அத்தியாயம் 214: ஃபர்ஸ்ட் நைட் (பார்ட் 1)
ஆராதனாவிடம் ரித்திகா அவளைப் பற்றி கேட்க, தன்னை பற்றியும் தன்னுடைய குடும்பத்தை பற்றியும் நாராயணன் குடும்பத்திற்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் எவ்வாறு பகை மூண்டது என்பது பற்றியும் ஆராதனா ரித்திகா இடம் தெளிவாக சொல்லி கொண்டு இருந்தாள். அப்போது க்ரிஷா ஹரிக்காக தற்கொலை முயற்சி செய்து, பின் கடுமையான டிப்ரஷனில் தவித்ததால் அவளை கிருஷ்ணன் அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்றது வரை சொன்ன ஆராதனா,
“அதுக்கு அப்புறம் தான் ரித்திகா எங்க வாழ்க்கையில எல்லாமே தப்பு தப்பா நடக்க ஆரம்பிச்சது. அந்த பார்ட்டி நைட்டுக்கு அப்புறமா நாங்க யாருமே ஒரு நாள் கூட சந்தோஷமா இல்ல.” என்று சோகமான குரலில் சொன்னாள். 😨 😣
ரித்திகா : “க்ரிஷா அமெரிக்காவுக்கு போனதுக்கு அப்புறம் என்ன ஆச்சு..?? பிரசாத் அங்கிள் பண்ண பிராடு தனம் எல்லாத்தையும் நாராயணன் அங்கிள் கண்டுபிடிச்சாரா..??” என்று ஆர்வமான குரலில் கேட்டாள்.
ஆராதனா: கிருஷ்ணன் அங்கிள் இங்க இருந்து போனதுக்கு அப்புறமா, ஆபீஸ் பொறுப்பு மொத்தமும் எங்க அப்பா கைலையும், நாராயணன் அங்கிள் கைலையும் தான் இருந்துச்சு. அதனால எங்க அப்பாவுக்கு நாராயணன் அங்கில ஏமாத்துறது ரொம்ப ஈசியா ஆயிடுச்சு. முன்ன இருந்ததை விட இந்த தடவை கண்டினியூஸா எந்தெந்த விதத்தில் எல்லாம் முடியுமோ அந்தந்த விதத்துல எல்லாம் எங்க அப்பா காசு பணத்தை சொரண்ட ஆரம்பிச்சிட்டாரு.
இந்த தடவை அவரோட லிமிட் ஐ அவர் க்ராஸ் பண்ணிட்டதுனால அது நாராயணன் குரூப்ஸ் ஐ பெருசா அபெக்ட் பண்ணுச்சு. அடுத்தடுத்து நாராயணன் குரூப்ஸ் -க்கு லாஸ் ஆகிட்டே இருந்துச்சு. அதனால ஷேர் ஹோல்டர்ஸ் எல்லாருமே சேர்ந்து ஏதோ ஒரு மீட்டிங் அரேஞ்ச் பண்ணி இருக்காங்க. அந்த மீட்டிங்ல என்ன நடந்துச்சுன்னு இப்பவரைை யாருக்குமே தெரியாது. ஏன்ன, இப்போ அந்த மீட்டிங் -ல பார்ட்டிசிபேட் பண்ணவங்க யாருமே உயிரோட இல்ல.
அந்த மீட்டிங் முடிஞ்சு ரிட்டன் கார்ல நாராயணன் அங்கிள் வீட்டுக்கு வந்துட்டு இருக்கும்போது அவர் ஆக்சிடென்ட்ல இறந்துட்டாரு. அது ஆக்சிடென்ட் ஆ.. இல்ல ப்ரீ ப்ளாண்ட் மாடர்ரா.. யார் அவரை கொலை பண்ண ட்ரை பண்ணாங்கன்னு யாருக்குமே தெரியல. அவரோட டெத்துக்கு அவர பாக்குறதுக்கு இங்க வந்த கிருஷ்ணன் அங்கிளும் ஹார்ட் அட்டாக் ல -இறந்துட்டாரு. அப்போ பேலன்ஸ் என்னோட அப்பா மட்டும் தான் இருந்தாரு. என்ன தான் அவர் ஒன் ஆஃப் தி பார்ட்னரா இருந்தாலும், டோட்டல் ஷர்ட்ஸ்ல அவருடைய ஷேர் ரொம்ப கம்மியா இருந்ததுனால அவரால இந்த கம்பெனிக்கு சேர்மன் ஆக முடியல.
சோ நெக்ஸ்ட் சேர்மன் யாருன்னு உடனே டிசைட் பண்ண வேண்டிய சிச்சுவேஷன் கிரியேட் ஆயிருச்சு. வருண் அண்ணாவுக்கு அப்போ ஒரு 17 18 வயசு தான் இருக்கும் காலேஜ் அப்ப தான் ஜாயின் பண்ணி இருந்தாரு. நான் ஹரி எல்லாம் ஹையர் செகண்டரி ஸ்கூல் -ல படிச்சுட்டு இருந்தோம். அப்போ விஷ்ணு ரொம்ப சின்ன பையன். பிராத்தனாவிற்கு ஒன்ற வயசு தான் இருக்கும். அப்ப வேற வழியே இல்லாம நாராயணன் குரூப்ஸ் ஐ பாத்துக்குற பொறுப்பை வருண் அண்ணா ஏத்துக்கிட்டாரு. நாராயணன் அங்கிள் இறந்த கொஞ்ச வருஷம் வரைக்கும் செண்பகம் ஆன்ட்டி மெண்டலி சிக் ஆகி இருந்தாங்க. அந்த டைம்ல அவங்களையும், விஷ்ணுவையும், பிராத்தனாவையும், பார்த்துக்கிட்டது சீதா ஆண்டியோட ஃபேமிலி தான்.
சீதா ஆண்டியோட ஹஸ்பெண்ட் நாகராஜ் அங்கிள் வருண் அண்ணாவுக்கு ஹெல்ப் பண்றதுக்காக நாராயணன் குரூப்ஸ் ஓட லீகல் அட்வைஸ்ரா வொர்க் பண்ணாரு. வருண் அண்ணா நாராயணன் குரூப்ஸ் ஓட சேர்மன் ஆனதுக்கு அப்புறம் நாகராஜ் அங்கு ஹெல்ப் ஓட எங்க அப்பா பண்ண ஒவ்வொரு மிஸ்டேக்கையும் கண்டுபிடிக்க ஸ்டார்ட் பண்ணிட்டாரு. அதை எங்க அப்பா கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல. வருண் அண்ணா சின்ன பையன்னு கூட பாக்காம அவர்கிட்ட எவ்வளவோ கெஞ்சி பார்த்தாரு.
ஆனால் இவ்வளவு துரோகம் பண்ணவங்கள என்னால என்கூட வெச்சிக்க முடியாதுன்னு சொல்லி வருண் அண்ணா, அபிசியல் ஆ பிரசாத் குரூப்ஸ் ஐ நாராயணன் குரூப்ல இருந்து செப்பரேட் பண்ணிட்டாரு. அண்ட் அவங்க கம்பெனில கிருஷ்ணன் அங்கிளுக்கு இருந்த ஷேர் ஐ பின்னாடி க்ரிஷா கிட்ட குடுக்கணும்னு இப்ப வரைக்கும் அதை பத்திரமா வச்சி இருக்காரு வருண் அண்ணா. ஆனால் க்ரிஷா இந்தியாவே வேணாம்னு அமெரிக்காலயே இருந்துட்டா. அவளுக்கு இப்பயும் ஒரு கில்டி ஃபீலிங் இருக்கு அவளால தான் இது எல்லாமே ஒரு வேலை நடந்துச்சுன்னு. அதனால அவளுக்கு அவ மேலையும் எங்க மேலயும் இன்னும் கோபம் இருக்கு. இதுக்கு மேலயாவது அவள் அவளோட அப்பா கம்பெனியை எடுத்து நடத்தணும்னு நாங்க எல்லாருமே ஆசைப்படுகிறோம்.
நாராயணன் குரூப்ஸ் -ல இருந்து வெளியில வந்ததுக்கு அப்புறமா பிரசாத் குரூப்ஸ் சர்வைவ் பண்றதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுச்சு. வருண் அண்ணா அளவுக்கு பிரவீனுக்கு அதை மெயின்டைன் பண்ற அளவுக்கு டேலண்ட் இல்ல. அதனால அவனும் எங்க அப்பாவும் என்ன பண்றதுன்னு தெரியாம அப்பயும் நிறைய நாராயணன் குரூப்புக்கு எதிரா இல்லிகளா, அகைன்ஸ்டா பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டாங்க.
வருண் அண்ணாவுக்கு நாகராஜன் ரொம்ப சப்போர்ட்டிவ்வா இருந்தாரு. அதனால நாராயணன் குரூப்ஸ் பிரவீனாலையும், எங்க அப்பாவையும், எதுவுமே பண்ண முடியல. அந்த டைம்ல திடீர்னு ஒரு கார் ஆக்சிடென்ட்ல நாராயணன் அங்கிள் எப்படி மர்மமா இறந்து போனாரோ, அதே மாதிரி நாகராஜன் அங்கிலும் இறந்து போயிட்டாரு. அதுக்கு அப்புறம் தான் பணத்துக்காக மட்டும் இல்லாம நாராயணன் அங்கிளையும் இப்போ நாகராஜ் அவர்களையும் எங்க அப்பாவும் பிரவீனும் தான் கொன்னு இருப்பாங்களோ என்ற பாயிண்ட் ஆப் வியூல வருண் அண்ணாவும் அவருடைய ஃபேமிலியும் யோசிக்க ஆரம்பிச்சாங்க.
நாகராஜ் அங்கிலும் இல்லாததுனால வருண் அண்ணா தணியாளாய் ஆயிட்டாரு . இருந்தாலும் ஒரு பக்கம் ஃபேமிலி, இன்னொரு பக்கம் பிசினஸ் -ன்னு இரண்டையும் கரெக்ட்டா மெயின்டெயின் பண்ணாரு. இதுல கிடைக்கிற கேப்ல படிச்சு முடிச்சாரு. கொஞ்ச நாள்ல எங்க அப்பாவும் குடிச்சு குடிச்சு பிளட் கேன்சர்ல இறந்து போயிட்டாரு. அதுக்கு அப்புறம் பிரசாத் குரூப் டோட்டலா பிரவீன் ஓட கைக்கு வந்துருச்சு. அவனுக்கு எப்பவுமே இருக்கிற ஒரே ஒரு ஆசை, வருண் அண்ணாவை பீட் பண்ணிட்டு அவரை விட ஒரு ஸ்டெப் ஆவது அவன் முன்னாடி போகணும்னு தான். அதுக்கு முதல்ல பிரசாத் குரூப்ஸ் ஐ டெவலப் பண்ணனும்னு இல்லிகளான நிறைய கான்டக்ட்ஸ் ஐ வச்சு பிளாக் மார்க்கெட்ல கொடி கட்டி பறந்தான்.
எங்க ஃபேமிலிக்கும் நாராயணன் அங்கிள் ஃபேமிலிக்கும் நடுவுல நடந்த இந்த பிரச்சனையால என்னோட அண்ட் ஹரியோட ரிலேஷன்ஷிப் ரொம்ப அஃபெக்ட் ஆயிருச்சு. 😣 நாராயணன் அங்கிள் டெத் வரைக்கும் அவங்க வீட்டு பொண்ணு ஆராதனாவா என்ன பாத்துட்டு இருந்த செண்பகம் ஆன்ட்டி, அதுக்கு அப்புறம் என்ன பிரவீன் ஓட தங்கச்சியா மட்டும் தான் பாக்குறாங்க. நாராயணன் அங்கிளையும் நாகராஜ் அங்கிளையும் கொன்னது என்னோட பேமிலில இருக்கிறவங்களா இல்லையான்னு எங்களுக்கு இப்ப வரைக்கும் கன்ஃபார்மா தெரியல. ஆனா ஆன்ட்டி அவங்கதான்னு ஸ்ட்ராங்கா நம்புறாங்க. எனக்கே கூட சம் டைம்ஸ் அது உண்மைதான்னு தோணுச்சு.
அதனால இப்படி ஒரு ஃபேமிலி கூட இருக்கணுமான்னு தான் நான் காலேஜ் படிக்கும்போதே அந்த ஃபேமிலிய விட்டு வெளிய வந்துட்டேன். அப்போல இருந்து இப்ப வரைக்கும் அவங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்ற மாதிரி தான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன். ஆனா நான் அப்படி இருந்தாலும் ஹரிக்கும் எனக்கும் இருந்த ரிலேஷன்ஷிப்பை எங்களால சரி பண்ணிக்க முடியல. ஜான்வி சிஸ்டர் டெத் வரைக்கும் ஆவது நாங்க அடிக்கடி மீட் பண்ணி பேசுகிட்டாவது இருந்தோம். ஆனா எப்ப அவங்களும் ஆக்சிடென்ட்ல இறந்தாங்களோ, அதுக்கும் பிரவீன் தான் காரணம்ன்ற பேரு வர ஆரம்பிச்சிருச்சோ, ஹரி என்ன அவாய்ட் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டான். செண்பகம் ஆன்ட்டி நான் அந்த ஃபேமிலியை சேர்ந்தவன்ற ஒரே ரீசன் காக என்னை சுத்தமா வெறுக்க ஆரம்பிச்சிட்டாங்க.
அவங்க சைடுல இருந்து பார்த்தா அது ஒன்னும் தப்பு இல்ல தான். ஹரி பண்ணியது கூட தப்பில்ல தான். ஆனா யார் என்ன பண்ணி இருந்தாலும், அதுக்கு நான் என்ன பண்ணுவேன் ரித்திகா..?? என்னால மனசால கூட நாராயணன் ஃபேமிலிக்கு கெட்டது நினைக்க முடியாது. நான் சின்ன பொண்ணா இருக்கும்போது அங்கிலும் ஆண்டியும் அவங்க சொந்த பொண்ணு மாதிரி என்னை வளர்த்திருக்காங்க. அவங்களுக்கு எப்படி நான் கெட்டது நினைப்பேன்..?? செண்பகம் ஆண்டியோட மனசை என்ன பண்ணி மாத்துறதுன்னே எனக்கும் தெரியல.” என்றவள் தான் தற்கொலை செய்ய முயற்சித்ததில் இருந்து ஹரி தன்னை காப்பாற்றியது என, இப்போது நடக்கவிருக்கும் தர்ஷினி மற்றும் ஹரியின் திருமணம் வரை அனைத்தைப் பற்றியும் தெளிவாக ரித்திகாவிடம் சொன்னாள் ஆராதனா.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)