Home FREE NOVELSபோதையடி நீ எனக்கு CH 107

போதையடி நீ எனக்கு CH 107

by Thenaruvi Tamil Novels
42 views

அத்தியாயம் 107

பிருந்தா தன்னிடம் சந்தோஷமாக பேசிக் கொண்டு இருந்த தருணத்தை எப்படியாவது சரியாக யூஸ் செய்து கொண்டு அவளுடன் இன்னும் கிளோசாக வேண்டும் என்று குரூரமாக யோசித்து திட்டம் போட்ட தீரஜ் “இன்னிக்கி நமக்கு ரொம்ப ஸ்பெஷல் டே. நீங்க எனக்கு கால் பண்ணி ஒரு குட் நியூஸ் சொல்லி இருக்கீங்க. சோ இந்த டேவை நாம செலிபேட் பண்ண வேண்டாமா? நமக்கு சீக்கிரம் மேரேஜ் நடக்கப்போகுதுன்னு தெரிஞ்ச உடனே எனக்கு உங்கள பாக்கணும் போல இருக்கு. If you don’t mind, நாம எங்கேயாவது மீட் பண்ணலாமா?” என்று கேட்டான்.

“நெஜமாவே டாடி சொன்ன மாதிரி தீரஜ் ரொம்ப நல்லவர் தான். எங்களுக்கு கல்யாணம் பேசி முடிச்சு அடுத்த வாரம் நான் அவரோட வைஃபா இருப்பேன். அப்படி இருந்தும் என் கிட்டவே இவ்வளவு தூரம் பர்மிஷன் கேட்கிறார்! இந்த ஜெனரேஷன் பசங்க யாரும் இப்படி எல்லாம் இருக்கவே மாட்டாங்க. நாங்க ரெண்டு பேரும் இவ்வளவு நாளா பேசிட்டு இருந்ததற்கே இந்நேரம் என்னென்னமோ பண்ணி இருப்பாங்க!” என்று நினைத்து திராஜுக்காக உருகிய பிருந்தா,

“வா மீட் பண்ணலாம்னு கூப்பிட்டா நான் வரப்போறேன். எதுக்காக இவ்வளவு தூரம் தயங்கி தயங்கி நீங்க பர்மிஷன் கேட்கிறீங்க? இன்னும் ஜஸ்ட் 8 டேஸ்ல நான் உங்களோட வைஃப் மிஸ்டர் தீரஜ். உங்களுக்கு அது ஞாபகம் இருக்கா இல்லையா?” என்று பொய் கோபத்துடன் கேட்டாள்.

மீன் தானாக தன் வலையில் வந்து சிக்குகிறதே என நினைத்து சந்தோஷப்பட்ட தீரஜ் “ஆமா ஆமா.. நான் எதையும் மறைக்கலைங்க. In fact, நான் உங்களை ஃபர்ஸ்ட் டைம் எப்ப மீட் பண்ணனோ அப்பவே நீங்க தான் என் வைஃப்ன்னு fix ஆயிட்டேன்.” என்று சொல்லி அப்படியும் இப்படியுமாக அவளை பேசி கரெக்ட் செய்தான்.

இறுதியில் திராஜ் “அப்ப ஓகேங்க.. நம்ம மீட்டிங் இல்ல இல்ல டேட்டிங் ஃபைனல் ஆயிடுச்சு. இன்னைக்கு ஈவினிங் நான் என் ஃபிரண்ட்ஸ் எல்லாருக்கும் பேச்சுலர்ஸ் பார்ட்டி எங்களோட ரிசார்ட்ல குடுக்கலாம்னு இருக்கேன். அங்க நீங்களும் எங்களோட ஜாயின் பண்றீங்க. நீங்க உங்க ஃபிரண்ட்ஸை கூட கூட்டிட்டு வாங்க. எல்லாரும் சேர்ந்து என்ஜாய் பண்ணலாம்.” என்று சொல்லி விட, இதுவரை பெரிதாக எந்த பார்ட்டிக்கும் சென்று பழக்கம் இல்லாத போதிலும் தங்களது மேரேஜுக்கு தனக்கு கணவனாக வரப்போகிறவன் கொடுக்கும் பேச்சுலர் பார்ட்டிக்கு அவன் அழைக்கும் போது தான் செல்ல மாட்டேன் என்று சொன்னால் நன்றாக இருக்காது என்று நினைத்த பிருந்தா அவனை காணும் ஆசையில் தயக்கத்துடன் “ஓகே தீரஜ், கண்டிப்பா நான் வரேன். நைட் பார்ட்டில மீட் பண்ணலாம் பாய்!” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தாள்.

தாத்தா என்ன சொன்னாலும் அதை கேட்டு தான் ஆக வேண்டும் என்று ரிஷி சொன்னதால் தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்ட கீர்த்தனா “எல்லாத்தையும் ரெடி பண்ணி என்ன ஒரு காஸ்ட்லியான ஜெயில்ல சர்வேலென்ஸ்ல வச்சு இருக்கணும்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்க.. அப்புறம் நான் என்ன பண்றது? தாத்தா என் மேல இருக்கிற பாசத்துல தான் இப்படி எல்லாம் பண்றாருன்னு எனக்கு புரியுது. பட்  என்  ஒருத்திக்காக இவ்ளோ செலவு பண்றது அவசியமான்னு தோணுது.” என்று முணுமுணுத்துவிட்டு பெருமூச்சு விட்டாள்.

“அதெல்லாம் அவசியமா அவசியம் இல்லையான்றதை எல்லாம் நாங்க பாத்துக்கிறோம். நீ டாக்டரின்றத மறந்துட்டு ஒழுங்கா இங்க இருக்கிற டாக்டர்ஸ் சொல்றதை கேட்டு குட் கேர்ள்லா இருக்க பாரு. நீ ட்ரீட்மென்ட்க்கு கோவாபிரேட் பண்ணலைன்னு டாக்டர்ஸ் கிட்ட இருந்து உன் மேல கம்ப்ளைன்ட் வந்துச்சுன்னா உன்னை வீட்ல இருந்து மறுபடியும் ஹாஸ்பிடலுக்கு ஷிஃப்ட் பண்ணிடலாம்னு தாத்தா சொன்னாரு.” என்று சொல்லி குழந்தைகளை மிரட்டுவதைப் போல ரிஷி அவளை மிரட்டினான்.

“ஐயையோ ஹாஸ்பிடலா? நான் அகைன் ஹாஸ்பிடலுக்கு போய் அட்மிட் ஆகிட்டா உங்க ட்ரீட்மென்ட்க்கு நான் எப்படி refer பண்றது? நான் எங்கயும் போக மாட்டேன்.  இங்க தான் இருப்பேன்.” என்று கீர்த்தனா அவசரமான குரலில் சொல்ல, “இவ எப்பயும் என்ன பத்தி மட்டும் தான் யோசிச்சுகிட்டே இருக்கா.. ஆனா இவளுக்கு என் மேல லவ் மட்டும் வர மாட்டேங்குது.” என்று நினைத்து பெருமூச்சு விட்டான் ரிஷி.

அவர்கள் பேசிக் கொண்டே இருக்கும்போது அங்கே வந்த நிரஞ்சனா கீர்த்தனாவின் குடும்பத்தினரை தான் இங்கே அழைத்து வந்து விட்டதாக சொல்ல, அவர்களிடம் சென்று பேச வேண்டும் என நினைத்த ரிஷி அந்த ரூமை விட்டு வெளியே செல்ல தொடங்கினான்.

“ஒரு நிமிஷம் இரு, நானும் வரேன்!” என்ற கீர்த்தனா மீண்டும் அவளது ஹெல்த் கண்டிஷனை மறந்து விட்டு அவசரமாக வேக எட்டுகள் வைத்து அவன் அருகில் நடந்த சென்றாள். அதனால் அவளுக்கு மீண்டும் தலை சுற்றுவதை போல இருக்க, அவள் முகம் உடனே மாறியது.

அவளையே பார்த்துக் கொண்டு இருந்த ரிஷிக்கு அவள் சொல்லாமலேயே அவளது நிலை புரிய, “வா நானே உன்னை வெளிய கூட்டிட்டு போறேன். திலீப் கிட்ட உனக்கு ஒரு வீல் சார் அரேஞ்ச் பண்ணி குடுக்க சொல்றேன். எங்கயாவது போகணும்னா அதுல போ. நடந்து போகாத.” என்று சொல்லிவிட்டு அவள் கையை பிடித்து இழுத்து அவளை தன் மடியில் அமர வைத்துக் கொண்டு அவளுடன் ஹாலிற்கு சென்றான்.

அங்கே கீர்த்தனாவின் அப்பா, அம்மா, அண்ணா, அண்ணி என அனைவரும் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து இருந்தார்கள். இதற்கு முன் அவர்கள் பார்த்ததைப்போல இப்போதும் கீர்த்தனா ரிஷியின் மடியில் அமர்ந்து இருப்பதால் அவர்கள் அந்த காட்சியை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அவர்கள் தங்களை பார்ப்பதை கண்டவுடன் இதற்கு முன் அவள் இப்படி செய்த போது நடந்த அனைத்தும் ரிஷி, கீர்த்தனா இருவருக்குமே ஞாபகம் வந்தது.

அதனால் முதலில் கீர்த்தனா அவசரமாக “ப்ளீஸ் நீங்களா எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க!” என்று தன்னிலை விளக்கம் கொடுக்க முன் வர, அவளுடன் சோஃபாவிற்கு அருகில் சென்ற ரிஷி மெல்ல அவளை எழுப்பி சோஃபாவில் அமர வைத்துவிட்டு “அவளுக்கு இன்னும் முழுசா க்யூர் ஆகல. எந்திரிச்சு நின்னாலே தல சுத்துற மாதிரி இருக்குன்னு சொல்றா.. அதான் நடந்து வரும்போது கீழே விழுந்துட்டா என்ன பண்றதுன்னு நானே கூட்டிட்டு வந்தேன். அவளுக்கு சீக்கிரமே வீல் சேர் அரெஞ்ச் பண்ணி குடுத்துடறேன்.” என்றான்.

தொடரும்…

You may also like

Leave a Comment

About Me

Featured