியாம வச்சு குடுத்து இருக்கீங்களா…??? அது என்னோட சேப்டிக்காகவா இல்ல.. என்ன ஸ்பை பண்றதுக்காகவா..???” என்று அமைதியான குரலில் கேட்டாள். 

வருண்: “உன்னோட சேப்டிக்காக தான் குடுத்தேன். பட் தேவைப்பட்டா, அத வச்சு உன்ன ஸ்பை கூட பண்ணுவேன். நீ இத எப்படி எடுத்துக்கிட்டாலும் எனக்கு அத பத்தி கவலை இல்லை ரித்திகா. நீ இந்த குடும்பத்துல ஒருத்தி. இந்த உலகமே உன் மேல ஒரு கண்ணு வச்சு இருக்கும். 

ஆல்ரெடி கௌத்தமால வந்த பிரச்சினையை பற்றி தான் உனக்கே தெரியுமே…!!! எனக்கு நிறைய ரெஸ்பான்சிபிலிட்டிஸ் இருக்கு ரித்திகா. சோ எனக்கு பிடிக்குதோ, இல்லையோ, சில விஷயங்களை நான் செஞ்சு தான் ஆகணும்.” என்று உண்மையாக அவளுடைய கேள்விக்கு பதில் சொன்னான். 

ரித்திகா: அவனுடைய சூழ்நிலையில் இருந்து பார்த்தால், அவன் சொல்வதும் சரிதான் என்று அவளுக்கு தோன்றியது. அதனால் “ஓகே ஐ அண்டர்ஸ்டாண்ட். பட் எனக்கு வெர்ஜினிட்டி டெஸ்ட் எதுக்கு எடுத்தீங்க..?? அதுவும் நீங்க என்ன காப்பாத்தி கூட்டிட்டு வந்த கொஞ்ச நேரத்திலயே எடுத்து இருக்கீங்க. 

எனக்கு எதுவும் தப்பா நடந்திருக்காதுன்னு மத்தவங்களுக்கு ப்ரூவ் பண்றதுக்காக அந்த டெஸ்ட் ஐ எடுத்தீங்களா..?? இல்ல நடந்து இருக்குமோன்ற டவுட்டுல நீங்க அதை கன்ஃபார்ம் பண்ணிக்கிறதுக்காக எடுத்தீங்களா….??? இத நான் எப்படி எடுத்துக்கிறது..??” என்று கேட்டவள், கேள்வியாக அவனுடைய விழிகளை நோக்கினாள். 

வருண்: “எல்லாத்துக்காகவும் தான்.” என்று இரண்டே வார்த்தையில் பதில் சொன்னவன், பெரு மூச்சு ஒன்றை விட்டுவிட்டு; “நீ தேவை இல்லாம கண்டத யோசிச்சு உன்னை நீயே ஸ்ட்ரெஸ் பண்ணிக்கிற ரித்திகா. சில விஷயங்களை பத்தி ரொம்ப யோசிக்காம இருக்கிறதே நல்லது. ஆல்ரெடி நீ ரொம்ப வீக்கா இருக்கேன்னு டாக்டர் சொன்னாரு. சோ முடிஞ்ச வரைக்கும் ரிலாக்ஸ்டா இருக்க பாரு. குட் நைட்.” என்றவன், அவனுடைய கட்டில் அருகே இருந்த லைட் ஸ்விட்ச் அனைத்தையும் ஆப் செய்துவிட்டு, ஒரு நைட் லாம்ப் மட்டும் ஆன் செய்துவிட்டு தன்னுடைய கண்களை மூடி படுத்துக் கொண்டு அவனை தூக்கம் தழுவிக் கொள்வதற்காக காத்திருக்க தொடங்கினான். 

நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured