அத்தியாயம் 222: சும்மா ஒரு ஹக் (பார்ட் 2)
அவர்கள் அனைவரும் லிப்டில் செல்லும்போது ரேவதியின் புடவையை பிடித்து இழுத்து விளையாடியபடி இருந்தான் சித்தார்த். அதனால் பாசமாக அவனை தூக்கி தன்னுடைய இடுப்பில் அமர்த்தி வைத்துக்கொண்ட ரேவதி அவனுடன் பேசி விளையாட தொடங்கினாள். ரித்திகாக்கு ஒரு குழந்தை பிறந்து தங்கள் குடும்ப வாரிசை எடுத்து கொஞ்ச வேண்டும் என்று ஆசை ரித்திகாவின் பெற்றோர்களுக்கு இருந்தாலும் கூட சித்தார்த்தை அவர்கள் தங்களுடைய முதல் பேரனாக எப்போதோ ஏற்று கொண்டு விட்டனர். அதனால் அவன் மீது அவர்களுக்கு எப்போதும் ஒரு தனி பாசம் உண்டு.
வருணின் அறையில்…
அந்த அறைக்குள் நுழைந்த உடனேயே ரித்திகாவின் பெற்றோர்கள், அந்த அறையைப் பார்த்து வியந்தனர். 😍 கண்டிப்பாக அதை அவர்களால் ஒரு அறை என்று சொல்லி அந்த வார்த்தைக்குள் அதை சுருக்கி விட முடியாது. அது ஒரு அப்பார்ட்மெண்ட் வீடு போல இருந்தது. 🏠 முதலில் அங்கு இருந்த அனைத்த இடத்தையும் அவர்களுக்கு சுற்றி காட்டினாள் ரித்திகா. அந்த அறைக்குள் ரித்திகாவிக்கு என ஒரு தனி அறை இருக்கும் என்று அவர்கள் துளியும் எதிர்பார்த்து இருக்க வில்லை.
இதில் செண்பகம் தன்னுடைய மகளுக்காக இத்தனை மெனக்கெட்டு ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்து வைத்து இருப்பதை பார்ப்பதற்கே அவர்களுக்கு மன நிறைவாக இருந்தது. ரேவதியும், சுதாகரும், அதைப்பற்றி ரித்திகாவிடம் பேசி கொண்டு இருக்க; ஆர்வக்கோளாறில் ரித்திகாவிக்கு வருண் பாத் ரூமின் டைல்சை மாற்றியது பற்றி அவர்களிடம் சொல்லிவிட்டாள் ஷாலினி. ஆனால் இதில் நல்ல வேளையாக அவள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து மயங்கியதை பற்றி அவள் குறிப்பிடவில்லை.
அதனால் நிம்மதி அடைந்த ரித்திகா இதற்கு மேலும் ஷாலினியை பேச விடக்கூடாது என்று நினைத்து அவளே முந்தி கொண்டு, “ஆமா அம்மா அவர் என்ன ரொம்ப கேர் பண்றாரு. நான் சும்மா ஒரு தடவை டைல்ஸ் ஸ்லிப்பர்யா இருக்குன்னு தான்் சொன்னேன். அதுவும் நேத்து தான் சொன்னேன். இன்னைக்கு அவர் ஆள விட்டு அதை மாத்திட்டாரு.” என்று பெருமையாக சொன்னாள். ரித்திகா தன்னுடைய உடல் நிலையைப் பற்றி அவளுடைய பெற்றோர்களிடம் சொல்லி அவர்களை பயமுறுத்த விரும்பவில்லை என்று புரிந்து கொண்ட ஷாலினியும் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை.
பின் சித்தார்த் தனக்கு சாப்பிட பீட்சா வேண்டும் என்று ரித்திகாவிடம் கேட்க, மற்றவர்களுக்கும் சேர்த்து அவர்களுக்கு என்னென்ன வேண்டும் என்று கேட்டு கிச்சனுக்கு கால் செய்து அங்கிருந்த செஃப் -களிடம் ஆர்டர் செய்தாள் ரித்திகா. இன்டர்காமை பயன்படுத்தி ஆர்டர் செய்வதற்கு அவள் செண்பகத்தின் உதவியை நாடுவதற்கு பதிலாக அவளுடன் இருந்த சித்தார்த், அந்த வேலையை தானே செய்தான்.
அவர்கள் ஆர்டர் செய்த உணவுகள் அனைத்தும் கிட்டத்தட்ட 40 நிமிடங்களில் சுடச்சுட அவர்களுடைய அறைக்கே வந்துவிட்டது. அதனால் ரித்திகாவின் பெற்றோர்களுக்கும் ஏன் ரித்திகாவிற்கு கூட இது ஒரு வீடு என்ற நினைப்பே வரவில்லை. அவர்களுக்கு தாங்கள் ஏதோ பெரிய ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருப்பது போல தான் தோன்றியது. வந்திருந்த உணவுகள் அனைத்தையும் திருப்தியாக சாப்பிட்டவர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட உணவை விட இது மிகவும் ருசியானதாகவும், தரமானதாகவும், இருப்பதாக தோன்றியது.
ரித்திகாவின் பெற்றோர்கள் அங்கே வந்து இருப்பதையும் வருணின் அறைக்கு பல பல உணவுகள் சென்று வருவதையும் கவனித்த சீதா, “இதுங்களுக்கு ஏதோ ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு வந்ததா நெனப்பு போல. இந்த சமயத்தில் சமையல்காரங்கள புதுசா வேலைக்கு வச்சதுக்கு அப்புறம் இவங்களுக்கு இன்னும் ரொம்ப வசதி ஆயிடுச்சு. மகளை கட்டிக் கொடுத்த இடத்துல ஓசி சோறு திங்கிறதுக்கு கிளம்பி வந்துட்டாங்க. இதுங்களுக்கெல்லாம் இப்படி ஒரு வாழ்வு… நம்ப என்னத்த சொல்றது..!!! அடுத்த வீட்டுக்கு வந்து இருக்கோம்னு கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாமல் இதுங்களே இப்படி இஷ்டத்துக்கு ஆர்டர் பண்ணி திங்குதுங்க.
நான் இந்த வீட்டில பொறந்த பொண்ணு. நான் மட்டும் ஏன் சும்மா இவங்க போடுற சோத்த திங்கணும்..??? நானும் எனக்கு வேணுங்கறத கேட்டு வாங்கி சாப்பிடுவேன்.” என்று நினைத்தவள், தனக்கு பிடித்தமான வகை வகையான பிரியாணி முதல் அவளுக்கு தோன்றிய அனைத்து அசைவ உணவுகளையும் அவர்களிடம் சொல்லி ஆர்டர் செய்து அதை தனக்கு விரைவில் செய்து தந்தே ஆக வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிட்டாள்.
நன்றாக சாப்பிட்டு முடித்த சித்தார்த், சில நிமிடங்களிலேயே தனக்கு தூக்கம் வருவதாக சொல்லி வருணின் அறையிலேயே தூங்கி விட்டான். சுதாகரும் ஷாலினியும் தங்களுடைய மொபைல் போனில் செஸ் கேம் விளையாட தொடங்கிவிட்டனர். அதனால் இது தான் சமயம் என்று நினைத்த ரேவதி, ரித்திகாவை தனியாக கூட்டிக்கொண்டு சென்று அவளிடம் பேசத் தொடங்கினாள்.
ரித்திகா: “இப்ப எதுக்கு மா என்ன இங்க கூட்டிட்டு வந்த..??? நானும் ஷாலினி கூட சேர்ந்து அப்பா கூட விளையாடி இருப்பேன்ல..???” என்று தன்னுடைய முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கேட்டாள். 😓
ரேவதி: “உனக்கு என்ன நீ இன்னும் ஷாலினி மாதிரி சின்ன பொண்ணுன்னு நினைப்பா…??? உனக்கு கல்யாணம் ஆயிருச்சு டி. அது மட்டும் இல்லாம அஃபீஷியலா உனக்கு அஞ்சு வயசுல ஒரு பையன் இருக்கான். நீ என்னன்னா சின்ன புள்ளத்தனமா விளையாடுவதை பற்றி எல்லாம் கவலைப்பட்டுட்டு இருக்க…??? உனக்கு எப்ப தான் பொறுப்பு வரும்ன்னு நெனச்சாலே எனக்கு ரொம்ப கவலையா இருக்கு.
செண்பகம் அம்மா உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கிறாங்கன்னு உனக்கே தெரியும் இல்ல…!!! அவங்க பொறுப்பு எல்லாத்தையும் உன்கிட்ட கொடுத்துட்டு அதை நீ எப்படி செய்றேன்னு பார்த்து ரசிக்கணும்னு அவங்க ஆசைப்படுறாங்க. ஆனா நீ என்னடி இப்படி இருக்க..???” என்று சலிப்பான குரலில் கேட்டாள்.
ரித்திகா: ரேவதி பேசியதை கேட்டு தன்னுடைய முகத்தை பாவமாக வைத்துக் கொண்டவள், “எனக்கு அப்படி என்ன மா வயசு ஆயிடுச்சு. கொஞ்ச நேரம் விளையாண்டா நல்லா இருக்கும்னு சொன்னது அவ்ளோ பெரிய தப்பா… அதுக்கு ஏன் என்ன இப்படி திட்டிக்கிட்டு இருக்க…???” என்று சோகமான குரலில் கேட்டாள். 😕 😣
ரேவதி: “உன் கிட்ட எல்லாம் சுத்தி வளச்சு பேசி பிரயோஜனமே இல்ல. சரியான தத்தியா உன்னை பெத்து வச்சிருக்கேன். ஓகே நான் டைரக்டாகவே கேட்கிறேன். உங்களுக்கு கல்யாணம் ஆகி இப்போ ரெண்டு நாள் ஆகப்போகுது. ஒழுங்கா நடக்க வேண்டியது எல்லாம் உங்களுக்குள்ள நடந்துச்சா இல்லையா..?? நீங்க ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃபா சேர்ந்து வாழ்றீங்களா இல்லையா..???” என்று நெற்றி பொட்டில் அடித்தார் போல் பட்டென்று கேட்டாள்.
ரித்திகா: வருண் உடனான இந்த இரண்டு நாள் திருமண வாழ்க்கை எப்படி இருந்தது என்று ஒரு நொடி ரீவைண்ட் செய்து பார்த்தவள் சிறு வெட்கத்துடன், “போ மா. இதையெல்லாமா நீ என்கிட்ட பிராங்கா கேட்ப..??” என்று சிறு தயக்கத்துடன் கேட்டாள்.
ரேவதி: “இந்நேரம் அம்மா கிட்ட எல்லாத்தையும் பிராங்க்கா சொல்ற ஆளா இருந்தா தான் நீயே என்கிட்ட எல்லாத்தையும் சொல்லி இருப்பியே..!!! நான் பெற்ற மகராசி நீ நான் போன் பண்ணாலே எடுக்க மாட்டேங்குற. உன் லைஃப்ல என்ன நடக்குதுன்னு ஒரு அம்மாவா தெரிஞ்சுக்கறதுக்கு எனக்கு எல்லா ரைட்ஸும் இருக்கு. என்னால உனக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு நீ எப்படியோ போன்னு சும்மா இருக்க முடியாது. உனக்கு ஒரு மண்ணும் தெரியாது.
அப்ப என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு கேட்டு நான் தான் உனக்கு நல்லது கெட்டதை சொல்லித் தரணும். இதெல்லாம் நீயும் ஒரு பொண்ண பெத்து அம்மாவாகும்போது தான் உனக்கு புரியும். நான் கேட்டதுக்கு மட்டும் ஆன்சர் பண்ணு. எஸ் ஆர் நோ..???” என்று ஸ்ட்ரிக்ட் ஆக கேட்டாள்.
ரித்திகா: நோ என்பது போல தன்னுடைய தலையை ஆட்டியவள், “நாங்க ஹஸ்பண்ட் அண்ட் வைஃபாவும் இல்ல. ஏன் ஃப்ரண்டா கூட இல்ல நாங்க என்னவா இருக்கோம்னு எங்களுக்கே தெரியல. எங்களுக்கு மேரேஜ் ஆகி 2 டேஸ் தான் ஆகியிருக்கு. அதுக்குள்ள ஏன் அம்மா இவ்வளவு கொஸ்டின்ஸ்..??? வாட் எவர்.. ஜஸ்ட் லெட் இட் பி. நான் தான் எங்க மேரேஜ்க்கு முன்னாடியே சொன்னேன்ல.. இந்த மேரேஜ் ஏ சித்தார்த்துக்காக தான் நடக்குதுன்னு.
இப்ப நாங்க சித்தார்த்தோட அம்மா அப்பா. அவ்ளோ தான் எங்களுக்குள்ள இருக்கிற ரிலேஷன்ஷிப். இதுவே நல்லா தான் அம்மா இருக்கு. இது போதுமே..!! 👪 இதைத் தாண்டி நான் பெருசா வேற எதையும் யோசிக்கல. நீங்களும் யோசிக்காதீங்க.” என்றவள், இதற்கு மேலும் தான் இங்கேயே நின்று கொண்டு இருந்தால் தன்னுடைய அம்மா அவர்களுடைய கேள்விக்கனையை தன் மீது தொடுத்து கொண்டே இருப்பார்கள் என்று நினைத்து வேகமாக சென்று சுதாகரின் அருகே அமர்ந்து கொண்டாள். “இவளை எல்லாம் திருத்தவே முடியாது” என்று நினைத்துக் கொண்ட ரேவதி, “இவளுக்கா புத்தி வந்தா தான் உண்டு.” என்று தனக்குள் புலம்பி கொண்டு, அதற்கு மேல் ரித்திகாவிடம் அதைப் பற்றி பேசவில்லை.
வருணின் அலுவலக அறை…
எப்போதும் இருப்பதைவிட இப்போது வருண் மிகவும் ஆக்டிவ் ஆக அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு இருப்பதை கவனித்த சிவா, “என்ன சார் எப்பயும் இருக்குறத விட இன்னிக்கி ரொம்ப பிரெஷ்ஷா இருக்கீங்க..!!! நான் வேணாம்னு சொல்லியும் எனக்கே தெரியாம அந்த ஸ்லீப்பிங் பில்ஸ் ஐ அகெய்ன் வாங்கி போட்டுக்கிட்டு தூங்கு நீங்களா..???” என்று வருனிடம் கேட்டான்.
வருண்: “இல்ல டா. நேத்து நானும் அந்த டேப்லெட் இருக்கான்னு தொலைவுனேன். நீ தான் அத வாங்கி வைக்கவே இல்லையே அப்புறம் எப்படி நான் அத சாப்பிடுறது..?? நான் ரொம்ப நேரமா நேத்து தூக்கம் வராம தான் இருந்தேன். அப்புறம் திடீர்னு எப்படி தூங்கினேன்னு தெரியல… நல்லா தூங்கிட்டேன் டா.” என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும்போது தான் நேற்று அவன் ரித்திகாவை கட்டிப்பிடித்துக் கொண்டு நிம்மதியாக உறங்கியது அவனுக்கு ஞாபகம் வந்தது. அப்போது தான் தூக்க மாத்திரை இல்லாமல் நிம்மதியாக அவன் தூங்கியதன் காரணம் ரித்திகா தான் என்று அவனுக்கு புரிந்தது.
சிவா: “அப்ப நீங்க நேத்து டேப்லட் சாப்பிடாமயே நல்லா தூங்கிருக்கிங்கன்னா, அதுக்கு ரீசன் ஆல்ரெடி டாக்டர் சொன்ன மாதிரி உங்க மேரேஜ் ஆ தான் இருக்கும். என்ன தான் இருந்தாலும், நம்ம கூட ஒருத்தர் இருக்காங்கன்றதே ஒரு நல்ல ஃபீல் தான் சார். ஒரு மாதிரி சேஃப் அண்ட் செக்யூர்டா கம்பர்டபிலா இருக்கும். நீங்க இதையே கண்டினியூ பண்ணுங்க. இனியும் டேப்லட் சாப்பிடாதீங்க.” என்று அக்கறையுடன் சொன்னான்.
வருண்: “சிங்கிள் பையன் டா நீ. அப்படியே எல்லாம் உனக்கு தெரிஞ்ச மாதிரி பேசாத சரியா..!! போய் உன் வேலையை பாரு.” என்று அவனிடம் காட்டமாக சொன்னவன், உள்ளுக்குள் அவன் சொன்னதைப் பற்றித்தான் யோசித்து கொண்டு இருந்தான்.
இதற்கு முன்பு சிவா இதை சொல்லி இருந்தால் கூட வருண். அதை மறுத்திருப்பான் ஆனால் நேற்று அவன் அதை அனுபவித்த பிறகு இப்போது அதை அவனால் ஒரேடியாக மறுத்து விட முடியவில்லை. நேற்று அவனுக்கு கிடைத்த அந்த உணர்வு அவனை பெருமளவில் ஆறுதல் படுத்தி இருந்ததுதது. அதனால் தீவிரமாக இதைப்பற்றி யோசித்துப் பார்த்தான். வருண். “அவ உன்னோட வைஃப் தான். ஆனா நீ அவள உன்னோட வைஃப் ஆ பார்க்கணும்னு அவசியமில்லை. இப்போ நானும் சிவாவும் கூட ஒரே ரூம்ல தங்கி கட்டி பிடிச்சுட்டு தூங்குனா ஒன்னும் தப்பில்லையே…!!!
அதே மாதிரி அவளையும் ஒரு ரூம் மேட்டா.. இல்ல பிரண்டா நினைச்சு கட்டிப்புடிச்சுட்டு தூங்குறதும் ஒன்னும் தப்பில்ல தான். நான் ஸ்லீப்பிங் பில்ஸ் சாப்பிடாம இருந்தா, தூக்கம் வரமாட்டேங்குது. அப்பயும் பாடி அஃபெக்ட் ஆகுது. சரின்னு சாப்பிட்டா, அப்பயும் அஃபெக்ட் ஆகுது. இதுக்கு ஒரே வழி ரித்திகா தான். மெடிக்கல் கிஸ் மாதிரி இது மெடிக்கல் ஹக் அப்படின்னு நினைச்சுக்க வேண்டியது தான். இன்னைக்கு நைட்டு வீட்டுக்கு போய் இத பத்தி அவ கிட்ட பேசணும்.” என்று நினைத்துக் கொண்டான்.
- நேசம் தொ.டரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)